“வெண் பற்கள் தெரிய புன்னகைத்த படி, “இது ரொம்ப சின்ன ஃபங்ஷன், எங்க சாஹித்யா பேபியோட ஆசை, மத்த குழந்தைகளும் ஆசை பட்டா...ஒவ்வொருத்தருக்கும், ரொம்ப பெரிய அளவில செய்ய முடியாதேன்னு சிம்பிளா இங்க அரேன்ஜ் செய்தோம், அதுக்கு இவ்ளவு கவரேஜ் செய்து, நீங்க க்ராண்டா ஆக்கிட்டீங்க, எல்லாரும் இருந்து சாப்பிட்டுட்டு தான் போகனும்”
பத்திரிக்கையாளர்களை வரவேற்ற விதமாக பேசினான் ரக்க்ஷத்.
இவளையும் ஜெஷுரனையும் ரெய்டில் பிடித்ததாக புகைபடம் இத்தனை பத்திரிக்கைகளில் வந்திருந்தால்......’திக்’ என்றிருந்தது அவளுக்கு. ஆதாரமாக அருகில் இணையாக நடந்து கொண்டிருந்தவன் வலகரம் பற்றினாள்.
நீர் கோர்த்த நயனங்களை நன்றியால் நிரப்பி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“எம்.எச் நாளைக்கு ந்யூஸில உன் படத்தபோட்டு அழுமூஞ்சி இளவரசின்னு சப் டைட்டில் போடுவாங்க, அது கூட பிரவாயில்ல உண்மைய சொல்றாங்கன்னு விட்டுறலாம், இப்படி அழகான பையனுக்கு இப்படி ஒரு அழுகாச்சி காவியத்தோட கல்யாணமான்னு தலையங்கம் போட்டு கருத்துகணிப்பு அது இதுன்னு ஆயிபோச்சுன்னு வச்சுக்கோ....”
அவன் எதையோ சொல்லி அவள் மன நிலையை சுமுகமாக்க முயல அவன் பேசியது எதுவும் காதில் விழவில்லை அவளுக்கு. காரணம் அவள் உள்ளும் புறமும் நிறைத்து காட்சி தந்தது கனிந்த காதல். அதில் மூழ்கி போனது முழு அறிவும், மொத்த சரீரமும்.
சூழ்ந்திருக்கும் காற்றாய் இவளை சுற்றி இருந்து, இவளே இவள் நலம் மறக்கும் வேளையிலும், இவள் சுகம் பேணும் இவன், இவள் நன்றியால் நெகிழ்வதை கூட தாங்காமல்......
கனிந்த காதல் என்பது என்ன?
நீ எனக்கானவள்(ன்) என தொடங்கி, நீயே தான் நான் என்றாகி, நீ மாத்திரமே நான் என பரிணமிப்பதா?
என்னை என்னைவிட அதிகமாக நேசிப்பவன் நீ
அந்த விழா முடியும் வரையுமே, தன் விழியால் தனக்கானவனை தடையின்றி பருகி அவனை தன் உயிருக்குள் சேமித்ததை தவிர எதையும் செய்யவில்லை அவள்.
பிள்ளைகளை காப்பாளர்களுடன் வாகனத்தில் ஏற்றி ஹோமிற்கு அனுப்பிவிட்டு மூவருமாக கிளம்பிச்சென்றது நிரல்யாவின் வீட்டிற்கு.
உள்ளறையில் சென்றதும் தான் நடந்ததை மூவருமாக தங்களுக்குள் விளக்கி கொண்டனர்.
நடந்தது இதுதான்.
ஜெஷுரன் அருண் பற்றி விசாரிக்க தொடங்கியது அருணுக்கு எப்படியோ எட்டி இருக்கிறது. அவன் ஜெஷுரன் நிரல்யாவிற்கு இடையில் இருக்கும் நடபடிகளை அறிந்திருக்கிறான். ஜெஷுரன் அலை பேசி எண்ணை அருண் ட்ராக் செய்திருந்தாலே இது சாத்தியமாகி இருக்கும்.
ரக்க்ஷத்தை பழி வாங்க இப்படி ஒரு நாடகம். குறிப்பாக ரக்க்ஷத்திடம் சட்ட விரோதமாக மோத அருணுக்கு தைரியம் இல்லை.
ரக்க்ஷத் நிரல்யா நிச்சயம்தான் உலகறிந்த விஷயமாயிற்றே! அதனால் குறி நிரல்யாவிற்கு. மனதில் அடி விழுவது ரக்க்ஷத்திற்காக இருக்குமே!
அருண் கோயம்புத்தூரில் அந்த குறிப்பிட்ட அறையில்தான் எப்போதும் பொழுது போக்குவது வழக்கம். அந்த அறை எப்பொழுதும் அவன் பெயரில் பதிவாகி இருக்கும். அங்கு அவன் பற்றிய தகவல் மறைத்து வைக்கபட்டிருக்கிறது. என்றவிதமான தகவல் ஜெஷுரனுக்கு கிடைக்கும் படியாக பார்த்துகொண்டான் அந்த அருண். ஆக ஜெஷுரன் அங்கு விரைந்தான்.
ஜெஷுரன் அழைப்பதுபோல் ஒரு அழைப்பு நிரல்யாவிற்கு. பத்திரிக்கையாளர், காவல் துறையினர் ரெய்டு இவைகளை பொய் சொல்லி ஏற்பாடு செய்வது அருணுக்கு பெரிய காரியம் இல்லை.
ஜெஷுரனுடன் தொடர்பில் இல்லை என்றாலும் அவன் அருணை பற்றி துருவும் தகவல் ரக்க்ஷத்திற்கும் கிடைத்திருந்தது. காரணம் ஜெஷுரன் அருண் பற்றி தகவல் துருவிய இடங்களில் ஒன்று ரக்க்ஷத்தின் அலுவலகம்.
ஜெஷுரனுக்கு அருண் பற்றி அறிய வேண்டிய அவசியம் என்ன?
அதனால் ரக்க்ஷத் அருணை ட்ராக் செய்தான்.
ரக்க்ஷத்திற்கு சற்று முன்தான் அருணின் இந்த திட்டம் எட்டியது.
நிரல்யாவை நிறுத்த மொபைலில் தொடர்பு கொண்டால் அது தொடர்பு எல்லைக்குள் இல்லை என்றது. அதாவது மொபைலை வீட்டில் விட்டு சென்றிருக்கிறாள் (.இவள் வீட்டில் ஜாமர் இருப்பதால் அங்கிருக்கும் அலைபேசியை அழைத்தாள் அப்படித்தான் அது சொல்லும்.)
உடனடியாக இந்த திட்டம்.
ஆயுத போர் இல்லை என்பதால் பிள்ளைகளை அழைத்துவர சொல்லிவிட்டு, ஹோட்டலிற்கு ஃபோன் மூலம் விழாவிற்கு ஆயத்தம் செய்ய பதிவு செய்துவிட்டு, வேகமாக இங்கு வந்திருக்கிறான் ரக்க்ஷத். அருணின் திட்டம் நிரல்யாவை பதம் பார்க்கும் முன் முடிவுக்கு வந்தது.
இனி வேட்டையாடப் போவது யார்???? விளையாடப் போவது யார்???
தொடரும்
{kunena_discuss:752}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.