(Reading time: 9 - 17 minutes)

15. ஷைரந்தரி - சகி

48 நாட்கள் நெருங்க இன்னும் 34 நாட்களே உள்ளன...... திருவிழாவின் ஏற்பாடுகள் நெருங்கிய வண்ணம் இருந்தன... திருவிழா நடக்க விடாமல் தடுக்கும் ஏற்பாடுகளும் நெருங்கிய வண்ணம் இருந்தன...

"அண்ணா!"-அர்ஜீன்.

"ம்...!"

shairanthari

"இன்னும் 34 நாள் தான் இருக்குண்ணா!"

"ம்..தெரியும்!"

"எனக்கு இதுல நம்பிக்கையே வரலைண்ணா!"-சிவா மெல்லியதாய் சிரித்தான்.

"சின்ன வயசில அம்மூ,சுவற்றில படம் வரைந்துவிட்டு,இது தான் கோவில்ல இருக்கிற சிலை இதை தான் கும்பிடணும்னு சொன்னா! நம்பினேன்!

அப்பறம்...

இருட்டு எல்லாம் சேர்ந்து சூரியனை தூங்க வைக்குது! அதான்...இராத்திரி வருதுன்னு சொன்னா நம்பினேன்.

இப்போ...எந்த ஒரு மனுஷனும் நம்பவே முடியாத,நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட விஷயத்தை வழக்கம் போல அவளுக்காகவே நம்புறேன்!"

"நான் உன்கிட்ட ஒண்ணு சொல்லட்டா?"

"ம்...!"

"வாழ்க்கையில,எனக்கு கிடைத்த அண்ணன் தான் சிறந்தவன்னு சொல்வேன். இனி,வாழ்க்கையில உன்னை மாதிரி வாழ கத்துறேன். சத்தியமா நம்ப முடியலைண்ணா! எந்த ஒரு அண்ணனும் இவ்வளவு தியாகம் பண்ண மாட்டான்! இதனால்,உன் உயிருக்கு ஆபத்து வந்தால்.?"

"கிடைத்தது ஒரு வாழ்க்கை,அதை போகணும்னா என் ஷைரந்தரிக்காக போகட்டும்!"

"அண்ணா..!"

"போடா!போய் வேலையை பார்!"

"சரிண்ணா!"-அர்ஜீன் போய்விட்டான்.

"சிவா!"-குரல் கேட்டு திரும்பினான் சிவா.

யுதீஷ் நின்றிருந்தான்...

"என்ன யுதீஷ்?"

"ஷைரந்தரிக்கு என்ன பிரச்சனை?"

"அவ நல்லா தானே இருக்கா?"

"நீயும்,அர்ஜீனும் பேசிட்டு இருந்ததை கேட்டேன்!"

"..............."

"இப்போ சொல்லு!"

"யுதீஷ்!"

"உன் நண்பனா கேட்கிறேன்!"-சிவா, தயங்கியப்படியே ஷைரந்தரியை குறித்த உண்மைகளை அவனிடத்தில் கூறி முடித்தான்.

"என்னடா சொல்ற?"

"................"

"இப்படிப்பட்ட கத்தியை உன் கழுத்துல வைக்க,எப்படிடா துணிந்த??"

"எனக்கு இந்த உலகத்துல ஷைரந்தரியை தவிர வேற எதுவும் முக்கியமில்லை.!"

"பார்வதி?"

"...................."

"உன்னையே நினைச்சிட்டு,நீ தான் இனி உலகம்னு பல கனவோடு வாழ்ந்துட்டு இருக்காடா அவ!"

"எனக்கு ஒரு பதில் சொல்லு! ஷைரந்தரி நிலை பார்வதிக்கு வந்திருந்தா?"

"சிவா?"

"ஒரு அண்ணனா நீ என்ன பண்ணி இருப்பியோ! அதான் நானும் பண்ணேன்!"

"இப்போ அதே அண்ணனா கேட்கிறேன்.பார்வதிக்கு என்ன பதில் சொல்ல போற?"

"எனக்கு ஷைரந்தரி தான் முக்கியம்!அவளுக்கு அப்பறம் தான் யாரா இருந்தாலும்,என் அம்மா கூட ஷைரந்தரிக்கு அப்பறம் தான்!"

"..............."

"நான் போற பாதையில தயவுசெய்து குறுக்கிடாதே!"-சிவா அவனது கேள்விகளுக்கு விடை தந்துவிட்டு சென்றான்.

