(Reading time: 14 - 27 minutes)

17. நெஞ்சமெல்லாம் காதல் - ப்ரியா

ந்த நான்கு ஆண்டுகளில் அவனை பற்றி நினைக்காத நாட்களே இல்லை எனலாம்.. ஏதாவது ஒரு தருணத்தில் தென்றலென வந்து தொட்டு சொல்லும் அவன் நினைவுகள்...

சில சமயங்களில் புயல் எனவும் மையமிடும்.. அடுத்து வந்த காலேஜ் பங்க்சன் அனைத்திலும் ஒரு முறையாவுது விழிகள் சுற்றி வரும் அவனை தேடி.. ஆனால் அவன் கிடைக்கவில்லை....

இதே நிலை தான் அவனுக்கும்.. அந்த விழிகளை அவளது நடனத்தை இன்னமொரு முறை பார்த்து விட மாட்டோமா என்று இருக்கும்.. அன்று மேடையில் அவள் ஆடியதை அவன் நண்பன் ஒருவன் படம் பிடித்து வைத்திருந்தான்.. விட்டால் அவனுக்கு பூஜை கூட செய்திருப்பான் அந்த அளவு மகிழ்ச்சியில் நன்றியால் நண்பனை குளிப்பாட்டினான்....

Nenjamellam kathal

தினமும் நேரம் கிடைக்கா விடினும், வாரம் ஒரு தரமாவுது அந்த நடனத்தை பார்த்து விடுவான்.. அது எந்த விதமான நேசம் என்று தெரியாமலே இருவருள்ளும் ஏக்கம் காதலாக மாறியிருந்தது..

அந்த பெரிய கட்டிடடத்தின் முன் நிற்கையில் கரை புரண்ட சந்தோசமும் ஒரு வித அச்சமும் குடி கொண்டது மனதில்.. காலேஜில் நடந்த கேம்பஸ் இன்டர்வியுவில் தேர்வாகி இப்போது பெங்களூர் வந்திருந்தாள் மது..

வேலைக்கான பயிற்சியில் சேர போகும் முதல் நாள்.. அம்மா அப்பா அண்ணி ப்ரிஷன் என காரில் சென்று அங்கு இறங்கினர். அந்நேரம் மதுவின் கைபேசி சிணுங்க, அழைப்பை எடுத்தாள்

"ஹலோ"

"ம்ம்ம்"

"ஹே அம்மு, பர்ஸ்ட் டே இல்ல, ரெடி ஆகிட்டியா? அங்க போறதுக்கு முன்னாடி கோவில் போயிட்டு போடா, ப்ரிபெர்டா தான இருக்க, என் அம்மு ஆச்சே அதெல்லாம் குட் கேர்ள் தான்.. அப்புறம் அங்க போன உடனே எனக்கு போன் பண்ணு.. நான் வெயிட் பண்றேன்.. அப்புறம் இவனிங் பேசலாம் ஓகே வா.. அப்புறம் ஏதோ சொல்லணுமே... ஆங்.. யாராவது எதாவது திட்டின கூட அப்செட் ஆகாத டா தங்கம்.. போல்டா பேஸ் பண்ணு.. தனியா வேற இருக்க போற.. பாது இருந்துப்ப தான.. இல்லேன்னா அத்தை உன்குடவே கொஞ்ச நாள் இருக்கட்டும்... டேய் பாத்து இருந்துப்ப ல.. மிஸ் யூ டி கண்ணு குட்டி"

அவளின் 'ம்ம்' என்ற வார்த்தைக்கு பின் அவளை பேச விடாது படபடவென பேசியவன் கடைசி வாக்கியத்தில் அத்தனை உணர்சிகளையும் தேக்கி சொன்னான்.. அதில் இருந்தது என்ன விதமான நேசமென அவர்கள் இருவரை தவிர யாருக்கும் புரியாது..

அவன் கண் கலங்கி மௌனம் ஆக, அவளுக்குமே கண்ணை கரித்தது நொடி பொழுதில் சுதாரித்தவன்..

