03. என் உயிர்சக்தி! - நீலா
'நானா எதுவும் சொல்லவும் மாட்டேன்! எதையும் கேட்கவும் மாட்டேன்!' - ராம்.
என்ன சொல்ல மாட்டாய்? என்ன கேட்க மாட்டாய் ராம்?
குரல் கேட்டு திரும்பிய குழலீயும் ராமும் திகைத்து நின்றனர். டேவிட் நின்றிருந்தான்.

சுதாரித்த ராம் இல்ல டேவிட் நீங்க பேசிக்கிட்டு இருந்தது பத்திதான். இங்க பேசினத இங்கியே விட்ருவோம்னு சொல்லின்டிருந்தேன்.
இதை என்ன நம்ப சொல்லறியா ராம்??
நிஜமாதான் அண்ணா- குழலீ
நீ எதையோ மறைக்கிறாப்பல தெரியுதே?
இல்ல னா...
சரி மா. ஆனா எதாவது பிரச்சனை னா என்கிட்ட சொல்லு. எனக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுமா.
'சரி னா. இந்தாங்க' என்று தண்ணீர் டம்ளரை நீட்டினாள். ராம் இந்த வெங்காயத்தை கொஞ்சம் உரித்து குடு.
சரி குழலீ நான் அப்புறமா வந்து பேசறேன் – ராம்
'என்ன பிரச்சனை டா?' என்றபடி வந்தாள் டீனா. குழலீ தலைமுடியை இழுத்து கொண்டை போட்டுக்கொண்டிருந்தாள். எவ்வளவு தடவை சொல்றது உனக்கு இப்படி கொண்டை போடாதனு?
'என்ன பிரச்சனை?? ஒன்னுமில்லையே! கதை அடிச்சது போதும். கொஞ்சம் வந்து உதவி பண்ணு!' என்றபடி புடவையை இழுத்து இடுப்பில் சொறுகினாள்.
'அப்படியே பாட்டி மாதிரி செய்ய வேண்டியது. ஏன் குழலீ எப்போ பார்த்தாலும் இப்படி ஒரு காதலர்கள் சிக்கலில் போய் மாட்டிக்கிற? இது எத்தனையாவது ஜோடி? ம்ம்... என்ன நடந்தாலும் சரி இவங்களை சேர்த்து வைக்காம விடப்போறதில்லை இல்லை??'
'ஹி..ஹி...எப்படிதான் வந்து உங்ககிட்டலாம் நான் சிக்கறேனு எனக்கே தெரியலை டீனா! எதோ நீங்க துன்பத்தில இருக்கறீங்களே உதவி பண்ணலாம் வந்தா கடைசியில என் மண்டையைதான் உருட்டிறீங்க... ஆனா நீங்க மட்டும் கடைசியா ஒன்னு சேர்ந்துறீங்க... நான் வில்லி இல்லைனா வேண்டாதவளா ஆயிடுறேன்!'
ஏய் அத்தென்ன நீங்க னு சொல்லற? நான் என்ன பண்ணேன்?
'ஹிஹி....யாழ் ஆனந்த் கணக்கிட்டா மொத்தம் ஐந்து ஜோடி! உங்களையும் சேர்த்துத்தான் மிஸ்ஸஸ் டீனா டேவிட். இதுவரைக்கும் காதல் ஜோடிகளை சேர்த்து வைக்கனும் நான் எதுவும் செய்ததில்லை... ஏதோ என்னால் முடிந்த உதவி பண்ணறேன். கடைசியில்ல நான் தான் என்னமோ சேர்த்து வைத்த மாதிரி ஆயிட்டுது’.
‘உங்க காதல் அதிலிருந்த அன்பு உண்மையானதா இருந்தது. அதனால் உங்க காதல் அத்தோடு நிக்காமல் கல்யாணமா மாரிட்டு. அந்த ஆழ்ந்த நேசம் இருக்கிற இடத்தில தான் நான் கொஞ்சமா உதவி செய்யறேன். ராமனுக்கு அணில் செய்த அளவில தான் செய்தேன். அவ்வளவுதான். இதில் என்னோட பங்கு எதுவுமே இல்லை!'
கைகள் தங்களது வேலையை செவ்வனே செய்தன. வாயும் கூடத்தான்!
'அப்படி இல்லையோனு எனக்கு தோனுது? எனக்கு தெரியாம ஏதாவது காதல் தோல்வினு இருக்கா டீ?'
உங்களையேல்லாம் பார்த்த பின்னும் காதலில் விழுந்தால் நான் பெரிய முட்டாள் டீனா!
ஏய்! என்ன நீ ரொம்ப அதிகமா பேசற? பார் கூடிய சீக்கிரமே நீயும் காதலில் விழப்போற... நாங்க பட்ட அவஸ்தையேல்லாம் நீயும் அனுபவிப்ப!
ம்ம்ம்...
என்ன டீ ம்ம்ம்??
இப்போ பார்த்துக்கலாம் டியர். ஆனா காதல், அன்பு இது மேல எல்லாம் நம்பிக்கை போயிடுச்சு. இதுக்கு மேல இதை பத்தி பேச வேண்டாமே!
அப்ப இன்னுமொரு ஜோடி வந்து உதவி கேட்டா செய்வியா?
தெரியலை!
'சரி. நான் போய் டேபிள் அரேஞ்சு பண்ணறேன்' என்று திரும்பியவள் அப்படியே நின்றுவிட்டாள்.
என்ன ஆச்சு டீனா? என்று வாசல் புறம் திரும்பினாள்.
ம்ம் சொல்லுங்க பிரபு!
