(Reading time: 12 - 24 minutes)

 

"ன்னடா?"

"நான் உன் மடியில படுத்துக்கவா?எனக்கு ஒரு கதை சொல்வியா?"

"கதையா?ம்...சரி வா!"-ஷைரந்தரி சிவாவின் மடி மேல் படுத்துக் கொண்டாள்.

சிவா கதை சொல்ல தொடங்கினான்.

"ஒரு ஊர்ல ஒரு அழகான இளவரசி இருந்தாளாம்! பழக நல்ல பொண்ணா இருந்தாலும் கொஞ்சம் முன் கோபக்காரி!"-அவன் சொல்லிக் கொண்டே போக அவள் உறங்கிவிட்டாள்.

அவள் உறங்கியதை பார்த்தவன்,மெல்ல அவளை தலையணையில் சாய்த்து,அவளுக்கு போர்த்திவிட்டு அவள் நெற்றியில் முத்தமிட்டு சென்றான்.முத்தம் என்பது காமத்தில் சேராது என்பது மகளை பெற்ற தந்தைகளுக்கு மட்டுமல்ல , தங்கைகளை பெற்ற அண்ணங்களுக்கு தெரியும்.சிவா,வெளியே சென்று சில நொடிகள் ஆகியிருக்கலாம்.திடீரென்று காற்று பலமாய் வீசி,ஜன்னல் திரைச்சீலையை கலைத்தது.அந்த அறையில் குளிர் அதிகமாகியது. ஷைரந்தரி நல்ல உறக்கத்தில் இருந்தாள்.கட்டிலின் அடியில் இருந்து கரும்புகையாய் வெளிவந்தது அந்த உருவம்.அவளருகே நின்றது.கருநிறத்தில் இருந்த அதற்கு கண்கள் சிவப்பு நிறம்,தலை முடி காற்றில் அலைப்பாய்ந்தது. உடலெங்கும் குருதி வெள்ளம்.அதன் கரங்கள் ஷைரந்தரியிடம் சென்றன.அவள் திரும்பி படுத்தாள்.திடீரென்று எங்கிருந்தோ ஒளி பிரகாசித்தது.அதன் கரங்கள் அவளை நெருங்க அவளை சுற்றி நெருப்பு நெருங்காத வண்ணம் வட்டமிட்டன. மீண்டும் முயன்றும் பலனில்லை.அந்த ஒளியானது அப்படியே அதன் மீது படர்ந்தது.உடல் முழுதும் தீ படர்ந்தாற் போல துடிதுடித்தது....அதனால் அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை.வந்த வழியே சென்றது.அந்த ஒளியானது ஷைரந்தரி மேல் படர,அவள் சிறு குழந்தையை போல உறங்கினாள்.

றுநாள் காலை...

தோட்டத்தில் சிறு குழந்தைகளோடு விளையாடி கொண்டிருந்தாள் ஷைரந்தரி.

"நான் ஒத்துக்க மாட்டேன்.நீ அவுட் தான்!"

"இல்லக்கா...நீ என்ன பார்க்கவே இல்லை. அதுக்குள்ள நான் உன்னை தொட்டுட்டேன்."

"இல்ல...நீ அவுட் தான்!"

"ஏ...என்ன நடக்குது இங்கே?"-அர்ஜுன்.

"பாருடா! இந்த பையன் அவுட் ஆயிட்டான்.ஒத்துக்க மாட்றான்!"

"சின்ன பையன் தானே விடேன்!"

"அதுலாம் முடியாது...நீ பொய் சொல்ற! நான் சிவாக்கிட்டயே கேட்டுக்கிறேன்.சிவா...."-அர்ஜீன் அவள் வாயை பொத்தினான்.

"அவன் வந்தா எனக்கு தான் விழும்!டேய்...தம்பி இந்த குழந்தையை பார்த்தா பாவமா தெரியலை நீயாவது சும்மா இருடா!"

"சரி..."

"அதை நீங்க என்ன சொல்றது??"-ஷைரந்தரி.

"நான் சொல்றேன் நீ அவுட்!"

"வில்லத்தனமா பேச வந்துட்டு,குழந்தைத்தனமா மாத்திட்டா...பிடிடா அவளை!"-ஷைரந்தரி ஓட ஆரம்பித்துவிட்டாள். இவர்கள் துரத்த ஆரம்பித்துவிட்டனர்.

பின்னால் திரும்பி திரும்பி ஓடியவள்,முன்னால் கவனிக்கவில்லை.நேராக யுதீஷ்ட்ரன் மீது மோத,அவன் நிலை தடுமாறி கீழே விழ,அவன் மீது ஷைரந்தரி விழுந்தாள்.சிறிது நேரம் ஒன்றும் புரியாமல் இருவரும் அப்படியே இருந்தனர்.அப்போது,அங்கே வந்த அர்ஜீனும்,மற்ற குழந்தைகளும்,"அய்யயோ!"-என்று கண்களை மூடிக் கொள்ள,அதில் கலைந்தவர்கள்,ஒருவரை ஒருவர் விடுவிக்க முயன்றனர்.விதி, ஷைரந்தரியின் கழுத்து சங்கிலி யுதீஷ்ட்ரனின் சட்டை பட்டனில் மாட்டிக்கொள்ள இருவரின் பிரிவும் தாமதமாயிற்று.ஒரு வழியாக இருவரும் எழுந்திருக்க,அர்ஜீன் அந்த குழந்தைகளிடம்,

"இப்போ,நீங்க எதையும் பார்க்கலை.சரியா?"-என்று கூற,

"சரிண்ணா!"-என்றனர் அம்மழலைகள். ஷைரந்தரியின் நிலை பரிதாபமாய் போயிற்று. யுதீஷ்ட்ரன் நிலை தன்னை கூறவா வேண்டும்?அவன் இந்த நெருக்கம் இன்னும் கிடைக்காதா?என்றல்லவா ஏங்குவான்?ஷைரந்தரி அங்கிருந்து சென்றுவிட்டாள்.

