(Reading time: 9 - 17 minutes)

 

மீண்டும் அவர்கள் பயணம் தொடர்ந்தது.  திடீரென

"பஞ்சாக்ஷரி!"-என்னும் குரல் அவர்களை தடுத்தது.

பார்வதி உடனே திரும்பிவிட,ஷைரந்தரி ஒரு நொடி தாமதமாக அவரை திரும்பி பார்த்தாள்.

அவர் முகத்தில் தெய்வசக்தி குடிக் கொண்ட தேஜஸ் இருந்தது.சடைமுடி தரித்த தலை,நெற்றி திருநீறு தாங்கி,கழுத்தில்,கரத்தில், கால்களில்,உருத்திராட்சம் அணிந்து,காவி உடையோடு,முகத்தில் ஒட்டிய நகையோடு நின்றார்.

மீண்டும் அவர் இதழ் ஒலித்தது,

"பஞ்சாக்ஷரி"என்று,

ஷைரந்தரி கண்கள் சற்று கலங்கி நின்றது,யாரும் அறியா வண்ணம். பேச்சிழந்து நின்றாள்.

"யாருங்க?"-என்றாள் பார்வதி.

"என் பேரு தாண்டவப்ரியன் தாயே!!!இமயமலையில் தவம் முடிச்சிட்டு, இராமேஸ்வரம் போக வந்தேன்.இந்த ஊர்ல,ஏதோ திருவிழான்னு சொன்னாங்க!  அதான்,இங்கே தங்கி,சக்தியோட உற்சவம் பார்த்துட்டு போகலாம்னு இருக்கேன்.தாகமா,இருக்கு தண்ணி தருவீங்களா?"

"இதோ எடுத்துட்டு வரேங்க!"-பார்வதி நீர் கொணர சென்றாள். ஷைரந்தரி,அவரை பார்த்தப்படி நின்றிருந்தாள்.

அவர்,மீண்டும்,

"பஞ்சாக்ஷரி!"-என்றார்.

அவளின் கண்களில் கண்ணீர் பெருகி அவர் பாதம் பணிந்தாள்.

"ஆயிஷ்மான் பவ!"-ஆசி வழங்கினார் அந்த உருத்திராட்சதாரி.

சிரித்தப்படி நின்றார். அதற்குள் பார்வதி வந்துவிட, அவள் தண்ணீர் கொடுக்கும் போது,அவளை யாரோ அழைக்க,

"நீங்க கொடுங்க.இதோ வந்துவிடுறேன்!"-என்று கூறிவிட்டு,அவளிடம் தண்ணீர் நிறைந்த பாத்திரத்தை கொடுத்து சென்றாள் பார்வதி.

ஷைரந்தரி தண்ணீரை ஊற்ற, அதை குடித்தார் அவர்.

"கங்கையின் தரிசனம் கிடைத்தது!"-என்றார்.

"சித்ரா பௌணர்மி முடியும் வரை இருப்பீங்களா?"-அதற்கு,ஒரு புன்னகை வழங்கிவிட்டு சென்று மறைந்தார் அவர்.அந்தப் புன்னகையின் இரகசியம் என்ன என்று மகேந்திர குமாரிக்கு மட்டும் வெளிச்சம்.

ரவு நெடு நேரம் உறக்கம் வராமல் தவித்தாள் ஷைரந்தரி. ஏதேதோ நினைவுகள் அவளை அலைக்கழித்தன.... செவிகளில் பஞ்சாக்ஷரி என்னும் நாமம் ஒலித்தப்படி இருந்தது. வீட்டில்,அனைவரும் உறங்கி விட்டிருந்தனர். மண்ணைப் பார்த்துக் கொண்டிருந்த கண்கள் விண்ணை காணும் போது, வானில் அழகாய் உதித்தது ஒரு துருவ நட்சத்திரம்.

அந்நட்சத்திரம் எதையோ நினைவுப்படுத்த, அது காட்டிய வழியில் அவளது கால்கள் பயணித்தன. பயணித்த கால்கள்,அதே கோவிலில் நின்றன. அவளுக்கென காத்திருந்தாற் போல கதவுகள் திறந்தன. ஒவ்வொன்றாக பார்த்தப்படி நடந்தாள் ஷைரந்தரி.

"மகேந்திர குமாரி!"-குரல் கேட்டு நின்றாள்.

அழைத்தவன்,அந்த அகோரி.

"பஞ்சாக்ஷர திதியில் ஜென்மம் எடுத்தவள். மகேந்திரனின் வாரிசு.சிவ பஞ்சாக்ஷரி என பிரியமாய் அழைக்கப்படுபவள். கங்கையின் புனிதமானவள். நெருப்பின் கோபம் கொண்டவள்.காற்றின் வேகம் கொண்டவள். நிலத்தின் பொறுமையானவள். ஆகாயத்தின் அழகை கொண்டவள். அடிமையாக்கப்பட்டு இருக்கிறாள் எனது கட்டுப்பாட்டில்...!"-பலமாக சிரித்தான்.

அமைதியாக இருந்தாள் ஷைரந்தரி.

