(Reading time: 8 - 16 minutes)

14. ஷைரந்தரி - சகி

ந்த ஷைரந்தரி என்னும் கதையானது,எதை நோக்கி அமைந்தது??

ஷைரந்தரி என்னும் நாமம் ஏற்ற கன்னிகைக்காகவா?

சகோதர பாசத்திற்கு இலக்கணமாய் திகழ்பவனைச் சுற்றியா?

shairanthari

காதலினால்,ஆட்கொண்டு தவிப்பவனுக்காகவா?

எத்தீங்கும் ஆற்றாது, தண்டனை           பெற்றவளுக்காகவா?

தன்னை நம்பியவர்களை காக்க முடியாமல் தவிக்கும் இறைவனை சூழ்ந்தா?

சற்று...சிந்தித்துப் பார்த்தால்???

இது...நமது வாழ்வின் பல கேள்விகளுக்கும் விடைத்தரும் கதையாகவும் அமைகிறது...

புரியவில்லை எனில், கதையின் இறுதி அத்தியாயம் வரை காத்திருங்கள்...

"யுதீஷ்!"-மறைந்தப்படியே யுதீஷ்ட்ரனை அழைத்தாள் ஷைரந்தரி.

"என்ன?"

"எங்கே போறீங்க?"

"வெளியே போறேன்!"

"ஐயோ! இங்கே வாங்க!"

"எதுக்கு?"

"வாங்க சொல்றேன்!"-அவன் வந்தான்.

"பக்கத்து சீட்டு காலியா இருக்கு,ஒளிந்துக் கோங்க!"

"ஏ...என்னாச்சு உனக்கு?"

"உங்களுக்கு விஷயமே தெரியாதா?"

"என்ன விஷயம்?"-ஷைரந்தரி திடீரென மஞ்சள் நிற பொடியை எடுத்து அவள் கன்னத்தில் பூசினாள்.

"இதான்.ஹேப்பி ஹோலி!"-என்று நகைத்தாள்.

"மச்சான்! மாட்டினியா?"-அர்ஜீன் கிண்டலடித்தான். அவன்,முகத்திலும் பொடிகள்.

"காலையில இருந்து, ஒருத்தரை விடலை இந்தப் பொண்ணு!"

"ஹே...எல்லாரும் மாட்டிக்கிட்டீங்க."

"மச்சான்!"-அர்ஜீனும், யுதீஷ்ட்ரனும் மாறி மாறி பார்த்துக் கொண்டனர்.

"என்ன?"-ஷைரந்தரி.

"பிடிடா அவளை!"-அர்ஜீன் கத்த,"சிவா!"-என்று அலறியப்படி ஓடினாள் ஷைரந்தரி.

எதிரே,அசோக் வர,அவன் பின்னால் ஒளிந்துக் கொண்டாள்.

"அசோக் காப்பாத்துங்க! உங்க தம்பி என் மேல கலர் பவுடர் பூச பார்க்கிறார்!"-அசோக் செய்வதறியாது நின்றான்.யுதீஷ்ட்ரனும் அமைதியாக நின்றான்.

பின்,எதையோ யோசித்தவள்.

"என் மேல கலர் பூசணும்னா!முதல்ல...யுதீஷ்,அசோக் மேல கலர் பூசணும்!"-என்றாள்.

இரு துருவமாய் நின்ற சகோதர் இருவரும் கற்சிலையென நின்றனர்.

யுதீஷ் அசோக்கைப் பார்த்தான்.

அசோக் அங்கிருந்து விலகி செல்ல எத்தானிக்க,

"ஒரு நிமிஷம்!"-என்று தடுத்தான் யுதீஷ்.

அர்ஜீனிடமிருந்த கலர் பொடியை எடுத்து, அசோக்கின் கன்னத்தில் தேய்த்தான்.

இதை யார் தான் எதிர்ப்பார்த்திருப்பர்??

ஷைரந்தரியின் விழிகள் விரிந்தன.அந்நேரம் அர்ஜீனின் கைப்பேசி ஒலிக்க,

'நம்மை போன்ற நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை.தன்னைப் போல என்னை எண்ணும் நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை.தம்பி,உந்தன் நெஞ்சம் தானே அண்ணன் என்றும் வாழும் இல்லம்!'என பாடியது அது.

"ஆஹா! சிட்சுவேஷன் சாங்யா!"-அர்ஜீன்.

"உனக்கு மாட்டுது பார்!"-யுதீஷ்,திரும்பி ஷைரந்தரியை பார்த்தான்.

"ஒத்துக்கிறேன்.பூசிக்கோங்க!"-ஷைரந்தரி கண்களை மூடிக் கொண்டாள்.

அவன் சிரித்தவாரே,அவள் கன்னத்தில் பொடியினை பூசினான்.

முதன் முதலாய் எதிர்ப்பார்த்து பதிந்த வேற்று ஆடவனின் ஸ்பரிசம்,அவளை நிலை தடுமாற வைத்தது.

