(Reading time: 11 - 21 minutes)

 

"ரி! பார்த்து போயிட்டு வா! ஆல் தி பெஸ்ட்!"

"தேங்க்ஸ்! நான் அத்தையும் மாமாவையும் முடிந்தால் அம்மாவை கூட வர சொல்றேன்!"

"ஏன்?"

"ஏன்னா??உன்னை தனியாலாம் விட முடியாது!"

"அமெரிக்காவுல இருக்கும் போது,நீ கூடவா இருந்த?"

"காரணத்தோட தான் செய்யுறேன்!"

"என்ன காரணம்?"

"அது..பொறுமையா சொல்றேன்.உனக்கு எதுவும் பிரச்சனை இல்லையே இங்கே?"

"இல்லையே!"

"சரி!"-விஷ்வா சென்றுவிட்டான்.

அவளுக்கு புரிந்தது.அவன், எதையோ கண்டறிந்து விட்டான்.

இனி என்ன நிகழ போகிறது?? நடக்கும் விளையாட்டில் வெல்லப் போவது யார்??? 

"த்தை காபி குடிக்கிறீங்களா?"-பரிதாபமாய் கேட்டாள் காவ்யா.

"வாம்மா! உன் இஷ்டத்துக்கு நீ நினைக்கும் போதெல்லாம் நீ கொடுக்கிறதை குடிக்கணுமா என்ன?"

"இல்லைங்க அத்தை!"

"எதிர்த்துப் பேசுற அளவுக்கு வந்துட்டியா நீ?"

"அத்தை!"

"உன்னை வேற என் பையனுக்கு பேசி,இன்னும் நீ எனக்கு மறுமகளா வந்தா என்ன பண்ணுவியோ?"-அந்நேரம் யுகேன் வந்தான்.

"கவி!"-அவள்,கண்களில் நீர்த்துளி திரண்டிருந்தது.

"திவ்யா கூப்பிடுறா பாரு! நீ போ!"

"சரிங்கண்ணா!"-காவ்யா சென்றப்பின்,

"இல்லைப்பா! அவ கொஞ்சம்!"

எனக்கு நேரமாயிடுச்சி நான் கிளம்புறேன் அத்தை!"-கூறிவிட்டு வெளியே வந்தவனை வழிமறித்தான் அஸ்வின்.

"யுகேன்!"

"................"

"அம்மா பேசினதை மனசுல வைத்து கொள்ளாதே!"

"................"

"சத்தியமா...அவங்களை எப்படி திருத்துவதுன்னே தெரியலை."

"முடிந்தால் காவ்யாவிற்கு ஆறுதல் சொல்லு! அவளுக்கு எப்போ தான் விடியப் போகுதோ!"-பெரு மூச்சை விடுத்து சென்றான் யுகேன்.

என்ன செய்வது என்றே புரியாமல் விழித்துக் கொண்டிருந்தான் அஸ்வின். விடியும் ஒரு காலம்,விடியும் கதிரொளியென உதிக்க இருக்கிறது...யாரால்??? அந்த ஒளியை ஏற்பார்களா இம்மனிதர்கள்?? 

பார்த்திபன் கனவு...

கனவுகள் நிறைந்த சோழத் தேசத்தின் மன்னனைக் குறித்த கதை... எழுத்தாளர் கல்கியின் அற்புதப் படைப்பினை படித்துக் கொண்டிருந்தாள் வெண்ணிலா. மனம் கதையில் இலயிக்கவில்லை... கதாபாத்திரத்தில் இலயித்தது... விக்கிரமன் என்னும் காவியத் தலைவனின் பால் சென்றது... அவனையே தன் நாயகனாக கொள்ள ஏங்கிய பேதையின் மனநிலையினை சித்தரிக்கும் ஆசிரியரின் சிறப்பு... இனி,இப்படியொரு நவீன காவியம் எழ வாய்ப்பிருக்கிறதா???என கேட்க தோன்றும்...! அக்கதாநாயகியின் நிலையில் தவித்துக் கொண்டிருந்தாள் வெண்ணிலா.

ஆனால்..சிறு மாற்றம் தலைவனின் மனதை கவர அல்ல...மனதிலிருந்து விலகவே தவித்தாள் இக்கன்னிகை. ஊரறிய,உலகறிய மணம் புரியவில்லை... யாக வேள்வியினை வளர்த்து, அதன் சாட்சியாக மாங்கல்யம் ஏற்கவில்லை. ஆனால்,திருமணம் முடிந்தது... அவ்விருவருக்கு மட்டும் தெரிந்தப்படி...

சாட்சிகள் தேவையில்லை, மனச்சாட்சி ஒன்றுப் போதும், இன்னல்களிலும்,இக்கட்டான நிலையிலும்,துன்பங்களிலும்,துயரங்களிலும், இன்பங்களிலும்,சர்வ உணர்ச்சிகளிலும் நீயே என் சரிபாதி என என்னை தனதாக்கி கொண்டான் அவன்.

