(Reading time: 7 - 13 minutes)

12. உன்னிடம் மயங்குகிறேன்..! சொல்ல தான் தயங்குகிறேன்..! - ஸ்வேதா

வன் கோபம் அவனை தூங்கவும் விடவில்லை. கவிதா அறை நிசப்தமாக இருந்தது. அது இன்னமும் அவனை தாக்கியது.

அர்ஜுன் அவன் அறைக்கு வந்ததும் பித்து பிடித்துப்போல்  ஆனாலும் இன்னொரு பக்கம் அவளும் சாப்பிடவில்லை என்கிற வருத்தம், அவள்  குடும்பம் பற்றிய  கவலையை தீர்க்க வழி என்று இரவு முழுதும் அவன் எண்ணங்கள் தின்றது.

விடிந்து இருவரும் டி-பாக்டரி சென்று கணக்குகளை சரி பார்த்து முடித்தனர். வேலை காரணமாக பேசிய வார்த்தைகள் தவிர மற்ற பேச்சுக்கள் இல்லாமல் இறுக்கமான சூழ்நிலையாக இருந்தது. கவிதாவிற்கு அவன் இறுக்கம் குழப்பியது.

உன்னிடம் மயங்குகிறேன்..!சொல்ல தான் தயங்குகிறேன்..!

உற்சாகத்தை வரவழைத்துக்கொண்டு கவிதா ," சார் இந்த இடம் அழகா இருக்கு வெளியே சுற்றி பார்த்து வரலாமா ? " கேட்டாள் அவனின் எப்படிப்பட்ட பதிலுக்கும் மனதை தயார்ப்படுத்திக்கொண்டு.

“ போகலாம் என்று சொல்லி” முறைத்து பார்த்தாலும். மனதினுள் " ஹப்பா பேசிவிட்டாள் " என்ற நிம்மதி கிடைத்தது அவனிற்கு.

இருவரும் எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்கிற அந்த  தோட்டத்தை சுற்றி பார்த்தனர். கவிதா முகம் தெளிந்து இருந்தது.

அர்ஜுன் விசாரிக்க தொடங்கினான் "யார் நேற்று நாம் பார்த்தது? உன் ப்ரெண்ட் மட்டும் தானா ? "

 கவிதா "அவன் நரேன், என் சின்ன வயதிலிருந்து ப்ரெண்ட் , என் நல்லது தான் அவனுக்கு முக்கியம் " என்றாள். பெருமையாகவும். அவன் அவள் நலம் விரும்பி என்றாள்.தொடர்ந்து பெரும் மூச்சு விட்டு "அவனுக்கு தான் என்னால் ஏதும் செய்ய முடியவில்லை " என்றாள்.

அவள் பேச்சில் உண்மை இருந்தது. அவனிற்கு அது புரிந்தது. அவளை தேற்றுவது அவன் கடமை அல்லவோ."கவலை படாதே !! சீக்கிரம் உனக்கென்று பிஸ்னெஸ் தொடங்கிவிடலாம் ..." என்றான்.

கவிதா அவனை பார்த்து ஆச்சர்யமாக  " சார்...! உங்களால் எப்படி இப்படி கடிவாளம் போட்ட குதிரை போல் இருக்க முடிகிறது ?? "

அவன் சிரித்துக்கொண்டே "என்னை குதிரை என்று சொல்லிட்ட " என்றான் குறும்பாக ஓர பார்த்தப்படி .

" ஆமாம் கடைசியில் மூக்கை நீட்டி ஜெய்க்கும் வெள்ளை குதிரை" என்றாள் சிரித்துக்கொண்டே.

அவனிற்கு குளிர்ந்து .

இருவரும் சிரித்துக்கொண்டே வீசும் தென்றலை இரசிக்க, "ஹலோ அர்ஜுன்" என்று குரல் கேட்க திரும்பி பார்த்தனர்.

துணி கடையில் சேலை கட்டிக்கொண்டு கை கூப்பி வரவேற்கும் செல்லுலாய்டு பொம்மை போல் ஒரு பெண் சிரித்தாள். அர்ஜுன் "ஏய் தேஜு எப்போ இந்தியா வந்தாய் ??" என்றான்.

தேஜு  "நான் எப்போதோ வந்தாயிற்று, உனக்கு தான் என்னை பற்றி தெரிந்து கொள்ள அவகாசம் இல்லை " என்றாள் கிண்டலாக.

கவிதாவை காட்டி "இது நிஷா ," என் அசிஸ்டண்ட் என்றான்.

தேஜு "நி.... ஷா ?" என்றாள். சந்தேகம் கேட்பது போல் கண்களை சுருக்கி பார்த்துக்கொண்டு  

அர்ஜுன் சிரித்துக்கொண்டே கவிதாவை  பார்த்து  "நான் சொன்னேன் தானே நான், ஆகாஷ், நிஷா இந்த வாண்டு, இவள் அண்ணன் எல்லாம் ஒரே ஸ்கூலில் படித்தோம்" என்றான் உள் அர்த்தத்துடன்.

கவிதா புரிந்துக்கொண்டு ,"ஹலோ மேடம்" என்று கை கொடுத்தாள்.

உள்ளுக்குள்  வலித்தது.

தேஜு "ஐயோ என்னை மேடம் என்றெல்லாம் சொல்லாதீங்க, நான் தேஜஸ்வினி  மட்டும்  தான் எப்போவும் " என்றாள் அழகாய்.

கவிதாவிர்க்குள்  தாழ்வு மனப்பான்மையை தவிர்க்க முடியவில்லை. அம்மாஞ்சி அப்பா, தங்கை, சித்தியின் பேச்சு, நரேனின் உதவிகள், அர்ஜுனின் சில சமயத்து குத்தல் பேச்சு, நிஷாவின் இரக்கம் எல்லாமும் நினைவிற்கு வந்தது.

அர்ஜுன் அவளிற்கு துன்பத்தை தான் நிறைய கொடுத்துள்ளான் ஆனாலும் அவனுடன் இருக்கும் சமயம் மகிழ்ச்சியும், பாதுகாப்பாகவும் தான் உணர்வாள். அர்ஜுனை தவிர்க்க முடியவில்லை, அவள் துன்பமும் தீரும் பாடில்லை.

தேஜு சிறிது நேரம் பேசிவிட்டு மத்திய உணவு அவளுடன் தான் என்று வற்புறுத்தி அழைத்து விட்டு அவள் வீட்டிற்க்கு செல்ல வழி சொல்லிவிட்டு அகன்றாள்.

கவிதா ,"சார் இன்னமும் எவ்வளவு நாள் நான் இப்படி இருக்க?, நான் சீக்கிரம் வேற இடம் பார்ப்பது நல்லது என்று தோன்றுகிறது " என்றாள்.

அர்ஜுன்," பார் கவிதா, என் வீடு உனக்கு பாதுகாப்பானது. நிஷா வரும் வரை இங்கே அதன் பின் பார்த்துக்கொள்ளலாம் " என்றான் எரிச்சலுடன்.

அவள் அமைதி ஆத்திரம் கிளப்ப நேற்று இரவும் சாப்பிடவில்லை என்று நினைவுப்படுதினான். "சாரி சார் " என்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.