(Reading time: 13 - 26 minutes)

16. நெஞ்சமெல்லாம் காதல் - ப்ரியா

வன் கண்களுக்குள் பார்த்தவள் உடல் மெல்ல நடுக்கம் கண்டது. அன்று தெரியாமல் அவனை அடித்து விட்டோமோ என ஒரு கணம் சிந்தித்தவள், அவன் எப்படி அன்று பொது இடத்தில் அப்படி அவளை பிடிக்கலாம் என்று நினைத்த அந்த நொடி சரியாக அவன் பிடி இறுக்கம் கொண்டது அவள் இடையில்!!!!

பாடலுக்கு ஏற்ப அவன் ஆட, அவன் அசைவுகளுக்கு ஏற்ப அவளை அறியாமல் ஆடினாள் மது. "அன்னைக்கு நீ விழ கூடாதுன்னு பிடிச்சதுக்கு அறைஞ்சிட்டு போனியே இப்போ என்ன பண்ணுவ?" என்று கேட்பது போல் இருந்தது அவன் பார்வையும் ஏளனமாக வளைந்த அவன் உதடுகளும்.

தள்ளி நின்ற பொது ரசித்த அவனது ஆட்டம், உடல் உரசுமாறு கூட ஆடும் போது சகிக்கவில்லை.அவன் பிடி ஒவ்வொரு முறை இறுகி தளரும் போதும், அவளை சுழற்றி விட்டு கை பிடித்து ஆடும் போதும் அவன் வேகம் கூடிற்றே தவிர குறையவில்லை.

Nenjamellam kathal

பாடலின் ஒரு இடத்தில அவளை தரை வரை படுத்திருப்பது போல் தாழ்த்தி அவள் முழு உடலையும் தன் பலம் கொண்டு தாங்கி மேலே சட்டென்று எழுப்பும் போது நிலை தடுமாறி சுதாரித்து நின்றவளின் கண்களில் தெரிந்த பயம், மிக அருகில் இருந்த அந்த பொன் முகத்தில் மின்னிய வியர்வை துளிகள், நடுங்கிய அவள் உதடுகள், அவன் கரங்களுக்குள் வேறு வழியில்லாமல் அடங்கியிருந்த சில்லிட அவள் கரங்கள்.. அரை நிமிடத்துக்கும் குறைவாக தான் இவை அனைத்தையும் உணர்ந்தான்.

ஆனால் உணர்ந்த அடுத்த நொடி அவன் இரு கரங்களும் அவளிடம் இருந்து விலகியிருந்தன! எதிர் பாராமல் தள்ளாடிய நேரத்தில் தாங்கி பிடிக்காமல் அவன் கைகளை விளக்கவும் வலது காலை ஊன்ற எண்ணி முடிப்பதற்குள் கால் பிரண்டு விழுந்திருந்தாள்.

மாஸ்டர் பாடலை உடனே நிறுத்த, "ஐயோ அம்மா" என்ற அலறலில் தன்னிலை அடைந்தவன் பதறி  போய் அவள் கை பற்றி எழுப்ப பாதி எழுந்திருக்கும் போதே நிற்க முடியாமல் மறுபடியும் விழுந்தாள்.

மாஸ்டர், "வேண்டாம் ஆதி தூக்காத வெயிட் பண்ணு" என்று அவசரமாக அவள் அருகில் வந்தவர் அவள் கால்களை பிடித்து பார்த்து விட்டு,

"ஸ்ப்ரைன் ஆகிருக்கு அவ்ளோ தான், முதல்ல டேன்ஸ் கத்துக்க வரவங்களுக்கு இப்படி ஆகறது சகஜம் தான், பயப்படாத மது ஹாஸ்பிடல் போன சரி ஆகிடும்"

"ம்ம்ம்ம்"

முதல் முறையாக அவன் செவிகளை மட்டும் எட்டாமல் மனதையும் எட்டியது அவள் பெயர் "மது"...

"ம்ம்ம்ம்ம்?"

'ஐயையோ மனசுக்குள்ள தான் சொன்னோம், சரி சமாளிப்போம்'

"வந்து சாரி, நம்ம ஆடின வேகத்துல நீங்க தடுமாறின உடனே நானுன் தடு மாறிட்டேன் ஏதோ ஒரு நினைவுல கைய எடுத்துட்டேன்"

"ம்ம்ம்" இதை நான் நம்பனுமா? என்ற பார்வை அவளிடத்தில்.

"நிஜமாங்க, நீங்க பேலன்ஸ் பண்ணி நிப்பிங்க நு நினைச்சேன்"

"ம்ம்ம் பரவாயில்ல" என்று அவனை பாராமல் தன் கால்களை பார்த்தவாறு வலியோடு அவள் சொல்ல, அவன் முகம் வாடி போனது.

"மாஸ்டர் நான் வேணும்னா இவங்கள பக்கத்துல இருக்க ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிடு வரேனே?"

