(Reading time: 14 - 27 minutes)

 

ட்ரெயினர் சொன்னதில் இது மட்டுமே அவளுக்கு போதுமானதாய் இருந்தது.அடுத்த வந்த நாட்களில் அவனை சந்திக்க வேண்டும் என்பதற்காகவே புது விதமாய் தன்னை அலங்கரித்து கொண்டு மலர்ந்த முகமாய் தினமும் ஆபீஸ் சென்று வந்தாள் மது.

ஆனால் இரண்டு மாதம் நடக்கும் அந்த ட்ரெயினிங் இல் அவனை இந்த ஒன்றரை மதமாக காண முடியாமல் போனது அவளுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. ட்ரெயினிங் முடிய பத்து நாட்களே இருந்தன.அவனை சந்திப்பதை எண்ணி எண்ணியே தூக்கம் தொலைத்தாள்.

வார விடுமுறைகளில் அருகில் இருந்த பார்க்கில் நடப்பதை வழக்கமாக கொண்டிருந்தாள்.அங்கு வரும் குழந்தைகளை காண்கையில் தனிமையில் இருப்பது போன்ற ஒரு உணர்வே வராது.

அப்படி தான் இன்றும் வந்திருந்தாள்.ரொம்ப நேரம் நடந்ததால் அருகில் இருந்த கல்பெஞ்சில் அமர்ந்தவள் சுற்றி நோட்டம் விட்டு கொண்டிருக்க இவளுக்கு நேர் எதிரில் பார்க்கின் இன்னொரு பகுதியில் இருந்த ஒரு பெஞ்சில் ஆதி அமர்ந்து இருந்தான்.

வேகவேகமாக அவனிடம் சென்று நின்று மூச்சை இழுத்து விட்டவள் அவனை பார்த்து பேசும் முன்னே, அவன் எழுந்து இவளை கடந்து செல்வதற்காக இவள் முகம் பார்த்து "எக்ஸ்க்யூஸ் மீ" எனவும் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் அதில் எந்த வித மாற்றமும் இல்லாதது கண்டு ஏமாந்து போனாள்.

'அவனுக்கு என்னை நியாபகம் இல்லையா? என்னை சந்தித்ததையே மறந்து விட்டானோ? இவள் மட்டும் தான் தினமும் அவனை பார்க்க தவம் இருந்தாளா? கிட்ட தட்ட நான்கு வருடங்கள் அவன் நினைவு வரும் போதெல்லாம் எதனை கற்பனைகள்'

அவள் முகம் வெளுத்து அப்படியே திகைத்து நிற்பதை அவளுக்கு பக்க வாட்டில் நின்று ஒரு குறுஞ்சிரிப்புடன் பார்த்திருந்தான் ஆதி.அவள் இயல்பு நிலைக்கு வராதது கண்டு அவள் முகத்தின் முன் தன் கையை ஆட்ட அப்போதும் அவள் அவனை பார்க்கவில்லை.

அவள் முன் வந்து நின்று சற்றே குனிந்தவன், அவள் விழி நீர் கண்டு பதறி போய்,

 "மது அழறீங்களா?" , என கேட்க,

சட்டென்று நிமிர்ந்தவளின் முகத்தில் கோடி மின்னலின் பிரகாசம். கண்களில் மட்டும் நீர் நிற்கவில்லை.

"உ..உங்களுக்கு என்ன ஞாபகம் இருக்கா?"

"ம்ம்ம்ம் நல்ல இருக்கே நீங்க மது... மதுமிதா.. பிளஸ் டூ படிக்கும் போது சென்னைக்கு வந்தீங்க,உங்க அண்ணா வீட்டில் தங்கி இருந்தப்போ டேன்ஸ் கிளாஸ் வந்தீங்க, அதுக்கு அப்புறம் நாலு வருஷம் ஆள் அட்ரஸ் இல்ல, இப்போ நான் வேலை பார்க்கிற ஆபிஸ்லேயே என் டிபார்ட்மண்ட்ல அதுவும் என் மேனேஜர் கிட்ட தான் ட்ரெயினிங் அட்டெண்ட் பண்றீங்க, நெக்ஸ்ட் வீக் ட்ரெயினிங் முடியுது"

".....??!!!"

"மேடம், டேன்ஸ் ல மட்டும் தான் சுபெர்னு நினைச்சேன், படிப்புல கூடவா? பேட்ச் டாப்பர் நு சொன்னாங்களே?! உண்மையா?!"

"ம்ம்ம் ஆமா.. ரொம்ப பிடிச்சு எடுத்த கோர்ஸ் அதான்"

"என்ன நியாபகம் இருக்கா? நான் தான் ஆதி உன்கிட்ட அரை வாங்குனனே?"

