(Reading time: 8 - 15 minutes)

14. நெஞ்சமெல்லாம் காதல் - ப்ரியா

டுத்த அரை மணி நேரத்தில் எக்கு தப்பாக மாட்டியிருந்தான் வருண்! ஆராவும் தன்யாவும் தங்கள் கை வரிசையை அவனிடம் காட்ட தொடங்கியிருந்தனர்!!

'என்ன சொல்வது உண்மையை சொல்லலாமா வேண்டாமா? ஆரா மட்டும் என்றால் பரவாயில்லை என்று சொல்லியிருக்கலாமே, கூட இவர்கள் வேறு.. ச்சே இந்த ரகு இன்னமும் என்ன பண்றான்' என்று உள்ளுக்குள் ஒரு பட்டிமன்றமே நடக்க, வெளியே இறுகிய முகத்தோடு கடலை வெறித்து கொண்டிருந்தான்.

அப்போது சரியாக ரகு அங்கு வர, அவனும் மாட்ட போவதை எண்ணி உள்ளுர சிரித்து கொண்டு வரவேற்றனர் அண்ணியர் இருவரும்.

Nenjamellam kathal

"வா ரகு"

"என்ன அண்ணி அப்படி ஒரு அவசரம், அதும் ஆரா அந்நிய வேற கூட கூட்டிட்டு வந்துருகிங்க, அப்புறம் இவரு வருண் தான? இவரும் இருக்காரு?"

'அடபாவி என்னமா நடிக்கிற டா நண்பா' என மனதுக்குள் வியந்தான் வருண்.

"டேய் நல்லவனே எல்லாம் எங்களுக்கு தெரியும் இப்படி உட்காரு, வர சொல்லிட்டு சும்மா விடவா நாங்க இருக்கோம்" , தன்யா.

"பேச்சு ஒரு டைப்பா இருக்கே, சரி இல்லையே.. நண்பா என்ன டா ஆச்சு எதாவது தப்பு தப்பா பண்ணிட்டு என்ன போட்டு கொடுத்துட்டியா?"

"ப்ச் பேசாம இரு டா நானே நொந்து நூடுல்ஸ் ஆகி இருக்கேன்" என மற்ற இருவர் பக்கமும் பார்த்த படி அவன் சொல்ல, ஆரா,

"நான் நேரவே கேட்கறேன், ஆதியும் மதுவும் லவ் பண்ணாங்களா?"

"அஆங்.. வாட்?!"

இதை எதிர்பாராத ரகு கொஞ்சமே திணறி போனான்.

"வாட்?!" , மது.

"நீங்களும் அத்தானும் லவ் பண்ணிங்கலானு கேட்டேன்"

"அ..அது..அதெல்லாம் இ..."

"மது, பொய் சொல்லாம சொல்லு, ஓரளவுக்கு எனக்கு எல்லாம் புரிஞ்சுடுச்சு"

"ஸ்வேதா?!"

"ம்ம்.. அதுக்கு முன்னாடி நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லிடறேன் அப்புறம் நீ தைரியமா சொல்லு. ஒரு வேலை நீ அத்தான லவ் பண்ணிருந்தா எனக்கு சந்தோஷம் தான் உங்களுக்கு நடுவுல நான் வர மாட்டேன், அப்படி இல்லைனாலும் அத்தானுக்கு வேற பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணி வைக்கணும்"

"என்னது?! வேற பொண்ணா? நீ என்ன சொல்ற?"

"ஆமா எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல"

"வாட் ரப்பிஷ், சும்மா எதெதையோ கற்பனை பண்ணிக்கிட்டு உளறாத ஸ்வேதா, வா நம்ம கிளம்பலாம், நிச்சயம் ஆனா பொண்ணு இப்போ போயி இஷ்டம் இல்ல அது இது நு ச்சே ச்சே.. யாராவது கேட்டா கல்யாணமே நின்னு போய்டும், எனக்கு தெரியும் உனக்கு இதுல எவ்வளவு இஷ்டம்ன்னு, அதை.. அதை நான் உன் முகத்துல பார்த்திருக்கேன்"

"ம்ம்ம். நீ சொல்றது சரி தான்.. பார்த்திருப்ப, ஆனா இப்போ பார்க்க முடியுதா?"

மதுவின் பார்வை கூரானது.ஸ்வேதாவின் முகம் வேறு ஏதோ செய்தியை சொல்ல பக்கென்றது மதுவிற்கு. என்னால் தான் எனக்காக தான் இந்த லூசு பெண் ஐயோ என்று தவித்தது மனது.

"ஸ்வேதா, என்ன ஆச்சு ஒழுங்கா சொல்லு"

"ம்ம்ம் சொல்றேன். வருண் என்ன ரொம்ப வருஷமா லவ் பண்றான், இப்போ இந்த ரெண்டு நாளா தான்.. நா.. நானும் அவன லவ் பண்றேன்" போட்டு உடைத்தாள் ஸ்வேதா. 

