அன்றைய நாள் முழுவதும் ஊர் சுற்றி களைத்து வீட்டுக்கு வந்ததும் உறங்கி போனானர் அனைவரும். நடந்த எதுவும் திவாகருக்கு தெரியாமல் பார்த்து கொண்டனர்.
அடுத்த நாள் மதியத்திற்கு மேல் அலுவலகத்தில் விடுப்பு சொல்லி விட்டு வீட்டிற்கு வந்து விட்டான் திவாக்கர். அதுவும் மதுவின் ஏற்பாடு தான்.
காலை முழுவதும் வீட்டில் இருந்து மற்ற போட்டிகளுக்கு தயார் செய்தார்கள். மதியம் ரகு அவன் நண்பர்களை பார்க் அப்க வேண்டும் என கூற, மேகா தன்யாவுடன் வீட்டிலேயே இருக்கலாம் என்று கூறினாள்.
ஆனால் மது தான் திவாவுக்கு போன் செய்து மதியம் லீவ் போட்டு விட்டு வருமாறு அடம் பிடித்து வரவழைத்தால். வந்தவனை ஓய்வாக இருக்க விடாமல் சாப்பிட்டவுடன்,
"அண்ணா என்ன டேன்ஸ் க்ளாஸ்க்கு கூட்டிட்டு போ"
"ஹே நீ தான் அதெல்லாம் முடிச்சுடியே"
"பரதம் இல்ல. வெஸ்டேர்ன் டேன்ஸ்.. உன் ப்ரெண்ட் தான் ஸ்கூல் வேசுருக்காரே இந்த ஒரு வாரம் மட்டும் எனக்கு பேசிக்ஸ் சொல்லி குடுக்க சொல்லுண்ணா ப்ளீஸ் ப்ளீஸ்"
'ஹே அப்படி ஒரு வாரம் எல்லாம் சேர்த்துக்க மாட்டான்"
"என்ன இப்படி சொல்ற போ எனக்கு டேன்ஸ் கிளாஸ்க்கு போகணும் அதுவும் இன்னைக்கே"
"ஹ்ம்ம் உன் பிடிவாதம் இருக்கே கிளம்பு போகலாம்"
"ஹையா ஜாலி, anni நான் போயிடு வரேன், மேகா நீயும் வாடி"
"இல்ல மது நீ போயிட்டு வா"
"ம்ம்ம் என்னவோ போ"
அடுத்த அறை மணி நேரத்தில் அங்கே இருந்தனர் இருவரும். தன் நண்பனிடம் அனைத்தையும் கூறி அவளை சேர்த்து விட்டு அப்போதே கிளாஸ் போக வேண்டும் என அவள் அடம் பிடிக்க, மாலை வந்து அழைத்து செல்வதாக கூறி சென்றான் திவாக்கர்.
முதல் ஒரு மணி நேரம் அவளுக்கு மேற்கத்திய நடனத்தின் தகவல்களை கொடுத்தவாறு சிறு சிறு நடன அசைவுகளையும் கற்று தந்தார் திவாகரின் நண்பர்.
அடுத்து அடுத்து மாணவர்கள் வர, மதுவிற்கு சற்று கூச்சமாகவும் தயக்கமாகவும் இருந்தது. ஊரில் பரதநாட்டிய பள்ளியில் பெண்கள் மட்டும் இருந்த வகுப்பில் தான் இவள் சேர்ந்தது பயின்றது.
ஆனால் இங்கே அதுவும் ஆண்கள் முன்னால் இப்படி ஆட கொஞ்சம் தயக்கம் தான்.
அந்த தயக்கத்துடன் சேர்ந்து அதிர்ச்சியும் அவளுக்கு காத்திருந்தது.
அவளை பைக்கில் இடித்தவன் அங்கு வர அவனும் ஒரு மாணவன் என்று கண்டுகொண்டாள். கூடவே இவளிடம் அறை வாங்கியவனும் வந்து நின்றால்???
