(Reading time: 4 - 7 minutes)

02. நறுமீன் காதல் - அனு.ஆர்

Narumeen

பழகுதமிழில் புழங்காத சில வார்த்தைகளுக்கு tool tip (கோடிட்ட வார்த்தைகள்) ஆக அருஞ்சொற்பொருள் கொடுத்துள்ளேன். நன்றி

ஆதஷையின் பின்புலம்

அழகி ஆதஷை அன்னை தந்தை அற்றவள்

ஆனாலும் அதை குறையாய் {tooltip}அறிகிலாள்{end-link} அறியவில்லை அவள் {end-tooltip}.

பெறாத தந்தையாய் வளர்த்தவன் பெரியப்பன் மகன்

தாயுமானவன். அவன் அழை பெயர் மொர்தகன்.

{tooltip}சேயிழை{end-link} மெல்லிய நகை {end-tooltip} அணி ஆயிழை இவள் இதயத்தில்

இறைக்கு அடுத்து இவனுக்கு மாத்திரமே இடம்.

அவன் வார்த்தை தேவ கட்டளை இவள் வரை. (1)

 

ஆதஷையின் பூர்வீகம் யூத தேசம்

அது அடிமையாய் போனது அடுத்தவன் கைவசம்

அவனால் காட்டமாய் புலம் பெயர்த்தபட்ட யூத குடிகள் ஏராளம்

அவர்களுக்குள் கூட்டமாய் இருந்தது ஆதஷையின் முன்னோர் கூடாரம்.

அடக்கியவன் அழிந்துபோக அழைத்துவரப்பட்ட அடிமை பரம்பரை

ஆளுகைக்குட்பட்டது அந்நிய தேசத்தில் அடுத்த அரச{tooltip}கோ{end-link}மன்னன்{end-tooltip} ஷெஷாங்கனிடம்

யூதாவை வென்றவனை வென்றதனால் யூதாவும் இவன் செங்கோல் வசம். (2)

 

ஆதஷையின் சினம்

அந்நிய தேசத்தில் அந்நியருக்கு அந்நியராய்

அடிமைக்கு மேலாய், அத்தேச குடி மக்களுக்கு கீழாய்

இரண்டாம் தர குடியுரிமை, இல்லை என்பதோ சுயமரியாதை

அதுவே ஆதஷையின் இன்றைய நிலை.

கொண்டு வந்தவன், வென்று வந்தவன் ஷெஷாங்கனில்லை

இருந்தாலும் அவன் மீதிருந்த வஞ்சியின் சினத்திற்கு எல்லையில்லை.

பாருக்குத்தான் அது சுகஸ்தானம், பாவைக்கோ அது சுகம் கொடா ஸ்தலம்.(3)

 

அரசவை கூடல்

அவை செய் செயலால் கோ கண்டனன் துயர்

அறிந்தனர் அவையினர் அதன் கண் ஆலோசனை செய்தனர்

வஸ்திக்காக வருந்தும் {tooltip}திருவுடை{end-link} செல்வமுடைய {end-tooltip} வேந்தன் அகம்

வளம்பெற பொலிவுற இன்றே வெல்லப்பட வேண்டும் {tooltip}செய்யோள்{end-link} குறையற்றவள் {end-tooltip} வசம்

பிழை இல் பேரழகி கறை இல் திங்களவள் வாய்த்தால் வாய்க்கும் இச்செயல்

ஆங்குண்டு இடும்பர் அரை குறை மாந்தர் கண்டனர் கீழ் வழி

பாவம் ஷெஷாங்கன் அறிகிலான் அவன் இத்திட்டம் அடி நுனி. (4)

 

சுயவர திட்டம்

அறைக இன்றே அவனி முழுவதும் பறை

அத்துனை அழகு கன்னியும் ஆகவேண்டும் சிறை

அவளுள் ஒருவள் ஆவாள் {tooltip}இறைவி{end-link}அரசி{end-tooltip}, எவளவள் என தெரியும் {tooltip}இறை{end-link}அரசன்{end-tooltip}

ஆறு திங்கள் {tooltip}நளத{end-link} நறுமண பொருள் {end-tooltip} குளியல் பின்னொரு ஆறு வெள்ளைபோள காலம்