"நினைவிருக்கிறதா?அன்று... சித்ரா பௌணர்மியில் நான் பெற இருந்த தவத்தின் பயனை கெடுத்தாய் அல்லவா??இதோ...!இந்த பிறப்பில்,உன்னை பலியிட்டு அச்சக்தியை மீண்டும் அடைவேன்!எந்த இரட்சகன் உன்னை காக்கிறான் என பார்க்கிறேன்!அதற்கு,முதலில் உன் புனிதத்தை அழிக்கின்றேன்!"-அமைதி காத்தாள்.அவன், கண்ணசைக்க ஒரு தூணின் மறைவில் இருந்து வினய் வந்தான்....

அவன் கண்களில் பழி வாங்கும் எண்ணம் இருந்தது. அவன்,அவளை நெருங்கினான்.

அங்கிருந்த பூமியானது... வினய்,ஷைரந்தரியை நெருங்கா வண்ணம் பிளந்தது. அதன்,உள்ளே இருந்து நெருப்பு பிழம்பு எட்டிப் பார்த்தது.

"பார்...!நன்றாக பார்! நீ பிராத்தமாக பெற போவதை!!!உன் கட்டில் இருப்பது ஆதிசக்தி தான்,ஆத்மசக்தி அல்ல!!!இத்தனை ஆண்டாய், கண்ணில் மறைத்த கனலை பார்!உன் அழிவைப் பார்!"

"..............."

"உன் விருப்பத்திற்கு நெருங்க மகேந்திர குமாரி உன்னால் உருவாக்கப்பட்டவள் அல்ல!!! அக்னியில் பிறப்பெடுத்தவள். நீ என்னை அழிக்க உனக்கு பஞ்சாக்ஷர திதி வரை மட்டுமே அவகாசம்!!!  இல்லை...அன்றிலிருந்து பௌணர்மி வரை உன் மரணத்திற்கு நான் அவகாசம் அளிக்கிறேன்!!! விரைந்து செல்...!!!  இல்லை...இங்கே பிறப்பெடுத்த நெருப்பானது, உன் பிரணனை தனதாக்கும்!"-அவள்,கூற அந்நெருப்பு மேலே எழுந்தது.

அவ்விருவரின் விழிகளில் அச்சம் படர்ந்தது.

"விரைந்து செல்...!!!எதிர்த்து நிற்பது சிவ பஞ்சாக்ஷரி என்பதை தெரிந்துக் கொள்."-பெண் உருக் கொண்ட அந்த அக்னி சிம்மத்தைக் கண்டு, அவர்கள் உயிர் பிழைக்க ஓடினர்.

ஷைரந்தரியின் நேரம் இந்த நொடியில் இருந்து துவங்கியது.

Related read : காதல் நதியில் - 27

றுநாள் காலை...

எதுவும் நடக்காததைப் போல இயல்பாக இருந்தாள் ஷைரந்தரி.

"அம்மூ!"

"என்ன சிவா?"

"நேத்து இராத்திரி எங்கேயாவது வெளியே போனியாடா?"

"போனேன்.!"

"எங்கே?"

"என் கண் காட்டின பாதையில,கால் போச்சு!"

"எங்கே போச்சு?"

"அதான் சொன்னேனே!!!"

"அது எந்த இடத்துல நின்னுது?"

"பூமியில!"

"................."

"எனக்கு சொந்தமான இடத்துல!"-சந்தேகமில்லை இவள் அந்தக் கோவிலுக்கு தான் சென்று இருக்கிறாள். உறுதிப்படுத்தியது மனம்!!!

"நான் என்ன சொன்னாலும் கேட்பியா அம்மூ?"

"உன் தங்கச்சியா நிச்சயமா கேட்பேன்.ஆனா, ஷைரந்தரியா முடியாது!"-

ஷைரந்தரியின் பேச்சில் அபாரமான மாற்றம் தெரிந்தது சிவாவிற்கு!!!!

"என்ன பயந்துட்டாயா?லூசு... என்னன்னு சொல்லு!"

"நான் சொல்ற வரைக்கும்,இந்த வீட்டை விட்டு,நீ வெளியே போக கூடாது!" அவன்,அவனது தங்கையின் நலனுக்கு மட்டுமல்ல,பலரின் நலனுக்காக கூறினான்.

ஷைரந்தரியின் முகத்தில் ஒரு வகையான சிரிப்பு வந்தது.

"கட்டுப்படுத்தப் பார்க்கிறீயா?"

"ஆமாம்...!"-உறுதியாய் விடையளித்தான் சிவா.

"சரி...நீயா சொல்ற வரைக்கும் நான் இந்த வீட்டை விட்டு போக மாட்டேன்!"-வாக்களித்தாள் மகேந்திர குமாரி.

"நிஜமா?"

"நிஜமா!"-இதோ,இப்போது அன்பால் கட்டுப்படுத்தியவனே இன்னும் சிறிது நாட்களில் கட்டை உடைக்கப் போகிறானே!!!!

தொடரும்

Go to Episode # 14

Go to Episode # 16

{kunena_discuss:751}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.