(Reading time: 7 - 14 minutes)

05. நீ எனக்காக பிறந்தவள் - Parimala Kathir

கிரிஷின் சப்ரைஸ் கிப்ட் என்னவாக இருக்கும் என்று சிந்தித்தபடியே வீட்டிலுள்ள யாரும் அறியா வண்ணம் மெதுவாக முன் வாசல் கதவை திறந்து. கொண்டு வெளி வாசலை நோக்கி சென்றாள்.

அவளுக்கு பின்னால் இருந்து வந்த ஒரு உருவம் ஒரு கையால் அவளது வாயை பொத்தி மறுகையால் அவளது இடையை சுற்றி வளைத்து தன்னோடு இறுக்கிக் கொண்டது. அவள் பயத்தில் "ம்ம்ம்ம்"என்று முனகிக் கொண்டு அவனிடமிருந்து  திமிறி ஓட முற்படுகையில்.

“ஹேய்.... நான்தாண்டி உன்னோட க்ரிஷ்..” என்றவன் அவளது வாயின் மேல உள்ள கையினை மெதுவாக எடுத்தான்.

Nee enakaga piranthaval

சற்று நேரம் அவளிடம் இருந்து ஒரு பேச்சும் வெளிவர வில்லை. பெரிய பெரிய மூச்சுக்களை வெளியிட்டு தன்னை சமாதானப் படுத்திக் கொண்டாள்.

என்ன பயந்திட்டியா? சப்ரைஸ் என்றான் சிரித்துக் கொண்டே

“ போங்க க்ரிஷ் நீங்க! கொஞ்ச நேரத்தில நான் எப்பிடி பயந்து போனேன் தெரியுமா? உங்களை” என்று சொல்லி விளையாட்டாக அவனை அடிப்பதற்கு கையை ஓங்கினாள்.

அடிக்க ஓங்கிய அவளது கையை மென்னையாக பற்றி தன் புறம் இழுத்தான். பூந்தழிர் போன்ற அவளது மென் உடல் அவனோடு தஞ்சம் அடைந்தது. அவன் மெதுவாக தன்னவளின் காதுகளில் “ஹாப்பி பர்த்டே செல்லகுட்டி” என்றான் கிசுகிசுப்பாக.

ஏற்கனவே அவள் எதிர்பாராத நேரம் அவன் அராவை தன் மீது சாயத்துக் கொண்டதில் அவன் மீதிருந்து வீசிய ஒரு விதமான சுகந்த வாசத்தால் தன்னை மறந்து நின்றவள்! அவன் தனது காதில் கிசுகிசுப்பாக பர்த்த்டே விஸ் பண்ணவும் அவளது காது மடல்கள் சூடகின. அவளின் சுவாசம் தடைப் பட்டன கண்களை மென்மையாக மூடியபடி அவன் மீது சாய்ந்த படியே நின்றிருந்தாள்.

அவளின் நிலையை உணர்ந்தவன் வேண்டும் என்றே அவளை சீண்டினான். “என்னடி விஸ் பண்ணினால் தாங்யூ சொல்ல மாட்டியா என்றான் உதட்டில் குறுஞ்சிரிப்புடன்.

அவள் லேசாக வெட்கப் பட்டுக் கொண்டே தாங்யூ என்றாள்.”

“அட அட அட என் பொண்டாட்டி என்னமா வெட்கப்படுறா அந்த கன்னத்து சிவப்பிருக்கே! “ என்றான் அவளது ரோஜாப்போ கன்னத்தை மெல்ல வருடிய வாறே

“ம்ம்ம்ம்..... போதும் உங்க ரொமான்ஸ் நிப்பாட்டுங்க. கிரஸ் இந்த நேரத்தில  யாராவது பார்த்தால் தப்பாயிடும் நீங்க கிளம்புங்க ப்ளீஸ்”

“நான் உண்மையிலேயே போகட்ட்டா ஆரு...” என்றான் காதலாக

“ம்.... “ என்றாள் கொஞ்சம் கவலையோடு என்ன தான் போகஸ் சொல்லி வாய் சொன்னாலும் அவளது மனது இன்னும் கொஞ்சம் இரண்டா என்றது.

அது அவனுக்கு நன்றாக தெரியும் அதனால் தான் அப்பிடி சொன்னான்.

“ம் சரி இந்தா உன்னோட பர்த்டே கிப்ட்” என்று சொல்லி ஒரு அழகிய தங்க சங்கிலியை பரிசாக கொடுத்தான்.

அதில் அஒரு அழகிய லாக்கர் தொங்கியது அதில் ஆருவும் கிரிஷும் சிரித்தபடி நின்றிருந்தனர்.

“ரொம்ப நல்லா இருக்கு க்ரிஷ் தாங்யூ. ஆனால் இது ரொம்ப காஸ்லியா இருக்கும் போல எதுக்குங்க இவளவு செலவு நான் எனக்கு கிப்ட் வேணும் என்று கேட்டனா? நீங்க இப்பிடி நடுராத்திரில வந்து சப்ரைஸ் கொடுத்ததே எனக்கு பெரிய கிப்ட் தான். இத நீங்க திருப்பி கொடுத்திட்டு உங்களுக்கு யூஸ் ஆகிற மாதிரி ஏதாவது வாங்கிக்கோங்களன்” என்று அவனிடம் அதை திருப்ப கொடுத்தால்.