"ம்ம் அதும் சரி தான், எனக்கும் நெக்ஸ்ட் கிளாஸ் இருக்கு, ஆனா பத்திரமா போயிடு வா ஆதி"

"ஓகே மாஸ்டர்"

அவன் அவள் கைகளை பிடித்து மெல்ல தூக்க வழியில் முனகியபடியே எழுந்து வலது காலை ஊன்றாமல் நின்றாள். அந்த அறையை விட்டு வெளியே வரும் வரை நொண்டி கொண்டே வந்தவள் அதற்கு மேல் முடியாமல் போக அங்கிருந்த சேரில் அமர்ந்து விட்டாள்.

இப்போது அவளிடம் சத்தம் இல்லை, "என்ன ஆச்சு?" என குனிந்து அவள் முகத்தை பார்க்க, அவள் கன்னங்களில் வலியின் தடம்.

"ஐயோ மது அழறீங்களா?"

"ம்ம்ம் இல்ல சந்தோசமா சிரிக்கிறேன்"

"ஐயோ அது இல்லைங்க சாரி சாரிங்க ரொம்ப சாரி, வேணும்னு நிஜமா பண்ணலைங்க, நா..."

நிறுத்து என்பது போல் அவள் சைகை செய்ய, வாயை மூடி கொண்டான் ஆதி.

"என்னால இதுக்கு மேல நடக்க முடில, பர்ஸ்ட் அதுக்கு எதாவது பண்றீங்கள வலி உயிர் போகுது அப்புறமா உங்க காரண காரியத்தை கேட்கிறேன்"

"ம்ம்ம், லிப்ட் வரைக்கும் மட்டும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிகொங்க ப்ளீஸ்"

"ம்ம் சரி" என்று அவன் கை பற்றி எழுந்தவள் அவன் தோளை பிடித்து கொண்டு நடக்க முயல முடியாமல் தடுமாறியவளை யோசிக்காமல் தூக்கி கொண்டான்.

"ஹே நீ என்ன.. முதல்ல.. ப்ச்" என்று எதிர் பாராத செயலினால் அவள் தடுமாற,

"ஆபத்துக்கு பாவம் இல்லைங்க, ரொம்ப கஷ்ட படறிங்க, ஹெல்ப் பண்ண தான் வேற எந்த இன்ட்டேன்சனும் இல்லைங்க"

'நீங்க நல்லவரா? கெட்டவரா?' என்று கேட்க வேண்டும் போல் இருந்தது மதுவிற்கு. அவளை தூக்கி கொண்டு கீழே வந்தவன் ஒரு ஆட்டோவை பிடித்து அவளை அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றான்.

ங்கே உள்ள டாக்டர் அவளுக்கு சிகிச்சை கொடுக்க அவள் கத்தியதில் அவனுக்கே நடுக்கம் எடுத்தது, ஒரு வழியாக போராடி அவளுக்கு மசாஜ் கொடுத்து முடித்த டாக்டர் வெளியே வந்து அவனை முறைததில் அசடு வழிந்தான் ஆதி.

இப்போது லேசாக காலை அழுத்தி நடக்க முடிந்தது மதுவால். டாக்டருக்கு நன்றி கூறி அவளை மீண்டும் ஆட்டோவில் ஏற்றி கொண்டு அவள் வீடு விலாசத்தை வங்கி அவளை வீட்டிலே கொண்டு சென்று விட்டவன், அவளிடம் தன் போனை கொடுத்து யாரையாவது வந்து நிற்கும் படி சொல் என்று கூறினான்.

அவளும் அதே போல் செய்ய, தன்யாவும்,மேகாவும் அபார்ட்மண்ட் வாசலிலே நின்றனர் இவர்கள் செல்லும் போது. அவர்களிடம் டாக்டர் தந்த ரிபோர்டையும் மருந்தையும் கொடுத்தவன். மீண்டும் மன்னிப்பு கோரி விடை பெற்றான்.

அவன் ஆட்டோவில் திரும்பவும், ரகு வரவும் சரியாக இருந்தது.

வந்தவன் "அம்மு என்ன ஆச்சு டா?" என உருகி அவளை விசாரித்து நடக்க விடாமல், தூக்கி கொள்ள, அப்போது தான் மதுவிற்கு புரிந்தும் புரியாமலும் மாற்றம் தெரிந்தது.

ரகு தூக்கும் போது தெரியாத ஒன்று, அவன் தூக்கும் போதும், தன்னை தொட்டு ஆடும் போதும்... என்ன இது...? குழம்பியவள் அதோடு அதை மறந்து போனாள்.. வேண்டும் என்ற மறந்து போனாள்!!

ரவு வீட்டிற்கு வந்து விஷயம் அறிந்த திவாக்கர் அவளை திட்டி தீர்த்து விட்டான்.

"அம்மா அப்பா கேட்ட நான் என்ன சொல்வேன்? அம்மா முதலே அவ்வளவு சொல்லி தான் அனுப்பினாங்க, என்ன விடு தன்யாவ என்னனு நினைப்பாங்க? புது மருமக நம்ம மகளை நல்ல பாத்துக்கலன்னு நினைக்க மாட்டாங்களா?" 

"சாரி..."

"ஏதும் பேசாத, கிளம்பு ஹாஸ்பிட்டல் போலாம்"

"அதெல்லாம் மதியமே போயிடு தான் வீட்டுக்கு வந்தேன்"

"அப்டியா அப்போ சரி போய் தூங்கு போ"

"ம்ம்ம்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.