(Reading time: 9 - 17 minutes)

விதியை பாருங்கள்...

அவர்களை அழிவிற்கு அவர்களையே வித்திட வைக்கிறது.

ஆனால்,வினய் ஷைரந்தரி இருவருக்கும் திருமணம் நிகழ்ந்துவிட்டால்????

ஆழ்ந்த தவத்தில் அமர்ந்திருந்த     தாண்டவப்ரியனின் உடல் சிலிர்த்தது.

கண்களைத் திறந்தார்.

இதழில் மந்தகாச புன்னகை.

"ஐயா!"-               நீலக்கண்டச்சாரியாரின் குரல் அவரை கலைத்தது.

"நீங்க யாருங்க?இங்கே தனியா என்ன பண்றீங்க?"

"நான் காசியில இருந்து வரேன்.இராமேஸ்வரம் போறதுக்காக இந்த வழியாக வந்தேன். பாஞ்சாலப்புரத்துல திருவிழான்னு சொன்னாங்க,அதான் விஷேசம் முடியுற வரைக்கும் இங்கேயே இருக்கலாம்னு முடிவு பண்ணி தங்கி இருக்கேன்!"

"இங்கே உங்களுக்கு யாரையாவது தெரியுமா?"

"எனக்கு எல்லோரும் குழந்தைங்க தான். இருந்தாலும்,என் இரத்தம் இந்த மண்ணுல வாழ்ந்துட்டு இருக்கு!"

"யாருங்க?"

"என் பொண்ணு பஞ்சாக்ஷரி!"

"அப்போ நீங்க அவங்க கூட தங்கலாமே?"

"சிலரை கவனிக்கிற கடமை இருக்கிறதால் என்னால அவக்கூட இருக்க முடியாது.

சில நல்ல மனங்களோட கட்டுப்பாட்டால்...அவளாலும் என் கூட இருக்க முடியல!"

"யாரும் இல்லைன்னு சொல்றீங்க?இந்த ஊருக்கு வேற வந்திருக்கிறீங்க திருவிழா முடியும் வரை என் வீட்டிலையே தங்கிக்கோங்க!"-அவர்,ஆழமாய் சிரித்தார்.

"இருக்கிறவனுக்கு தான் வீடு,எல்லாம் கொஞ்ச காலம் இதில்,எது என்னுடையது?உன்னுடையது?எல்லாம் அந்த பரமேஷ்வரனுடையது.

இல்லாத எனக்கு,இந்த தென்னாடு தான் வீடு!"-புதிரான பேச்சு விளங்கவில்லை நீலக்கண்டச்சாரியருக்கு.

"நீங்க எல்லோரையும்,உங்க பிள்ளையாக நினைக்கிறீங்க.அப்போ,இந்த மகன் வீட்டில தங்க மாட்டீங்களா?"-மீண்டும் சிரிப்பு.

"அப்படியே ஆகட்டும்!"-இதுவும்,அந்த ஈஸ்வரனின் விளையாட்டோ என்னவோ???

அன்றிரவு...

தோட்டத்தில் தனிமையில்

அமர்ந்திருந்தாள் ஷைரந்தரி.

"குட்டிம்மா...சாப்பிட்டியா?"-என்றப்படி அவளருகில் அமர்ந்தான் சிவா.

"என்னம்மா என்னாச்சு?"-என்றான் அவள் கவலை தோய்ந்த முகத்தினை கண்டு..

"ஒ..ஒண்ணுமில்லை சிவா!"

"உனக்கு பொய் சொல்ல வராது,அப்பறம் ஏன் முயற்சி பண்ணுற?"-அவள், கண்களில் இருந்து இருத்துளி நீர் மண்ணை நனைத்தது.

"டேய்! என்னடா ஆச்சு?"

"சிவா...யுதீஷ்...!"-என்று

நடந்தவற்றை கூறி முடித்தாள்.

"எனக்கு பயமா இருக்கு சிவா!"-சிவா,அவளை தன் தோள் மீது சாய்த்துக் கொண்டான்.

யார் கூறியது???பெண் பிள்ளைகள் தாயிடம் தான் சிநேகம் பாராட்டுவர் என்று...???

உங்கள் வீட்டில் வளரும் பெண்களுக்கு தமையன் இருந்தால் அவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.

அவர்களை அப்படியே சிலையென வடித்து விடுவர்.

தாய் பாசத்திற்கு இணையான பாசம் தமையனது பாசம் என்றால் அது மிகை அல்ல...

தங்கை இருக்கும் ஆண்கள் தான்,தாயாய் தங்களை மாற்றிக் கொள்ளும் உள்ளம் படைத்தவர் ஆவர்.

"அம்மூ...இங்கே பாரு! அழாதே!"