முதன் முதலாய் காதலோடு தீண்டப்பட்ட ஓவியமாய் அமைந்தது யுதீஷ்ட்ரனுக்கு!!!!

ம்மூக்கு பிரச்சனை அதிகமாயிட்டே போகுது!

நிச்சயமா...அந்த வினய் சும்மா இருக்க மாட்டான்!

இந்த பிரச்சனை எல்லாம் தீர,ஒரே வழி கட்டுல இருக்கிற அந்த அம்மனோட கட்டை உடைக்கணும்.என்ன பண்றது??-அமைதியாக,

நடந்துக் கொண்டிருந்தான் சிவா.

"வழி இருக்கு சிவா!"-தனது பாதையை நிறுத்தியவன், திரும்பினான்.

நீலக்கண்டச்சாரியார் நின்றிருந்தார்.

"ஆச்சாரியாரே!"

"உன் மனசுல,ஓடுற கேள்விகளுக்கு பதில் நிச்சயமா இருக்கு மகனே!"

"என்ன அது?"

"வர சித்திரா பௌணர்மி 1800 வருஷத்துக்கு ஒரு முறை வர அபூர்வமான பௌணர்மி.அன்னிக்கு,தீய சக்திகள் அதிக பலமா இருக்கும்.அன்னிக்கு, ஷைரந்தரி தேவி அந்த பௌணர்மியில தான்,தன் உயிரை தியாகம் பண்ணாங்க!அதுக்குள்ள... அம்மனை சுற்றி இருக்கிற கட்டை உடைச்சே ஆகணும்.இல்லனா,உன் தங்கச்சி உயிரை அந்த சங்கரனே நினைத்தாலும்,காப்பாற்ற முடியாது!"

"என்ன சொல்றீங்க?"

"ஆமா...சித்ரா பௌணர்மிக்கு 10 நாள் முன்னாடி,பஞ்சாக்ஷர திதி வருது! ஷைரந்தரி பிறப்பெடுத்த அதே திதி!அன்னிக்கு,அந்த அம்மன் தனது பலத்தை முழுசா பயன்படுத்தி,தனது சக்திகளை ஆதி சிவனார் மந்திரத்தை தானே உச்சரிப்பா! அப்போ, அவளோட முழு சக்தியும் வெளிவரும்.அந்த நேரம் அந்தக் கட்டை உடைச்சா,மட்டும் தான் அவள் கட்டை லேசில் உடைக்க முடியும்!"

"அது யாரால் முடியும்?சொல்லுங்க...!"

"மனதில் எந்த சலனமும் இல்லாமல்,உயிருக்கு பயப்படாமல்,அவளோட விடுதலை மட்டுமே குறிக்கோளாய் வைத்து,பரிசுத்தமா இருக்கிறவங்களால் தான் அதை செய்ய முடியும்!"

"அது,என்னால முடியுமா?"

"அது எப்படிப்பா எனக்கு தெரியும்??உனக்கு இன்னும் இரண்டு நாள்ல நிச்சயம் வேற நடக்க போகுது!பஞ்சாக்ஷர திதி இன்னும் 48 நாள்ல வர போகுது!"

"எனக்கு,என் தங்கச்சி முக்ககியம் அவளை தவிர்த்து வேற எந்த விஷயமும் எனக்கு முக்கியமில்லை, தேவையானதுமில்லை."

"இறைவனோட சித்தத்துல,ஷைரந்தரியை காக்கவே படைக்கப்பட்டவன் நீ!!!நிச்சயமா...அந்த மகேஷ்வரன் தன் மகளுக்கு எதுவும் ஆக விட மாட்டார்!கவலைப்படாதே மகனே!"-ஆழ்ந்த பெருமூச்சு ஒன்று சிவாவின் இதழ்களில் இருந்து வெளி வந்தது.

"ண்ணி!"-எதையோ ஆழமாக சிந்தித்தப்படி அமர்ந்திருந்த பார்வதியை உசுப்பினாள் ஷைரந்தரி.

"என்னங்க?"

"இந்த என்னங்க எல்லாம் சிவாவை கூப்பிடுங்க! நான் உங்களுக்கு ஷைருவாவே இருக்கேன்."

"ஆரம்பிச்சிட்டீங்களா?"

"வேற வேலை??கிண்டல் பண்ண அவனும் கிடைக்க மாட்றான்.அதான்,உங்களை கிண்டல் பண்ணலாம்னு வந்தேன்!"

"போங்க ஷைரு!"

"அடேய்யப்பா! வெட்கத்தைப் பார்! சத்தியமா சொல்றேன்...

சிவா,இதுல,தான் கவுந்திருப்பான்!"

"சும்மா இருங்க ஷைரு!"

"ஆனாலும்,இவ்வளவு வெட்கம் ஆகாது அண்ணி! என் அண்ணன் பாவம் இல்லையா?"

"ஐயோ...போங்க!"-ஏதோ புரிந்தவளாய் அங்கிருந்து ஓடிவிட்டாள் பார்வதி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.