(Reading time: 7 - 14 minutes)

ணவு மேஜைக்கு வந்து அமர்ந்தவனிர்க்கு "அங்கே இருந்து அவர்கள் பேசுவது கவனித்து இருந்திருக்கலாமோ என்று தோன்றியது. நேரம் செல்ல அவள் வராதது இன்னமும் கோபத்தை கிளப்பியது.

கவிதா நரேனை பேச விடாமல் அவளே பேசினாள். அவனின் கேள்விகள் அவளை சங்கட படுத்தியது.

விடைபெறுகையில் அவள் தந்தையிடம் அவள் நன்றாக இருப்பதாகவும் அதிகம் குடிக்க வேண்டாம் என்று சொல்ல சொன்னாள். கார்த்திகாவின் எதிர்காலத்தை யோசித்து செயல்படுமாறு சொன்னாள்.

நரேனிடம் கார்த்திகா தனியாக எதாவது விசாரித்தால் எந்த விபரமும் சொல்ல வேண்டாம் என்றாள்.

நரேன் அவள் சொன்னதை மட்டும் கேட்டுகொண்டான். அவனாக ஏதும் கேட்கவில்லை அதற்க்கு பதில் வருவது சிம்ம சொப்பனம் என்று புரிந்தது.

தெரிந்தவர் பற்றியெல்லாம் விசாரித்து விட்டு தொடர்பிற்கு என்று ஏதும் எண்  கொடுக்காமல் நரேனிடமிருந்து அர்ஜுன் இருக்கும் மேஜைக்கு வந்தாள்.

அவன் வெவ்வேறு மாதிரி கேள்விகளால் கேட்டு பார்த்தும் கவிதாவிடமிருந்து பதில் இல்லை என்பதில் வருத்தம் என்றாலும் நன்றாக இருப்பதாக சொன்னாலே என்ற நிம்மதியில் திருப்தி ஆனான்.

பிரிக்க முடியாதது நட்பு பிரிந்தே இருந்தாலும். நட்பில் எதிர்பார்ப்பு நண்பனின் நன்மை மட்டுமே. புரிதலும் தொலைதுரத்து உறவையும் அருகில் உணர வைக்கும். அதுபோலான உறவுகள் கிடைப்பது அரிது.

"அடடா வந்துட்டியே!!" என்றான் அர்ஜுன் குரலில் கேலியாக

"ஏன் சார் சாப்பிடாம உட்கார்ந்திருக்கீங்க" என்று கேட்டாள் கவிதா ஆச்சர்யத்துடன்.

அவன் "என்ன கொஞ்சல் எல்லாம் முடிஞ்சதா" சிறிதும் கிண்டல் குறையாமல் பேசினான். கோபமும் அதனுள் மறைந்திருந்தது.

"எனக்கு பசிக்கலை சார் நீங்க சாப்பிடுங்க" கவிதா அவள் எண்ணங்களிலேயே உழன்று கொண்டு பதில் சொன்னாள்.

அர்ஜுனிற்கு கோபம் வந்தது. சீறினான். "பாரு இங்க உன் நாடகத்திற்கு இடமில்லை " என்றான்.

மனதாங்களிருந்த கவிதா சலிப்புடன் அழுத்தமாக "சார்!! எனக்கு பசிக்கவில்லை சார்" என்றாள்.

சாப்பிடாமல் இருவரும் புறப்பட்டனர். இரண்டொரு முறை அவனை சாப்பிட சொன்னவள் பின் கட்டாயபடுத்தவில்லை. பசித்தாலும் அர்ஜுனிற்கு அவன் கோபம் பெரிதாக தெரிந்தது.

இந்த உலகத்தில் தோன்றலும், மறைதலும் இயற்கையே. அதே போல் சிலரின் மகிழ்ச்சியும் சிலரின் சோகங்களும் பலருக்கு புரியாமல் போவதும் இயற்கையே !! 

தொடரும்!

Go to episode # 10

Go to episode # 12


{kunena_discuss:700}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.