(Reading time: 9 - 17 minutes)

16. ஷைரந்தரி - சகி

விதி...

விசித்ரமான சில கணக்குகளை போட இறைவனால் தனித்துவமாக பயிற்சி அளிக்கப்பட்ட மாணவன் என்றே கூறலாம்.

இறைவனால் தனித்துவமாக பயிற்சி                அளிக்கப்பட்டதாலோ என்னவோ விதியை இதுவரை எந்த மனிதனாலும் வெற்றி கொள்ள

இயலவில்லை.

shairanthari

"அர்ஜீன் ப்ளீஸ் அர்ஜீன்.அதை கொடுத்துவிடு!"-அர்ஜீனை விரட்டியப்படி வந்தாள் ஷைரந்தரி.

"முடியாது...அப்படி என்ன இதுக்குள்ள          வைத்திருக்கிறாய்?"-ஒரு சிறு பெட்டியை வைத்துக் கொண்டு இவ்வளவு சண்டை.

அவர்களின் யுத்தத்தினை கண்ட யுதீஷ்ட்ரன்....

"டேய்! அதை கொடுத்து விடேன்டா!"

"மச்சான்...நீ சும்மா இரு!"

"அர்ஜீன்!"-ஷைரந்தரியின் பலவீனமான குரல் ஒலித்தது.

"அது...என் அம்மாவோட வளையல் அர்ஜீன் ப்ளீஸ் தா!"

"ஐ...நான் நம்பிவிடுவேனா?"-என்று அப்பெட்டியை திறந்துப் பார்த்தான்.

உண்மையில்,அதில் இரு தங்க வளையல்கள் இருந்தன.

"அம்மூ...ஸாரிடி!"-அர்ஜீனுக்கு,என்ன செய்வது என்றே விளங்கவில்லை.

ஷைரந்தரி அப்பெட்டியை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டாள்.

யுதீஷ்ட்ரன் அவள் மனநிலையை ஊகித்தவாறு,அவள் அறைக்கு சென்றான்.

"ஷைரு!"-அவள்,கண்களை துடைத்துக் கொண்டு,

"வாங்க யுதீஷ்!"என்றாள்.

"அது...அர்ஜீன் பண்ணதுக்கு!.....உனக்கு அத்தையை ரொம்ப பிடிக்குமா ஷைரு?"-சம்பந்தமே இல்லாமல் கேள்விக் கேட்டான்.

"உங்களுக்கு தெரியுமோ, தெரியாதோ...நான் இது வரைக்கும் என் அம்மாவை நினைத்து எத்தனையோ இராத்திரி அழுது இருக்கேன்.

இதுவரைக்கும் அவங்க மட்டும் தான் நான் வாழ்க்கையில இழந்தது.

நிறைய பேர் சொல்லுவாங்க.நான் தான் அவங்க மரணத்துக்கு காரணம்னு,

அது எல்லாம் கேட்கும் போது ஒரு நிமிஷம் இப்படியே          செத்துடலாமான்னு தோணும்.

எல்லாம் சிவாக்காக பொறுத்துப்பேன்.

இப்போ,அர்ஜீன் இப்படி பண்ணவே கொஞ்சம் பழைய விஷயம் எல்லாம் ஞாபகம் வந்துடுச்சி!"-

தாய்பாசம் தேடிய மனமானது,        யுதீஷ்ட்ரனிடத்தில் தனது

பலவீனத்தை கூறி முடித்தது.

"ஸாரி ஷைரு!"

"பரவாயில்லைங்க...நான் தான் உங்களை கஷ்டப்படுத்திட்டேன்."

"ஷைரு!"

"ம்..."

"நான் இத்தனை நாளா உன்கிட்ட மறைத்த விஷயத்தை சொல்லணும்!"

"என்ன?"-யுதீஷ் சிறிது மௌனம் சாதித்தான்.

அவனிடம் இருந்து பெருமூச்சு ஒன்று வந்தது.

ஷைரந்தரியின் அருகே வந்து,அவளை அணைத்துக் கொண்டான்.

அவனது அந்த ஸ்பரிசத்தில்,சிலிர்த்து போனாள் ஷைரந்தரி.

அவளால்,அவனிடமிருந்து விலக முடியவில்லை. விருப்பமும் இல்லை.

மென்மையாக அவளை விடுவித்தவன் கூறினான்.

"நான் உன்னை காதலிக்கிறேன்!"என்று!!!!

மிரட்சியான விழிகளோடு அவனை பார்த்தாள் ஷைரந்தரி.

"யுதீஷ்???"

"ஐ லவ் யூ!"

"விளையாடாதீங்க யுதீஷ்!

நீங்க சொல்றது விளையாட்டுத்தனமான விஷயம் இல்லை!"

"விளையாடுவதற்கு என் மனசும் பொம்மை இல்லை."

"..............."

"எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் ஷைரு! உன்னைப் பார்த்தப் போதே உன் கூட ரொம்ப நாள் வாழ்ந்த நினைவு! கடைசி வரைக்கும் இந்த குழந்தைத்தனம்,

இந்த குறும்பான பார்வை,சிரிப்பு,என் கூடவே இருக்க ஆசை படுறேன்.

இருக்குமா?"-நீண்ட நேரம் மௌனம் சாதித்தாள் ஷைரந்தரி.

"இருக்காது யுதீஷ்...நீங்க என் மேல வைத்திருக்கிறது லவ் இல்லை இன்பாக்சுவேஷன்.

எனக்கு உங்க மேல நல்ல மதிப்பு இருக்கு அவ்வளவு தான்.மற்றப்படி,எந்த எண்ணமும் இல்லை."

".................."

"மன்னிச்சிடுங்க உங்க மனசுல தவறான எண்ணத்தை விதைத்ததற்கு!"

"முடிச்சிட்டியா?நான் பேசலாமா?"

"................."

"எனக்கு உன் மேல வெறும் இன்பாக்சுவேஷனா???

காதல்னா,என்னன்னு தெரியாதவன் இல்லை....

உன்னை               பொழுதுப்போக்காக நினைக்கலை.

எனக்கு அப்படி பண்ணவும்

தெரியாது!

இங்கேப் பாரு ஷைரந்தரி...

என்னால உன்னை தவிர யாரையும் வாழ்க்கைத் துணையா கற்பனைக் கூட பண்ண முடியாது!

நான் உன்னை    வற்புறுத்தவில்லை...

ஆனா,தயவுசெய்து என் காதலை தவறா நினைக்காதே!

எதாவது கஷ்டப்படுத்தி இருந்தா ஸாரி!"-மனதில்,உள்ள கருத்தினை எல்லாம் ஒப்பித்துவிட்டு, பதிலுக்காக காத்திராமல் சென்றான் யுதீஷ்.அவன் செல்வதையே இமைக்காமல் பார்த்தப்படி நின்றாள் ஷைரந்தரி.

யுதீஷ்ட்ரன் மகேந்திர குமாரியின் மனதினை உண்மையில் கவர்ந்தானா??இல்லையா??? 

"ஷைரந்தரி...ஷைரந்தரி...ஷைரந்தரி.."-மிகுந்த சினத்தோடு ஷைரந்தரியின் நாமத்தை உச்சரித்துவிட்டு,

கையிலிருந்த மதுவை அருந்தினான் வினய்.

"வினய்???என்னப்பா ஆச்சு?"

"அவதான்....அவதான் பாட்டி!அந்த ஷைரந்தரி..."

"என்னாச்சு?"-அன்று கோவிலில் நடந்ததை கூறினான் வினய்.

"அவளை நெருங்கவே முடியலை.நெருப்பு மாதிரி இருக்கா!அவளை என் காலில் விழ வைக்கணும் பாட்டி! மனசெல்லாம் எரிமலை வெடிக்குது!"- கோபத்தில் வெடித்தான் வினய்.

"அவளை நெருங்கறது அக்னியை நெருங்க சமம்!"-கூறியப்படி வந்தான் அந்த அகோரி.

"ஆனா,அவளை அடக்க ஒரு வழி இருக்கு!"

"என்ன?"

"இன்னும் பத்து நாள்ல நவகிரகங்களும் சங்கமிக்கிற பஞ்சாக்ஷர திதி! ஷைரந்தரியின் ஜென்ம திதி அவளோட           புண்ணியப்பயனால் மறுபடியும் கை கூடுகிறது.

அந்த நேரத்துல,அவளை கல்யாணம் பண்றவனுக்கு

பஞ்ச பூதங்களும்,நவ கிரகங்களும் மகேந்திரி கட்டுப்பாட்டு கீழே இருக்கிற எல்லாம் அடங்கும்!"

"ஆனா,ஷைரந்தரியை அதுக்கு சம்பத்திக்க வைக்க முடியுமா?"

"பஞ்சாக்ஷர திதியில பிறந்த அவளை நெருங்க முடியாது.ஆனா,அதே பஞ்சாக்ஷர திதியில ராகு அவ ஜாதகத்துல கொஞ்சம் நீச்சம் அடைவதால்,மூணு நிமிஷம் வெறும் மூணு நிமிஷம் அவ தன் பாதுகாப்பு சக்திகளை இழப்பா!அந்த சந்தர்பத்தில தான் நீ அவ கழுத்துல தாலிக் கட்டணும்!அப்போ,அவசக்தி எல்லாம் உன் காலடியில மண்டியிடும்!"

"அதை எப்படி பண்றது?"

"நீ கவலைப்படாதே வினய்...

நான் சொன்னா அந்த குடும்பம் நிச்சயம் கேட்கும்.நாளைக்கே ஷைரந்தரியை பொண்ணுக் கேட்டுப் போறேன்!அவளை விட மாட்டேன்!"-

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.