(Reading time: 12 - 24 minutes)

10. ஷைரந்தரி - சகி

காரில் பித்து பிடித்தவனை போல அமர்ந்திருந்தான் அர்ஜீன்.

"அண்ணா?"

"ம்..."

shairanthari

"அம்மூவை பற்றி என்னென்னமோ சொல்றாங்களே?"-சிவா,காரை நிறுத்தினான்.

"அர்ஜீன்...நடந்த எந்த விஷயத்தையும் யார்கிட்டையும் சொல்லாதே! அம்மூவை இங்கிருந்து கூட்டிட்டு போகணும்! கல்பனா எந்த விதத்துல அவளுக்கு தொந்தரவு தருவான்னு தெரியாது.அவளுக்கு இன்னொரு வழியிலும் பிரச்சனை வரும்!"

"என்னண்ணா சொல்ற?"

"ஆமா...வரும்!"

"என்னண்ணா பண்றது?"

"அம்மூவை கூட்டிட்டு உடனே அமெரிக்கா கிளம்பு!"

"நீ??"

"நான் வருவேன்...எல்லா பிரச்சனையும் முடிச்சிட்டு வரேன்."

"பேசாம வீட்டில சொல்லிடலாம்ணா!"

"இல்லைடா...வேண்டாம். அவங்களுக்கு தெரிந்தால் பயப்படுவாங்க!"

"............"

"விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம்!"

"சரிண்ணா!"-காரை கிளப்பிக் கொண்டு வீட்டிற்கு வந்தனர்.

"ம்மூ..."

".........."

"அம்மூ......"

"சிவா....ஷைரு! வெளியே போனாடா!"

"எங்கே அத்தை?"

"ஊரை சுற்றி பார்த்துட்டு வரேன்னு போனா!"

"கூட யார் போயிருக்கறது?"

"பார்வதியும்,யுதீஷ்ட்ரனும் போயிருக்காங்க!"-சிவா,அரை நொடி கூட தாமதிக்கவில்லை.

உடனே,கிளம்பினான்.

அவன் நினைத்தது சரியாயிற்று...அன்று அவன் பார்த்து வந்த அந்த பாழடைந்த கோவில் வரை அவர்கள் சென்று விட்டிருந்தனர்.வேகமாக சென்று வழி மறித்தான். அவனது,செய்கை புரியாமல் மூவரும் விழித்தனர்.

"சிவா?"

"அம்மூ...உடனே வா!"

"எங்கே?"

"அப்பா போன் பண்ணி இருந்தார்...உடனே யு.எஸ்.கிளம்பணும்!"

"ஏன்?"

"அது...உனக்கு எக்ஸாம் நெருங்கிடுச்சுல,அதான்!"

"அதுக்கு தான் மூணு மாசம் இருக்கே?"

"அம்மூ...நான் சொல்றதை கேளு! வா!"

"இரு...சொல்லிட்டு வரேன்!"

"ஸாரி...நான் கிளம்பணும்!"-என்றாள் யுதீஷ்ட்ரனிடத்தில்!

"பத்திரமா போயிட்டு வா!"

"வரேன் அண்ணி!"

"சரிங்க..."-கோவமாக சிவாவின் காரில் ஏறினாள்.சிவா,ஒரு தீர்க்கமான பார்வை அவர்களை பார்த்துவிட்டு வண்டியை எடுத்தான்.

காரில் மௌனமே உருவாய் அமர்ந்திருந்தாள் ஷைரந்தரி.

"அம்மூ?"

"..........."

"கோபமாடா?"

"............"

"பேசுடா?"

"என்ன பேசணும்?வர வர உன் போக்கே சரியில்லை. ஏதாவது கேள்விக் கேட்டா மட்டும் நல்லா பதில் வருது! நான் யுதீஷ்ட்ரன் கூட போனதுனால தானே நீ என்னை கூட்டிட்டு வந்த?"

"............"

"அப்படி என்ன தான் பகை இரண்டு பேருக்கும்?இதுக்கும் முன்ன பின்ன பார்த்தது கூட கிடையாது!இப்போ தான் சந்திக்கிறீங்க..."

"............."

"ஏன் சிவா இப்படி பண்ற?இதுவே,அவர் அண்ணியை உன்கிட்ட பேச கூடாது,பழக கூடாதுன்னு சொல்லியிருந்தா?நான் கேட்ட உடனே உங்க கல்யாணத்துக்கு சம்மதிச்சார்ல அவரை சொல்லணும்!"

"................"

"பதில் பேசு சிவா!"

"இப்போ...இங்கே என்ன நடக்குதோ அதைப் பற்றி யோசிக்காதே குட்டிம்மா!முதல்ல ஊருக்கு போகலாம்."

"நான் வர மாட்டேன்."

"சொன்னா கேளு..."

"நான் வர மாட்டேன்.இதுக்கு மேல வற்புறுத்தின,நான் யார்கிட்டையும் பேச மாட்டேன்."-சிவா, அமைதியானான்.

"அப்போ எனக்கு ஒரு சத்தியம் பண்ணு!"

"............"

"உன் வாழ்க்கை சம்பந்தமான எந்த முடிவும் நீ எடுக்க கூடாது!"-அவன் கேட்டதோ ஒரு அர்த்தத்தில்,அவள் புரிந்து கொண்டதோ வேறு அர்த்தத்தில்....

"உன்கிட்ட இந்த மாற்றத்தை நான் எதிர்ப்பார்க்கலை சிவா! அதிரடியான மாற்றம்.சொந்த தங்கச்சியையே சந்தேகப்படுறீயா?"

"அம்மூ கோபப்படாதே! நான் எது பண்ணாலும்,உன் நல்லதுக்கு தான்."

"தெரியுது!"-அதற்குள்,வீடு வந்துவிட்டிருந்தப்படியால்,

அவள் வேகமாக இறங்கி உள்ளே சென்றுவிட்டாள்.

"ன்னிச்சிடுண்ணா! அவர்,தெரியாம அவங்களை கூட்டிட்டு போயிட்டாரு!"

"இல்லைம்மா!அவன் ஏதோ பிரச்சனையில இருக்கான்.நீ அவன்கிட்ட எதையும் கேட்காதே!ஷைரந்தரி கண்டிப்பா அவன் மேல கோபமா இருப்பா! நீ போய் அவளை சமாதானப்படுத்து!"-பார்வதியை வீட்டில் இறக்கிவிட்டான் யுதீஷ்.

"நீ வரலைண்ணா?"

"நீ போ நான் கொஞ்ச நேரம் கழித்து வரேன்!"

"சரிண்ணா!"

ள்ளே.....

"அண்ணா!டிக்கெட் புக் பண்ணட்டா?"-அர்ஜீன்.

"வேண்டாம் அர்ஜீன்!"

"ஏன்ணா?"

"அம்மூக்கு இதுல விருப்பம் இல்லை."

"ஆனா,அவ இங்கே தங்கினா?"

"இல்லடா...அவளுக்கு எதுவும் ஆகாது...எனக்கு ஒரு உதவி பண்ணு! எனக்கு,கல்பனா பற்றி எல்லா விவரமும் தெரியணும்!"

"அப்போ...அவளை உனக்கு தெரியாதா?"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.