(Reading time: 25 - 49 minutes)

காதல் நதியில் – 13 - மீரா ராம்

ன் வரலை?... பார்த்து இரண்டு நாள் தானே ஆகிறது… அதற்குள் ஒரு யுகம் ஆனது போல் ஏன் தோன்றுகிறது???... இன்று ஏன் வரலை கோவிலுக்கு??.. ஒரு வேளை வேலை இருந்திருக்குமோ???... இருக்கலாம்… இல்லையென்றால்… லண்டன் சென்றிருப்பாரோ?... இல்லை இல்லை… சொல்லாமல் செல்ல மாட்டார் நிச்சயம்… எனில் என்ன நேர்ந்தது ராம்?... என்று தனக்குள் ஆயிரத்து எட்டாவது முறையாக கேட்டுக்கொண்டிருந்தாள் சாகரிகா சீதை அந்த இரவு நேரத்தில்…

இருள் சூழ்ந்து பரவியிருந்த வானத்தில், வெண்ணிறம் காட்டி ஜொலித்துக்கொண்டிருந்தாள் அந்த வெண்மதி…

பால் நிலா தன் துணையை தேடி அலைந்து வாடியது… இவளிடமாவது ஆறுதல் கிடைக்கும் என்றெண்ணி  அருகில் வர அது முற்பட…

kathal nathiyil

நீ வராதே, சென்றுவிடு நிலவே… அவர் வராத இன்று நீயும் வராதே செல்.. என்று செல்ல சண்டைப் போட்டுக்கொண்டிருந்தாள் சாகரி அந்த மதிமுகத்தாளிடம்…

“என்னடி இங்கே நிலவோட என்ன கதை பேசிட்டிருக்க?...” என்ற மயூரியின் கேள்விக்கு பதில் சொல்லாது புன்னகையை பரிசாக தந்தவள், “நான் நிலவோட கதை பேசுறது இருக்கட்டும்… மேடம், என்ன கோபமா இருக்கீங்க போல…?... என்னாச்சு… முகிலன் அண்ணாவிடம் சண்டை போட்டாயா?...” என்று கேட்டாள்…

“ஆமா…. எனக்கு அது தான் வேலை பாரு… அவர் சண்டை போடாம செல்லமா கொஞ்சுறார் இப்போ…” என்றபடி புலம்பி விட்டு தனது கைபேசியில் பழைய பாடலை தேடி ஒலிக்க விட்டாள் மயூரி…

பால் போலவே வான் மீதிலே யார் காணவே நீ காய்கிறாய்

நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா

இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா

தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு….”

சாகரி அந்த பாட்டினுள் ஆழ்ந்து போனாள்…

வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்

எண்ணம் என்னும் மேடையில் பொன்மாலை சூடினான்

கன்னி அழகை பாடவோ அவன் கவிஞன் ஆகினான்

பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞன் ஆகினான்…”

அவள் அவனை சந்தித்த நாளை நினைவு கூர்ந்தாள்…

சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்..

சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்??

மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்???

மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்???”

பழைய பாடலின் வரிகளே தனி சுகம் தான்… அந்த தேனமுதத்தில் கரைந்து காணாமல் போயினர் சாகரியும், மயூரியும் தத்தமது காதலர்களை எண்ணி…… அவர்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த அந்த முழுமதி கூட மயங்கியபடி நின்ற தோற்றம் அந்த இரவுக்கே அழகு சேர்த்தார் போல இருந்தது…

விடியல் புதிது தான் எப்பொழுதும்… எனினும் அதைக் காணும் மனிதர்கள் மட்டும் புதிதில்லை….

மெல்ல எழுந்த சாகரி, தனது அன்றைய நாளை தொடங்கினாள் இனிதே…

“ஹாய்…. சாகரி… குட் மார்னிங்க்….”

“குட் மார்னிங்க் சித்து நந்து…”

“அப்புறம் என்ன கொஞ்சம் டல்லா இருக்குற மாதிரி இருக்குற?...”

“சே.. சே… அப்படி எல்லாம் எதுவுமில்லை சித்து….”

“ஹ்ம்ம்… நந்து அவ சொல்லுறா எதுவுமில்லைன்னு… என்ன நம்பலாமா?...”

