(Reading time: 7 - 14 minutes)

11. உன்னிடம் மயங்குகிறேன்..! சொல்ல தான் தயங்குகிறேன்..! - ஸ்வேதா

காஷிற்கு மகிழ்ச்சியின் அர்த்தம் இது தானோ என்பது போல் இருந்தது. தனிமை அதுவும் அவன் மனம் கவர்ந்த தேவதையுடன் தனிமை, எதிர்க்காலத்தை பற்றிய கனவுகள், நிஷாவின் ஆசை, அவனுடைய இலக்கு, அதற்க்கான விவாதம், உடனே சமாதானமாகும் சண்டை எல்லாம் சேர்ந்து வேறு உலகில் சஞ்சரிப்பது போல் இருந்தான்.

அர்ஜுன் கவிதாவுடன் புறப்பட்டான். கவிதாவுள் குதுகலமும் பதட்டமும் சரி பாதி விகிதத்தில் மையம் கொண்டது.  முதல் தனியார் விமான பயணம், முதல் தொழில் பற்றிய விவாதம், வெளியூர் பயணம், கூடவே இதுவெல்லாம் அர்ஜுனுடன்.

"பாப்ரிக்ஸ் டீல் நல்லதாக முடிய வேண்டும் " கவிதா

உன்னிடம் மயங்குகிறேன்..!சொல்ல தான் தயங்குகிறேன்..!

"அதெல்லாம் முடிந்து விடும்" தீர்கமாக அர்ஜுன் சாந்தமாக சொன்னான்.

கவிதா "ஹப்பா சிங்கம் இன்னும் வெளியே வரல " என்றாள் முணுமுணுப்பாக.

அவள் பேசியது காதில் விழ அர்ஜுன் மென்னகையுடன் திரும்பி பார்த்தான். ஏனோ கவிதாவிற்கு படபடப்பாகி போனது.

விமானம் கிளம்பியதும் கவிதாவால் அவளின் மகிழ்ச்சியை உற்சாகத்தை வெளிகாட்டாமல் இருக்க முடியவில்லை. "சார் சார்" என்று அழைத்து அது எப்படி இது எப்படி என்று கவிதா சந்தேகம் கேட்ட படி பேசிக்கொண்டே இருந்தாள்.

அர்ஜூனால் புரிந்து கொள்ள முடிந்தது கவிதாவின் உற்சாகத்தை.அவளின் செயல்களை இரசித்தபடியே இருந்தவன் முகத்தில் புன்னகை குடிகொண்டது.

"சார், ஏன் சார் சிரிச்சிட்டே இருக்கீங்க?" கவிதா எரிச்சலுடன்

"என்னமோ எனக்கு நீ கலர் கலர் பலூன்களை கையில் வைத்துக்கொண்டு சிரிக்கும் சின்ன பெண் போல தெரிகிறாய்" என்றான்.

"சார் நான் இருபத்தி நான்கு வயது யுவதி"

"அப்போ லீகல் பார்மாலிடிஸ் பிரச்சனை இல்லை " என்றான் கிண்டலாக

"ஏன் எனக்கு கம்பெனி ஆரம்பிக்க ஹெல்ப் செய்ய போறீங்களா, லீகல் பற்றியெல்லாம் பேசறீங்க "

"செய்துட்டா போச்சு" என்றான் தளர்வாக.

கவிதா இன்னமும் உற்சாகமானாள். "சார் சார் செய்வீங்க தானே !!," என்று கேட்டு கொண்டே கற்பனை செய்தவை பற்றியெல்லாம் பேச தொடங்கினாள்.

அர்ஜுன் , " போதும் ! போதும் ! எனக்கு ஒரு விஷயத்துல ஓகே பண்ணு நான் உனக்கு எல்லா விஷயத்திற்கும் ஓகே சொல்கிறேன் " என்றான் அழுத்தமாக ஏற்ற இறக்கத்தோடு.

இவனிற்கு எதிலுமே வணிகம் தான். இப்படி இருப்பதனால் தான் இப்படி அதிவேகமாக வளர்ந்திருக்கிறான் தொழிலில் என்று எண்ணிக்கொண்டே பெரிதாக என்ன கேட்க போகிறான் சீக்கிரம் என் வீட்டை விட்டு எந்த பிரச்சனையும் செய்யாமல் போ என்பான் என்று முடிவு செய்து "சரி " என்றாள்.

நிஷாவின் தந்தை இன்னுமும் இரண்டு வாரத்தில் சென்னை வருவதாக வேணிம்மாவிற்கு தகவல் வந்ததும் அவரும்  உற்சாகம் ஆனார். வேணிம்மாவின் செகரடிரி பொறுமை என்று சொல்ல அவர் "அட போப்பா என் பேரன்கள் திருமண விஷயம் இனி நான் ஓய்ந்து போய் அமர்ந்திருக்கலாமா என்ன " என்று காலேண்டர் நோக்கி சென்றார் நல்ல நாள் பார்க்க.

நிஷா பதட்டமானாள் அவளிற்கு தந்தையிடமிருந்து அழைப்பு வர "அம்மா நிஷா குட்டி நான் அடுத்த வாரம் முழுக்க சென்னையில் தான் இருப்பேன், ஒரு வார இறுதியில் வந்து பார்கிறேன் " என்றார்.

