(Reading time: 16 - 32 minutes)

 

டபுற கன்ன எலும்பு சற்றே கோணாமலிருந்திருந்தால் பேரழகியாக இருந்திருப்பாள். ஓ! அந்த புல்லட் ஷாட்.

நிர்மலமும் வெறுமையுமான வெற்று கண்கள் நிலையின்றி சுழன்றன. காதுவரை குட்டையாக வெட்டபட்ட முடி புகைபடத்தில் நீண்டு நளினமாக இருந்ததாக ஞாபகம்.

இவள் பார்த்துகொண்டிருக்கும்போதே கதவை தன் நான்கு விரல்களால் பரண்டினாள்.

“287 ஸ் எம்.பி, எம்.பி ஸ் 287.....ஸோ பிங்க் ஸ் மில்க்....மில்க் ஸ் பிங்க்.... மி...ல்...க். பி...ங்....க், புரியலையே பேபி புரியல....”

அழ ஆரம்பித்தாள் துவி. மெல்ல ஜேசனின் கையை உருவிக் கொண்டு உள்ளிருந்த மெத்தையில் சென்று குப்புற படுத்து அழுகையை தொடர்ந்தாள்.

“இ..இது துவி..து..துவி இப்படி...?” அதிர்ச்சி மட்டுமல்ல திடுமென பெரும் மனசோர்வும் ஆளுகை செய்தது அவ்வேளை நிரல்யாவை.

துவிக்காக ஒரு இரக்கம். ஜெஷுரனுக்காக அடுத்த பரிதாபம். ஆரணிக்கு உண்மை தெரிய இருந்த வழி மூடியதில் மூச்சடைக்கும் அளவுக்கு நிராசை. இப்படி உணர்வுகள் கலைத்தன அவளை. மனம் சோர்ந்தாள்.

‘ம்’ ஆமோதித்தான் அவளது கண்டுபிடிப்பை ஜேசன்.

“துவிக்கு என்ன ஆச்சு? ஜெஷுரன்ட்ட....ஏன் சொல்லல?” குற்றம் சுமத்தும் தொனி அதில் இல்லை. இரக்கம் தான் பெரிதாக இருந்தது.

“ஸ்லாக் வாக்ஸ் ஸ் பரஃபின் வாக்ஸ்...., பரஃபின் வாக்ஸ் ஸ் ஸ்லாக் வாக்ஸ்....ஸோ வாக்ஸ்.....வா....க்...ஸ்... புரியலையே பேபி...புரியலியே...” துவி சத்தமாக அழுதாள்.

ஜேசனின் பார்வை துவியின் மீது பதிந்தது. பார்வை அசைக்காமல் இவளிடம் பேசினான்.

“அகன்யா, துதித்யா அதான் லாலி...டாலி...விஷயமே ஜெஷுக்கு இன்னும் தெரியாது.....துவி கன்சீவாகி இருப்பதை அண்ணன்ட்ட சொல்லமட்டேன்னு அம்மா ஒத்துகிட்ட பிறகுதான் முதல்ல ஆசிரமத்தில் தங்கவே சம்மதிச்சா...கனடால யார்ட்டயோ துவி ஏமாந்திருக்கனும்...கன்சீவ் ஆனதும் அவன் இவளை விட்டுடான் போல...என்ன விஷயம்னு எங்க யாருக்கும் தெரியாது... அவ அந்த  நிலையில வேற எங்கயாவது யாருக்கும் தெரியாம போய் கஷ்டபடுவாளேன்னுதான் அம்மா ஜெஷுட்ட தகவல் சொல்லாம இருக்க சம்மதிச்சது....”

“ஆனா இப்படி....இவங்க இப்படி ஆன பிறகாவது....சொல்லி இருக்கலாமே?” நிரல்யாவின் பார்வை துவியை தொட்டு திரும்பியது.

“துதி ஸ் துவி...., துவி ஸ் துதி....சோ...சோ....புரியலையே பேபி...புரியலையே பேபி...” உடைந்து அழுதாள் துவி.

அவளை பார்த்துகொண்டே அழுத்தமாக சொன்னான் ஜேசன் “இல்ல...துவி நடிக்கிறாளோன்னு எனக்கு ஒரு சந்தேகம்....அம்மாவுக்கும் அதில் நம்பிக்கை இருக்குது....அது உண்மையா இருந்தா நாம ஜெஷுட்ட சொன்னதும் இவ இங்க இருந்தும் ஓடி போயிருவா...பெருமூச்சு விட்டான்.

