(Reading time: 13 - 26 minutes)

 

மாலையில் நடை பெற்ற இறுதி சுற்றிலும் இராண்டாம் இடத்தை கை பற்றினர். மிகுந்த மகிழ்ச்சியோடு பள்ளிக்கு அதை தெரிவித்து விட்டு வீடு வந்து சேர்ந்து தங்கள் நண்பர்கள் பெற்றோர்கள் என அனைவரிடமும் அதை பகிர்ந்து கொண்டு ஆரவாரம் செய்து ஒரு வழியாய் உண்டு உறங்க செல்லவே அவர்களுக்கு நேரம் இருந்தது.

இதற்கு இடையில் ஆதியை பற்றி நினைகவோ வருந்தவோ ஒரு நொடி கூட அவகாசம் இல்லை மதுவிற்கு. எல்லாம் மறுநாள் வரை தான்.

றுநாள் வீட்டையே ரெண்டு பண்ணி கொண்டு இருந்தால் மது. அவள் பரதநாட்டியம் தான் ஆட போவதாக சொன்னாள். பின்  மேகாவுடன் ரகுவுடன் சேர்ந்து ஒரு ஹிந்தி பாட்டிற்கு நடனம்.

தன்யா ஏற்கனவே அவளை பரதம் ஆடுவதற்காக ஒப்பனை செய்ய தன் தலை ஒருத்தியிடம் சொல்லி அழைத்திருந்தாள். அவள் பியூட்டி பார்லர் வைத்திருந்ததால் சுலபமாக ஏற்பாடு செய்ய முடிந்தது.முதலில் அவள் பாரதம் ஆடிய பின் வடநாட்டு உடை அணிந்து அடுத்த நடனம். அதற்கு அவ்வளவு ஒப்பனை தேவை இல்லை என அதை அங்கே போய் பார்த்து கொள்ளலாம் என விட்டு விட்டனர்.

ஆனால் கிளம்புவதற்குள் ஒரு போரே நடந்து முடிந்தது போல் இருந்தது. திவாக்கர் ரகுவையும் விட்டு வைக்கவில்லை அவள்.

கிளம்பி சரியாக விழ ஆரம்பமாக பத்து நிமிடங்கள் உள்ள போது கிளம்பலாம் என திவாகர் சொன்னதால். அலங்காரம்  முடிந்தவுடன் வீட்டிலயே ஒரு முறை ஆடி பார்த்து கொண்டாள் மது.   

அவள் முடித்தவுடன் மேகாவும், ரகுவும் இன்னொரு பாடலுக்கு ஒத்திகை பார்க்க மதுவும் அவர்களுடன் ஆட, உடைக்கும் ஆட்டத்திற்கும் சம்பந்தம் இல்லாமல் முதலில் அதை பார்த்து சிரித்தவர்கள் பின் இதையே போட்டியிலும் செய்தால் என்ன? என யோசித்து அப்படியே முடிவு செய்தனர்.

மூவரும் விழாவிற்கு சென்று மேடைக்கு பக்கவாட்டில் அமர்ந்து கொள்ள மதுவிற்கு நடுக்கம் ஏற்பட்டது. முதல் நடனம் அந்த கல்லூரியின் ஒரு மாணவியுடையது, அவளும் பாரதம் தான் ஆனால் அது போட்டிக்காக அல்ல, வரவேர்ப்பிர்காக. அடுத்து மது தான் ஆட வேண்டும் அதாவது போட்டியின் முதல் நடனம். அரங்கேற்றம் எல்லாம் செய்திருந்த போதும் இந்த மாணவர் பட்டாளம் முன் ஆட பயந்தாள்.

விழ வரவேற்புரை, அந்த மாணவியின் நடனம் எல்லாம் முடிந்து அவள் மேடையேற காத்திருந்த நேரம், மைக்குடன் மேடையில் ஒருவன் பேசி கொண்டிருக்க விழி மலர்த்தி பார்த்தவள் ஆச்சரியம் அதிர்ச்சி மகிழ்ச்சி குழப்பம் என உணர்சிகள் ஒருங்கே தாக்க, முகத்தில் புன்னகையுடன் அவனையே பார்த்திருந்தான்.

காம்பயரிங் செய்து கொண்டிருந்த ஆதி, அவளை பார்த்து கொண்டே அவள் பெயரை கூறி மேடைக்கு அழைக்க, அவன் முகத்திலும் சந்தோச சாயல்.

