02. காற்றே என் வாசல் வந்தாய்!!! - கீர்த்தனா.ஆர்
தேவதை வம்சம் நீயோ
தேணிலா அம்சம் நீயோ
பூமிக்கு ஊர்வலம் வந்த

வானவில் நீயோ
பூக்களின் வாசம் நீயோ
பூங்குயில் பாஷை நீயோ
சூரியன் போனதும் அங்கே
வருவதும் நீயோ
"அம்மா அம்மாமா" என்று தனது அறையில் இருந்து கத்திக் கொண்டு இருந்தாள் ரித்திகா.
"என்னடி வேணும். இப்போ எதுக்கு இப்படி பிசாசு மாதிரி கத்திக்கிட்டு இருக்க. எதுவா இருந்தாலும் இங்க வந்து கேளு. எனக்கு இன்னும் இங்க வேலை இருக்கு" என்று சமையல் அறையில் இருந்து தனது மகளை கேட்டு கொண்டு இருந்தாள் மரகதம்.
"அம்மா நீங்க என் பூஜ்ஜு அம்மா தான. ப்ளீஸ் மா இந்த ஸாரீ மட்டும் கட்டி விடுங்க மா" தனது தாயின் தாடையை பிடித்து கெஞ்சி கொண்டு இருந்தாள்.
"ஏண்டி கழுத வயசு ஆகுது. இன்னும் உனக்கு புடவை கட்ட தெரியலை. நாளைக்கு போற இடத்துல என்னோட மானத்த வாங்காத " என்று திட்டி கொண்டு இருந்தார்.
"அம்மா ! ப்ளீஸ்மா. அதெல்லாம் நான் அப்போ பாத்துக்கறேன். எனக்கு இப்போ காலேஜ்-கு லேட் ஆகுதுமா" என்று கெஞ்சி கொண்டு இருந்தாள்.
அவளை திட்டி கொண்டே அவளுக்கு உதவி செய்து, தனது சமையல் வேலையை தொடர்ந்தார்.
"அம்மா நான் ரெடீ. பசிக்குது .இன்னிக்கு என்ன டிபன்."
"அதுதான பார்த்தேன். சாப்பிட மட்டும் கரெக்ட்டா வந்துரு. வேலை செய்ய சொன்னா மட்டும் எனக்கு படிக்கற வேலை இருக்குனு சொல்லி எஸ்கேப் ஆகறது. இதுக்கு உங்க அப்பா உனக்கு சப்போர்ட் வேற."
"இப்போ எதுக்கு அப்பாவ தேவை இல்லாம இதுல இழுக்கறீங்க."
"ஆமா அவர சொன்ன உனக்கு கோவம் வரும். உன்ன எதாவது ஒரு வார்த்தை சொன்னா அவரு சண்டைக்கு வருவாரு. உங்க ரெண்டு பேரையும் என்ன பண்றதுணு தான் எனக்கு தெரியல."
" நீங்க ஒண்ணும் பண்ண வேண்டாம். இப்போ டிபன் எடுத்து வைங்க. அது போதும்."
"உனக்கு இன்னிக்கு நேரத்துல போகணும்-னு முன்னாடியே தெரியும்ல. அப்புறம் எதுக்கு லேட்டா எழுந்த."
"அம்மா அம்மா. ஸ்டாப் ஸ்டாப் !! காலைல இருந்து உங்ககிட்ட திட்டு வாங்கி என் காதுல இருந்து ரத்தமே வருது. ப்லீஸ். மீ பாவம்"
"அடிப்பாவி. அப்போ நான் சொன்னது-ல உனக்கு மண்டைல ஏறலையா”
"ஹி ஹி. சே சே அப்படி இல்லாம"
"இன்னும் எதாவது சொல்லி திட்டு வாங்காம ஒழுங்கா சாப்ட்டு கிளம்பற வழிய பாரு"
"என்ன இன்னிக்கும் அம்மாகும் பொண்ணுக்கும் சண்டையா" என்று கேட்டு கொண்டே வந்தார் பூமிநாதன்.
"பாருங்கபா அம்மாவ. சும்மா எப்போ பாத்தாலும் திட்டிட்டே இருக்காங்க" தன் தந்தையின் தோள் மீது சலுகையாக சாய்ந்து கொண்டு சொன்னாள்.
"விடு ரிது குட்டி. இப்போ அவளை என்ன பண்றேன்னு பாரு. எதுக்குமா அவளை திட்டிட்டே இருக்கற. பாரு புள்ள முகம் எவ்ளோ வாடி போச்சுன்னு. ஆமா இன்னிக்கு என்ன விசேஷம் ரிது. சாரீ எல்லாம் கட்டி இருக்கற.”