“அப்படி அவளை தனியா தவிக்கவிட எனக்கும்..அம்மாவுக்கும் விருப்பம் இல்ல. குழந்தைங்க இங்கதான் அவங்க அம்மா பார்வையில இருக்காங்க...அது அவள மாத்தும்னு நம்புறோம்...இல்லனா...இவ அவங்களையும் விட்டுட்டுதானே போவா...ஏன் தேவையில்லாம அம்மாவையும் பிள்ளைகளையும் பிரிக்கனும்....

அதோட அவ யாருக்கோ பயந்து ஒளிஞ்சிருக்காளோன்னு தோணுது. என் பாதுகாப்பிலிருந்து அவளை துரத்த....நிச்சயமா என்னால முடியாது.” அழுத்தமாக சொன்னவன் ஆழ பார்வை துவியை பார்த்தான்.

“ஒருவேளை அவ உண்மையிலேயே...இப்படி மன நிலை பாதிக்கபட்டு இருந்தாலும்....ஜெஷுக்கு தெரியிறதால அவர் வேதனை கூடுமே தவிர வேற என்ன ப்ரயோஜனம்?”

ஜேசன்  நிரல்யாவிற்கு பதில் சொல்லிகொண்டிருந்தாலும், அவன் துவியிடம் தன் மனதை திறந்து காட்டுவதாகத்தான் பட்டது ரட்சகனின் நாயகிக்கு. காதலின் வாசம் காதல் அறியும்.

“இல்லையே...ஜெஷுரனுக்கு தேவையான ஒரு முக்கிய விஷயம் துவிட்டதான் இருக்குது!” இப்பொழுது நிரல்யா துவியை பார்வையால் துளைத்தாள். துவி நடித்து கொண்டிருந்தால் இது நிச்சயம் புரியும்.

“என்ன விஷயம் நிரல்யா மேம்...என்னால முடிஞ்ச ஹெல்ப் செய்றேன்...விஷயம் ரொம்ப முக்கியம்னு தெரியுது...இல்லனா...நீங்க இப்படி...” ஜேசன் கண்கள் பிஸ்டலை சுட்டியது.

“துவி ரகசியத்தை உங்களால வெளியிட முடியாத மாதிரி....இதுவும் அடுத்தவங்க ரகசியம்...”

“அந்த அடுத்தவங்க, துவி எனக்கு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு உங்களுக்கு முக்கியமானவங்கன்னு புரியுது....ரக்க்ஷத் ஸ் ப்லெஸ்ட்”

“என்னோடது சகோதர சினேகம்...எனிவே கிளம்புறேன்....இவ்ளவுதூரம் வந்தாச்சு...அப்டியே உங்க பேபிஃஸை பார்த்துட்டு....போகலாமா?..”

இருவரும் எதிர் பார்க்கத நேரம் எதிர் பார்க்காத காரியத்தை செய்தாள் துவி.

“ரக்க்ஷத்...ரக்க்ஷத்...”கூவியபடி ஓடிவந்து இவள் கழுத்தோடு கட்டியவள், இவளை அசுர பலத்துடன் அவள் அறைக்குள் இழுத்தாள் “ அருண்...அருண்...அவன்....அவன்.....நீ வெளிய போகாத......போகாத....ரக்க்ஷத்.....அண்ணாவ அவன் ....”

நிரல்யா கழுத்து இறுக மூச்சடைத்தது.

ஜேசன் துவியை பிரித்தபடி அதட்டினான்.

”துவி....விடு அவங்கள....யூ ஆர் ஹர்ட்டிங் ஹெர்”

இவன் வார்த்தைக்கு அவள் கட்டுபடவில்லை. ஆனாலும் பறந்து போய் மெத்தையில் விழுந்தாள். “விடுடி நீ அவங்கள.....கழுதை......உயிரோட கொல்றியே என்ன...” கர்ஜித்தபடி அவளது பிடியை பிரித்து அவளை மெத்தையில் எறிந்தது அவளது அண்ணன் அகன் ஜெஷுரன்.

