(Reading time: 11 - 21 minutes)

06. வாராயோ வெண்ணிலவே - சகி

னவில் எழுதிய காதல் மடல் என்றல்லவா நினைத்தேன்??

அவனோடு வாழ்ந்த வாழ்வினை...

கரம் பற்ற கனவை கிழித்து வந்தானே!!!

Vaarayo vennilave

என் சொல்வேன் என் இதயம் கவர் மன்னவனைப் பற்றி???

ரஞ்சித்தின் நினைவுகளால் பெரிதும்,இம்சிக்கப்பட்டு இருந்தாள் வெண்ணிலா.

"இத்தனை நாள்,அவனை மறந்தேன் என்றல்லவா நினைத்தேன்!!!ஆனால்,அவனைக் கண்ட பொழுது,அனைத்து எண்ணங்களும் தரைமட்டமானதே!!"-அறியவில்லை அவள் மனது, மறந்துவிட்டோம் என்று எண்ணுவதே...ஒரு நினைவு தான் என்று!!!

அவன்,நினைவுகளே வரக் கூடாது என்று எண்ண,நிலைக் கண்ணாடி முன் நின்றவளின் கண்ணில் அவன் கட்டிய தாலி தென்பட்டது.

இன்னும்,இதை கழற்றி எறிய மனமில்லை. சற்று,அவன் பேசிய வார்த்தைகள் நினைவு வந்தன.

'உனக்கும்,எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.தயவு செய்து என் வாழ்க்கையை போய் விடு! நீ என் கூட இல்லனா,அப்போ தான் எனக்கு நிம்மதியே வரும்!'-இன்னும் நம்ப முடியவில்லை.

அவனா பேசினான்??? அப்படி எல்லாம் அவனா பேசினான்?? அவன் அப்படி பேசியும்,இன்னும் இதை கழற்றி தூக்கி எறிய மனம் வராமல் தவிக்கின்றேனே!!

கண்களில்,நீர் பெருகியது. நினைக்கும் போதே கல்லாய் போனது மனம்!!! இந்த விஷயம் அப்பாவிற்கு தெரிய வந்தால்?? நொறுங்கி விடுவாரே!!! கடவுளே...!

இன்னும்,இந்த உடலில் ஏன் உயிரை வைத்திருக்கிறாய்?? வாழ்வில்,துன்பங்களை மட்டும் சந்திக்கும் படி,அப்படி என்ன பாவம் புரிந்தேன்??இறைவனை வஞ்சித்தது பெண் மனம்.

நம்மில் பலர் இவளை போல தான்... இன்பம் வரும் பட்சத்தில், , அதை ஆனந்தமாக கொண்டாடி விடுகிறோம். அந்த நேரத்தில், இறைவனானவன் நமக்கு, இந்த சந்தோஷத்தை எனக்கு கொடுத்தற்கு நன்றி இறைவா! என்னும் அளவே தெரிகிறான். ஆனால், துன்பம் வரும் போது??? இந்த துன்பத்தை,எனக்கு தரும் அளவிற்கு நான் செய்த தவறு என்ன?நான் என்ன பாவம் புரிந்தேன்.நீயும் கடவுளா??? அவன் யாரோ நாம் வைத்த அடிமை என,கேள்விகளால் துளைப்பது.

இதனால்,தான் அவன் அமைதியாக கண்களுக்கு பயன்படாமல்    மறைந்திருக்கின்றானோ?? என்னவோ???

ஒரு பக்கம் அனைத்தையும் விட்டு,எங்காவது போய் விடலாம் வா!என்றழைத்தது வெளிமனம். எத்தனை நாள் தான் உண்மையை மறைப்பாய்?

அவன் நினைவு இல்லாமல், வாழ முடியுமா உன்னால்?? இது ஆழ்மனம்.

என்ன செய்வது??புரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

கிடைத்து விட்டாள், மீண்டும் எனக்கே எனக்கென என்னவள் வந்துவிட்டாள்.  இத்தனை நாள் என் காத்திருப்பு வீணாகவில்லை.சிறு குழந்தையென தத்தளித்தது ரஞ்சித்தின் மனம்.