“அவ நம்ம சாகரி அண்ணா… ஆபீஸ் டென்ஷன் எதாவது இருக்கும்… அவளை ஃப்ரீயா விடேன்… கொஞ்ச நாள்… சரி ஆகிடுவா… அப்படித்தானே சாகரி?...” என்றாள் நந்து அக்கறையுடன்…

“எவ்வளவு தான் முகத்தில் எதையும் வெளிப்படுத்தாத போதும், தன் முகம் கலையிழந்து போனதை இந்த மழலைகள் கண்டுபிடித்துவிட்டனரே… இவர்களிடத்தில் என்னை பொய் சொல்லும் நிலைக்கு ஆளாக்கிவிட்டாயே ஸ்ரீராமா…. எனக்கு தைரியம் அளி… இவர்களிடத்தில் பொய்யுரைக்க செய்யாதே என்னை… காப்பாற்று…” என்று வேண்டிக்கொண்டவள், நந்துவின் கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாமல்,

“ஹ்ம்ம்… நந்து…….” என்றபடி அவளை தூக்கி முத்தமிட்டாள் சாகரி…

“ஹேய்… குட்டீஸ்… நீங்க எப்போ வந்தீங்க இங்கே?...”

“ஹாய்… மயில்… இப்போதான் வந்தோம்…” என்றாள் நந்து…

“ஆமா… மயில்.. அப்படியே போய் பூஸ்ட் எடுத்துட்டு வா சீக்கிரம்… போ…” என்றான் சித்து…

“ஓ… இதை இந்த பத்மினி கிட்ட சொல்ல வேண்டியது தானே?... அதென்ன எப்போ பாரு என்னை மட்டும் வேலை வாங்குறீங்க?...”

“இப்போ என்ன உனக்கு?... அவளை வேலை வாங்கணும்… அவ்வளவுதான?... மேட்டரை எங்கிட்ட சொல்லிட்டல்ல… விடு… இனி நான் பார்த்துக்கறேன்…” என்றான் கூலாக சித்து…

“என்ன அண்ணா… என்ன செய்யப் போற?...”

“வெயிட் நந்து…” என்றவன், சாகரியிடம், “நீ போய் பூஸ்ட் எடுத்துட்டு வா… அப்புறம், இன்னைக்கு நீ தான் எங்களுக்கு லன்ச் செஞ்சு தரணும்… சரியா…?... போ… போய்… சமையலை கவனி…” என்றதும் சாகரியும் மறுப்பேதும் சொல்லாமல் சமையலறைக்குள் சென்று தனது வேலையை ஆரம்பித்தாள்…

அவள் கொண்டு வந்த பூஸ்ட்டை குடித்துவிட்டு, தங்கையின் கையைப் பிடித்தபடி நாங்க குளிச்சு ரெடி ஆயிட்டு வரோம் மயில்… என்று சென்றுவிட்டான் சித்து…

ருவரும் தயாராகி பள்ளிக்கும் வந்துவிட்டனர்… மதிய உணவு வேளையில் நந்து சித்துவிடம் மெல்ல வினவினாள்…

“ஏன் அண்ணா… இன்னைக்கு சாகரியை சமைக்க சொன்ன?...”

“உனக்கு சாகரியை பிடிக்குமா?... இல்லை மயிலை பிடிக்குமா?...”

“இப்போ எதுக்கு இப்படி கேட்குற?...”

“சொல்லு நந்து… யாரைப் பிடிக்கும்?...”

“ரெண்டு பேரையும் தான்…”

“அதனால தான் நான் இன்னைக்கு சாகரியை வேலை செய்ய சொன்னேன்…”

“புரியலைண்ணா…”

“நந்து… நாம எப்பவும் சாகரிக்கு தான் சப்போர்ட் செய்யுறோம்… இரண்டு பேருமே நமக்கு ஃப்ரெண்ட்ஸ் தானே… அப்போ இரண்டு பேரும் நமக்கு முக்கியம் தான?. மயில் கிட்ட நாம கொஞ்சம் வாலுத்தனம் பண்ணுறோம் நந்து… அவ எதும் நினைக்க மாட்டாதான்… இருந்தாலும், மயிலை எப்பவும் நாம கிண்டல் பண்ணிட்டே இருந்தா அவ பாவம் கஷ்டப்படுவால்ல… என்னடா இவங்க நம்மளை மட்டும் எதாவது சொல்லிட்டே இருக்காங்களே… சாகரியை எதும் சொல்லமாட்டேன்றாங்களேன்னு தோணிடுச்சின்னா என்ன பண்ணுறது… அதான்… இன்னைக்கு சாகரியை வேலை வாங்கினேன்.. அது தப்பா நந்தும்மா?...”

“இல்ல அண்ணா… நீ சொல்லுறது சரிதான்… நமக்கு இரண்டு பேரும் முக்கியம் தான்…” என்றவள் தன் தமையனின் எண்ணத்தை மனதினுள் மெச்சிக்கொண்டாள்… மேலும், அன்று ஊரில் மயூரியை ஆற்றில் தள்ளிவிட்டதற்கு பரிகாரமாக, அவளுக்கு ஏதேனும் பரிசு கொடுக்கவேண்டும் என்று நந்து கூறிய ஐடியாவை சித்துவும் மனமார ஏற்றுக்கொண்டான்….

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.