பாடல் தொடங்கியதும் ஒரு ஓரமாக நின்று ஆவலுடன் பார்த்தான் ஆதி. முதலில் கத்திய மாணவர் கூட்டம் அவள் நடனத்தில் அமைதியானது.

ஒரு பொன்மானைக் காண தக்கத்திமித்தோம்
ஒரு அம்மானை நான் பாட தக்கத்திமித்தோம்
சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
சலங்கையிட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதைக் காண்பதில் எந்தன் பரவசம்

ஒரு பொன்மானை நான் காண தக்கத்திமித்தோம்
ஒரு அம்மானை நான் பாட தக்கத்திமித்தோம்

தடாகத்தில் மீன்ரெண்டு காமத்தில் தடுமாறி
தாமரை பூமீது விழுந்ததென்னவோ
இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில் படைத்திட்ட
பானம் தான் உன் கண்களோ
காற்றில் அசைந்து வரும் நந்தவனத்து கிளி
கால்கள் முளைத்தது என்று நடை போட்டாள்
ஜதி என்னும் மழையினிலே ரதி இவள் நனைந்திடவே
அதில் பாரதம் துளிர்விட்டு பூப்போல பூத்தாட
மனம் எங்கும் மணம் வீசுது
எந்தன் மனம் எங்கும் மணம் வீசுது
சலங்கையிட்டாள் ஒரு மாது ....

சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம்
அரங்கேற அது தானே உன் கன்னம்
மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்
நடத்திடும் வானவில் உன் வண்ணம்
இடையின் பின்னழகில் இரண்டு குடத்தைக் கொண்ட
புதிய தம்புராவை மீட்டிச் சென்றால்
கலை நிலா மேனியிலே சுளைபலா சுவையைக் கண்டேன்
அந்த கட்டுடல் மொட்டுடல் உதிராமல் சதிராடி
மதி தன்னில் கவி சேர்க்குது
எந்தன் மதி தன்னில் கவி சேர்க்குது
சலங்கையிட்டாள் ஒரு மாது ....

பாடலுக்கு ஏற்ப அவள் உடலின் ஒவ்வொரு பாகமும் வளைந்து ஆட, கண்கள் தனியே ஒரு அரங்கேற்றம் நிகழ்த்தியது. அபிநயம் நவரசம் என அவள் கண்களாலேயே நடனம் ஆடினாள் எனலாம். அவ்வபோது அவள் பார்வை ஆதியை தழுவவும் தவறவில்லை.

ஆடி முடிந்து அவள் உடை மாற்ற சென்று விட, அவளிடம் நன்றாக ஆடினாள் என சொல்லி விட வேண்டும் என்று நினைத்து கொண்டான் ஆதி.

அடுத்து குழு நடனத்திலும் அவள் ஆட்டம் நன்றாக தான் இருந்தது என்றாலும் பாரதம் தான் டாப் கிளாஸ். அதே உடையில் ஆடினாள் மாணவர் பட்டாளம் கிண்டல் செய்யும் என பிடிவாதமாய் மாற்றி விட்டாள்.  இப்போது இன்னொரு மாணவன் காம்பயிரிங் செய்து கொண்டிருக்க, ஆதியை காணமல் இன்றும் அவனை தவற விட்டுவிட்டோம் என வருந்தினாள் மது.

ஆனால் மதிய இடைவெளிக்கு பிறகு நடந்த கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சியின் போது அவன் பெயரை மைக்கில் ஆதித்யன் என அழைக்கவும், ஒரு வேலை அவனோ என ஆவலாக பார்த்தவள் அவனே மேடை ஏறவும் துள்ளி குதித்தாள். இமைக்க கூட மறந்து அவன் ஆடுவதே பார்த்து கொண்டிருந்தாள்.

நடனம் முடிந்து பேசலாம் என நினைத்த போது, ஆட்டோரியம் விட்டு அனைவரும் வெளியே செல்ல அவன் முன் பக்கமும் இவள் பின் பக்கமும் வந்து விட்டனர். அதன் பின் தேடவும் முடியவில்லை தேட அவரவர் நண்பர்களும் விடவில்லை…. 

காதல் பெருகும்… 

Episode # 15

Episode # 17

{kunena_discuss:725}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.