பத்து நிமிடம் ஆகியும் அவன் வரவில்லை அன்றைய வகுப்பு அவர்களுக்கு தொடங்கியது. அவர்களை பார்த்து ஓரிரு அசைவுகளை கற்று கொண்டு ஆடுமாறு மாஸ்டர் கூற அவளும் பின்பற்றினால்.
ஏற்கனவே இந்த பேண்ட்டும் டி-ஷர்டும் அவஸ்தை இதில் வேகமாக் ஆவேறு ஆட வேண்டும். என்ன தான் மாடர்ன் உடை அணிந்து சென்றாலும், ஆணிய ஆடவர் முன் இப்படி ஆட பெண்ணுக்கே உரிய தயக்கம் தடுத்தது.
அதை பின்னுக்கு தள்ளி, அவள் பயிற்சியில் மூழ்க, இவளை போலவே கருப்பு நிற பனியனும், சாம்பல் நிற பேண்ட்டும் அணிந்து அவசரமாக வந்தவன் மாஸ்டரிடம் ஏதோ கூறி விட்டு ஆடி கொண்டிருந்தவர்களுடன் கலந்து கொண்டான். அதுவும் இவளுக்கு இட பக்கம்!!
சற்று நேரம் எதையும் கவனிக்காமல் அவன் இசையின் vegathirku ஈடு கொடுத்து ஆட முதலில் இருந்த கோவம் தாயகம் பயம் எல்லாம் தாண்டி ஒரு கலைஞன் மற்றொரு கலைஞனை எடை போடும் தோணி மக்டுவினுள் வந்தது.
நளினமும்,நவரசங்களும் கலந்து கொடி முல்லை காற்றில் ஆடுவது போல் மெலிய உடலை அவள் அசைத்து பாரதம் ஆடுவதற்கு எதிர்பதமாக, துடிப்பும் துள்ளலும் ஆண்மையும் கம்பீரமும் கலந்து அந்த கொடியினை சுழற்றி அடிக்கும் காற்றை போல் இருந்தது அவன் ஆட்டம்.
நல்ல திறமைசாலி தான் மனதுக்குள் எண்ணி கொண்டாள்.
ஒரு கட்டத்தில் ஆடியவாறே இவள் புறம் திரும்பியவன் நின்றுத ஒரு நொடிக்கும் குறைவு தான். கண்களில் கோபம் குடியேற ஆட்டத்தின் வேகமும் கூடியது.
மதுவிற்கு மறந்திருந்த பயம் மெல்ல மெல்ல அதிகரித்தது.
அந்த பாடல் முடிந்த உடன் சற்று நேர இடை வெளிக்கு பின், ஆதியை அளித்த மாஸ்டர் மதுவையும் அழைத்தார்.
"அடுத்த சாங்குக்கு பேரா (pair) தான் ஆடனும் மது, ஆதி தான் இந்த குரூப் ல கொஞ்சம் டேலேன்டான பையன், நீ அவன் கூட ஆடு ஹி வில் ஹெல்ப் யூ"
"இல்ல சார் அது..." என மது இழுக்க,
"தேங்க்ஸ் பார் தி கம்ப்ளிமன்ட் மாஸ்டர், வெல், இவங்களுக்கு நானே சொல்லி தரேன் உங்க வார்த்தைய காப்பத்துவேன் பாருங்க" என அழகாய் சிறிது தலை ஆசைதான் ஆதி.
அவள் புறம் திரும்பியவன், கண்கள் ஏதோ சொல்லி அவளை ஒருதரம் அளப்பது போல் பார்க்க, முதுகு தண்டு சில்லிட்டது மதுவிற்கு!!
ஐந்து நிமிடத்தில் பாடல் துவங்க, அவள் வலக்கரம் பற்றி இழுத்து, இடப்புறம் இடையில் கை வைத்து அலுத்தியவன், மெல்ல குனிந்து அவள் காதருகில்
"இட்ஸ் மை டைம் டு பீட் யூ இன் மை ஸ்டைல் பேபி" என்றான்!!!!
காதல் பெருகும்…
{kunena_discuss:725}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.