(Reading time: 15 - 30 minutes)

22. காதல் பயணம்... - Preethi

லோ...”

“ஹலோ...”

“ஹலோ...”

Kaathal payanam

“ஐயோ... ஏன் லோ லோன்னு இப்படி எல்லாரும் கத்துறிங்க? நம்ம conference கால்ல இருக்கோம் ஒரு terror பிளான் போட...” என்றாள் அஹல்யா. (அஹல்யா அவள் சென்னை இல்லத்தில் இருந்தும், அர்ஜுன் அவனது நிறுவனத்திலும், நவீனும் அங்கே இருந்தாலும் பேச வசதியாக தனியாக அழைப்பில் சேர்ந்திருந்தான், அர்ச்சனா அவள் மாமியார் வீட்டிலும், நிரு அவர்களின் நிறுவனத்தில் அவனது அறையிலும், தேஜு அவளது கல்லூரியில் இருந்தும் பேசிக்கொண்டிருந்தனர்)

“எதைபத்தின்னு எனக்கு தெரியுமே!!!” என்றாள் தேஜு உற்சாகமாக...

“அது ஊருக்கே தெரியும்” என்று நக்கலாக கூறினாள் அர்ச்சனா...

“சரி சரி விடுங்க விஷயத்துக்கு வருவோம், ஆளுக்கு ஒரு யோசனை சொல்லுங்க” நேரடியாக விஷயத்திற்கு வந்தாள் அஹல்யா...

“இதில என்ன யோசிக்கணும் லியா, ரெண்டு பேரையும் பேச வைத்தாலே போதுமே....” என்றான் அர்ஜுன் இலகுவாக..

“அறிய கண்டுபிடிப்புடா, அதுதான் பண்ணனும்னு எங்களுக்கும் தெரியும் ஆனால் அதை அவங்களா பண்ண மாட்டிராங்கன்னு தான் இப்போ பஞ்சாயத்தே” என்றான் நவீன்.

“சரியாக சொன்னிங்க அண்ணா... நம்மளும் இவங்க பேசுவாங்க பேசுவாங்கன்னு பார்த்தால் ம்ம்ம்ம் ஹ்ம்ம் நம்ம பொறுமை தான் போகுது...” என்றாள் அஹல்யா

“பேசாமல் அவங்களை ஒரு ரூம்ல போட்டு சாத்திடலாம்” என்று கிண்டல் செய்தாள் தேஜு...

“ஒய் வாழு அதெல்லாம் வேண்டாம்” என்று பொறுப்பான அண்ணனாக முன்வந்தான் அர்ஜுன்.

அனைவரும் அவனின் பதற்றத்தில் சிரித்துவிட்டு, ஒரே எண்ணத்தை பகிர்ந்தனர். “ரெண்டு பேரையும் ஒரே அறையில் போட்டால் கூட, ஆளுக்கு ஒரு மூலையில் தான் இருப்பாங்க” என்று கூறி சிரித்தனர்.

“ஹ்ம்ம்... அப்போ என்னதான் செய்யுறது அக்கா?” என்றான் நிரு.

“வாடா ஊமைகோட்டான் இவ்வளவு நேரம் என்ன கனவுழகில் இருந்தியா? ஏதாவது யோசனை சொல்லு...” என்றாள் அஹல்யா

“ம்ம்ம்ம்ம்ம்ம்.... எவ்வளவு யோசித்தாலும் ஒண்ணுமே தோணலையே அக்கா...”

“டாக்டர் அம்மாவை நல்லா சமைத்து போட சொல்லு மூளை வேலை செய்ய” என்று காலை வாரிக்கொண்டிருந்தாள் அஹல்யா...

“எனக்கு ஒரு யோசனை இருக்கு...” என்றான் நவீன்...

“ஹப்பாடா என் புருஷன் யோசிட்டாருப்பா...” என்று கிடைத்த நேரத்தில் கிண்டல் செய்தாள் அர்ச்சனா...

