(Reading time: 21 - 42 minutes)

04. என் உயிர்சக்தி! - நீலா

னக்காக பிறந்தவள் எங்கோ இருக்க

உன்தன் நினைவு என்னை நித்தம் உருக்க

நெஞ்சத்தில் நீ இருந்து வலி தந்தாலும்

En Uyirsakthi

சுகமாய்தான் உணர்கிறேன்!

ருக்மிணியின் கண்ணனாய்

குந்தவையின் வந்தியத்தேவனாய்

உன்னை பார்த்திருந்தாலும்

எனக்கு நீயாய் சுயமாய்

உன்னுடன் வாழும் நொடி மட்டும் ஏனோ

கலையும் கனவாய்!

                                        - கவிதை குந்தவை

காலையிலேயே கவிதை குந்தவையின் வலைப்பதிவை படித்துக்கொண்டிருந்தான் டேவிட். இந்த பெண்ணுக்கு என்ன ஆச்சு என்று யோசித்துக்கொண்டிருந்தான்.

வரவேற்பறையின் சோபாவில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தாள் குழலீ. நேரம் காலை எட்டரை என்றது கடிகாரம். டேவிட் மட்டும் எழுந்திருந்தான். யாழினி அவள் அறையில் சுருண்டு படுத்திருந்தாள் ஆனால் உறங்கவில்லை!  அங்கே வெற்றியோ பிரபுவோ இல்லை.

யாழினியின் அருகில் அமர்தான்.

'டேய் யாழ்..'

...

ஒன்னு தூங்கு இல்ல எழுந்து உட்கார். இப்படியும் இல்லாம அப்படியும் இல்லாம ஏன்டா உன்ன இப்படி வருத்திக்கற?

...

யாழ் இங்க அண்ணாவ பாரு...

வீங்கிய கண்களோடு அவனை நேர்கண் சந்தித்தாள். அடக்கி அடக்கி வைத்தது எல்லாம் வேடித்தது. டேவிட் மடி சாய்ந்து அழத்தொடங்கினாள். ஒன்றுமே  பேசவில்லை யாழினி. சிறிது நேர மௌனத்தின் பின்..

'டேவிட் நான் இப்போ நியூயார்க் போறேன்'.

இப்போ எதுக்கு?

இல்ல.. நான் இருக்கமாட்டேன். குழலீ விழிக்கறதுக்குள்ள நான் கிளம்பனும். ஏன் எதுக்குனு கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணாதீங்க! ப்ளீஸ்!

எப்படி போகப்போற?

ட்ரேயின்... 2 hr தானே ஆகும். நானே பார்த்துபேன்.

காப்பி???

ம்ம்.. கொஞ்சம் ஸ்ட்ராங்கா!

நீ ரெடியாகு.. இதோ வர்ரேன்!

அடுத்த பத்தாவது நிமிடம், நியூயார்க் இரயில் பிடிக்க கிளம்பிவிட்டாள் யாழினி!

அப்போதுதான் எழுந்த குழலீ யாழினியை தேடினாள்.

இல்ல டா அவ நியூயார்க் கிளம்பிட்டா.

என்னது? வெற்றிக்கு தெரியுமா? பிரபு நியூயார்க் தானே? இவ இப்போ அங்கே எதற்கு போறா?

பத்து நிமிடத்தில் காலை கடன்களை முடித்துக்கொண்டு கையில் காப்பியுடன் யாழினியை அழைத்தாள்.

நான்கு ரிங்க் போனவுடன் அழைப்பை ஏற்றாள்.

'சொல்லு மதி..'

நான் குழலீ. பொறு கால்லை கட் பண்ணாத. என் போன்ல இருந்து கூப்பிட்டா எடுக்கமாட்டனு தான் அவ மோபைல்ல கூப்பிட்டேன்.

நீ பேசறத கேட்க நான் தயாரா இல்ல. நான் கட் பண்ணறேன்.

வையட். நீ என்ன வேண்ணா நினைச்சிக்கோ யாழ். என் தரப்பு வாதத்தையும் கேட்டு அப்புறம் முடிவு பண்ணு.

சரி சொல்லு.