“இன்னிக்கு உன்னோட பர்த்டே என்று பாக்கிறன் இல்லாட்டால் நல்லா திட்டு வாங்கியிருப்பே சொல்லிட்டன். இத நீ எப்பவும் உன்னோட கழுத்தில இருந்து கழட்டவே கூடாது. இப்பவே அத உன்னோட கழுத்தில போடு.”

“ம்..சரி” என்று சொல்லி அதனை தன் கழுத்தில் போட்டுக் கொண்டாள்.

“இப்ப ஓகேவா சரி நான் உள்ள போகட்டா?”

“ம் சரி போ... ஆங் மறந்திட்டன் நான் நாளைக்கு காலையில கொழும்புக்கு போகணும் ஆரு வர இரண்டு நாளாகும்"

 "என்ன திடீரென்று எஈவது ட்ரிப் போரிங்களா?"

"இல்லடா அப்பா அம்மாவ பாத்து ரொம்ப நாளாச்சு அது தான் போய் பார்த்திட்டு வந்திடலாமென்று"

"ஓ... ஆனால் உங்க அப்பாம்மா கண்டில இல்ல இருக்கிறதா சொன்னீங்க?"

அ.... ஆங் அது ... அது வந்து இங்க ஒரு சொந்த காரங்களோட காலியான வீடு ஒன்னுக்கு வாராங்க அதுதான் காலியான வீட்டுக்கும் போய்ட்டு அப்பிடோஈ அவங்களையும் பார்த்திட்டு வந்திடலாமே என்று ."

"சரிங்க பத்திரமா போய்ட்வாங்க வந்ததும் கால் பண்ணுங்க?"

அப்போது அவளது தொலைபேசி இனிமையாக சஷ்டி கவசம் பாடியது. திரையில் வாமினியின் பயர் ஒளிர்ந்தது'

அவள் அதனை கட் செய்யப் போனாள்.

"ஆரு இப்ப எதுக்கு போனை கட் பண்ண போறாய்? எடுத்து பேசு"

"இல்ல நீங்க போனப்புறமா நான் அவகூட பேசிக்கிறன். நீங்க வேற காலையில ஊருக்கு போறதா சொன்னீங்க அது தான் என்று இழுத்தாள்"

"அவளால் அவனைப் பார்க்காமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது என்று அவனுக்கும் தெரியும் அவன் ஒவ்வொரு முறையும் வேலை விசயமாக வெளியூர் போகும் போதும் அவள் மன தாங்களுடம் தான் வழி அனுப்பி வைப்பாள். இந்த டிரைவர் தொழிலை வேலையை விட்டிட்டு ஏதாவது படிச்ச படிப்புக்கு ஏத்த வேலையா செய்யமே க்ரிஷ்" என்று அவள் சொல்லும் போதெல்லாம் 

"நான் பஸ் டிரைவரா அன்னிக்கு உன்னோட காலேஜுக்கு ட்ரிப் போக வந்ததினால தானே உன்னை பார்க்க முடிஞ்சுது அப்பிடிப்பட்ட இந்த வேலையை நான் எப்பிடி செல்லம் விடமுடியும்!!" என்று வேடிக்கை பேசுவான் 

ஆனால் அவளிடம் கூடிய விரைவில் உண்மையை சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொள்வான். தான் கொழும்புக்கு போகும் காரியம் நிறைவேறியவுடன் அவளிடம் தன்னைப் பற்றி சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.

அதுக்குள் மறுபடியும் மிநியிடமிருந்து மீண்டும் அழைப்பு வந்தது.

அவன் பேசுமாறு செய்கை செய்தான் 

"லோ"

"ஹாய் டீ என்னோட அன்புத்தோழிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஆமா உன்னோட ஹீரோ உனக்கு பர்த்டே விஸ் பண்ணியாச்சா? "

"ம்.. என்றால் ஒரு வித வெட்கத்தோடு அவர்களின் கேட் இன் அருகில் போடப்பட்ட கல் பெஞ்சில் அவனின் அருகில் அமர்ந்த படியே, அவனோ அவளையே இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தான். காற்றில் ஆடும் அவள் கூந்தல், பேசும் போது தெரியும் அவள் அரிசிப் பல், வெட்கப்படுகையில் செம்மையுறும் அவளது கன்னக் கதுப்பு, என எல்லாவற்றையும் பார்த்து ரசித்தான். 

ஆனால் அவளுக்கோ அது சுகமான இம்சையாய் இருந்தது.

"என்னடி பதிலையே காணோம் இங்க தான் இருக்கியா இல்ல உன்னோட ஹீரோ பத்தி கனவா?" என்றால் மறு முனையிலிருந்து மினி

"அ..... அது இல்ல...ஆங் என்ன சொன்னாய் சரியா கேட்கல?" என்றால் க்ரிஷை முறைத்தவாரே.

"என்னடி இத்தன தடவை காத்துக் கத்தல் கத்துறான் சரியா கேட்கல என்றே?"

"அது ... வந்து"

"அவளது திணறலை ரசித்தவன் ஒருவாறு அவள் மீது இரக்கம் கொண்டு தன்னுள் சிறைப்படுத்தி வைத்துக் கொண்ட அவளது கரத்தை விடுவித்தான். ஆருவிடம் இருந்து போனை வாங்கியவன்

"ஹலோ மினி"

"ஹலோ...யாரு?" என்றால் நம்பாமையுடன் 

"இது க்ரிஷ் அண்ணாவாய்ஸ் போல இருக்கு என்றாள் மெதுவாக

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.