"ஹே உன் பின்னாடி நிறைய பேர் சுத்த போறாங்க டி, அதுல எவனாவது என்ன மாதிரி இல்லைனாலும் கொஞ்சம் பாக்கிற மாதிரி இருந்த கவுந்துராத சரியா?" என சீண்டவும்,

"எரும நீ இந்தியா வா உன்ன வெச்சுகறேன்"

Related Read: என்ன தவம் செய்து விட்டேன் – 04

"ப்ளேசர் இச் மைன் டார்லிங்"

"போடா, சரி நான் ஆபீஸ் வந்துட்டேன், உனக்கு அப்புறமா கால் பண்றேன் வைக்கவா?"

"ஹே அம்மு..."

"ம்ம்ம் சொல்லு டா"

"மை பெஸ்ட் விஷஸ்"

"தேங்க்ஸ் டா புளி மூட்டை.. பை பை"

சிரித்து கொண்டே போனை வைத்தவள் தன்னை பார்த்து கொண்டிருந்த ஏழு மாத குழந்தையான ப்ரிஷனை தூக்கி முத்தமிட்டு, "மதுக்கு டாட்டா சொல்லுங்க குட்டி " என கொஞ்ச,

மெதுவாக கை அசைத்து பொக்கை வாய் சிரிப்பை பரிசாக தந்தான் அந்த குட்டி கண்ணன்..

ரகுவிற்கு பின் அவள் வாழ்வில் இன்றி அமையாதவனாக ப்ரிஷன் ஆனான்.. இல்லையெனில் ரகு லண்டன் சென்ற போது அவள் இருந்தது போல் தான் இருந்திருப்பாள்.

னைவரிடமும் விடை பெற்று ஒரு வழியாக ஆபீசிற்குள் நுழைந்தால்.. முதல் நாள் என்பதால் அப்படி ஒன்னும் பெரிதாக பயிற்சி இருக்கவில்லை சில பார்மாலிடீஸ் மட்டும் முடித்தார்கள்.

இந்த நாள் இஞ்சினியரிங் படிக்கவென சேர்ந்தது முதல் மதுவின் கனவு எனலாம், இப்படி ஒரு ஐ டி நிறுவனித்தில் அதிலும் பிரபலாமான நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்பது.

ஆனால் பயிற்சி பெங்களூரில் என்ற உடனே லலிதாவும் மூர்த்தியும் வேண்டாமென கூறி விட அடம் பிடித்து போயே தீருவேன் என்று வந்து சேர்ந்து விட்டாள்.

                முதல் நாள் சென்றதே தெரியாமல் அமைதியாக சென்று விட, தான் தங்கி இருக்கும் ஹாஸ்டலுக்கு வந்து செர்ந்தவளிடம் காலையில் இருந்து கூடவே இருந்த மகிழ்ச்சியும் அமைதியும் இல்லாமல் போனது. முதன் முறையாய் வீட்டை, பெற்றோரை,மேகாவை முக்கியமாய் ரகுவை விட்டு பிரிந்து தனியே இருக்கிறாள்.

சில நிமிடங்கள் அமைதியில் கழிய, கண்ணை கரித்து கொண்டு வரும் முன் சுதாரித்து முகம் கழுவி உடை மாற்றி உணவு உன்ன சென்றாள். தன் அரை தோழியுடன் உணவை முடித்தவள் அமைதியாக சென்று படுத்து கொண்டாள்.

ஏனோ தூக்கம் மட்டும் வந்த பாடில்லை, மணியை பார்த்தாள், 9:50.. ஒரு பாத்து நிமிடம் நடந்து விட்டு வரலாம் என மொட்டை மாடிக்கு சென்றவள் நிலவை பார்த்து கொண்டு நின்று விட்டாள்.

