(Reading time: 9 - 17 minutes)

04. சதி என்று சரணடைந்தேன் - சகி

காற்றில் மிதக்கும் கவிதைகள்...

கனவில் தோன்றிடும் காரிருள்...

காதல் கொண்ட வார்த்தைகள்...தூரத்தில் கேட்டிடும் கண்ணன் இசை...

Sathi endru saranadainthen

நாணத்தில் தலைகுனியும் நங்கைகள்....

தூரிகை தீட்டிடும் ஓவியம்....

தூரலாய் சிந்திடும் மழைத்துளி...

சேற்றினில் மலர்ந்த செந்தாமரை...

மலைமுகட்டில் பிறப்பெடுக்கும் கங்கை நதி...

மனம் முழுக்க பிறப்பெடுக்கும் ஆசைகள்....

முகில்கள் உள்ளே சூரியன்...

முழுமதி அவளின் முகத்தோற்றம்...

இருளில் மிதக்கும் வெண்ணிலவாய்!!!

இதயத்துள் மிதந்தாள் காதலி...!!!

கனவோடு பேசிய நாட்கள் நிஜமாக வந்து நிற்க...

மனதோடு நின்றவளை மறக்க எண்ணி அவள் முன் தொலைந்தேன்...

கவிதையாக கவிதை படைக்கிறேன்!

கவிதையாகிய உன்னை...

நீ என்னிடத்தில் கேட்கிறாய்...!!

என்னை பார்த்த நியாபகம் இல்லையோ!!!!-பத்தாவது முறையாக இக்கவிதையை வாசித்து முடித்தாள் அனு.

மனம் முழுதும் அதிலே இலயித்து போனது.

"டார்லிங்!"-ராகுல் கூறியது காதில் வாங்காமல் அதையே படித்துக் கொண்டிருந்தாள்.

பின்னால் இருந்து எட்டிப் பார்த்தவன்.தெரிந்தும்,தெரியாமலும் அதை படித்தவளின் முகம் அளித்த மாறுதலை அவன் கவனிக்க தவறவில்லை.

"ஓய்!"

"ஆ...நீ எப்போண்ணா வந்த?"

"பத்து நிமிஷம் ஆகுது!"

"ஓ...கவனிக்கலைண்ணா!"

"சரி...என்ன படிக்கிற?"

"அண்ணா இந்த கௌதம் யாரு?"

"யாரு?"

"இந்த புக் எழுதினது!"

அவன் அதை வாங்கிப் படித்தான்.

"எனக்கு தெரியலையே...!!"

"ஸோ ஸ்வீட் அண்ணா!ரொம்ப ஸ்வீட்டா எழுதி இருக்காரு!"-ராகுல் ஒரு புருவத்தை தூக்கி தன் தங்கையை பார்த்தான்.

"ஓஹோ!இருக்கட்டும்!"

"என்ன இருக்கட்டும்!"

"என் ஆபிஸ்க்கு வரீயா டார்லிங்?"

"இப்போவா?"

"ம்..."

"சரி வா போகலாம்!"

"ஆனா ஒரு கண்டிஷன்!அங்கே வந்தும் கௌதம் புராணத்தை பாடாதே!"

"சரி...சரி..."-ராகுலின் மனதில் மெல்ல ஒரு சுணுக்கம் ஏற்பட்டது.

அவனுக்கு கௌதமை பற்றி தெரியும்.அவன் கௌதமின் புத்தகங்களை படித்திருக்கிறான்.கௌதமை நேரில் கண்டு ஒருமுறை பேசியதும் உண்டு!!ராகுலுக்கு அக்ஷயா மற்றும் கௌதமின் உறவும் சிறிது தெரியும்!

இப்போது அனுவின் நடவடிக்கைகள் சிலவற்றை எண்ணி பார்த்தால்...அவளுக்கு கௌதம் மீது இருப்பது மதிப்பா?அல்லது ஈடுப்பாடா?என்பது புதிர்!!!

கடந்த சில தினங்களுக்கு முன்,

வந்தவளின் பேச்சு புதிராகவே இருந்தது.

கௌதமின் கதைகளை படிக்கும் போது அவள் முகம் தன்னிச்சையாக நாணத்தை வெளிவிட்டது.அது கதாபாத்திரங்கள் மேல் உள்ள ஈடுபாடாய் அறியப்படவில்லை.

எது நடந்தாலும் அனுவின் மனதில் வளர இருக்கும் வேரை முறித்தாக வேண்டும்.மனம் உறுதி பூண்டது.

காதலானது எங்கு தொடங்குகிறது என்பது புதிரான ஒன்று!!

நீ யாரோ!நான் யாரோ!என்று முறுக்கிக் கொண்டு போன பலர் காதலுக்கு இலக்கணமானதை பார்த்திருக்கிறேன்.கங்கையின் பிரவாகத்தின் இடையே அணையிட்டு தடுக்கும் துணிவு கொண்டவர் அகிலத்தில் இல்லை!!!