Related Readஎன் உயிர்சக்தி! - 03

"இப்போ எதுக்கு அதெல்லாம்? சாரி அன்னைக்கு"

"ஹோல்ட் ஆன்.. சும்மா சொன்னேன் போதுமா, அப்புறம் நீ என்ன விட நாலு வருஷம் சின்ன பொண்ணு உன்ன நீ வா போன்னே கூப்பிடவ? நான் எங்க அக்காவையே டி போட்டு தான் கூப்பிடுவேன், இட்ஸ் டிபீகல்ட் பர மீ டு கிவ் ரெஸ்பெக்ட் டு பீபில் யங்கர் தன் மீ"

"நோ ப்ராப்ளம்"

"ஹ்ம்ம்.. இங்க தான உன் ஹாஸ்டல் இருக்கு, அதுக்கு பக்கத்துல இருக்கா பிளாட் ல தான் நான் இருக்கேன்,நிறைய தடவை பார்ப்பேன் ஆனா பேச டைம் இருக்காது" 

"ம்ம்ம் ஆமா"

தினமும் அவளை பார்த்ததும், ட்ரெயினிங் செண்டர் சென்று அவளுக்காக காத்திருந்து தூரத்தில் நின்று பார்த்து விட்டு திரும்பியதும். அவளை பற்றிய அணைத்து விவரங்களும் சேர்த்ததும். அவள் மீது புது நேசம் கொண்டதும், அவள் ட்ரெயினிங் முடியும் வரை காத்திருந்து இப்போது எதற்சையாக சந்திப்பது போல் அவளை சந்தித்ததும் நினைவில் வந்து போக, மேன்மையை அவளை பார்த்து புன்னகைத்தான்.

இதை அறியாத மது அவனை கண்ட மகிழ்ச்சியில் புன்னகைத்தாள். வீடு, சொந்தம், படிப்பு, விருப்பம்,நண்பர்கள் என பேச்சு வளர்ந்தது நாளுக்கு நாள். அவர்கள் நட்பும் மனதில் மறைந்திருந்த காதலும் தான்.

 ரு வாரத்தில் பயிற்சி மொத்தமும் முடிந்து போக, மது மனதில் கவலை எட்டி பார்த்தது. பயிற்சி பெங்களூரில் இருந்தது. ஆனால் பணியும் அங்கேயே அமையும் என சொல்ல முடியாது. இங்கே ப்ராஜெக்ட் இல்லை என்றால் கிளை கம்பெனிகளுக்கு அனுப்பி விடுவார்கள்.

அதே கவலையை அவள் ஆதியிடம் சொல்ல அவனோ பெரிதாக அக்கறை கொண்ட மாதிரி தெரியவில்லை. அடுத்த நாள் அவளை சென்னை கிளையில் இன்னும் ஒரு வாரத்தில் சேருமாறு ட்ரெயினர் கூறவும் ரூமிற்கு வந்து அவள் பொருட்களை பேக் செய்ய ஆரம்பித்தாள்.

மாலை பெற்றோருக்கு விஷயத்தை தெரிவித்து விட்டு காத்திருந்தவளுக்கு ஆதியின் அழைப்பு வந்தது.

"சொல்லுங்க"

"என்ன ஹலோ கூட சொல்லாம, சொல்லுங்க நு சொல்ற?"

"இல்ல அது ஒன்னுல, நான் சென்னை போறேன், எனக்கு போஸ்டிங் அங்க தான்?"

"ஒ கங்க்ராட்ஸ், அப்போ இனி ஜாலி தான், உங்க அண்ணா வீட்லயே இருப்ப, உன் ப்ரெண்ட் அந்த பொண்ணு கூட அங்க தான இருக்கா?"

"ம்ம்ம்"

"என்னம்மா ஆச்சு?"

"இல்ல ஒண்ணுமில்லை"

"ம்ம்ம் சரி.. அப்போ நீ கிளம்பு, நான் முடிஞ்சா வந்து பார்கிறேன் நீ போறதுக்குள்ள"

"ம்ம்ம்"

"பை பை.. ஆல் தி பெஸ்ட்"

"ம்ம்ம் பை"

'அவ்வளவு தான் எல்லாம் முடிந்து விட்டது. மறுபடியும் அவனை பிரிந்து வாழ போகிறேன். எனக்கு மட்டும் ஏன் இப்படி  எல்லாம் நடக்குது கடவுளே ச்சே' என கடவுளையும் தன் விதியையும் நொந்து கொண்டே சென்னை சென்றாள்.

புது ஆபிசில் சேர்ந்த இரண்டாம் நாள் வழக்கம் போல் அவள் இடத்தில அமர்ந்து சீனியர் சொன்னதை குறிப்பு எடுத்து கொண்டிருந்தவள்

"ஹாய் மது" என்று குரலை கேட்டு தூக்கி வாரி போட்டு நிமிர,

கவர்ந்து இழுக்கும் புன்னகையுடன் நின்றிருந்தான் ஆதி.

அவள் எதுவும் பேசாமல் அப்படியே பார்த்திருக்க, அவள் சீனியர் வசுந்தரா,

"ஹலோ ஆதி, ஆதித்யன் ப்ரம் பெங்களூர் ரைட்?"

"எஸ் மிஸ்.??"

"வசுந்தரா"

"ஒ வசுந்தரா, ம்ம் நீங்களும் சீனியர் சிஸ்டம் எஞ்சினியர் தான?"

"ம்ம்ம் யெஹ், நான், அப்புறம் கார்த்தி,ஸ்ரீஜன் அப்புறம் மது நேத்து தான் ஜாயின் பண்ணங்க, இப்போ நீங்களும் எங்க ப்ராஜெக்ட் கு வந்துடீங்க"

"ஹ்ம்ம் குட், இது புது ப்ராஜெக்ட் நு சொன்னாங்களே? உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு?"

"நீங்க பெங்களூர் ல இருந்து வந்த ஒன் வீக் கேப் ல ஓரளவுக்கு கத்துகிட்டோம்"

"இஸ் இட்? வெரி ஷார்ப் தான் போங்க.."

"தேங்க்ஸ்"

"அண்ட் மது நீங்க எப்டி இருக்கீங்க?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.