அமைதியாக இருந்த இரவின் மௌன திரையை கிழித்து கொண்டு வந்தது அந்த குரல்,

"ஹே கேட்குதா டி, எப்படி இருக்க என் ஏஞ்சல், அவ கிட்ட குடு"

"செல்லம் என் ஏஞ்சல் மாமா சொல்லுங்க, ஆதி சொல்லுங்க தங்கம் நான் உங்களுக்கு மிட்டாய் எல்லாம் வாங்கிட்டு வருவனம் ஒரு வாடி சொல்லுங்க  தங்கம்"என குழந்தையை சத்தமாக யாரோ போனில் கொஞ்சுவது கேட்டு திரும்பி பார்க்க, மதுவின் ஹாஸ்டலுக்கு பக்கவாட்டில் இருந்த ஒரு அடுக்கு மாடி குடியிருப்பின் ஒரு வீடு பால்கனியில் நின்று பேசி கொண்டிருந்தான் அந்த இளைஞன்.

மெலிதாய் சிரித்தவள்,கீழே இறங்கி செல்ல எத்தனிக்க, அப்போது தான் மீண்டும் அந்த குரலை கவனித்து கேட்டாள்,

"அச்சோ வலிக்குதா தங்கத்துக்கு? அழறீங்களா?!"

'அழறீங்களா'

'எங்கேயோ கீட மாதிரி இருக்கே' என அவள் நினைக்கும் போதே அன்று டேன்ஸ் கிளாசில் ஆதி "அழறீங்களா மது" என்று கேட்டது நினைவு வர, இதனை நேரம் இருந்த தனிமை எல்லாம் மறந்து போனது அவளுக்கு.

மீண்டும் அவன் புறம் திரும்பி அவன் தான என சரி பார்க்கும் நேரம் சரியாக கரண்ட் போயிருந்தது.யுபிஎஸ் உதவியால் மின்விளக்கு ஒழி பெரும் முன் அவன் உள்ளே சென்றிருந்தான்.

சோர்ந்து போய் ரூமிற்கு திரும்பி கட்டிலில் படுத்து உறங்கியும் போனாள் மது.

அடுத்த நாள் ஆபிஸ் அருகிலேயே இருந்த ட்ரெயினிங் சென்டருக்குள் நுழைந்தவள் மனது ஏனோ ஒரு நிலையில் இல்லை. அவருடைய கணினி  ப்ரொஜெக்டர் உதவியுடன் பெரிய திரையில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. ட்ரெயினர் வந்து அறிமுக படலம் முடிந்த பின் அனைவரும் அவர் காட்டிய குறிப்புகளை சேகரித்து தங்களது கணினியில் வேலையை துவங்கினர்.

காலை பாடங்கள் முடிந்து மதிய உணவை முடித்து கொண்டு வந்து அமர்ந்தவள் ரகுவிற்கு போன் செய்தால் அனால் அவனோ எடுக்கவில்லை. சோர்ந்து போய் மேகாவிற்கு அழைக்க முனைவதற்குள் ட்ரெயினர் வந்து விடவே பயிற்சி துவங்கியது.

கூடவே அவள் மனதில் இன்ப அலைகளும் அடித்தது.

ட்ரெயினர் கூடவே ஏதோ தீவிரமாய் பேசி கொண்டு வந்த அந்த இளைஞன். அவனே தான் ஆதி. நேற்று அவனை போல் யாரையோ எண்ணி இவ்வளவு நேரமும் குழம்பி தவித்தாள். அனால் இன்று அவள் கண் முன்னே அவனே நிற்கவும் அவளும் அவனும் தனித்து விட பட்டது போல் ஏதோ ஒரு உலகில் சஞ்சரித்தாள்.

அவன் வேலை முடிந்ததும் அவன் சென்று விட இவளுக்கு தான் இருப்பு கொள்ளவில்லை.அவனை எப்படி எங்கே சந்திப்பது. யார் அவன்? யாரிடம் கேட்பது? விடையும் அவள் முன்னே வந்தது.

"ஹி இஸ் ஆதித்யன், வெரி குட் பாய், ஹார்ட்வொர்கர்.. எ ஜென்டில்மேன் ஆல்சோ.. ஹி இஸ் தி பெஸ்ட் ஸ்டுடென்ட் ஹூம் ஐ ட்ரெயின்ட்......."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.