(Reading time: 13 - 26 minutes)

 

றையில் சென்று மேகாவுடன் படுத்தவளுக்கு உறக்கம் என்னமோ வரவில்லை. 'அவன் வேண்டுமென்றே செய்தானா? முதலில் அவன் பேசும் செயலும் ஒன்றும் நன்றாக இல்லை தான். ஆனால் அவள் வலியில் துடிக்கும் போது அவன் முகத்தில் உண்மையான கரிசனம் இருந்ததோ?!

சரி எதுவாக இருந்தாலும் நாளை அங்கு போய் அவனை பார்த்தல் தெரிந்து விடாதா?'

இவ்வாறே யோசித்து கொண்டிருந்தவள் இடது புறமாக திரும்பி படுக்க, மேகா தூங்கி கொண்டு இருந்தவள் அவள் புறமாக திரும்பி இடையில் கை போட்டு தூங்க, சட்டென அவன் பிடித்த ஞாபகம் எழுந்தது.

இவளுக்கென்று ஒரு ரசிகர் மன்றம் வைக்கும் அளவு அழகி இல்லை என்றாலும் பள்ளியில்  நான்கு ஐந்து  பேர் இவளை விடாமல் துரத்தினார்கள் தான். ஆனால் இவன்? இவனை சந்தித்த விதம் இரண்டுமே வித்தியாசமாக இருந்தது. அவனுடன் அன்று ஆடிய நடனத்தையே யோசித்தவாறு தூங்கி போனாள்.

டுத்த நாள் வலி குறைந்து இருந்தது ஆனாலும் முழு பலத்தையும் காலில் காட்ட முடியவில்லை.வேண்டாம் என திவக்கரும் ரகுவும் எவ்வளவு தடுத்தும் அன்றும் டேன்ஸ் கிளாஸ் சென்று விட்டால் மது.

நேற்றை விட கொஞ்சம் சீக்கிரமே வந்து விட்டாள்.அவன் எப்படியும் தாமதமாக தான் வருவான் என்று எண்ணியவள் காத்திருக்க, மாஸ்டர் உள்ளே அவர்களுக்கு முந்தைய க்ரூபிற்கு ப்ராக்டீஸ் கொடுத்து கொண்டு இருந்தார்.

"ஹாய்" என்று அருகில் குரல் கேட்கவும் திடுக்கிட்டு அது அவன் தான் என உணர்ந்து மகிழ்ந்து திரும்பினாள்.

"ஹலோ"

"உங்க கால் எப்படி இருக்கு? இன்னைக்கு வர மாடிங்கலோனு நினைச்சேன்"

"அது எப்படி இன்னைக்கு ஒரு நாள் தானே நாளைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு அப்புறம் ஊருக்கு கிளம்பனும்"

"ஒ"

"ம்ம்ம் நீங்க தினமும் வருவீங்கள?"

"ம்ம் ஆமா, நான் கேட்ட கேள்விக்கு பதில் இன்னும் வரலையே?"  

"என்ன? ஒ, என் கால், ம்ம்ம் பரவல கொஞ்சம் தான் பெயின் இருக்கு நல்ல டாக்டர் கிட்ட தான் என்ன கூட்டிட்டு போயிருகிங்க, அதுனால தப்பிச்சீங்க இன்னின இன்னைக்கும்..."

"என்ன இன்னைக்கும் அடிசுருப்பிங்கள?"

"ச்ச ச்ச வேற டாக்டர் கிட்ட கூட்டிட்டு போயிருக்கணும்"

"ம்ம்ம் என்ன முக்கியமான வேலை நாளைக்கு?"

" இங்க ஒரு காலேஜ் ல சிம்போசியம் நடக்குது ல அதுக்கு போகணும்"

"ஒ, நீங்க அந்த காலேஜா?"

"இல்லைங்க"

"அப்புறம் எந்த காலேஜ்"

"ஹையோ நான் காலேஜே இல்லைங்க ஸ்கூல்.."

"வாட்?" ஸ்கூல் பொன்னா இவ? ச்சே சின்ன பொண்ணு கிட்ட இப்படி நடந்துகிட்டோமே என்று ஏகத்திற்கும் அதிர்ந்தான்!!

