" பாய் அண்ணா. ஹேய் நான் ரெடி!! வா சீக்கரமா போகலாம். இன்னிக்கு 1st hour அந்த குண்டு பூசணிகா கிளாஸ். லேட்டா போனா அட்வைஸ் பண்ணியே ஒரு வழி பண்ணிடும் "
" சரி வா போகலாம். யாம் இருக்க பயமேன் " என்ற படி காரில் டிரைவர் சீட்டில் அமர்ந்தான்.
" இன்னிக்கு காலைல இருந்து நீ ரொம்ப என்னோட லைன் ல கிராஸ் பண்ணிட்டு இருக்கற. இது உனக்கு நல்லது இல்லடா. சொல்லிட்டேன் " என்ற படி சிடியை நோண்டி கொண்டு இருந்தாள்.
" ஹேய் வாலு !! அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. நான் எப்போவும் போல தன் உன்னை சும்மா சீண்டிட்டு இருந்தேன்."
"ஹ்ம்ம் நீ நடத்துடா அண்ணா .இன்னிக்கு உன்னோட ஆள் டிபார்ட்மெண்ட் பங்க்ஷன்.
"சோ சாரீ கட்டிட்டு வருவா." என்று சொல்லி முடிக்கவும் காலேஜ் வரவும் சரியாக இருந்தது.
" ஹே தேங்க்ஸ்டா மது. சரி நீ கிளம்பு. லேட் ஆச்சுன்னு சொன்னால. அப்புறம் அந்த பூசனிக்காய் உன்னை வெளிய நிக்க வெச்சிர போகுது." என்று கூறியபடியே காரை விட்டு இறங்கினான்.
" ஹ்ம்ம்ம்ம் எல்லாம் என் நேரம்டா. பாய் ஈவ்நிங் பார்க்கலாம்.”
தன் தேவதையின் வருகையை ஆவலுடன் பார்த்து கொண்டு இருந்தான் ஆதி.
"ஹையா !! இன்னிக்கு என்னோட ரிது குட்டி சாரீ கட்டிட்டு வர போறாங்க. ஹ்ம்ம் தூரத்துல இருந்து தான் பார்க்க முடியும் " என்று ஏங்கியபடி பெருமூச்சு விட்டான் ஆதி.
இளஞ்சிவப்பு நிறத்தில் ஆங்காங்கே சிறு சிறு கற்கள் பதிக்க பட்டு,காதில் குடை ஜிமிகியும், கழுத்தில் சிறு நெக்லசும், இரண்டு கைகளிலும் வளையலும் அவளின் அழகை மேலும் மெருகேற்றியது.
தன்னை மறந்து எவ்வளவு நேரம் நின்றானோ அருகில் பேச்சு சத்தம் கேட்டு தன் தலையை உலுக்கி கொண்டு " ரிது குட்டி இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கீங்க. இதுக்கு பதில் நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் சொல்றேன்" என்று மானசீகமாக அவளிடம் விடைபெற்று தன் வேலையை முடித்து கொண்டு காரில் ஏறினான்.
ஆதியும் தன் அலுவலகத்தில் நுழைந்து, காரை நிறுத்தி விட்டு , எதிர் பட்டவர்களின் வணக்கத்தை ஒரு சிறு தலை அசைவுடன் ஏற்று கொண்டு நடந்தான். தன் வீட்டில் எவ்வளவு சிறுபிள்ளையாக இருந்தாலும் ஆபீஸ்-இல் அதற்கு நேர் எதிர்.
(வாங்க ஹீரோ பத்தி சின்ன இன்ட்ரோ பாக்கலாம்.)
ஆதித்யன் !! சொக்கநாதன் , மீனாஷி தம்பதியின் மூத்த மகன்! ஆதித்யன் குரூப் ஆப் கம்பெனி எம்.டி. 28 வயதை தொட்டு இளம் தொழில் அதிபர்களில் ஒருவன். தன் எம்.பி.ஏ படிப்பை வெற்றிகரமாக முடித்து கொண்டு தன் தந்தையின் ஆசைக்காக அவரின் தொழிலையும்,தனது புதிய எக்ஸ்போர்ட் கம்பெனியை தன் உழைப்பால் வெற்றிகரமாக நடத்தி வருகின்றான். ஆதி தன் கம்பெனிமுக்கியமான பொறுப்பை ரமேஷிடம் ஒப்படைத்தான். அவன் கம்பனியின் ஜி.எம் பதவியை அளித்தான்.
மதுமதி- ஆதியை விட 4 வயது சிறியவள். அவர்களின் செல்ல மகள். தன் அண்ணனிடம் மதிப்பும் மரியாதையும், நிறைய பாசமும் காட்டுவாள்.
அதே சமயம் அவனை வம்பிழுத்து கொண்டும் இருப்பாள். மீனாட்சியும் சொக்கநாதனும் இவர்களின் சண்டையை ரசிப்பார்கள்.