"................."

"யுதீஷ் பேசினது உனக்கு பிடிக்கவில்லையா?"

"ம்ஹீம்!"

"நீ யுதீஷ்ட்ரனை???"

".................."

"மனசுல இருக்கிறதை சொல்லும்மா!!!அம்மா இருந்தா சொல்லி இருப்ப தானே?"

"எனக்கு அவரை பிடிக்கும் சிவா.ஆனா,எனக்கு அவர் மேல எந்த ஆசையும் இல்லை.எனக்கு,சாதரண பெண்ணுக்கு இருக்கிற எந்த ஆசையோ?கனவோ?இல்லை...!"-எப்படி இருக்கும்?சாதாரண பிறப்பா அவளுடையது.

"சரி...இங்கேப் பாரு..!நீ அழாதே! நான் பார்த்துக்கிறேன்.நீ எதையும் நினைக்காம தூங்கு!நான் இருக்கேன்!"

"சிவா...யுதீஷ்கிட்ட கடுமையாக நடந்துக்காதே!"

"சரிடா...நீ போய் தூங்கு! நான் பார்த்துக்கிறேன்!"

"ம்..."-ஷைரந்தரி அவள் அறைக்கு சென்றாள்.

சிவா,தன் சிரசில் கை வைத்து அமர்ந்துவிட்டான்.

நிலையை புரிந்துக் கொள்ளாமல் இருக்கும் நண்பன்...

தன்னை பற்றிய விவரம் தெரியாமல்,உயிர் ஆபத்தில் சிக்கிய தங்கை...

தன்னையே உலகம் என நினைக்கும் காதலி...

இவர்களுக்கிடைய அனைத்தையும் சமன்படுத்த நினைக்கும் இவன்.

கண்களை மூடினான்.

"உனக்கு எதாவது பிரச்சனை வந்தா,அதை ஒரு பேப்பர்ல எழுதி,எரித்துவிடு!

உன் பிரச்சனை எல்லாத்தை நம்ம சாம்பையா பார்த்துப்பாரு! அதுக்கு அப்பறம்,நிச்சயம் அந்த பிரச்சனையில இருந்து,உனக்கு தீர்வு கிடைக்கும்!"-சிறு வயதில் ஷைரந்தரி கூறியது நினைவு வந்தது.

அவனுக்கு,இறை நம்பிக்கை அதிகமாக இல்லை.

ஆனால்,நம்ப ஆரம்பித்தான் தன் தங்கைக்காக.

தன் அறைக்கு சென்றவன், ஒரு தாளை எடுத்தான்.

மனதில் உள்ள    துன்பங்களையும், குழப்பங்களையும் எழுதினான்.

நான்கு பக்கங்கள் பிடித்தன.

பின்,அதை எரித்து சாம்பலாக்கினான்.

ஒரு எழுத்தும் தெரியாமல் பஸ்பமானது அத்தாள்.

திரும்பி பார்க்காமல் நடந்தான் சிவா.

மனம் இலேசானது.

ஏதோ ஒரு வழி பிறக்கும் என தோன்றியது.

இனி,சாம்பையா பார்த்துக் கொள்வர் அல்லவா???

 

ஆழ்ந்த தவத்தில் இருந்தார் தாண்டவப்ரியன்

நீலக்கண்டச்சாரியாரின் வீட்டில்!!!!

"ஐயா...!"

"ம்..."

"நீங்க இன்னும் தூங்கலையா?"

"இங்கே இருக்கிறவங்களை பாதுகாப்பது தான் என் வேலை.தங்குவதற்கு இடம் தந்து இருக்கல்ல???"

"சரியா போச்சு போங்க?

இராத்திரி முழுசும் தூங்காம இருப்பீங்களா?சீக்கிரம் தூங்குங்க....உடம்பு கெடுத்துக்காதீங்க!"

"உன்னை மாதிரி நல்லவங்களால தான் இன்னும் இந்த உலகம் சுற்றுகிறது!"

"புரியலைங்க..."

"சீக்கிரமே புரியும்,நீ போய் தூங்கு! நான் தூங்குறேன்!"

"சரிங்க ஐயா!"-அவர்,சென்றப்பின் கையை பிரித்தார் தாண்டவப்ரியன்.

ஒரு தாள் வெளிப்பட்டது.

அதைப்படித்தார்.

அவர்,முகத்தில் தீர்க்க சிரிப்பு படர்ந்தது.

இரு கரங்களையும் கசக்கினார்.அக்காகிதம் காணாமல் போனது!!!!!

இனி,நடக்க போவதை இரசனையோடு காண்போம்.காத்திருங்கள்!!!!

தொடரும்

Go to Episode # 15

Go to Episode # 17 

{kunena_discuss:751}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.