விவரம் தெரிந்ததும் நிஷாவும் ஆகாஷும் முடிவு செய்தனர். இரண்டு நாட்களில் ஆரம்பிக்கும் கண்காட்சியில் புகைப்படங்களை காட்சிக்கு வைத்து விட்டு சென்னைக்கு கிளம்பி விட வேண்டும் என்று. அங்கே நிஷாவின் தந்தையை ஏதாவது ரெஸ்டாரண்டில் எதேர்ச்சையாக பார்ப்பது போல்  பார்த்து பேசி வீட்டிற்க்கு வருவதை தள்ளி போட வேண்டும்.  அதன் பின் நிஷாவின் தோழி என்று கவிதாவுடன் நிஷா அந்த வீட்டிலே தங்கினால் அறிவிப்பின்றி தந்தை வந்தாலும் சமாளித்துகொள்ளலாம். முடிந்தது அவர்களின் திட்டம்.

விவாத அறையில் அர்ஜுன், கவிதாவுடன் "ரெயின்போ பாப்ரிக்ஸ்" கம்பனியாளர்களும் பேச்சை தொடங்கினர். அதன் உயர் அதிகாரி பெண்மணி கவிதாவின் "காஸ்டிங் " வேலையே பார்த்து அவளின் பேச்சில் கவர்ந்து கிண்டலாக "அர்ஜுன்.., உங்க அஸிஸ்டண்டை எனக்கு கொடுத்திடுங்க போதும், பாப்ரிக்ஸ் காஸ்ட் பாதியில் குறைத்து கொள்கிறேன் " என்றார்.

கவிதாவிற்கு பெருமையாகி போனது. அவள் கண்களை விரித்து அர்ஜுனை பார்க்க அர்ஜுன் முறைத்தான்.

பெண்மணி "அர்ஜுன் !! அஸிஸ்டண்ட் மட்டும் தானே !!" என்றாள் கிண்டலாக.

அர்ஜுன் "ஆமாம் " என்று சொல்லி பேச்சை வளர்க்காமல் முடித்தான்.

விவாதம் முடிந்து கிளம்புகையில் அந்த பெண் மீண்டும் கவிதாவை அழைத்து "இது என் கார்ட் உனக்கு ஹெல்ப் வேண்டும் என்றால் கேள், அட் சம் பாயிண்ட் ஐ லைக் யுவர் சார்ம் " என்றாள்.

அர்ஜுன் "அது உனக்கு தேவை படாது, தூக்கி போடு" என்றான் எரிச்சலை வெளிப்படையாக காட்டி.

அவளுடைய திறமையால் கிடைத்தது என்று அவளுடைய பையில் அவசரமாக திணித்தாள் எங்கே அர்ஜுன் பிடுங்கி எரிந்து விடுவனோ என்ற பயத்தில்.

அடுத்து ஊட்டி செல்ல புறபட்டனர் அர்ஜுன் அவனே காரை செலுத்திக்கொண்டு கவிதாவிற்கு பார்க்கும் ஒவ்வொன்றிற்கும் நிறைய கதைகள் சொன்னான். பள்ளி காலங்களில் யாருக்கும் தெரியாமல் சுற்றியது, நண்பர்களுடன் திரிந்த இடங்கள் எல்லாம் காண்பித்தான்.

கவிதா ஆச்சரியப்பட்டாள் அர்ஜுனின் துள்ளலை பார்த்து. "சார் நீங்க இப்படியே இருக்கலாமே "

"எப்படியே இருக்கலாமே "

"சிரிச்ச முகமாக, இதமாக, பொறுமையாக, பல்லை கடிக்காமல் ..." என்றாள் அவனை ஓர கண்ணில் பார்த்துக்கொண்டு.

"அப்போ நீ என் பக்கத்திலே இரு"  என்றான் உற்சாகமுடன்.

கவிதா வார்தையற்று போனாள். அங்கே மௌனம் கணத்தது.

போனில் பேசியபடியே அவர்கள் தங்க ஏற்பாடு செய்தான் அர்ஜுன். ஏனோ ஒரு போன் அழைப்பில் எவுதளிலும், பேச்சிலும், காரியம் சாதிக்கும் அர்ஜுன் தொலை தூரத்து விண்மீன் போல் தெரிந்தான் அவளிற்கு.

குன்னூரில் ஹோட்டலில் சாப்பிட காரை விட்டு கவிதா இறங்க. "கவீ.." என்று அழைப்பு காதில் கேட்டது.

கவிதா திரும்பினாள் அங்கே நரேன் நின்றிருந்தான். கவிதாவிற்குள் நிமிடத்தில் தொலைந்துப்போன நிம்மதி மீண்டு வந்தது.

"நான் உன்னை இங்கு பார்ப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. நீ நல்லா இருக்க தானே !! நான் எவ்ளோ மிஸ் பண்ணறேன் தெரியுமா உன்னை " என்றான் நரேன் மனதில் இருக்கும் எல்லா உணர்சிகளையும் காட்டிவிடும் அவசரத்தில்.

"கூல் கூல் !! நரேன் " என்று அவனை அமைதி படுத்தினாள்.

புருவங்களை உயர்த்திக்கொண்டு பார்த்திருந்த அர்ஜுனிர்க்கு நரேனை அறிமுகம் செய்தாள். நரேன் ஓயாமல் பேசினான். அர்ஜுன் "நான் போகிறேன், நீ பேசி விட்டு வா" என்று ஹோட்டலுக்குள் நுழைந்து விட்டான்.

கவிதா அவள் அர்ஜுனிற்கு அஸிஸ்டண்டாக இருப்பதாக கூறினாள். விடுதியில் தங்கியிருப்பதாக சொன்னாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.