நீ இப்போ எதுக்கு அங்க போறனு எனக்கு தெரியாது. ஆனா ஒன்னு நல்லா தெரியும் வெற்றி உன்ன உயிரா காதலிக்கிறான். அவன் தேவதை நீதானு நினைக்கிறான். உன்னோட கண்டிஷன் எல்லாத்தையும் ஒத்துகிட்டான். உன் மாடலிங் லட்சியம் நிறைவேற ஒத்துகிட்டான்.

‘... சொல்லு!’

ஆனா பிரபு நீ நினைக்கற மாதிரி கடையாது. நீ வெற்றிய தான் காதலிக்கனும் கல்யாணம் பண்ணிக்கனும் நான் சொல்லலை. ஆனா பிரபு உன்னை காதலிக்கறாரானு தெரியலை. அவரைபத்தி இன்னும் தெரிஞ்சிக்கிட்டு முடிவு பண்ணு.

உனக்கு என்ன தெரியும் அவரைபத்தி?

தெரியும். நீ தெரிஞ்சிக்க வேண்டியது இது மட்டும் தான். He has an affair already. He is in love with his colleague Priya working in Chennai.

சரி. அப்புறம்?

என்ன அப்புறம்? அவரு வேற ஒரு பெண்ணை காதலிக்கிறார்.

இவ்வளவு தான் தெரியுமா?

யாழ்???

ப்ரியாவுக்கும் பிரபுவுக்கும் பிரேக்அப் ஆயிட்டது தெரியல? வீட்டுல பார்த்த பெண்ணும் ரிஜக்ட் செய்தது தெரியல? அதற்கு காரணம் அவர் அப்பா போட்ட சாலேஞ்சு னு தெரியல? அதை ஜெயிக்க இவர் போட்ட கண்டிஷன் னு தெரியல? இதற்கு எல்லாம் நான் ஒத்துகிட்டது தெரியல? அப்புறம் என்ன தான் தெரியும் உனக்கு? நான் நல்லா இருக்கறது உனக்கு சுத்தமா பிடிக்கல! நீ தான் காதல், கல்யாணம் எதுவும் பண்ணாம இருந்தா அடுத்தவங்க செய்தா உனக்கு ஏன் பொறுக்கலையா? ம்ம் இதுக்கேல்லாம் ஒரு தகுதி வேணும்! எங்க உனக்கு? அதான் பொறாமை! பிரபு இன்னைக்கு நைட் 11.50 ப்ளைட்ல சென்னை போறான். அதுக்குள்ள அவன்கிட்ட நான் பேசப்போறேன். So just mind your own business! Better don't come in my way!' என்று கத்திவிட்டு இணைப்பை துண்டித்தாள்.

இந்தப்பக்கம் குழலீக்கு யாழினி பற்றிய சிந்தனையில் இருந்து பிரபுவிற்கு தாவியது. பல்வேறு சிந்தனைகள் யோசித்தவாறு தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்தாள். அமைதியாக அவளை பார்த்துக் கொண்டிருந்தான் டேவிட். வெகு நேரம் இப்படியே இருந்ததால் அவள் எண்ணங்களை கலைக்க முற்பட்டான்.

குழல் ... குழலீ...

ஆங்ங் சொல்லு டேவிட்!

பேக்கிங் முடிச்சிட்டுயா? எப்போ ப்ளைட் ?

எல்லாம் முடிச்சாசு. என்ன பெரிசா எதுவும் இல்ல. இன்னும் இருபது நாளில் இங்க இருக்க போறேன். முக்கியமான திங்கஸ் மட்டும்தான். ஈவ்னிங் 6.50 லுவ்தான்ஸா. Frankfurt break. ஆனா எக்ஸாம் நினைச்சா கொஞ்சம் பயமா இருக்கு.

என்னடா நீ பயப்படலாமா? தைரியமா இரு. நான் ஒன்னு கேட்டா தப்பா நினைச்சிக்க மாட்டியே?

என்ன னா இது... சொல்லுங்க!

உனக்கு பிரபுவை முன்னமே தெரியுமா?

நான் என்ன பதில் சொல்லுவேனு என்ன சொல்லனும் னு நினைக்கிறீங்க?

....

சொல்லுங்க னா!

உனக்கு அவனை முன்னமே தெரியும்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.