ரிதுவும் தன் முகத்தை பாவமாக வைத்து கொண்டாள். ( அப்பா சாமி இது உலகமாக நடிப்புடா )
"ஆமா ஏழு கழுத வயசு ஆகுது இன்னும் உங்க பொண்ணுக்கு புடவை கட்ட தெரியலை. வெளிய சொன்ன என்னோட மானம் தான் போகும். என்ன பொன்னா வளர்த்து வெச்சிருக்கான்னு என்னை தான் நாலு பேரு கேட்பாங்க. அவ தான் சொல்றான்னு இவரு பெருசா நியாயம் கேட்க வந்துட்டாரு. இப்போ ரெண்டு பேரும் பேசாம சாப்பட போறீங்களா இல்லையா "
" அப்பா! ஒரு கழுதைக்கு எத்தன வயசு . அம்மா அவங்களோட வயச சொல்றாங்க அப்பா. எனக்கு இப்போ தான் ரெண்டரை கழுத வயசு ஆச்சு" என்று தன் அதி முக்கியமான சந்தேகத்தை அவர் காதில் முணுமுணுத்து கொண்டு இருந்தாள் நம் நாயகி.
பூமி நாதனும் தனது சிரிப்பை அடக்க முடியாமல் " நான் வேண்ணா உங்க அம்மா கிட்ட கேட்டு சொல்லட்டுமா" என்று ரிதுவின் காதில் ரகசியம் பேசினார்.
"ஐயோ ! மறுபடியுமா. ஆளை விடுங்க சாமி. காலைல இருந்து கேட்டத்துக்கே காதுல இருந்து இன்னும் ரத்தம் வருது. இன்னும் என்னால முடியாது. எஸ்கேப்" என்று அவசரமாக உணவை உண்டாள்.
"என்ன அங்க அப்பாவும் பொண்ணும் ரகசியம் பேசரீங்க. ஒழுங்கா சாப்பட மாட்டீங்களா" என்று சமையல் அறையில் இருந்து குரல் கொடுத்தார் மரகதம்.
அடுத்த 5 நிமிடத்தில் ரிதுவும்,நாதனும் கெளம்பி இருந்தனர்.
அங்கே ஆதியின் வீட்டில் மீனாஷி இருவரையும் திட்டி கொண்டு இருந்தார்.
"இப்போ நீங்க ரெண்டு பேரும் பேசாம சாப்பட போறீங்களா இல்லையா!! சின்ன பசங்களா ரெண்டு பேரும். ஆதி இன்னிக்கு மீட்டிங் இருக்குதுன்னு சொன்ன தான.
சாப்ட்டு சீக்கரம் கிளம்பற வழிய பாரு. ஏய் உனக்கு தனியா சொல்லனும்மா. நீயும் காலேஜ் போற வேலைய பாருடி "
" கரெக்டா சொன்னிங்க அம்மா.!! " என்று வாசலில் இருந்து குரல் வந்தது.
அனைவரும் திரும்பி பார்த்தனர்.
அப்போது தான் உள்ளே நுழைந்து கொண்டு இருந்தான் ரமேஷ். ஆதியின் உயிர் தோழன்.
"அடடா ரமேஷ் தம்பி. வாப்பா. உள்ள வா!!"
" ரம்யா எப்படி இருக்கா. அருண் குட்டி எப்படி இருக்கான்."
" என்ன இன்னிக்கும் ரெண்டு பேருக்கும் பஞ்சாயத்தா" என்று கேட்டு கொண்டே ஆதியின் அருகில் அமர்ந்தான்.
"இவங்கள பத்தி உனக்கு தெரியாதா !! எப்போ பார்த்தாலும் சின்ன பசங்க மாதிரி சண்டை போட்டுட்டு இருப்பாங்க அவங்களை. விடுடா"
"நீ சொல்லு எப்போ அவங்கள நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரபோற"
ஹா ஹா ஹா என்று இருவரையும் பார்த்து சிரித்த படியே " கண்டிப்பா இந்த வாரம் கூட்டிட்டு வரேன் அம்மா " என்று பதில் கூறினான்.
" மவனே நீ சிரிடா!! வெளிய வா இருக்குடி உனக்கு கச்சேரி" என்று ரமேஷின் புறம் சரிந்து முனுமுனுத்தான் ஆதி.
"எவ்வளவோ பார்த்துட்டோம் இத பார்க்க மட்டோம்மா" பதிலுக்கு முனுமுனுத்தான்.
அதன் பின் அனைவரும் காலை உணவினை முடித்து கொண்டு புறப்பட்டனர்.
" என்னடா இன்னிக்கு கொஞ்சம் காரம் அதிகமாவே இருக்கு!! என்ன விஷயம் சொல்லு ஆதி "
" பச்! எல்லாம் என்னோட கல்யாண விஷயம் தான்டா. கூடிய சீக்கரம் வீட்ல சொல்லி, ரிது வீட்ல பேச சொல்லணும் மச்சி "
" அவ வேற இந்த வருஷம் கடைசி வருஷம். இன்னிக்கு ஈவ்னிங் அப்பா கிட்ட இத பத்தி பேசணும் மச்சி. அவர்கிட்ட பேசிட்டு உனக்கு சொல்றேன்டா"
" சரிடா சீக்கரம் நல்ல முடிவா சொல்லுடா!! ஆபீஸ்ல பாக்கலாம். பாய்!! பாய் மது " என்ற படியே தன் பைக்கில் பறந்தான்.