(Reading time: 11 - 22 minutes)

01. வானவில் - அமுதவள்ளி

னிமையான காலை பொழுது, கோவிலின் மணி ஓசை, குயிலின் கீதம், ரேடியோவில் முன்னாவின் பேச்சு இதையெல்லாம் தாண்டி அம்மாவின் குரல் "குட்டிமா எழுந்துடுமா." அதை தொடர்ந்து "5 நிமிஷம் மா "

"காபி கூட கலந்தாச்சு. என் தங்கம்ல எழுமா"

 "ம் ம் ம் "

Vanavil

"குட் கேர்ள். காபி குடி"

"பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு"

"நான் டிபன் பண்றேன். நீ குளிச்சிட்டு வா"

"என்னமா டிபன்"

"பூரி, உருளைகிழங்கு"

"ஹே ஜாலி. எனக்கு பிடிச்சது. நான் சாப்பிட்டு பிறகு குளிக்கறேன்."

"ஏய் எரும. எவ்வளவு நேரமா உன்னை எழுப்பறது. எழுந்தரிடி"

அவள் எழுந்ததும் "அம்மா எங்கே"

"கனவு கண்டது போதும். இப்ப நீ காலேஜ் ஹாஸ்டல்ல இருக்க"

"பச். சுப்ரபாதம் கேட்காம முன்னா குரல் கேட்கும்போதே எனக்கு தெரிஞ்சிருக்கணும்.”

"முன்னாவா..இது கொஞ்சம் அதிகம்னு உனக்கே தெரியலை.அப்புறம் வேற என்ன நடந்தது"

” ஹ்ம்ம். செம்ம கனவு. அம்மா பூரி செஞ்சுதராங்க."

"சரியான சாப்பாடுராமி சாது நீ "

"போடி அஞ்"

"வேற என்ன கனவுல வந்தது"

"குயில் சத்தம், கோயில் மணி சத்தம் கேட்டுச்சு"

"கோயில் சத்தம் ஓகே. நம்ம விடுதி கோயில் மணி சத்தம் அது. ஆனால் குயில் சத்தமெல்லாம் ஓவர். அது காக்கா கத்தின சத்தம்"

"போடி லூசு"

"நம்ம கதையை அப்புறம் வெச்சுக்கலாம். எழுந்து கிளம்பு. இன்னிக்கு காலேஜ் முதல் நாள்."

"இன்னிக்குதான் காலேஜ்க்கு முதல்ல போற மாதிரி பேசற. கஷ்டப்பட்டு 4 செமஸ்டர் எழுதி 3 இயர் வந்தாச்சு"

"உன்னை"

"எதுக்கு இப்ப பல்லை கடிக்கற"

"எழுப்பி 10 நிமிஷம் ஆகிடுச்சு. என்கிட்ட வெட்டியா பேசிட்டு இருக்க. நிஷ் வந்தாதான் நீ சரிபடுவ."

"நாங்கல்லாம் யாரு. யாருக்கும் பயபடமாடோம்ல. ஐயோ பிசாசு ஏண்டி தண்ணிய ஊத்துன"

"ஹா ஹா. அங்கே பாரு" என்று சிரித்தாள் அஞ்.

"இதோ கிளம்பிட்டேன் நிஷ். இந்த அஞ்தான் லேட் பண்றா"

"அடிப்பாவி" என்றாள் அஞ்.

"எனக்கு உன்னைபத்தி நல்லா தெரியும். கிளம்பு" என்றாள் நிஷ்.

"இதோ 10 நிமிஷம் கிளம்பிடுவேன்"

"யாரோ யார்க்கும் நான் பயப்பட மாட்டேன்னு சொன்னாங்க. யார் அது"

"எனக்கு எதுவும் கேட்கலை அஞ் என்று குளிக்கச்சென்றாள் சாது"

"இப்போ மட்டும் இவளுக்கு எதுவும் கேக்காதே"

"நீ ஏன் இப்படி கஷ்டப்பட்டு அவளை எழுபற. தண்ணிய ஊத்து" " என்றாள் நிஷ்.

"இனிமேல் அதைதான் பண்ணனும்" என்றாள் அஞ்.

"2 வருஷமா நாங்க அதை தான் சொல்றோம். நீதான் செய்யமாற்ற" என்றாள் ஹாசி.

"கிளம்பிட்டிய ஹாசி" என்றாள் அஞ்.

"நீ அவளை எழுபறதுகுள்ள நாங்க காலேஜ்க்கே போயிடுவோம்."

"சாது வந்தாச்சு. சாப்பிட போகலாம்" என்றாள் நிஷ்.

"போகலாம்" என்றனர் ஒரே குரலாய் அஞ், ஹாசி.

"ஐயோ. இன்னிக்கு பொங்கல்" இது வேற யாரும் இல்லை. நம்ம சாதுதான்.

