(Reading time: 9 - 17 minutes)

"மா!"

"நான் இதுக்கு சம்மதிக்க மாட்டேன்!"

"ஏன்?"

"எனக்கு நாய்களை பிடிக்காது!"

"அதுக்கும் உன்னை பிடிக்கலை!பார் முறைக்குது!"

"அண்ணா!இதெல்லாம் கேட்க மாட்டியா?"-தமையனிடம் தூது போனான் ஆர்யா.

"ஆர்யா!இவ்வளவு பெரிய வீட்டில இதுக்கு ஒரு சின்ன இடம் தான் நாம தர போறோம்!கம் ஆன்,அதுக்கு அப்பா அம்மா கிடையாது!நம்மள நம்பி வந்துடுச்சு!சொல்லி கொடுத்திருக்கேன்ல?நம்மள நாடி வருகிறவங்க கஷ்டத்தை போக்குறது தான் நம்ம முக்கியமான கடமை!"-அவன் உதட்டை பிதுக்கினான்.

"என்ன?"

"மறந்து கூட அதை என் ரூம் பக்கம் வராம பார்த்துக்கோ!"

"கண்டிப்பா!"

"சொல்லுண்ணா!இதுக்கு என்ன பேர் வைக்கலாம்?"-அனு நினைவுப்படுத்தினாள்.

சிறிது நேரம் யோசித்தவன்,

"டேஜா!"என்றான்.

"வாவ்!சூப்பரா இருக்குண்ணா!"-டேஜா காதுகளை மடக்கி அவர்களை பார்த்தான்.ராகுலின் தீர்க்கமான புன்னகை அவனுக்கும் பிடித்திருக்கலாம்!அவன் ராகுலின் மேல் தாவினான்.

தனிமையில் எதையோ சிந்தித்தப்படி இருந்தான் சரண்.

மனம் முழுதும் காயங்கள்!!!கலக்கம் நிறைந்த நேத்திரங்கள் கவலையை பிரதிபலித்தன.

"என்னங்க!"மதுவின் குரல் மனதிற்கு இதமாய் இருந்தது.

"ம்.."

"என்னங்க தனியா இருக்கீங்க?"

"ராகுலை பற்றி என்ன நினைக்கிற அம்மூ?"

"ஏன்?என்னாச்சு?"

"அவனை பார்த்த என் நியாபகம் வருது!நானும் என் அப்பா கூட இவனை மாதிரி தானே இருந்தேன்!"

"............."

"ரகு நிலைமையை யோசித்தால் தான்!மஹாதேவன் நிலை புரியுது!என் வளர்ப்பு தவறாக கூடாதுன்னு வேண்டிட்டு இருக்கேன்!"

"என்னங்க நீங்க?இப்படி பேசுறீங்க?"

"இத்தனை வருஷமா ரகு கூட ஒரு வார்த்தை கூட அவன் பேசலை!தினம் தினம்  அவன் செத்துட்டு இருக்கான்!என் வாழ்க்கையை மாற்ற எவ்வளவோ பாடுபட்டான்.அவனுக்காக நான் என்ன செய்தேன்?"

"இதோ பாருங்க! ராகுல் கொஞ்சம் கோபத்துல இருக்கான்.சீக்கிரமே அவன் கோபம் குறையும்!!நீங்க வருத்தப்படாதீங்க!"

"எப்படி அம்மூ வருத்தப்படாம இருக்க முடியும்?ராகுல் திருமண வாழக்கையை வெறுக்க ஆரம்பிச்சிட்டான்!"-ஆதித்யா கூறவும்,கோவிலில் பார்த்த கீதாவை ஒத்த முகமுடைய பெண்ணின் நினைவு வந்தது மதுவிற்கு!!!

"ரகுவும்,கீதாவும் சேர்ந்து வாழ முடியாத வாழ்க்கையை ராகுலும்,அவன் மனைவியும் வாழுவாங்க!"-ஆதித்யா கேள்வியாய் பார்த்தான்.

ராகுலுக்கு ரகுவின் ஜாடை அல்லவா???

"நீ என்ன சொல்ற?"

"ராகுலுக்கு சீக்கிரம் மணபந்தல் போட சொல்றேன்!"

"அவன் சம்மதிக்கணுமே!!"

"சம்மதிப்பான்!"

"எப்படி?"

"சம்மதிப்பான்!"