Related read : வாராயோ வெண்ணிலவே - 06

"சித்ரா பௌர்ணமி வர இன்னும் 34 நாள் தான் இருக்கு!"

"அதுக்கு என்ன?"

"நம்ம கட்டுப்பாட்டுல இருக்கிற அம்மனை என் உதவி இல்லாம விடுதலை பண்ண அந்த ஒரு நாள் தான் இருக்கு!"

"என்ன சொல்ற நீ?"

"ஆமா...!உத்தம விரதம்னு சொல்ற விரதம்...அதாவது, இதுவரை பெண் வாசனையே படாமல்,மனசுல அவ விடுதலை ஆகணும்னு ஒரே எண்ணத்தை மட்டும் வைத்து கொண்டு,பஞ்சாக்ஷர திதி நேரத்துல தன் உயிரையும் பொருட்படுத்தாமல் எதிர்த்து நிற்கிற ஒருத்தனால் மட்டும் தான் அதை உடைக்க முடியும்!"

"அப்படி ஒருத்தன் எவன் இருக்கான்??"

"இல்லை தான்...! ஆனால்,உருவாகி விட்டால்??"

"நடக்கவே நடக்காது!"

-ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் போதே அற்புத சக்தியோடே பிறப்பெடுக்கிறான். அவன் பிறக்கும் போதே அவன் புனிதமானது,வேள்வி நெருப்பிற்கு இணையாக இருக்கும். மாணவர்களின் திறமையை சோதிக்க தேர்வுகளில் எவ்வாறு அவர்களின் அதிகப்படியான திறமை சோதிக்கப்படுகிறதோ??அதுப்போல,அவன் வைக்கும் தேர்வுகளில் மனிதனின் அதிகப்படாயான திறமை வெளிக்கொணரப்படுகிறது. ஆனால்,இதில் மட்டும் தான் தோல்வி அடைந்தவர் என எவரும் இருந்ததில்லை. ஏனெனில்...அவனால், சோதிக்கப்படுவதே ஒரு வெற்றி அல்லவா???ஆனால்,இதை உணராதோர் சிலரே,இறைவன் இல்லை என்றும்...பல தீய வழிகளாலும் ஆயுள் கைதியாய் சிறைப்பிடிக்கப்படுகின்றனர். ஆனால்,நம்மவர்...நான் என்ன தவறிழைத்தேன்??? மனிதனின் இந்த சாடலுக்கு நான் எப்படி      பொறுப்பாவேன்???என்றே பாவமாய் இருக்கின்றார். கிடைத்த ஆஹுதியை (வெகுமதி) தவறான வழியில் பயன்படுத்தினால்???அதற்கு நாம் மட்டும் தானே பொறுப்பாக முடியும்!!!! செய்த தவறுகளுக்கு தண்டனை ஏற்க மறுக்கும் மனமே தனது புனிதத்தை இழந்து தவிக்கின்றது.

மைதியாக அமர்ந்திருந்த ஷைரந்தரியின் மனதில் ஆழமான சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. வெளியே எங்காவது, சென்றால் மனம் இலேசாகும் என தோன்றியது. வீட்டில் உள்ளர்களிடம் கூறிவிட்டு சென்றாள். அவர்கள்,உடன் பார்வதியை அழைத்துச் செல்லும்படி பணித்தனர். பார்வதியுடன்  வயல்வெளிக்கு பயணமானாள்.

"அண்ணி!"

"ம்..."

"சிவா! சிவா மேல கோபமா இருக்கீங்களா?"

"இல்லங்க...அவருக்கு ஏதோ பிரச்சனை இருக்கு!அதனால் தான்,அவரால எந்த விஷயத்துலயும் கவனம் செலுத்த முடியலை.எந்த பிரச்சனையாக இருந்தாலும், முடிக்கட்டும்."

"ஆனா,அண்ணி!"

"எனக்கு அவர் மேல கோபம் எதுவும் இல்லை.என்ன பிரச்சனைன்னு என்கிட்ட சொல்ல மாட்றான்னு வருத்தம் தான்!"-ஷைரந்தரி ஒரு முறை கூர்மையாக அவளைப் பார்த்தாள்.

"இப்போ! நான் உங்களுக்கு ஒரு வாக்கு தரேன்.நிச்சயமா..எந்த பிரச்சனையாக இருந்தாலும்,சிவாக்கு எந்த பிரச்சனையும் வராது!!உங்க கல்யாணம் சீக்கிரம் நடக்கும்!" அவளின் வாக்கினில் இருந்த ஏதோ ஒன்று பார்வதியை தடுமாற வைத்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.