அப்படி,என்னை நினைத்தவன் எப்படி??எப்படி??அவ்வார்த்தைகளை விட்டான்??

எப்படி நான் அவனுக்கு பாரமானேன்.?? இந்த நிமிடம் வரை அவனோட வாழ்ந்த வாழ்வு தித்திக்கின்றது.! வந்த அந்த நொடியோ மனதை தடுக்கின்றது...! கண்ணீருடன் அவர்கள் இருவருக்கும் இடையே நிகழ்ந்த நிகழ்வுகளை நினைவு கூர்ந்தாள்...!!!!

ராசரியாக 3 ஆண்டுகளுக்கு முன்பு.... பெங்களூரில் எம்.டி.படித்துக் கொண்டிருந்தாள் வெண்ணிலா. தனியாக வீடு எடுத்து தங்கியபடி,அவளுடன் அவளது இரு தோழிகள் உடன் இருந்தனர். சற்று கூர்ந்து கவனித்தால்... அவர்களில் ஒருத்தி அன்று கோவிலில் சந்தித்த ப்ரியாவாக இருப்பாள். மற்றொருத்தி சஞ்ஜனா. நிலாவை விட இருவரும் வயதில் மூத்தோர் என்பதால்,நிலா,அவர்களை அக்கா என்றழைப்பதே வழக்கம்!!!!!

"அக்கா!"

"என்ன நிலா!"-ப்ரியா.

"நான் நிவாஸ் சார் வீடு வரைக்கும் போயிட்டு வரேன்!"

"சரி!"

"நிவாஸ் சார் வீட்டுக்கு,நீ ஏன் போற?"-சஞ்சனாவின் பேச்சில் எப்போதும் இருபொருள் படும் படி அர்த்தம் இருக்கும்!"

"எக்ஸாம் பற்றின விவரம் வாங்க தான்!"

"சரி...சரி...போயிட்டு வா!"-அவர்களிடம் விடைப்பெற்று கொண்டு பேருந்தில் ஏறினாள்.

சிறிது நேரத்தில் பேருந்து புறப்பட்டது. ஜன்னல் அருகே அமர்ந்திருந்தவளின் ஒற்றை கீற்று முடியை காற்று கலைத்தது. அதை விலக்கும் போதும் தான் கவனித்தாள்...அவனை!

யாரை பார்க்கிறான் அவன்??

அவளை தான்!!!

முகத்தை திருப்பிக் கொண்டாள். சிறிது நேரத்தில் நடந்துனர் பயணச்சீட்டு எடுக்க கோரி வர, ஏதோ இடத்தைக் கூறி பயணச்சீட்டை எடுத்தாள். இப்போதும்,அவன் அவளை தான் பார்க்கிறான். சிறிது நேரத்தில் அவள் இறங்க வேண்டிய இடமும் வந்தது. பேருந்தை விட்டு இறங்கினாள். அவள் இறங்கிய இடத்திலே அவனும் இறங்கினான். வெண்ணிலாவிற்கு தர்மசங்கடமாய் போனது... பார்ப்பதற்கு வசீகரமாக, படித்தவன் போல் தெரிபவன் ஏன் நம்மை பின் தொடர்கிறான்?? அவள் நடந்தப்படி இருந்தாள்... அவனும்,பின் தொடர்ந்தான்.

இன்னும் வீடு வரவில்லையே என வீட்டின் மேல் கோபம் வந்தது அவளுக்கு..! அவன் சரியாக இருபது அடி தூரத்தில் அவளை பின் தொடர்ந்தான். ஒரு வழியாக வீடு வந்தது. இறைவனுக்கு நன்றி!!!

அவள் வேகமாக உள்ளே சென்றாள். அவனும்,அந்த வீட்டிற்கு அருகே வந்தான். சரியாக,அவன் கேட்டில் கை வைக்கும் போது,

"யாருடா அது?"-அது கடும் குரலில் கத்தியப்படி வந்தார் அந்த 50 வயது மதிக்கத்தக்க மனிதர். அவர் பின்னால் நிலா. அவரை பார்த்தவுடன்,

"சார்!"-என்று தன்னிரு கைகளையும் உயர தூக்கினான் அவன்.

"ரஞ்சித்! நீயா?"-என்றது அவரது பதில்.

"நான் தான் சார்!"-அவர்,சிரித்தப்படி நிலாவின் பக்கம் திரும்பி,

"இவனா?உன் பின்னாடி வந்திருப்பான்?இவன் என் அண்ணாவோட ஸ்டூடண்ட் மா!அவரை பார்க்க வந்திருப்பான்!"-ரஞ்சித் நிலாவை பார்த்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.