(Reading time: 8 - 16 minutes)

 

சிரித்துக் கொண்டிருந்த ஷைரந்தரியின் கண்களில் அவள் பட்டாள்.யார்?அச்சிறுமி...

அவள்,ஷைரந்தரியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

கீழே! இறங்கி தோட்டத்திற்கு வந்தாள் ஷைரந்தரி.

"பாப்பா! யார்மா நீ?"-அவள்,திடீரென ஷைரந்தரியை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதாள்.

"என்னம்மா ஆச்சு?"

"கல்பனா அக்கா,உங்ககிட்ட மன்னிப்பு கேட்டாங்க!"

"கல்பனாவா?யாரும்மா அது?ஏன்மா அழுகிற?"

"உங்களுக்கு அது தெரியாதுக்கா!"

"சரி..சரி...அழாதேம்மா!"

"அவளை மன்னிப்பீங்களா??"

"சரி...சரி..நீ அழாதேம்மா!"

-அந்நேரம்,'டேய் சிவா என்னடா கோலம் இது?'-என்று குரல் கேட்டு திரும்பிவள்,மீண்டும் திரும்ப,அச்சிறுமியை காணவில்லை.

ஷைரந்தரிக்கு குழப்பமாய் போனது.

இது பிரமையோ! என்று எண்ணிக் கொண்டு சென்றாள்.

சிவா,அங்கே வெறும் காலில்,கழுத்தில் மாலையோடும்,காவி நிற துண்டோடும் அவன் தந்தையோடு வாக்குவாதம் நடத்திக் கொண்டிருந்தான்.

"சிவா! என்னடா இது?"

"விரதம்?"

"என்னடா விரதம்?"

"ஆஞ்சநேயருக்கு!"

"ஏ...லூசு! என்னடா உளர்ற?"

"ஒரு முக்கியமான விரதம்.48 நாளுக்கு மாலை போட்டிருப்பேன்!"

"சிவா,இன்னும் 2 நாள்ல உனக்கு நிச்சயதார்த்தம்டா!"

"எனக்கு அதைவிட,இந்த விரதம் முக்கியம்!"-கூறிவிட்டு,அமைதியாக உள்ளே போய்விட்டான்.

"ஏன்பா?உன் புள்ள இப்படியெல்லாம் பண்றான்?"-அவர்,பதில் கூற முடியாமல் நின்றார்.

ஷைரந்தரி திரும்பிய போது,பார்வதி அதை கவனித்துக்        கொண்டிருப்பதை உணர்ந்தாள்.

"அண்ணி!"-அவள்,அழுதுக் கொண்டே சென்றுவிட்டாள்.

ஷைரந்தரிக்கு தர்ம சங்கடமாய் போனது, பல்வேறு குழப்பங்களுக்கு  ஆளானாள்.

ன்றிரவு....

மாடியில்,தனிமையில் நின்றிருந்தாள் ஷைரந்தரி.

"அம்மூ!"-சிவா.

"..............."

"ஏன்மா சாப்பிடலை?"

"அதைப் பற்றி,நீ கவலைப்பட வேண்டிய அவசியமில்லை."

"அம்மூ?"

"உயிரோட தான் இருக்கேன்.நீ பண்ற வேலை எல்லாம் பார்த்துட்டு,கையை கட்டிட்டு அமைதியாக தான் இருக்கேன்!"

"டேய்! ஏன்டா இப்படி பேசுற?"

"நீ எல்லாம் ஒரு மனுஷனாடா?உன்னை நினைச்சிட்டு,ஆயிரம் கனவுகளை மனசுல சுமந்துட்டு,ஒரு பொண்ணு இருக்கா! நீ உன் இஷ்டத்துக்கு ஆடுற?"-புரிந்துவிட்டது அவனுக்கு.

"நான் எது பண்ணாலும், அதுல,ஒரு காரணம் இருக்கும்!"

"இருக்கும்.நீங்க எவ்வளவு பெரிய ஆளு??உங்களை எதிர்த்து நான் கேள்வி கேட்க முடியுமா?நான் எங்கே?நீங்க எங்கே?"