“ஒய் என்ன கிண்டலா??? அப்பறம் யோசனையை சொல்லவே மாட்டேன்” என்று மிரட்டினான்.

“அச்சோ அண்ணா உங்க சண்டையை அப்பறம் வச்சுக்கோங்க, இப்போ ஐடியா சொல்லுங்க” என்று அஹல்யா சமாதானம் செய்யவும், அவன் தனது யோசனையை கூறினான்.

“ரெண்டு பேரும் ரொம்பவே சீன் போடுறாங்க ஆனால் அவங்களுக்கும் பேசணும்னு ஆசை இருக்கு, யாரு முதல்ல பேசுறது என்ன பேசுரதுன்ற ஐடியா இல்லாமல் தான் இப்படி பண்றாங்க, சோ நம்ம ஒரு ஷாக் treatment ஒன்னு தருவோம். அதில கண்டிப்பா பேசிடுவாங்க” என்றான் நவீன்.

“எனக்கு புரிஞ்சிருச்சு மாமா, அதாவது ஒருத்தருக்கு ஏதாவது ஆகிடுச்சுன்ற மாதிரி இன்னொருத்தருக்கு சொல்லனும் அப்போ அந்த ஷாக்ல அவங்க மத்தவங்கள்ட்ட பேசிடுவாங்க அதானே?!” என்று எளிதாக புரிந்துகொண்டு கூறினான் நிரஞ்ஜன்.

“அதேதான்டா மாப்ள...”

“பரவா இல்லையே நல்ல யோசனையாக இருக்கே, அப்போ யாருக்கு accidentனு சொல்லுறது???” என்று வினவினாள் அஹல்யா.

சிறிது நேரம் மௌனமாக இருந்தபின், “ரொம்ப யோசிக்கதிங்கபா நம்ம விளையாட்டுக்கு தான் அப்படி சொல்ல போறோம் சோ செண்டிமென்ட்டலா யோசிக்காதிங்க... அனுவுக்கே சொல்லலாம். அஸ்வத் ரொம்பவே பிடிவாதமா இருக்கான். சோ அவன் தான் இறங்கி வரணும்” என்று யோசனை தந்தாள் தேஜு.

“ஆனால் அதுக்கு ஏத்த நேரத்தை யோசிக்கணும்... ஏனா நாங்க சென்னையில் இருந்துகிட்டு அனுக்கு accidentnu சொன்னா அஸ்வத் நம்ப மாட்டான். சோ திருப்பூர் வாசிகளே நீங்கதான் இதை செய்யணும்” என்றாள் அர்ச்சனா.

“பண்ணிட்டா போச்சு” என்று சேர்ந்து கூறினர் நிருவும், தேஜுவும்.

“சரி எப்போ எப்படி பண்ணனும்னு நீங்க ரெண்டு பேருமே decide பண்ணுங்க” என்று மற்ற அனைவருமே அழைப்பை வைத்துவிட்டனர்.

னைவரும் வைத்தபின் உல்லாசமாக சீட்டி அடித்தவாறு தான் இருக்கும் நாற்காலியில் ஒரு சுற்று சுற்றி செவிற்றை பார்த்தவாறு அமர்ந்து கிறக்கமாக பேச துவங்கினான்...

“ஹாய் மயிலு....”

“டேய் உதை வாங்குவ, எத்தனை தடவை உன்னை அப்படி கூப்பிடாதன்னு சொல்லிருக்கேன்...”

“அந்த பெயர் உனக்கு நல்லா இருக்கு மயிலு...”

“எனக்கு பிடிக்கலை...”

“அப்படியெல்லாம் மாமா சொல்றதை தட்டிபேச கூடாது மயிலு” என்று ராகமாய் பேசியவனின் குரலில் சிரிப்பு வந்தது அவளுக்கு... (இவங்க சீரியஸ்ஸா discuss பண்றதை பார்த்தால் இப்போதைக்கு அஸ்வத் அனு சேர்க்குரதை பத்தி பேசமாட்டாங்க போலவே...)