"டேய்! சும்மா இருக்க வேண்டியது தானே?"

"ஏன்?இன்னும் கொஞ்சம் ரொமான்ஸ் பண்ணியிருக்கலாம்னா?"

"டேய்! அவ கோவிச்சிக்கிட்டு போறா பாரு!"

"மன்னிச்சிரு மச்சான்!"

"மச்சானா?"

"ஆமாம்...என் தங்கையின் இதயம் கவர்ந்தவனை நான் மச்சான் இன்று தானே அழைக்க வேண்டும்?"

"மன்னாங்கட்டி...பேச்சு தமிழே சுத்தமா வராது,இதுல தூய தமிழ் வேற!"

"உன் அளவுக்கு பேச முடியுமா?"

"எது?"

"ஒண்ணுமில்லை போய் அவளை சமாதானப் படுத்துங்க...போங்க ஜி!"-அவன் சென்றவுடன்,

"பார்த்திபா! பார்த்திபா!"-என்று புலம்பிக் கொண்டே சிவாவிடம் சென்றான்.

"என்னடா பார்த்திபா?"-சிவா

"அண்ணா! அந்த சாமியார்,பார்த்திபன்னு ஒரு கேரக்டரைப் பற்றி சொன்னார்ல..."

"ஆமா..."

"அது ஏன் நம்ம யுதீஷ்ஷா இருக்க கூடாது?"

"என்னடா சொல்ற?"

"இல்லைண்ணா!.ஒரு சந்தேகம்!"

"அப்படியெல்லாம் இருக்காது!"

"ஒரு வேளை இருந்தா?"

"ராஜா...கண்ணா...இப்போ பார்த்திபன் யாருன்னு பார்க்கிறது முக்கியமில்லை.அந்த கல்பனா பற்றி விவரம் வேண்டும்!"

"அண்ணா...ஞாபகம் இருக்கா?"

"என்ன?"

"அசோக் வீட்டிற்கு வரும்போது,யுதீஷ் கல்பனான்னு யாரையோ பற்றி சொன்னானே!"-சிவாவின் புருவம் சுருங்கியது.

"ஆமாண்ணா!அவன் சொன்னான்."

"அர்ஜீன்...நீ உடனே போய்,ஊருக்கு நடுவுல இருக்கிற கோவிலைப் பற்றின விவரத்தை தெரிஞ்சிட்டு வா!"

"அந்த கோவிலுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?அந்த சிவன் கோவிலுக்கும் அம்மூக்கும் தானே சம்பந்தம் இருக்கு!"

"காரணமா தான் சொல்றேன்.போ!"

"சரிண்ணா!"-அர்ஜீன் கிளம்பிவிட,சிவா ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்தான்.திடீரென்று அவன் பார்வை தோட்டத்தில் மரத்திற்கு பின்னால் நின்று அவனை முறைத்துக் கொண்டிருந்த சிறுமியின் மீது சென்றது.

"யாரிந்த சிறுமி?இதுவரையில் இங்கே பார்த்ததில்லையே?"-என்று எண்ணியவன் அவளருகே சென்றான்...இன்னும் அவள் அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.அவளருகே மண்டியிட்டு அமர்ந்து,

"குட்டிம்மா! யாரும்மா நீ?"-என்றான் அக்குழந்தையின் கன்னத்தை வருடியவாறு!!!அவள் அவன் கையை தட்டிவிட்டாள்.

"நீதானே ஷைரந்தரியை காப்பாற்ற வந்தது?"-அவன் அதிர்ந்தான்.

"போ! எத்தனை நாள் அவளை காப்பாற்றுவன்னு பார்க்கலாம்...கல்பனா விட மாட்டா!!!பார்த்துட்டே இரு!"-அந்நேரத்தில் சிவா என்று யாரோ அழைக்க திரும்பி பார்த்துவிட்டு திரும்புவதற்குள் மாயமாகி விட்டிருந்தாள் அச்சிறுமி. குழப்பத்தின் உச்சத்திற்கு சென்றுவிட்டான் சிவா.இனி,நடக்கும் மாயை தன்னை பிடிப்பது யாரோ??

வேள்வியில் பிறந்தவளா?வேள்விப்பெண்ணை இரட்சிக்க அவதரித்திருப்பவனா?மகேந்திர குமாரியின் மனம் கவர்ந்தவனா?பவித்ரத்தீயை பழி வாங்க துடிப்பவளா?அனைத்திற்கு மூலமாய் இருப்பவரா?விதியை செயல்படுத்திய அம்புகளா?பொறுத்து பார்க்கலாம்... விடையை பொருத்தி பார்க்கலாம்...காத்திருங்கள்...

தொடரும்

Go to Episode # 09

Go to Episode # 11

{kunena_discuss:751}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.