ஆக மொத்தம் முழு வருடம் அழகு செய் காலம்

கண்டபின்னே நாளொன்றுக்கு ஒருவள் {tooltip}காவலன்{end-link} அரசன் {end-tooltip} கண் முன்

எவள்{tooltip}மிசை{end-link} மேல் {end-tooltip} மனம் {tooltip}நசை{end-link} ஆசை {end-tooltip} கொள்வான் மன்னன் அவள் கோ பெண் (5)

 

ஆதஷை சிறை செல்லல்

விரும்பி வேண்டி சென்றனர் பெண்டிர் காதல் சிறை

கட்டிளம் காளை, கொற்றவன், மணம் கொள்ள {tooltip}நசை{end-link} ஆசை {end-tooltip}

அறிவிப்பு அறிந்ததும் இன்னுமாய் வெறுத்தாள் கோ அவனை ஆதஷை

அண்ணனவன் மகளாகிய தங்கையை மறைத்து வைத்தான் பல திசை

தேடியவர் ஷெஷாங்கன் {tooltip}தார்{end-link} காலாட்படை {end-tooltip}; தோற்றதில்லை அவர் எதிலும் பார்

தூக்கி சென்றனர்; கோதை அவள் போர், கடல் கலந்த கரும்பு நீர்

கன்னி மாடம் கண்டது கண்ணீர், காரணம் ஆதஷை பாரீர்! (6)

 

துக்க நாட்கள்

அழகை பெருக்க இரு ஆறு திங்கள்

அழுகை பெருக்கின {tooltip}ஆரணங்கின்{end-link} பெண் {end-tooltip} கண்கள்

வளர்ந்தது அழகா? வஞ்சி மகள் சினமா?

தேய்ந்தது தெருவா? அண்ணனவன் நெடுங்காலா?

தினம் வந்து மறைந்து நின்று மொர்தகன் அழு மகள்

குரல் கேட்டு ஆறுதல் சொல்ல சாய்ந்த கன்னிமாடத்து மதிலா?

தூக்கமிழந்து தவித்தனர் மூவர் அண்ணன் தங்கை அடுத்தவன் ஷெஷான்கன்.(7)

 

நறுமீன் உதயம்

கண்ணே ஆதஷை, கண்ணீர் துடை!

உன் சுயம் மறை; புது பெயர் புனை!

முன்னோர் தேசம் அது முடிந்துபோன கதை, இந்நாள் இங்கு இதை நினை!

{tooltip}நறுமீன்{end-link} நட்சத்திரம் {end-tooltip} இனி உன் நாமம்; ‘நல்ல பெண்’ வார்த்தை உன் அடையாளம்.

அந்நியர் என்கின் {tooltip}இன்னல்{end-link} துன்பம் {end-tooltip} செய்ய விளைவர் ஜனம்.

செப்பினான் வளர்ப்பு தந்தை தினம் தினம்

ஏற்று பழகிய பெண்மனம் அதை பின்பற்றியது நிதம் நிதம்.(8)

 

ஷெஷாங்கன் நிலை

குறுகி வந்தது காலம், அருகில் வந்தது பன்னிரண்டாம் மாதம்;

சுயம்வர செய்முறை தெரிந்தான் ஷெஷாங்கன், கொண்டான் {tooltip}வெகுளி{end-link} கோபம் {end-tooltip} கொதித்தான்;

எப்படியும் நீ கொள்ளவேண்டும் அரியணைக்கு புது அரசி

வந்தவளுள் ஒருவளுக்கு மாலையிடு ஆவாள் மனைவி

சிந்திய பால் கலம் சேராது; நடந்த கதை முடிந்த கதை

நடக்கட்டும் இனி நல்ல பணி நயந்து சொன்னாள் அன்னை

{tooltip}சமர்{end-link} போர் {end-tooltip} மனதுடன் சம்மதித்தான் ஷெஷாங்கன், வந்து நின்றாள் முதல் கன்னி.(9)

 

தொடரும்

நறுமீன் காதல் - 01

நறுமீன் காதல் - 03

{kunena_discuss:789}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.