"இப்படி எல்லாம் பேசுறதுக்கு,என்னை கொன்னுடு! உன்னால, முடியாதுன்னா சொல்லிடு,அதையும் நானே பண்றேன்!"

"..............."

"எனக்கு இந்த உலகத்துல முக்கியமான கடமை இருக்கு! என் உயிரை விட மேலா,நான் நேசிக்கிற விஷயத்தை பாதுகாக்கணும்.அதுக்கு,அப்பறம் தான் மற்றது எல்லாம்!"

"அண்ணியை நினைத்து பாருடா!"

"நான் உனக்கு ஒரு சத்தியம் பண்றேன்.எனக்கு வாழ்க்கைத் துணையா ஒருத்தி வருவான்னா அது பார்வதியை தவிர வேற யாரும் கிடையாது! எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு! நான் அதை முடிக்கணும். எல்லாமே முடிந்த பிறகு,நான் உன் விருப்பத்துக்கு நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன்!"

"......................."

"சத்தியமா கேட்கிறேன்."

"பார்க்கிறேன்.மவனே! நீ மறுபடியும்,எதாவது, வில்லங்கமா பண்ண??உன்னை கொன்னுடுவேன்!"

"நீ சொன்னா கரெக்ட்டா தான் இருக்கும்!"

"போங்க!ஆஞ்சநேயருக்கு விரதம் இருக்கீங்கல்ல?நடுங்குற குளிர்ல தூங்கு!"

"எல்லாம் சித்திரை மாசம் பிறக்குற வரைக்கும் தான்!"

"அது பிறந்த பிறகு பார்க்கலாம்!!!

மீண்டும் பிரவேசித்தாள் கல்பனா அந்த ஆலயத்துள்.

இந்நேரம் அவள் கண்ணில் கருணை மட்டுமே தெரிந்தது.

"தப்பு பண்ணிட்டேன்மா! ஷைரந்தரி மேல குறை இருந்தது நினைச்சிட்டேன்.

அசோக் அண்ணா மேல பழி சுமத்துனது தான் என் கோபத்துக்கு      காரணமாயிடுச்சி!!

ஆனா,ஷைரந்தரி அவளுக்கு உண்மையிலே நல்ல மனசு தான்!அவளும்...இதுல,ஒரு காரணம்னு நினைத்தேனே!

ரொம்ப பெரிய பாவம் பண்ணேன்.

கங்கை நதி கங்கை நதி தான்.

கானல் நீர் கானல் நீர் தான்!

இனி...அவளுக்கு என்னால எந்த கெட்டதும் நடக்காதும்மா.என் நிலைமை அவளுக்கு வரக் கூடாது.

ஷைரந்தரியை நீ தான் காப்பாத்தணும்!"-உடல் சிலிர்த்தது ஷைரந்தரிக்கு.

ஜன்னல் வழியே வந்து பார்த்தாள்.

மீண்டும் அதே முகம் போர்த்திய மனிதன்.

இப்போது,அவளுக்கு பயம் வரவில்லை.சினமே தலை தூக்கியது.

வேகமாக கீழே இறங்கி சென்றாள்.

அவள்,இறங்கி செல்வதற்குள் அவன் சென்று விட்டிருந்தான்.

ஷைரந்தரியின் கண்களில் கனல் சூழ்ந்திருந்தது.

அது எல்லாம் வல்ல அவளது,கண்களின் பிரதிபலிப்பு அல்லவா??

எத்தனைக் காலம் தான் அவளும் அதர்மத்தின் ஆட்டத்தை கண்டு அமைதி காப்பாள்??

இனி...

அந்த அதர்மத்தின் ஆட்டம் அடங்க போகிறதல்லவா???

இனி...கவலை கொள்ள அவசியமில்லை.

உலகினை ஆளும் நாயகி இங்கு நமக்கு          பாத்திரமானவர்களை காக்க எழுகிறாள்...

தொடரும்

Go to Episode # 13

Go to Episode # 15

{kunena_discuss:751}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.