(Reading time: 16 - 32 minutes)

09. கனியாதோ காதலென்பது! - Anna Sweety

வாட்? வாட் டு யூ மீன்?”

என்ற அகனின் இரு கேள்விகளும் இருவேறு உணர்வுகளை தாங்கி நின்றது. முன்னது அப்பட்டமான அதிர்ச்சி, அடுத்தது சுயம் குத்தபடும்போது வரும் கோபம். மனித இயல்பு இது.

தானாக கூட தன்னவர்களை பிறரிடம் குறை கூறி விடுவார்கள். ஆனால் அதை கேட்டிறுந்தவர் தன்னவரை குறையாக ஒன்று சொல்லிவிட்டால் தாங்க மாட்டார்கள். அப்படித்தான் இருந்தது அகனுக்கு.

Kaniyatho kathal enbathu

அவன் கேட்டவிதத்திலேயே இவள் என்ன சொல்கிறாள் என்பது அவனுக்கு முழுவதும் புரிந்துவிட்டது என கண்டுகொண்டாள் நிரல்யா.

“குறை சொல்றதுக்காக சொல்லலை ஜெஷுரன் சார்...ஸ்கூல் ஃபைல்ஸ் பார்த்தேன்....துவி மிஸ்ஸான டைமில் ஃஸ்கூலுக்கு எந்த பெரிய டொனேஷனும் இல்ல...ஆனா ஒரு ட்வின் கேர்ள்ஸ்கு மட்டும் பெரிசா பணம் டெபாசிட் ஆகியிருக்குது.....அது துவிக்கு நீங்க கொடுத்த ப்ராபர்ட்டி வேல்யூஃஸுக்கு பக்கத்தில் வரலைனாலும்...பெரிய அமௌண்ட் தான். அடுத்த விஷயம்....அந்த பேபிஃஸை அடாப்ஷன் கொடுத்துருக்காங்க ஆமி அம்மா...அதுவும் அவ்வளவு பணத்தோட...யாருக்கு குடுத்திருக்காங்கங்ற டீடெய்ல்ஸ் இல்ல......வேர் அஸ் மத்த அடாப்ஷன்ஸ்க்கு எல்லா டீடெய்ல்ஸ்ம் மெயின்டன் பண்ணியிருக்காங்க.....

இங்க ஹோமில் தங்கி இருந்தப்ப துவி உங்கள பார்க்கவே இல்ல...ரூமுக்குள்ளயே இருந்திருக்காங்க....மே பி ஷி வாஸ் ப்ரெக்னென்ட்.....உங்களுக்கு தெரிய கூடாதுன்னு நினச்சிருக்கலாம்.....துவி ஒன் ஆஃப் த ட்வின்ஃஸ்....அவங்களுக்கு ட்வின்ஃஸ் இருக்க சான்ஃஸ் ரொம்ப ஜாஃஸ்தி.... ஆமி அம்மா.... துவிக்கு சப்போர்ட் பண்றாங்க...சோ அவங்களுமே இது தெரிஞ்சிருக்கும்...

குழந்தைங்க மேல பாசம்....பட் கூட வச்சுக்க முடியல...ஆர்பனேஜில் விட்டுருக்காங்க....ஸோ குழந்தைகளுக்கு பிக் அமௌன்ட் டெபாஸிட் செய்துருக்காங்க....அப்படி குழந்தைகள நிரந்தரமா பிரியிறப்ப தன் ட்வின்ஃஸ் ஞாபகமா தங்களோட பெயர்களையே வச்சிருக்க சான்ஸ் இருக்கேன்னு சொன்னேன்....

ஜேசனும் அம்மாவும் பேசிட்டு இருந்ததை பார்த்தப்ப முதல்ல ஒன்னும் வித்யாசமா தோணலை, பட் இப்ப யோசிச்சு பார்க்கிறப்ப கொஞ்சம் வித்யாசமா தோணுது...அடாப்ஷன் கொடுத்த குழந்தைய பத்தி ஆசையோட விசாரிக்கிற மாதிரி ஒரு ஃபீல்...ஜேசனை அவன் இவன்னு ஆமி அம்மா பேசினாங்க....ஸோ ஜேசன் அவங்களுக்கு ரொம்ப க்லோஃஸ் அன்ட் ட்ரெஃஸ்ட் வொர்தி...

அந்த வகையில் இப்படி பணத்தோட இருக்கிற குழந்தைகள தத்து கொடுக்க சரியான நபர் ஜேசன்னு அவங்களுக்கு தோனியிருக்கலாம்...

