(Reading time: 8 - 15 minutes)

 

ட்டி..

தன் முன்னே நடப்பதை உணர முடியாமல், உணர்ந்தாலும் நம்ப முடியாமல் பார்த்து கொண்டிருந்தான் ஆதி.

ஏனெனில் அந்த பொடனிகள் கார்டனில் ஜோடியாக நடந்து சென்று கொண்டிருந்த பிரகாஷ் மற்றும் ஒரு பெண்!!

யாரிவள், சரி நண்பர்களாக இருப்பார்கள் போலும், என்று தான் முதலில் எண்ணினான்.

பேச்சின் நடுவே அப்பெண் அவன் கைகளை பிடித்து கொண்டு விழிகளில் காதலுடன் ஏதோ பேசவும் அதை அவன் அமைதியாக கேட்கவும் குழம்பி போனான்.

மது உடன் தான் திருமணம் என ஒற்றை காலில் கொக்கு போல் தவம் இருந்து விட்டு இங்கு இந்த பெண்ணுடன் என்ன உறவு?

எப்படியோ நமக்கு தான் மது கிடைப்பாள் என்ற எண்ணம் மேலும் வலு பெற்றாலும், இவன் ஏன் நடிக்கிறான் என்ற ஆதங்கம் ஆதிக்கு.

அவர்கள் அருகில் அவன் அறியாமல் சென்று ஒரு புதரின் பின் பூக்களை பார்ப்பவன் போல காட்டி கொண்டு அவர்கள் பேசுவதை கேட்டான்.

"ஐ லவ் யூ சோ மச் பிரகாஷ், நீ இத்தன நாளுக்கு அப்புறம் எனக்கு கிடைச்சதே பெருசு, இனியும் உன்னை விட்டு என்னால இருக்க முடியாது, நீ சொன்ன கரணம் எல்லாம் போதும், சென்னை போய் நீ கவனிச்ச அந்த முக்கிய வேலையும் வேண்டாம்..அப்படி என்ன என்னை விட முக்கியமான வேலை இருந்திடும் உனக்கு, ப்ளீஸ் டா இங்கவே என் கூட இருந்திடென்"

"ஸ்ஸ்ஸ் சஞ்சு, எதுக்கு வொரி பண்ணிக்கிற, நீ இவ்ளோ பீல் பண்ண அவசியமே இல்லமா நான் இங்க வர ட்ரை பண்றேன் டா, வா வீட்டுக்கு போய் பேசலாம்" என வெகு அமைதியாக அவன் பேசி கொண்டே நகர.

இவ்வளவு நாள் ஆதிக்கு இருந்த பொறுமை எல்லாம் பறந்து போனது.

அவன் குறுக்கே சென்று அவன் சட்டையை பற்றி " ஏன்டா நாயே உனக்கு எல்லாம் எப்பவும் நல்ல புத்தியே வரதா? என் மது மனச கெடுத்த இப்போ இந்த பொண்ணா? அங்கே உன்னையே நம்பிட்டு அவ கல்யாணத்துக்கு ரெடி ஆகிடு இருக்க, இங்க வேற ஒரு பொண்ணு கூட கூத்தடிச்சிட்டு இருக்க, ச்சே என்ன ஜென்மம் டா நீ எல்லாம் நிச்சயம் பண்றது ஒருத்தி, லவ் பண்றனு சுத்தறதுக்கு ஒருத்தி  கல்யணம் யார் கூட டா நடக்கும், அதுக்கு தனி ஆள் இருக்கா?"

"என்ன உனக்கு நிச்சயம் ஆகிடுச்சா?"

"சஞ்சு... அது"

"என்னடா அது இது.. ஆமா சிஸ்டர் அவனுக்கு என்கேஜ்மன்ட் முடிஞ்சுது, அதும் இவன் பிராடு பண்ணி நடந்தது தான்"

"ஏன் பிரகாஷ் என்கிட்ட சொல்லல ச்சே இனி என் முகத்துல முழிக்காத" என்று சஞ்சனா வேகமாக சென்று விட, பின்னே செல்ல எத்தனித்த பிரகாஷை மறித்து,

"என்னடா அப்படியே ஓடலாம்னு பார்கறியா?"

"ஷட்  அப்  ஆதி, திஸ் இச் யுவர் லிமிட், என்ன இவ்வளவு சொல்றியே நீ மட்டும் ரொம்ப ஒழுங்கா, இங்க லவ் பண்ற மாதிரி நாடகம் போட மது, நிச்சயம் பண்ண அப்பாவி அத்தை பொண்ணு, இன்னும் பாரின்ல எத்தன பேரோ? நீ கல்யாணம் யாரா பண்ணிக்குவ? ஒரு வேலை மதுவ நான் கல்யாணம் பண்ணிகளான அவளை நீ கல்யாணம் பண்ணிட்டு, உன் அத்தை பொண்ண கூட வெச்சு..."

"என்னடா சொன்ன" ஆதியின் கை பிரகாஷின் கன்னத்தில் இறங்கியிருந்தது.

பிரகாஷும் பதிலுக்கு அடிக்க அதற்குள் அங்கு இருந்தவர்கள் ஓடி வந்து இருவரையும் பிரித்து அனுப்பி வைத்தனர்.

காரை மின்னலை தோற்கடிக்கும் வேகத்துடன் செலுத்தினான் ஆதி.எப்படியும் இரவுக்குள் சென்னை சென்று மதுவை பார்த்து பேச வேண்டும்.

"ன்ன ஸ்வேதா சொல்ற? அப்போ ஆதி?!"

"அதான் நீ இருக்கியே" என்று அவள் கண் சிமிட்டி சிரிக்க, மது மலைத்து போனாள்.

"இது எப்படி உனக்கு தெரியும்?!"

"ஹேய் அப்போ ஒத்துகர தான? அப்பாட என்ன நாடகம் டி நீங்க சொல்லலான எங்களுக்கு தெரியாத.. அதான் ரெண்டு பேரோட முகத்திலையும் எழுதி ஒட்டியிருக்கே"

"ம்ம்ம் சரி விடு"

"அதெப்படி?! சொல்லு எப்போ எப்படி?!"

"அதை இன்னொரு நாள் சொல்றேனே"

"நோ நெவர்.. இப்போ இங்கயே"

"ம்ம்ம் சொல்றேன்"

சில வருடங்களுக்கு முன்பு.....

ஹலோ மை டியர்ஸ்.. இன்னும் ஒரு சில எபிசொட்-ல 'நெஞ்சமெல்லாம் காதல்’ முடிய போகுது.. அடுத்த எபிசொட் ல பிளாஷ் பேக் பார்ட் முடிஞ்சுடும்.. அதுக்கு தான் இந்த எபி ஷார்ட்டா முடிச்சேன்.. உங்களோட கருத்துக்கள் மற்றும் ஆதரவிற்கு மிக்க நன்றி... ;) ஒரு அளவுக்கு உங்களுக்கு விடைகள் கிடைச்சுருகும்ன்னு  நம்பறேன்.. பை பை 

காதல் பெருகும்… 

Episode # 13

Episode # 15

{kunena_discuss:725}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.