“என்ன நீங்க... அவங்கட்ட போய் கோபபட்டுகிட்டு...” நிரல்யா துவிக்காக பரிந்து கொண்டு வர, பரிதாபமாக அண்ணன் தங்கையை பார்த்தபடி நின்றான் ஜேசன்.

“நான் என்ன செய்வேன்...நிரல்யா....என்ன செய்யனும்....எனக்குன்னு இருக்கிற ஒரே ரத்த சொந்தம்...இவ காணலன்னதும் எப்படியெல்லாம் பயந்திருப்பேன்....ஐயோ! செத்துட்டான்னு தெரிஞ்சுட்டா கூட ஏதோ ஒருவகையில நிம்மதியா இருக்குமே...எங்க யார்ட்ட எப்படி மாட்டிகிட்டு இருக்காளோ....யாரு இவள என்ன பண்றாங்களோன்னு...தினம் தினம்....நரகத்தை காமிச்சிட்டா எனக்கு....”

ரத்தம் தோய்ந்த விழிகளுடன் அவன் பேசியதை பார்க்க மனம் வலித்தது நிரல்யாவிற்கு.

“சாரி...வெரி சரி...ஜெஷு...” ஜேசன் அகனின் தோளில் கை போட்டான்.

அகன் கோபத்தில் கொதிப்பான் என நிரல்யா நினைக்க, அவனோ “தேங்க்ஸ் ஜேசன்...இந்த கழுதைய இவ்வளவு அக்கறையா பார்த்துகிட்டதுக்கு....நீங்க எது செஞ்சாலும் உள் நோக்கம் நல்லதாதான் இருக்கும்....பை தி வே...இவளுக்காக உங்க லைஃப்ஐ பாழாக்காதீங்க...நல்ல பொண்ணா பார்த்து....குழந்தைகள என்ட்ட கொடுத்துருங்க...” உணர்ச்சி வேகம் அவனை ஆட்கொள்ள வார்த்தையின்றி நின்றான்.

“நிதானமா பேசுவோம் ஜெஷு...நீங்க என் மேல வச்சிருக்கிற நம்பிக்கைக்கு....” ஜேசனின் பார்வையில் நன்றி உணர்வு பொங்கி வழிந்தது.

“துவிய பசங்கட்ட கூட்டிட்டு போகதான் வந்தேன்...தினமும் இந்த நேரம் அவள கூட்டிட்டு போவேன்.....நீங்களும் வீட்டுக்கு வாங்க....”

துவி உட்பட அந்த நால்வரும் மருத்துவமனை வளாகத்தின் சுற்று சுவரில் இருந்த அந்த சிறு இரும்பு கேட்டின் வழியாக அடுத்திருந்த அந்த வீட்டின் எல்லைக்குள் நுழைந்தனர். தோட்டத்துடன் அழகாய் இருந்தது அந்த தனி வீடு. குழந்தைகளின் வார்த்தையற்ற மழலை சத்தங்கள் செவி நிறைத்தது. வரவேற்பரையில் குழந்தைகள் இரு பெண்களுடன் காட்சி தந்தனர்.

அனைவரும் குழந்தைகளுடன் சிறுது நேரம் செலவிட, “நாளை நாம பேசுவோம் ஜேசன், நிரல்யா வீட்டுக்கு கிளம்புறது நல்லது. இந்த மலை பாதையில் இதுக்கும் மேல லேட்டாகிறது நல்லதில்ல.”

என்றபடி ஜெஷுரன் அந்த சந்திப்பை முடிவுக்கு கொண்டுவந்தான்.

“சாரி...உங்கள தப்பா நினைச்சதால....பிஸ்டல் எடுக்கிற மாதிரி ஆயிடிச்சு...” நிரல்யாவும் ஜேசனிடம் மன்னிப்பு கேட்டாள்.

“இட்ஸ் ஓ.கே சிஃஸ்...ப்ரின்செஸ் டூ ஹோல்ட் வெப்பன்னு தெரிஞ்சுகிட்டேன், டேக் கேர்”

அவன் இயல்பாய் பேசிய அந்த வார்த்தை அவளுக்குள் ஒரு நெருடலை ஏற்படுத்தியது. யோசனையோடு விடை பெற்றாள். பல கேள்விகள் மனதில்.

தொடரும்

Episode # 08

Episode # 10

{kunena_discuss:752}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.