வானில் இருந்த நிலவானது, அவன் கண்களில் புலப்பட்டது. எத்தனை நாள் எங்களின் காதலின் சாட்சியாய் நிலைத்தது இந்த வெண்ணிலா.

"நிலா! நீ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா? சத்தியமா என்னால முடியலை... அப்படியே சாகடிக்கிறீயே!"

"என்ன வழக்கத்துக்கு அதிகமாகவே வர்ணிக்கிற?"- புரியாமல் விழித்தாள் வெண்ணிலா.

"ஏ...நான் ஏன்டி உன்னை சொல்ல போறேன்?"

"பின்ன?"

"அதோ! வானத்துல வட்டமா தெரியுது பார் அதை சொன்னேன்.எவ்வளவு அழகா இருக்கு பாரேன்?ஐயோ! கொடுத்து வைத்த வானம்!"-அதற்கு மேல் உயிரோடு இருந்திருப்பானா அவன்?

"ஏ..அடிக்காதேடி வலிக்குது!"

"போடா! போ! நீ அந்த நிலாவையே கொஞ்சிட்டு இரு!"-அவள்,கோபமாக திரும்ப,அவள் கரத்தைப் பற்றி தன்னருகே இழுத்தான் ரஞ்சித்.

"ஏ...விடு!"

"அம்மாடி! என்னமா கோபப்படுற நீ?கோபத்துல கூட அழகா இருக்கடி!"

"ஐஸ் வைக்க வேண்டாம்! போ! உன் நிலா உனக்காக காத்துக்கிட்டு இருக்கு பார்!"

"இல்லையே! போ போன்னு துரத்திவிட்டுட்டு இருக்காளே!"

"..................."

"எனக்கு உன்னை விட அழகா யாரும் தெரிய மாட்டாங்க! உன்னை வெறுப்பேத்தி    பார்க்கணும்னு தோணுச்சு அதான்!"

".................."

"கோபமா?"

"ஆமா!"

"சரி அப்போ!"

"என்ன?"

"கண்ணை மூடு!"

"ஏன்?"

"ப்ளீஸ்..!"-கண்ணை மூடினாள்.

ரஞ்சித் அவள் கன்னங்களைப் பற்றி,அவள் இதழ்களில் முத்தமிட்டான். அதை எதிர்ப்பார்க்காதவள் நிலை தடுமாறினாள். நீண்ட நேர போராட்டத்திற்கு பின் அவனிடமிருந்து விடுதலை பெற்றாள்.

"ஃப்ராடு!"

"எப்படி அய்யாவோட சமாதானப்படுத்தும் டிரிக்?"

"உன்னை...!"

"பிடிக்கலைன்னா திருப்பிக் கொடுத்துடு!"

"எது?"

"அப்போ பிடிச்சிருக்கா?"

"உன்னை...ச்சீ போடா!"-

அவனிடமிருந்து தப்பிக்க, அவள் படாதப்பாடு பட வேண்டி வரும்!!!  மீண்டும் அவளோடு வாழ்ந்த நாட்கள் திரும்பி வந்தால்?? இந்நேரம் மனம் கனக்கவில்லை... ஆனந்தத்தில் துள்ளி குதித்தது. 

"...நிலா!"

"என்னடா?"

"ஏ...முக்கியமான வேலையா நான் ஊருக்கு போகணும்பா!"

"எதுக்கு?எந்த ஊர்?"

"டெல்லி!"

"ஏன்?"

"என் கூட பார்ட்னரா... ஒருத்தன் இருந்தான்ல!"

"ரமேஷ் சரியா?"

"ஆ...அவனே தான்!"

"புராஜெக்ட்டை விட்டுட்டான்.நான் தனியா போறேன்னு போயிட்டான்."

"அதுக்கு நீ ஏன் போற?"

"ஆ...என்னே விட்டு போகாத நண்பான்னு கெஞ்ச போறேன்.ஆளப்பாரு! இப்போ,நான் தான் போய் அதை கைடு பண்ணி,சப்மிட் பண்ணனும்."

"எப்போ வருவ?"

"3 மாசம் ஆகும் போல!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.