இது எல்லாம் என்னோட யூகம்தான்...தப்பாவும் இருக்கலாம்...”

ரை நிமிட அமைதிக்கு பின் மௌனம் கலைந்தான் அகன்.

“எங்க வீட்டு குழந்தைங்க....”ஒரு பெரு மூச்சு வந்தது அவனிடமிருந்து.

“ஜேசன் விஷயத்தில் உங்க கெஸ் லாஜிக்கலி கரெக்ட்தான். அவர்தான் இந்த ஹோமுக்கு வந்த முதல் பேபி. ஆமி அம்மா கையில் வளர்ந்தவர். இன்னும் மேரேஜ் ஆகலை...எதுக்கு அடாப்ஷன்?....கொஞ்சம் ஃபிஷ்ஷிதான்..ஆனால் துவி....துவிக்கு...இண்டியன் பாய்ஃப்ரெண்ட்ஸ் கிடையாது...லாலி டாலி ப்யூர் இன்டியன் பேபிஸ்”

கடைசி வரியை சொல்ல அவன் பட்ட சங்கடம் அவனது தங்கை மேல் அவனுக்கு இருக்கும் பாசத்தைதான் காண்பித்தது நிரல்யாவிற்கு.

“வாட்? ஜேசன் சிங்கிளா? ரொம்ப ஆச்சரியமா இருக்குது!...எனக்கென்னமோ இப்ப இன்னும் அதிகமா இதுதான் உண்மையா இருக்கும்னு தோணுது...ஜேசன்க்கு துவி பத்தி தெரிஞ்சிருக்கும்....அவர்ட்ட கேட்கனும்...எதுக்கும் உங்க ஃபேமிலி ஃபோட்டோஸ் கொண்டு வாங்க..பேபிஃஸை பார்த்துட்டு...ஜேசனையும் விசாரிக்கலாம்....”

“ஃபோட்டோஸ் இப்பவே உங்களுக்கு அனுப்பிடுறேன்....நாம சேர்ந்து எங்கயும்....வேண்டாமே நிரல்யா மேம்....ப்ளீஃஸ்...மீடியால ஏதாவது ஃபோட்டோ வந்துட்டா....இந்த நிலைல....நல்லா இருக்காது. ஜேசன் என்ன செய்தாலும் உள்நோக்கம் ரொம்ப நல்லதாதான் இருக்கும்...ஹாம்லெஸ்....அதனாலே நீங்களே போனாலும் பிரச்சனை இல்ல...ஒரு வேளை உங்களுக்கு தனியா போறது சரியா படலைனா....உங்க செக்யூரிட்டியோட போங்க. எதையாவது என்ட்ட மறைச்சிருந்தாங்கன்னா, இதுவரை சொல்லாத உண்மைய இனிமேலும் என்ட்ட சொல்லுவாங்கன்னு தோணலை...”

தன் செக்யூரிட்டி வாகனம் ரகசியமாக பின் தொடர நிரல்யா தன் காரில் உடனடியாக பயணித்தது ஜேசன் வீட்டிற்குதான். அது பூட்டியிருந்தது.

அருகில் ஆளனுப்பி விசாரித்தாள். எப்பொழுதாவதுதான் வருவார்கள் அந்த வீட்டிற்கு ஆட்கள் என்ற தகவல் கிடைத்தது. இந்த வீட்டில்தான் ஜேசன் வசிக்கிறான்...குழந்தைகள் இங்குதான் இருக்கும் என அகன் சொல்லி இருக்கிறான். அவன் ஜேசன் வீடு என ஒவ்வொரு முறையும் இங்குதான் வந்திருக்கிறான். அப்படியானால்??  ஜேசன் அகனை ஏமாற்றி இருக்கிறான். ஏன்?

இல்லையெனில் அகனும் ஜேசனும் இவளை ஏமாற்றுகிறார்களா?

குழந்தைகள் உண்மையில் எங்கே? பிறந்து சில மாதமே ஆன பிஞ்சுகளை எங்கு எதற்காக ஒழித்து வைக்கவேண்டும்?

அதுவரை ஜேசனை சந்தித்து பேச வேண்டுமேன அவள் நினைத்திருந்த நினைவை மாற்றிக்கொண்டாள். அவன் ரகசியம் அறியவேண்டும். அதற்கு ரகசியமாகத்தான் செல்ல வேண்டும்.

 ஜேசனின் மருத்துவமனை பற்றி இணையத்தில் குடைந்தாள்.

