(Reading time: 9 - 17 minutes)

15. நெஞ்சமெல்லாம் காதல் - ப்ரியா

"பார்த்து பத்திரமா போகணும், போற வழில சண்ட போடாம போங்க, அங்க போயி அண்ணிய தொந்தரவு பண்ண கூடாது.... ஏய் வாழு நான் இங்க காட்டு கத்து கத்திட்டு இருக்கேன் நீ இப்படி ஐஸ் க்ரீம் சாப்பிட்டுட்டு இருக்க"

"ஐயோ அம்மா அதெல்லாம் நான் பார்த்து தான் போவேன், மேகா தான் கூட வராளே, அது பத்தாதுன்னு ரகு வேற வர்றான் அப்புறம் என்னம்மா?", மது.

"ம்ம்ம் அது தான் பயமே, மூணு வாலுகளும் சேர்ந்து என்ன பண்ண போறிங்களோ, அப்பா வரட்டும்ன்னு சொன்னாலும் கேட்காம நீங்க மட்டும் போறேன்னு இப்படி அடம் பிடிக்கரிங்க" , லலிதா.

Nenjamellam kathal

"அதான் எங்கள கார்ல போக கூடாதுன்னு பெரிய ஆர்டர் போட்டுடிங்களே அப்புறம் என்ன.. ட்ரெயின்ல தானே மா நைட் ஏறுன காலைல போய் இறங்க போறோம் அண்ணா வந்து கூட்டிட்டு போக போறான்"

"ஹ்ம்ம் என்னமோ போடி"

"அப்பா பாருங்க அப்பா, இங்க இருக்க சென்னைக்கு ஒரு சிம்போசியம் அண்ட் காலேஜ் கல்சுரல்ஸ் போறதுக்கு இந்த அம்மா இப்படி மேடைல மைக்கு பிடிச்சு பேசற மாத்ரி பேசிட்டு இருக்காங்க"

"சொல்லுவா டி சொல்லுவா பொண்ண பெத்து வெச்சுட்டு நான் படற பாடு எனக்கு தான் தெரியும்"

"என்ன மது ரெடியா? மகா ராணி ரெடி ஆகிட்டாங்கள?"

"வா ரகு அது யாரு டா மகா ராணி?"

"அதுவம்மா நான் சொல்றேன்.. நம்ம மேகா தான் ரெண்டு பெருகும் சண்டை அதன் இப்படி"

"இங்கேயே ஆரம்பிச்சுடிங்களா?"

"ஐயோ அம்மா போதும் நாங்க கெளம்பறோம், மேகா சீக்கிரம் கீழ வாடி"

"ம்ம்ம்ம் இதோ வரேன்"

"ஆன்ட்டி போயிட்டு வரோம்"

"சரிம்மா மேகா பார்த்து போங்கம்மா"

"ஐயோ அத்தை அவ கிட்ட போயி இத சொல்றிங்க, என்கிட்ட சொல்லுங்க நான் தான் இந்த ரெண்டு வாலையும் கட்டி மேய்க்கணும்"

"கரெக்டா சொன்ன ரகு பார்த்து மேய்ச்சுட்டு போ"

"அப்பாஆஅ"

"ஹே என்ன அத்தையும் மருமகனும் என் பொண்ண கிண்டல் பண்றிங்க, என் பொண்ணுக்கு என்ன குறைச்சல் அதெல்லாம் அவ பத்திரமா போயிடு வருவா.. இல்லடா கண்ணு""

"ஆமாம் பா"

த்தனை போராட்டங்களும் முடிந்து ஒரு வழியாக மூர்த்தியுடன் மூவரும் சென்னை செல்லும் ரயிலில் ஏறி இதோ விடியற்காலை வந்திரங்கியும் விட்டனர். அவர்களுடைய முக்கியமான வேலையே அங்கே இரு கல்லூரிகளில்  நடக்க இருக்கும் போட்டிகளில் பங்கேற்பது தான்.

ஒன்று அவர்களின் கணினி துறை சம்பந்தப்பட்ட போட்டிகள். mattrondru கலை நிகழ்சிகள் நடைபெறும் 'இன்டர் காலேஜ் கல்சுரல்ஸ்".

திவாக்கர் அவர்களுக்காக காத்திருக்க, அவனுடன் அவர்களும் அவன் வசிக்கும் பிளாட்டிற்கு சென்றனர். புதிதாக திருமணமான அண்ணன் அண்ணியுடன் தங்குவது உறுத்தினாலும் தன்யாவின் அன்பான உபசரிப்பில் அந்த கூச்சமே மூவருக்கும் இல்லாது போனது.   

அண்ணியின் நளபாகத்தை சுவைத்து விட்டு ஒரு குட்டி தூக்கத்தின் பின் ஊர் சுற்ற கிளம்பினர் மூவரும் தன்யாவையும் அழைத்துக் கொண்டு.

ரகு கார் ஓட்ட மேகாவும் தனாவும் அவனுடன் சென்றனர். மது மட்டும் சற்றும் செவி சாய்க்காமல் பிடிவாதமாய் தன்யாவின் ஸ்கூட்டியில் வலம் வந்தாள்.

