(Reading time: 11 - 21 minutes)

 

"மேடம் யாரு?"

"என் ஸ்டூண்ட்பா!எனக்கு பொண்ணு மாதிரி!அதான்,யாரோ பின்னாடி வராங்கன்னு சொன்னதும் கோபமா வந்து...!"

"அடிக்க வந்துட்டிங்க??என்ன நியாயம் சார் இது???மேடம்...! நான் ஏறின இடத்துல தான் நீங்களும் ஏறினீங்க?நான் இறங்குன இடத்துல தான் நீங்களும் இறங்குனீங்க?நீங்க வேகமா வரவே எனக்கு முன்னாடி வந்தீங்க?நான் வேடிக்கைப் பார்த்துட்டு வரவே உங்களுக்கு பின்னாடி வந்தேன்?இதுல,நான் எப்போங்க உங்களை ஃபாலோ பண்ணேன்??"

"ஸாரிங்க...பஸ்ல நீங்க என்னையே வேற பார்த்துட்டு இருந்தீங்க... அதான்!"

"சரியாப் போச்சுடா! நான் உங்களை பார்க்கலை.உங்க பக்கத்துல,பிங்க் கலர் ஃப்ராக் போட்டுட்டு இருந்தாளே அந்தச் சின்னப் பொண்ணை பார்த்தேன்!"-நிலாவிற்கு பதில் பேச முடியவில்லை.

"விடுப்பா!வா!"-அவளை காப்பாற்ற பேச்சை மாற்றினார் நிவாஸ்.அவர் மாணவி ஆயிற்றே!!!

வெண்ணிலாவும்,நிவாஸ் சாரும் ஒரு சோபாவில் அமர்ந்துக் கொண்டு தேர்வை பற்றி பேசினர். நிலாவிற்கு அதில் கவனம் செல்லவில்லை. ஒரு நல்லவனை தவறாக எண்ணி விட்டோமே!!! என்றே இருந்தது. இடையில் ஒரு முறை அவனைப் பார்த்தாள்.

அவனும்,அவன் ஆசிரியர் விக்ரனாத்தும் எதிரில் கணினியின் அருகே அமர்ந்திருந்தனர். அவர்,அவன் செவி மடல்களை செல்லமாய் எதற்கோ திருகினார். அவர் விட்டுவிடுங்க சார்! என கெஞ்சுவது தெரிந்தது.

மற்றொரு முறை அவள் எதிர்த்தாகமாக திரும்ப, அவன் அவளை கவனித்துக் கொண்டிருந்தான். இப்படியே இரவு ஆனது.

சிறிது நேரம் கழித்து....

"நான் கிளம்புறேன் சார்!"-விடைப்பெற்று கிளம்பினாள் வெண்ணிலா.

அந்நேரம் ரஞ்சித்தும் கிளம்ப,

"ரஞ்சித்!கொஞ்சம் தூரம் இவக்கூட போப்பா!"

"சார்!"

"நைட் ஆகி விட்டது அதான்!"

"சரிங்க சார்!மேடம் வரீங்களா?"-அவன் பார்வையில் ஒரு ஏளனம் இருந்தது!"

"வரேன் சார்!"-அவர்களிடம் இருந்து விடைப்பெற்று இருவரும் நடந்தனர்.

வீதியில் ஆள் அரவமே இல்லை. கனத்த மௌனம் நிலவியது.

ரஞ்சித்,அவளிடம் இருந்து அதிக இடைவேளை விட்டு நடந்தான். அவன்,ஏதேனும் ஒரு குழந்தைத்தனமான சேட்டை செய்தப்படி வந்தான். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நிலா,

"மன்னிச்சிடுங்க!"என்றாள்.

அவன் அவளைப் பார்த்துவிட்டு,சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தான்.

"என்னையா சொல்றீங்க?"

"ம்..அது,நிஜமா நான் உங்களை தப்பா நினைக்கணும்னு நினைக்கலை.அந்த இடத்துல பார்க்கும் போது,அப்படி தான் இருந்தது!"

"எப்படி?பொறுக்கி மாதிரியா?"

"மன்னிச்சிடுங்க!"

"அட விடுங்க!!!!மன்னிப்புக்கே போர் அடிச்சிடும்!எனி வே!ஐ ஆம் ரஞ்சித்!"-என்றான் கை குலுக்க கை நீட்டியப்படி,

அவள்,

"வெண்ணிலா!"-என்றப்படி வணக்கம் தெரிவித்தாள்.

"தமிழ்நாடா?"

"ஆமா!"

"பரவாயில்லை...இன்னும் வணக்கத்தை எல்லாம் மறக்காத பெண்களும் இருக்காங்களே!"

"...................."

"மெடிக்கலா?"

"ஆமா...!"

"ம்...!"

"நீங்க தப்பா எடுத்துக்கலை தானே!"

"அம்மா தாயே! மன்னிச்சிட்டேன்மா! போதுமா?"-பேசியப்படி, பேருந்து ஏறி வந்து விட்டிருந்தனர்.

"உங்க வீடு?"

"இதான்...!"-என்று வீட்டைக் காட்டினாள் நிலா.

"தோடா! பக்கத்துத் தெரு பொண்ணு!சரிங்க...நான் கிளம்புறேன்!"

"பார்த்துப் போயிட்டு வாங்க!"

"அக்கறை...???சக்கரை சாப்பிட்டா மாதிரி இருக்கு!

ஆனாலும்,நீங்க நம்ம ஊர் பொண்ணுன்னு அடிக்கடி நிரூபிக்கறீங்க! பிடிச்சிருக்கு!"-அவன் சிரித்தப்படி விடைப் பெற்றான்.

அன்றிரவு இரவு இருவருக்கும் தூக்கம் தொலைந்த இரவென்றால் அது ஆச்சரியப்படும்படி நிச்சயம் இருக்காது!!!! இதுதான் காதலிப்பவர்களை மட்டும் அல்ல!!!அவர்களுடன் இருப்பவர் தூக்கத்தையும் கெடுக்க துவங்கும் நிமிடம்...!!!!

பலர் உறக்கம் கெட ஆயத்தமாகி கொண்டிருக்கிறது....

தொடரும்

Episode # 05

Episode # 07

{kunena_discuss:821}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.