"சொல்லுடா என்ன பேந்த பேந்த முழிக்கிற"

"அண்ணி.. அது.."

"இவனுக சொல்ல மாட்டானுக, உன் தம்பிக்கு போன் போட்டு அவனையும் ஒரு வார்த்தை கேளு ஆரா அவனும் பிடி கொடுக்கலைனா நம்ம அத்தை மாமா கிட்ட.."

"ஐயோ அண்ணி" என இருவரும் ஒன்றாய் அலற, ஆராவும் தன்யாவும் வெற்றி புன்னகையை பரிமாறி கொண்டனர்.

"முதல்லே நானே சொல்லிடறேன் அக்கா" , வருண்.

"ம்ம்ம் அப்படி வா வழிக்கு" , ஆரா.

"நான் ஸ்வேதாவ சின்ன வயசுல இருந்தே லவ் பண்றேன், அவன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும், உங்களுக்கு தான் நம்ம வீடு நிலைமை தெரியுமே அதுனால தான்"

"ஒ அதான் சார் இவ்வவளவு நாளைக்கு அப்புறம் எங்க வீட்டுக்கு திடீர் என்ட்ரி கொடுக்க காரணாமா?"

"அது என்ன மேட்டர் ஆரா" , தன்யா.

"நாங்க சின்ன பசங்கள இருந்தப்போ நடந்த ப்ரிச்சனை, எங்க அம்மாவும் சரண் மாமாவும் கூட பிறந்தவங்க இல்லை.. அவங்க என்னையும் வருணும் மாதிரி தான் கசின்ஸ், வருண் ஓட அப்பா தான் எங்க அம்மாவோட அண்ணன்.. சொத்து ப்ரிச்சன்னைல ஸ்டார்ட் ஆகி ஒரு ஒரு விஷயமா மனஸ்தாபம் வந்திடுச்சு"

"நரேன் (வருண் அப்பா) மாமா கொஞ்சம் பிடிவாதக்காரர், கோவமும் வரும் ஆனா ரொம்ப நல்ல மனுஷன். ஒரு நாள் ஏதோ கோவத்துல அம்மாவை அவரு அடிக்க வர அதை பார்த்த சரண் மாமா அவசரத்துல நரேன் மாமவ அடிச்சுட்டார், அப்படியே கைகலப்பு ஆகி உங்க ரெண்டு குடும்பத்து கூடையும் ஒட்டு உறவே வேண்டாம்ன்னு நரேன் மாமா போய்ட்டாங்க, இது தான் எங்க பாண்டவர் பூமி கதை.. ம்ம்ம்"

"அடேங்கப்பா பெரிய கதை தான், அப்போ மாம்ஸ் ரெண்டு பேரையும் வழிக்கு கொண்டு வந்துட்ட ப்ராப்ளம் சால்வ்ட் அப்படி தானே நண்பா" , ரகு.

"தம்பி நீ நினைக்குற மாதிரி அது ரொம்ப ஈசி இல்லப்பா" , ஆரா.

"ம்ம்ம்.. எவ்வளவோ பண்றோம் இதை பண்ண மாட்டோமா? நண்பனுக்காக" , ரகு.

"அவ்வளவு நல்லவனா டா நீ?!" , வருண்.

"அங்க தான் மாப்பிள நீ தப்பு பண்ற உன் ரூட் கிளியர் ஆனா தானவே என் அம்மு ரூட்டும் கிளியர் ஆகும், அப்படியே என் ரூட்டும்" என்று ரகு அசட்டு சிரிப்பு சிரிக்க..

"ஹே அது என்ன" என்று கோரசாக மூவரும் கத்தினர்.

"என் அம்மு ரூட் ஆதிய கல்யணம் பண்ணிகிறது, அதை தான் கண்டு பிடிசுட்டிங்களே"

"ம்ம்ம் அப்போ உன் ரூட்?!" , தன்யா.

"அண்ணி நிஜமாவே தெரியாதா சரி போங்க, மேகா தான் நம்ம ரூட்"

ஒரு வழியாக உண்மை தெரிந்து விட, மகிழ்ச்சியுடன் அடுத்து என்ன என நால்வரும் திட்ட வகுக்க ஆயுதமானனர்.

"அண்ணி ஸ்டாப், எங்க அண்ணன் இல்லாம நான் எந்த பிளானும் போட  மாட்டேன், அவரையும் கூப்பிடலாம் வெயிட்"

  ஆதிக்கு வருண் போன் பண்ண, எடுத்த அவன் அவசரமாக,

"நான் ஊட்டி ல இருக்கேன் அப்புறம் பேசறேன்" என்று மட்டும் சொல்லிவிட்டு வைத்து விட்டான்.

அவன் அதை மூவரிடமும் சொல்ல எதற்கு இப்போது ஊட்டி போனான் என்று குழம்பி போயினர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.