"ஆமா, பிளஸ் டூ"

"அப்புறம் காலேஜுக்கு போறேன்னு சொன்னீங்க"

"ஹஹ, அங்கே தான் ஸ்கூல்ஸ்கும் நடக்குது, நெக்ஸ்ட் டே இன்னொரு காலேஜ் ல கூட ஸ்கூல் அண்ட் காலேஜ் ஸ்டுடண்ட்ஸ்க்கு கல்டுரல்ஸ் நடுக்குதே அப்படியே அதுக்கும் போவேன், அதுக்கு தான் இங்க டேன்ஸ் மூவ்மன்த்ஸ் கத்துக்க வந்தேன், எனக்கு பாரதம் தெரியும் அரங்கேற்றம் கூட பண்ணிருக்கேன்"

"ம்ம்ம்ம்"

அவள் தன் போக்கில் பேசி கொண்டே போக, இரவு முழுதும் அவளை நினைத்து அலை பாய்ந்த மனது தவித்தது, இவ்வளவு சின்ன பொண்ணு கிட்ட, ச்சே ரொம்ப தப்பு டா ஆதி என தன்னையே திட்டி கொண்டான்

"என்னாச்சு?"

"ஒ.. ஒண்ணுமில்லை"

"ம்ம்ம் வாங்க போலாம் ஸ்டார்ட் பண்ணிடாங்க"

"ம்ம்ம்"

அன்றும் அவள் ரெஸ்ட் எடுக்காமல் வந்திருப்பது கண்டு கொஞ்சம் கடிந்து கொண்டு, தன் நண்பன் போனில் அவள் செய்த அடத்தை கூற சிரிப்பு தான் வந்தது அன்டனி க்கு (மாஸ்டர்).

"ஆதி"

"மாஸ்டர்?"

"இன்னைக்கும் நீயே மதுக்கு சொல்லி குடு, நீங்க க்ரூப்ல ஆட வேண்டாம் அந்த பக்கம் போய் தனியா ஆடுங்க, அவளால ஸ்பீட ஆட முடியாது இல்லையா அதான்"

"அது.. வந்து"

"டோன்ட் வொர்ரி ஆதி, இன்னைக்கு கேர்புல்ல பாத்துக்கோ"

"ம்ம்ம் ஓகே மாஸ்டர்"

இருவரும் குழுவை விட்டு சற்றே தள்ளி ஆட தயாராக,பாடல் ஒலித்தது.

நேற்று போல் அல்லாமல் இன்று அவள் கரத்தை மென்மையாய் பற்றியவன், அவள் பார்வையை தவிர்த்தான்!

அவளுமே நேற்று இரவு தான் சிந்தித்து நினைவில் வர அவன் முகம் பார்க்காமல் ஆடினாள். தேவை பட்ட இடங்களில் அவள் இடையை பட்டும்  படாமலும் பிடித்தவன், அவள் முகம் பார்க்க, வலது காலுக்கு அழுத்தம் கொடுக்கும் போதெல்லாம் அவள் முகம் சுளிப்பதை பார்த்து ஆடுவதை நிறுத்தினான்.

'ஏன்' என்பது போன்ற அவள் பார்வைக்கு, குனிந்து அவள் வலது காலை மெதுவாக தூக்கி தன் இடது கால் மேல் வைத்துவிட்டு நிமிர்ந்தான். அவள் கண் எழுப்பிய வினாவிற்கு அவன் செயல் பதிலானது.

கொஞ்சம் கூச்சம் இருந்த போதும், பாட்டுக்கு ஏற்ப ஆடும் போது இருவருக்கும் எல்லாம் மறந்து போனது. அவர்களும் இசையும் மட்டுமே இருபது போன்ற ஒரு உணர்வு.

கண்ணோடு கண் பார்த்த படி, நளினமாக ஆடுவது இருவருக்குமே இன்பமே என்னும் நிலை ஏற்பட்டது.

டுத்த மூன்று மணி நேரம் சென்றதே தெரியாமல் மறைந்தது.

இருவரும் பிரியும் தருணமும் வந்தது. பிரிந்தனர். தற்காலிகமாக தான்.

அடுத்த நாள் சிம்போசியம் என்பதால் வீட்டிற்கு வந்து மேகா ரகுவுடன் அதற்கு ஒரு முறை ஒத்திகை பார்த்தவள் உறங்க செல்லும் முன், ரகுவை அழைத்து நடந்த அனைத்தையும் சொன்னாள்.

அவன் முதல் நாள் டேன்ஸ் கிளாசில் நடந்து கொண்டது ரகுவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றாலும் இன்று அவன் நடந்து கொண்டதை அவள் சிலாகித்து கூறும் போது சிரிப்பு தான் வந்தது. அவளை கிண்டல் செய்து சிணுங்க வைத்து பின் சிரிக்க வைத்த பின் தான் உறங்க அனுப்பினான்.

அடுத்த நாள் முழுதும் சிம்போசியம் பற்றிய சிந்தனையில் கழிந்தது, சற்று அமர நேரம் இன்றி அவர்கள் செய்திருந்த மினி ப்ராஜெக்டையும் அதன் மாதிரியையும் எடுத்து கொண்டு ஒவ்வொரு சுற்றும் நடந்த வகுப்பறைகளுக்கு சென்று அதை விளக்கியும் என நேரம் பறந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.