ன்று இரவு அவள் வழக்கமாக தூங்க செல்லும் நேரத்திற்கு சற்று முன்  தன் வீட்டின் தரை தளத்தில் அமைந்திருந்த யுட்டிலிட்டி அறைக்குள் சென்று பார்வையிட்டாள் நிரல்யா. தேவையான அளவு அழுக்கு பெட்ஷீட்கள் லாண்டரிக்கு அனுப்பபடத் தயாராக இருந்தது.

 வீட்டில் இவள் ஆடைகள் வேலை ஆட்களால் துவைக்கபட்டாலும் பெட்ஷீட்கள், தலையணை உறைகள், கர்டெய்ன்கள் இவளது மட்டுமல்ல, இவள் வீட்டில் தங்கி இருக்கும் பாதுகாப்பு வீர்ர்கள், அலுவலர்கள், உதவியாளர்கள் என அனைவருக்குள்ளதும் துவைக்கபட லாண்டரிக்கு அனுப்பபடுவது வழக்கம். இரவில் லாண்டரி வாகனம் வந்து எடுத்து போகும்.

தோட்டத்தில் சிறிது நேரம் உலாவியவள், நேரம் சரியாக இருக்கும் என தோண, மாடியேறி தன் அறைக்குள் சென்றவள் வழக்கம் போல் அறை கதவை உட்தாழிட்டாள்.

பாத்ரூமிற்கு அருகிலிருந்த டிரெஃஸிங் ரூமிற்குள் சென்றாள். அதை உள்புறம் பூட்டவில்லை. கருப்பு நிற பேண்ட்ஃஸ், கருப்பு நிற ஃபுல் ஸ்லீவ் டி ஷர்ட், எடுத்து கட்டிய போனி டெய்ல் என தயாரானவள், மறக்காமல் ரக்க்ஷத் தந்திருந்த பிஃஸ்டலையும் எடுத்து தன்னுடன் பத்திர படுத்திக் கொண்டாள்.

இவள் பயன் படுத்திய ஆடைகளை துவைப்பதற்கென, யுட்டிலிட்டி அறைக்கு நேராக அனுப்ப இந்த அறையின் மூலையில் ஒரு ஆள் அகல அலுமினிய டக்ட் உண்டு. இங்கே போட்டால் அங்கு சென்று விழும் ஆடை.

பெரு மூச்சு இழுத்து விட்டவள் அதற்குள் இறங்கினாள். சறுக்கி சென்று தரை தளத்தின் யுட்டிலிட்டி அறையிலிருந்த பெட் ஷீட் கும்மத்தில் விழுந்தாள். தன்னை அந்த கும்மத்திற்குள் மறைத்தாள்.

லாண்டரி மக்கள் அந்த பெட்டியை எடுத்து சென்று தங்கள் வாகனத்தில் வைத்து, மெயின் கேட்டை கடக்கும் வரையுமே அவள் படபடப்பு குறையவில்லை. இதை தவிர தன் செக்யூரிட்டி ஆட்களை ஏமாற்றி தனியாக வெளியே செல்ல வழி தெரியவில்லை அவளுக்கு.

அதன் பின்பும் அடுத்த காரியத்தை குறித்து தொடர்ந்தது டென்ஷன்.

குறிப்பிட்ட அந்த வளைவில் வாகனத்தின் வேகம் நத்தையான போது குதித்தாள் வெளியே.

முன்னேற்பாடாக அவள் அங்கு நிறுத்தி இருந்த ஒரு வாடகை காரை எடுத்து கொண்டு பறந்தாள் மலை பாதையில் அமைந்திருக்கும் ஜேசனின் மனநல மருத்துவமனை நோக்கி.

து மாபெரும் வளாகம் என பார்வையில் பட்டதும் புரிந்தது நிரல்யாவிற்கு. காரை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு, தன் உடை மீது அந்த வெளிர் பிங்க் நிற உடையை அணிந்தாள். அதுதான் அம்மருத்துவமனையின் பெண் மருத்துவர்களின் சீருடை.

மெல்ல காரை மருத்துவமனையின் நுழைவு வாசல் நோக்கி செலுத்தினாள். மருத்துவமனை செக்யூரிட்டி இவள் உடையை பார்த்ததும் ஒன்றும் கேட்காமல் உள் அனுமதித்தான்.

பார்க்கிங்கில் இறங்க கதவை திறந்ததும் தான் காதில் விழுந்தன அவ்வொலிகள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.