சென்னையின் சாலையில் இவள் இப்படி தனியே ஸ்கூட்டியை ஓட்டுவது மட்டும் திவாக்கருக்கு  தெரிந்தால் அவ்வளவு தான் என்ற பயத்திலேயே தன்யா வர, ஸ்கூட்டியின் பின்னே சிறு இடைவெளி விட்டு கரை செலுத்தியவனுக்கு காரை விடவும் ஸ்கூட்டியின் மீது தான் கவனம் இருந்தது.

இது எதுவும் என்னை ஒன்றும் செய்யது என்பது போல், பெரிய வாகனங்களின் நடுவில் புகுந்து அங்கு இங்குமாக ரோட்டை குறுக்காக அளந்த படி சந்தோசமாய் சென்று கொண்டிருந்தாள் மது.

அவள் ஒரு வளைவில் திரும்பும் பொது எதிரே வந்த கார் அவளை இடிக்க வந்து இடிக்காமல் மயிரிழையில் ஒதுங்கி செல்லவும் ரகு சடன் ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்தினான். ஆனால் நின்றால் அண்ணியிடமும் ரகுவிடமும் மாடி கொள்வோமென தெரிந்து வண்டியை நிறுத்தாமல் மது சென்றாள்.

வண்டியை கிளப்பியவாறே மதுவை போனில் பிடித்தான் ரகு, "அம்மு வாட் இச் திஸ், இப்படியா டிரைவ் பண்ணுவ பர்ஸ்ட் வண்டிய நிறுத்து"

"போடா அதெல்லாம் முடியாது இனி பார்த்து போறேன்"

"நோ டூ வாட் இ செ, வண்டிய நிறுத்து"

"நீ இப்டியே பேசிட்டு இரு நான் போன வைக்கிறேன்"

"நோ மது சொன்ன கேளு ப்ளீஸ்"

"ஐயோ ரகு ப்ளீஸ் டா,இனி பாத்துகறேன்"

"ம்ம் ஓகே என்னமோ பண்ணு போ"

"ஹையா ஜாலி"

"ம்ம்ம்ம்"

போனை வைத்தவன் மீண்டும் அவளை பின் தொடர, ஒரு வழியாக அவர்கள் செல்ல வேண்டிய மாளிற்கு அருகில் வந்து விட்டனர்.

து வரை பிரச்சனை ஏதும் இல்லை தான். ஆனால் மாலின் பார்கிங் ஏரியாவினுள் நுழைந்த மதுவை எதிரே பைக்கில் வந்த ஒரு இளைஞன் இடித்து அவள் தடுமாறி விழும் சமயம் மற்றொருவன் வந்து அவளை தாங்கி பிடிக்க, ஏற்கனவே அந்த விபத்தில் இருந்து தப்பிதவள் ஒரு பயத்துடனே இருக்க, இப்போது கைகள் நடுங்க நிற்க முடியாமல் தவித்தவளை இடையோடு இறுக்கி விழாமல் பிடித்து கொண்டான் அவன்.

அவளை இடித்தவன் மற்றவனிடம் "ஆஹா மச்சான் என்ன சான்ஸ் டா இப்படின்னு தெரிஞ்ச நான் பின்னாடி உட்காந்து வந்திருப்பேனே, இதுக்கு தான் அந்த பக்கம் போன என்னை இப்படி போடன்னு சொன்னியா இது தெரியாம போச்சே மச்சான்" என நிலைமை தெரியாமல் உளறி வைக்க,

இவ்வளவு நேரம் தன்னை காப்பாற்றியவன் என்ற போர்வைக்குள் இருந்தவன் இப்போது வெளியே வந்தான். இல்லை நடந்தவற்றை பார்த்து மது அப்படி நினைத்தாள்.

அவன் கரங்கள் இன்னும் தன் இடையில் இருப்பது கண்டு வேகமாக அவனை உதறி விட்டு சுதாரித்து கொண்டாள்.

"ப்ச் சும்மா இரு டா" என்று தன் நண்பனை அடக்கி விட்டு குனிந்து அவன் ஸ்கூட்டியை ஒரு கையால் தூக்கி நிறுத்த முயல அவன் எதிர் பாராமல் விழுந்தது அறை அவன் கன்னத்தில்.

"யூ ஸ்கவுண்ட்ரல், இன்னும் எத்தன பேருடா இப்படி கிளம்பிருகீங்க" என மது பொரிந்து தள்ள,

'இப்போ சந்தோசமா' என்பது போல் தன நண்பனை பார்த்தவன் 'ச்சை ' என ஸ்கூட்டியை அப்படியே கீழே போட்டு விட்டு விறு விறுவென சென்று விட்டான் அவன் நண்பனும் பின்னோடு பைக்கில் சென்று விட்டான்.

அதற்குள் காரை நிறுத்தி விடு வந்த ரகு அனைத்தையும் கேட்டு அறிந்து அவனை தேட அவனை காணமல் ம்,அதுவை திட்டி கொண்டே மாலினுள் நுழைந்தனர்.

அங்கே வெளியே வேகமாக நடந்த நண்பனை " டேய் ஆதி மச்சான் சாரி டா" என தேற்றி கொண்டே சென்றான் அவன் நண்பன்!!!

ஆதி- மதுவின் முதல் சந்திப்பு இனிதே நடந்தேறியது!!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.