“உன்னை ஆபீஸ்ல வேலை பார்க்க சொன்னால் நீ கடலை போட்டுக்கிட்டு இருக்க...” என்று பொய்யாக கோவம் காட்டினாள்.

“அதான் என் மாப்ள அஸ்வத் இருக்கானே அவன் பார்த்துப்பான்...”

“ஹே அஸ்வத்னு சொன்னதும் தான் நியாபகம் வருது... எப்போ அஸ்வத்துக்கு ஷாக் treatment தரது???”

“ஹ்ம்ம்... கொஞ்ச நேரம் ஆசையாய் பேசுரியாடி நீ?”

“ம்ம்ம்ம் பேசலாம் பேசலாம் நீ முதலில் சொல்லு...”

சரி இவளிடம் இனிமேல் பேசி உபயோகம் இல்லை என்றெண்ணி, “இன்னைக்கு வெள்ளிகிழமை தானே நாளைக்கு அனுவிடம் பேசி உன் வீட்டுக்கு வர சொல்லு, நான் நல்ல சமையமாய் பார்த்து உனக்கு missed கால் குடுக்குறேன்...” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே தேஜு நடுவில் புகுந்து “ஏன் சார் போன் பண்ணி பேச மாட்டிங்களோ???” என்று கிண்டலாக பேசவும் அவனுக்கு வெறுத்துவிட்டது, “ஆமாம்டி நீயும் நானும் பேசத்தான் நான் போன் பண்றேன் பாரு...”

அவளின் கேள்வி அவளுக்கே அர்த்தமற்று போக, “கிடைக்குற gapla திட்டிகுரியா? ஏதோ என் மேல தப்பு அதுனால சும்மா விடுறேன்... என்கிட்ட அடிவாங்கிருக்கல்ல...” என்று மிரட்டும் தோணியில் பேசினாள் தேஜு.

அன்றைய நாளின் நினைவில் கை தானாக கன்னத்தை பிடித்துக்கொள்ள, “எம்மா தாயே இப்படியா ஒரு வெகுளி பையனை மிரட்டுறது?” என்று பாவமாக வினவினான்.

“அது அந்த பயம்... சரி விஷயத்துக்கு வா... சரி அனு வந்ததும் என்ன பண்ணனும்?!”

“அவளை எதிலாவது divert பண்ணிட்டு எனக்கு போன் பண்ணு இந்த மாதிரி அனுக்கு accident சீக்கரம் வரியான்னு நான் அவனை உன் வீட்டுக்கு தள்ளிட்டு வந்திடுறேன்” என்று பொறுமையாக தன் யோசனையை கூறினான். இதை கேட்டது தேஜு மட்டுமல்ல, அஸ்வத்தும் தான்... நிருவிடம் பேசவந்தவன் அவன் தேஜுவோடு பேசிக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு திரும்ப எத்தனிக்கையில் அனுவின் பேச்சு அடிபட்டது... அவளது பெயரை கேட்டதும் மனம் கால்களை கட்டிபோட கதவருகே நின்றவாறே விஷயத்தை கேட்டான். முழு கதையையும் கேட்டவனுக்கு கோவத்திற்கு பதிலாக சிரிப்பு தான் வந்தது, முதல் விஷயம் அவளுக்கு ஒன்றென்றால் தான் ஆடிபோவேன் என்று ஊரே அறிந்திருப்பது, அதை விட சிரிப்பான விஷயம் இவன் பதறிபோவான் என்று எண்ணி நிரு நடிக்கையில் அதை அஸ்வத் கெடுக்கபோவது... மனதில் இருவரையும் நினைத்து சிரித்துக்கொண்டு தனதரைக்கே சென்றுவிட்டான் அஸ்வத்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.