"பிடிக்கலைனாலும் கொஞ்சம் சாப்பிடு" என்றாள் ஹாசி.

"இந்த கொடுமைக்கு ஹிட்லர் பரவால்ல" என்றாள் சாது.

நால்வரும் சாப்பிட்டு கிளம்பினர்.

ஞ்சனா, ஹாசினி, நிஷா, சாதனா நால்வரும் ஹாஸ்டல் ரூம்மேட்ஸ். படிக்கறது வில் இன்ஜினியரிங் காலேஜில் CSE டிபார்மெண்ட்.

இவங்க நாலுபேரும் ஒண்ணா இருந்தா காலேஜ் தாங்காதுன்னு தெரிஞ்சுடுச்சு போல அதனால் அவங்களை ஒரே கிளாஸ்சில் போடலை. அஞ்சனா, ஹாசினி ஒரு கிளாஸ். சாதனா , நிஷா ஒரு கிளாஸ். இப்ப இவங்களைபத்தி ஒரு சின்ன இண்ட்ரோ.

அஞ்சனா ஊர் கோயம்பத்தூர். அப்பா வியாபாரி. அம்மா இல்லத்தரசி. ஒரு அக்கா காஞ்சனா. கல்யாணம் முடிஞ்சு மும்பையில் இருகாங்க. அவங்களுக்கு ஒரு குட்டி வாலு ஹரிஷ். அஞ்சனா அமைதினும் சொல்ல முடியாது வாலும் கிடையாது.

ஹாசினி ஊர் புனே. அப்பா, அம்மா பேங்க்ல வேலை செய்றாங்க. ஒரே அண்ணா யுவராஜ், ஆடிடர். சந்தோஷ் சுப்பிரமணியம் படம் ஹசினிக்கு நேர் எதிர். நாலுபேர்ல இவதான் கொஞ்சம் அமைதி.

சாதனா ஊர் கடலூர். அப்பா,அம்மா ஆசிரியர். சாப்பாடுனா உயிர். ஆனால் பொங்கல் பிடிக்காது. சாதனா அகராதியில் அமைதி அப்படிங்கற வார்த்தையே இல்லை. சரியான வாயாடி.

நிஷா ஊர் பொள்ளாச்சி. கூட்டுகுடும்பம். தாத்தாக்கு 2 மகன். முதல் மகன் ராமன். அவருக்கு அஸ்வின், அர்ஜுன் இரண்டு பசங்க. இரெண்டாவது மகன் கிருஷ்ணன். அவருக்கு நிஷா ஒரே பெண். நிஷா பயங்கர வாலு. ஆனால் காலேஜ்ல இவளை பத்தி நிறைய பேருக்கு தெரியாது. இவள் செய்யறதுக்கு சாதனா மாட்டிப்பா.

இவ்வளவு அழகான பெயரை ஏன் இப்படி கூப்பிடுராங்கனுதான கேட்கறீங்க. அவங்க வித்தியாசமா கூப்பிடுராங்கலாம். (கேவலமா இருக்கு. ஆனால் நம்ம சொன்னா நம்மளை உதைபாங்க)

அஞ்சனா, ஹாசினி கிளாஸ் பார்ப்போம் வாங்க.

"ஹாய் ப்ரிண்ட்ஸ்" என்றாள் அஞ்.

"ஹாய்" என்றாள் ஹாசி.

"ஹாய்டி. என்ன ஷார்ப்பா 9க்கு வறீங்க" என்றாள் தீபா.

"எப்பவும் போல சாது கிளம்பலை" என்றாள் அஞ்.

" விடுமுறை எப்படி போச்சு" என்றான் சிவா

"நல்லா போச்சு. உங்களுக்கு " என்றாள் ஹாசி.

"நான் சிங்கப்பூர் போனேன். நல்லா இருந்தது. வரவே மனசு இல்லை. நான் அங்க பிறந்து இருக்கணும். தெரியாம இங்க பிறந்துடேன்." இது தினேஷ்.

"இவனோட அலம்பலுக்கு அளவே இல்லாம போச்சு"(இதை அனைவரும் மனதில் நினைத்தனர்.)

"இப்போகூட பிரச்சனையில்லை அங்கே படி" என்றாள் தீபா.

"அதுக்கு அவனை அவங்க சேத்துக்கனுமே" என்றாள் அஞ்.

"இது தேவையா உனக்கு" என்றான் சிவா.

அங்கிருந்து சென்றான் தினேஷ்.

"ஹாசி ஏன் எதுவுமே சொல்லலை நீ" என்றாள் தீபா.

"அவனை பத்தி தெரியும். எதுக்கு அவனுக்கு பதில் சொல்லணும். இதைத்தானே நீ சொல்லபோற" என்றாள் அஞ்.

அதை ஆமோதித்தால் ஹாசி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.