காரணம்,பாய்ந்து வரும் கங்கை நீரானது அணையை உடைத்தெறியும் ஆற்றல் கொண்டது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே!!!

மனிதன் எவ்வளவு தான் பிரச்சனைகளுக்கு அணையிட்டாலும்,பாவம் அந்த துன்பமானது மனிதனின் சரணங்களையே ஸ்பரிசிக்கிறது.அது என்ன செய்யும்?இறைவனிடத்தில் கிடைக்காத அமைதி மனிதனிடத்தில் கிடைக்கிறதோ!என்னவோ!காதலுக்கு அணையிட்டால்..காதலானது கட்டுப்பட்டுவிடுமா?காதலிப்பவர்கள் யாராவது இருக்கீர்களா?என் கேள்விக்கு பதில் கூறிவிட்டு செல்லுங்கள்...

"அண்ணா!காரை நிறுத்து!"-அனு கூறியதும் வண்டியை நிறுத்தினான்.

"என்னாச்சும்மா?"-அனு காரின் கண்ணாடியை கீழே இறக்கினாள்.

சற்று அதிகமான வேகத்தோடு மழை பெய்து கொண்டிருந்தது.அவள் எதையோ உற்று பார்த்தாள்.

"அனு என்னாச்சு?"-அவள் காரைவிட்டு இறங்கினாள்.

"ஏ...எங்கே போற?"-அவள் ஒரு மரத்தின் அருகே சென்றாள்.

"ஏ...வெளியே வா!"குரல் கொடுத்தாள்.

ராகுல் குழப்பத்தோடு மழையில் நனைந்தப்படி அவளருகே சென்றான்.

"அனு!"

"உஷ்!"அவள் நிறுத்தினாள்.

"ஏ..வெளியே வா!நான் உன்னை எதுவும் பண்ண மாட்டேன்!"-சிறிது நேரம் கழித்து ஒரு நாய் எட்டிப்பார்த்தது.ஹாலிவுட் படங்களில் வரும் அல்லவா?பழுப்பு நிறத்தில்,மென்மையான ரோமங்களோடு,அதே நாய் தான்!!!சற்று வளர்ந்த நாயாக இருந்தது.ராகுல் அதை இரக்கத்தோடு பார்த்தான்.

"பாரு!அதுக்கு அடி பட்டிருக்கு!"-அனு அதன் காலை பார்த்தாள்.

"குளிர்ல வேற நடுங்குது!அண்ணா!ப்ளீஸ்..நாம இதை வீட்டுக்கு கூட்டிட்டு போகலாமா?"

"உனக்கு பிடிச்சிருக்குல?தாராளமா...கூட்டிட்டு போகலாம்!"

"தேங்க்ஸ்ணா!"

"கவலைப்படாதே!நீ என் கூட வீட்டுக்கு வா!"-ஐந்தறிவு ஜீவனோடு பேசினாள்.

அது கேள்வியாய் பார்த்தது.மனித பாஷை புரியவில்லை போல!அவளுக்கு விலங்கு பாஷை தெரியாது!அனு கையை நீட்டினாள்,அது தயக்கத்தோடு அவள் கை மேல் தன் காலை வைத்தது.ராகுல் காரை அவர்கள் அருகே நிறுத்தினான்.இருவரும் ஏறினர்.கார் கிளம்பியது.

நடந்தவற்றை தூரத்தில் நான்கு கண்கள் கவனித்து கொண்டிருந்தன.

"ஸோ ஸ்வீட்!"-தீக்ஷா கூறவும்,

"என்னடா இன்னும் சொல்லலையேன்னு பார்த்தேன்!"என்று பதிலுரைத்தான் கௌதம்.

"ஏ..அந்தப் பொண்ணுக்கு எவ்வளவு நல்ல மனசு பாரேன்!"

"அந்த  நாய் ரோட்டுல இருந்திருந்தாலே சந்தோஷமா இருக்கும்!இப்போ அதை கூட்டிட்டு போயிட்டு ஜிம்மின்னோ,டாமின்னோ பேர் வச்சி,போர் அடிக்கும் போதெல்லாம் அதை வைத்து டைம் பாஸ் பண்ண போறா!"

"நீயெல்லாம்...திருந்தவே மாட்ட!"-தீக்ஷா தலையில் அடித்துக் கொண்டாள்.

"சரி சொல்லு!இவனுக்கு என்ன பேர் வைக்கலாம்?"-கட்டு கட்டி கொண்டிருந்த ராகுலிடம் கேட்டாள் அனு.

"என்னது இது இங்கே தான் இருக்க போகுதா?"-அதிர்ச்சியாக கேட்டான் ஆர்யா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.