'இல்லை உங்களுக்கு கால் வந்துச்சு. போன் கொடுக்கலாம் னு வந்தேன். இந்தாங்க' என்ற நீட்டினான்.
'தேங்கஸ்!' அதற்குள் மறுபடியும் கால் வந்தது. டிஸ்ப்ளேயரை பார்த்தவுடன் உற்சாகமாக 'டீனா அடுக்களையை பார்த்துக்கோ.. இதோ வர்ரேன்'. தேங்கஸ் பிரபு' என்றபடி வெளியே நடந்தாள்.
நவம்பர் மாத குளிர் காற்று இதயம் வரை சில்லிட்டது. பனிப்பொழிவு தொடங்க இருந்தது. எதையும் பொருட்படுத்தாமல் இடுப்பில் சொருகியப் புடவையுடன் நடந்தாள். அவளை பின் தொடர்ந்தான் பிரபு!
வணக்கம் ஐயா! எப்படி இருக்கீங்க? இருங்க நானே கூப்பிடறேன்!
கூப்பிட்டாள்...'ம்ம் சொல்லுங்க ஐயா! நான் நல்லா இருக்கேன்! எல்லோரும் எப்படி இருக்காங்க?'
.....
ஐயா என்னை மன்னிக்கனும். நான் தவறு செய்துடேனோனு தோணுது. இன்னும் இருபது நாள்ல இதுக்கு ஒரு தீர்வு கிடைக்கனும். அப்படி இல்லைனா கிருஷ்ணாவோட எதிர்காலத்துக்கு அவனோட அம்...இல்லை இல்லை நான் எந்த வகையிலும் தடையா இருக்க மாட்டேன்! நான் என்ன செய்யட்டும் ஐயா? நீங்க கணவரோட வந்தா தான் கிருஷ்ணாவை கொடுப்பேன் னு சொல்லிடீங்க?
....,
கண்டிப்பா அவனுக்கு நல்லது நடக்கிறதை நான் தடுக்க மாட்டேன். அப்புறம் ஐயா... அவன் பேச ஆரம்பிச்சுட்டானா?
....
அவனை பத்திரமா பாரத்துக்கோங்க! இன்னும் இரண்டு நாளில் நான் அங்க இருப்பேன்!' என்று இணைப்பை துண்டித்தாள்.
யோசனையுடன் திரும்பியவள் எதிரில் நின்றிருந்த பிரபுவின் மேல் மோதி நின்றாள்.
சாரி.. சாரி.. மிஸ்டர் பிரபு! ஐ ம் எக்ஸ்ட்ரீம்லீ சாரி. நான் ஏதோ தெரியாம இடுச்சிட்டேன். சாரி!
ஒகே ஒகே கூல்டவுன்! நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்... ம்ம்ம்... உங்க உதவியை நாடி வந்திருக்கேன்! அதற்கு முன்னாடி.. பிரண்ட்ஸ்??? என்று கையை நீட்டினான்.
அவன் தோள்களுக்குத்தான் இவள் தலை இருந்தது. நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள்.
அந்த பெரிய கருவிழிகள், அதில் எப்போதும் இருக்கும் அந்த சிரிப்பு, காந்தம். அறிவின் அடையாளமாய் முகத்தில் ஒரு முதிர்ச்சி, முப்பது வயதிலும் இருபத்தைந்து வயது இளைஞன் போல தோற்றம், வலமிருந்து இடப்புறமாக ஒதுக்கப்பட்ட அடர்த்தியான சிகை! அடர்த்தியான அளவான மீசை! சின்னத்தம்பி பிரபு போல கன்னத்தில் குழி.. அதுவும் வலது கன்னத்தில் மட்டும்! எப்போதும் போல் அந்த கட்டுமஸ்தான ஜிமில் சேதுக்கப்பட்ட அந்த கைகள் உடல்வாகு அதற்கேற்ப கச்சிதமான உடை!
இவை எல்லாவற்றையும் தாண்டி வெகு சிலர் மட்டுமே அரியக்கூடிய அந்த திமிர்... அந்த attitude! அது மட்டும் அப்படியே! எல்லாம் அவள் மனக்கண்ணில் பட்டது! மனது இவை எல்லாவற்றையும் எண்ணினாலும் வாய்மொழியை விடவில்லை.
ஒதுங்கியவாரே.. 'கண்டிப்பா பேசலாம் மிஸ்டர் பிரபு. டின்னர் முடிச்சிட்டு பேசலாமே?!' என்று கூறிவிட்டு அவன் பதிலுக்குக்கூட நிற்காமல் சென்றுவிட்டாள்.
'எல்லாம் சரிதான்! ஆனால் இந்த திமிர் மட்டும்... அப்படியே இருக்கு! பெரிய உலக அழகினு நினைப்போ?! நானா போய் பேசறேன்.. அப்பக்கூட பேச மாட்டாறாளே! கை நீட்டீ நிக்கறேன் பிரண்ட்ஸ் னு ஒரு courtesy காக கைக்குடுத்தா என்னவாம்! எல்லாம் திமிர்... இவ்வளவு attitude ஒரு பொன்னுக்கு இருக்கக்கூடாது. என்னை யாருனே தெரியாத மாதிரியே நடிக்க வேண்டியது! பார்த்துக்குறேன் உம்முனாமுஞ்சி... முட்டக்கண்ணி! என்கிட்ட இருந்து நீ தப்பிக்க முடியாது. கடைசியில் உன்கிட்ட உன் உதவிக்காக நிக்க வேண்டியதா போச்சு... ச்ச்ச...எவ்வளவு நாளைக்குனு நானும் பார்க்கிறேன்' என்று மனதில் பேசிக்கொண்டே சென்றான்.