பூமிநாதன் மரகதம் தம்பதியரின் ஒரே செல்ல மகள் ரித்திகா. சென்னை மாநகரின் திருவான்மியூர் பகுதியில் உள்ள தங்களின் சொந்த வீட்டில் வசிக்கும் அழகிய குடும்பம். பூமிநாதனின் பூர்விகம் தஞ்சை நகரின் ஒரு சிறிய கிராமம். தன் தந்தையின் காலத்திற்கு பிறகு சென்னையில் குடியேறி சிறிய அளவில் தொடங்கிய தன் ஜவுளி வியாபாரத்தை தன் உழைப்பால் மேலும் உயர்த்தினர். அதற்கெல்லாம் மேலாக ரித்திகா பிறந்தது தான் அவர்களின் மிகபெரிய மகிழ்ச்சி.
பூமிநாதன் தன் மகளை மிகவும் செல்லமாகவும் அதே நேரம் முழு சுதந்திரத்துடனும் வளர்த்தார். மீனாஷி தன் மகளை சிறு சிறு கண்டிப்புடன் வளர்த்தார். ரிதுவும் செல்ல குறும்புகளுடன் வளர்ந்தாள்.
தன் தந்தையின் தொழிலை மேலும் முன்னேற்ற எண்ணி கொண்டு அந்த துறையை சார்ந்த படிப்பையே தேர்ந்தெடுத்தாள். பி.ஈ டெக்ஸ்டைல் டிசைனிங் கடைசி வருடம் படித்து கொண்டு இருப்பவள்.
" ஹாய் கவி !! சூப்பர்ர இருக்கடி இந்த சாரீல.இன்னிக்கு உன்னோட ஆள் காலி தான் போ."
" ஹேய் வா ரிது. இப்போ தான் உன்ன இன்னும் காணமேன்னு யோசிச்சிட்டு இருந்தேன்.கரெக்ட்டா வந்துட்ட. சும்மா என்னை கிண்டல் பண்ற வேலைய விட்டுட்டு வா . நிறைய வேலை இருக்கு."
நம்ம காலேஜ் பசங்க எல்லாரும் இன்னிக்கு உனக்கு பாடிகார்ட் வேலை பார்க்க போறாங்க . ஹா ஹா ஹா "
" ஹேய் கவி சும்மா கடுப்பேத்தாம வாடி. இன்னிக்கு காலைல இந்த சாரீ கட்ட அம்மா கிட்ட எவ்ளோ திட்டு வாங்கின எனக்கு தான் தெரியும்"
ரிதுவும் கவியும் முதல் நாள் கல்லூரில் சேர்ந்த அன்றே தோழிகள். வழக்கம் போல கல்லூரியின் முதல் வருட மாணவர்களின் முதல் நாள் வித்யாசமானது. சீனியர் மாணவர்களின் ராக்கிங்கில் இருந்து தப்பிக்கவே நினைப்பார்கள். கவிதா கல்லூரியில் சேர்த்த அன்றே மாட்டி கொண்டாள் .
" ஹேய் ரெட் சுடி!! இங்க வா " என்று யாரோ கை தட்டி அழைத்தார்கள்.
அங்கே இருந்த மரத்தின் அடியில் நான்கு ஐந்து மாணவர்கள் கூட்டமாக பேசி கலைத்து கொண்டு இருந்தனர்.
கவியும் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு தன்னை தான் அழைக்கிறார்கள் என்று பயந்து கொண்டே சென்றாள்.
" உன் பேரு என்ன " அங்கிருந்த ஒருவன் கேட்டான்.
தன் பயத்தை மறைத்து கொண்டே "கவிதா" என்று மெல்லிய குரலில் சொன்னாள்.
" ஹேய் கவி!! நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்கற. வா சீக்கரமா போகலாம். கிளாஸ்கு டைம் ஆய்டுச்சு" என்று பின்னால் இருந்து குரல் கேட்டது.
அனைவரும் அவளை பார்த்தனர். கவியும் தனக்கு பின்னால் திரும்பி பார்த்தாள்.
ரித்திகா நின்று கொண்டு இருந்தாள். துரத்தில் வரும் போதே அந்த மாணவர்கள் அவளை அழைப்பதை கவனித்து விட்டாள். அவளின் பயந்த முகத்தை பார்த்து வேகமாக வந்தவள் அவளின் பெயரை தெரிந்து கொண்டு வெகு நாட்கள் பழகியது போல காட்டி கொண்டாள் .
அவர்களிடம் இருந்து ஒருவழியாக கவியை காப்பாற்றி " ஹாய் நான் ரித்திகா." என்ற படி தன் வலது கையை நீட்டினாள்.
" தேங்க்ஸ் .. நான் கவிதா."
" நீங்க சீனியர்- ஆ. இந்த காலேஜ் ல" கவிதா .
" இல்ல கவி. நானும் உங்கள மாதிரி 1st இயர் தான். "
" அப்புறம் எப்படிஅவங்க கிட்ட மாட்டிக்காம தப்பிச்சிங்க"
" ஹா ஹா அது தான் என்னோட திறமை. சரி கிளாஸ்கு டைம் ஆய்டுச்சு. போலாமா. நான் டெக்ஸ்டைல் டிசைனிங் டிபார்ட்மெண்ட்"
" ஹேய் நானும் அதே தான். வா போலாம் "
அதன் பிறகு வந்த நாட்களில் கவியும் ரிதுவும் நெருங்கிய தோழிகள்.கடைசி வருஷம் வரை தங்களின் நட்பை மேலும் வளர்த்தனர்.