"என்னமோ பண்ணு!இன்னும் இரண்டு நாள்ல ரகு இங்கே வரான்!"

"நிஜமாவா?"

"ஆமா..!ராகுல் காதுல இதை பக்குவமா போட்டுவிடு செல்லம் !"

"நானா?"

"உன் பேச்சை மட்டும் தான் அவன் கேட்பான்!ப்ளீஸ் அம்மூ!"

"சரி!"-ஆதித்யா மதுவின் கன்னத்தில் முத்தமிட்டான்.

"ப்ச்...விடுங்க!"மது அவனை தள்ளிவிட்டாள்.

"யாரை கேட்டு இங்கே வராங்க!"-கொதித்து எழுந்தான் ராகுல்.

அவன் கோபத்தை பார்த்த கார்த்திகேயன் அவனை ஆசுவாசப்படுத்தினான்.

"ராகுல் அவர் உன் அப்பாடா!"

"என் அப்பா ஆதித்யா சரண்.இப்போ நான் இருக்கறது மட்டும் தான் என் குடும்பம்!புதுசா யாரும் இதில் நுழைய அனுமதி இல்லை."

"ராகுல் காம் டவுண்!"

"என்னால முடியாது மாயா!எனக்கு அவரை பிடிக்கலை.அப்பா ஏன் இப்படி பண்ணார்னு புரியலை!"-அவன் பேசி  கொண்டிருக்க,

"ராகுல்!உன்னை பார்க்க ஒரு ரிப்போர்டர் வந்திருக்காங்க!"என்ற ஒருவர் வந்து கூறினார்.

"யாரு?"

"தீக்ஷா அண்ட் ஸ்வேதா ஃப்ரம் தமிழ் வணக்கம்"

"வர சொல்லுங்க!"

ராகுல் பெருமூச்சு வாங்கினான்.

"முகத்தை அப்படி வைக்காதேடா!நல்லாவே இல்லை!"

"போடி!நான் இப்படி தான் இருப்பேன்!"-அச்சமயம் கதவு தட்டப்பட்டது.

"எக்ஸ்யூஸ்மீ சார்!"-அவன் தடுமாறிய அதே குரல்,...

"வாங்க!"-கதவை திறந்து தீக்ஷா வந்தாள்.தீக்ஷாவை பார்த்தவனின் முகத்தில் ஆயிரமாயிரம் உணர்ச்சிகள்!!!விழிகள் விரிய அவளை பார்த்தான்.இவள் அப்படியே என் தாயின் சாயலில் இருக்கிறாள்.தீக்ஷாவை பார்த்த அவன் நண்பர்களுக்கும் அதே நிலை தான்!

"எக்ஸ்யூஸ்மீ!"-தீக்ஷா குரல் கொடுக்கவும் கலைந்தனர்.

"ஆ...எஸ்!வாட் கேன் ஐ டூ பார் யூ?"

"நத்திங் வாண்டட் சார்!எங்க எம்.டி.இந்த டாகுமண்ட்டை உங்கக்கிட்ட கொடுத்து வர சொன்னாங்க!"-அவள் ஒரு கோப்பையை நீட்டினாள்.

"தேங்க் யூ மிஸ்..."

"தீக்ஷா!"

"ஆ...தீக்ஷா!"

"ஓ.கே சார்!நான் கிளம்புறேன்!"

"இருங்க!எதாவது சாப்பிட்டுட்டு போங்க!"

"பரவாயில்லை சார்!நீங்க கேட்டதே திருப்தி!எனக்கு நேரமாயிடுச்சு நான் கிளம்புறேன்!"-கீதா மன்னிக்கவும் தீக்ஷா ராகுலிடமிருந்து விடைப்பெற்றாள்.

தாய்க்கு பின் தாரம் என்பர்!மனிதனுக்கு தாயை ஒத்த தாரம் கிடைப்பது என்பது அரிதான ஒன்று!!காரணம்,மனைவியாய் வரும் ஒவ்வொரு பெண்ணும் கணவனின் அன்பை பெற ஏங்கி கரைகின்றாள்.

ஆனால் ஒரு தாயோ...

மகனின் நலனுக்காக சிந்திப்பாளன்றி மகனின் அன்பை முழுதும் தனதாக்க ஏங்கியதில்லை.அப்படி என்றால்,கணவனின் அன்பை எதிர் நோக்காது நலனை மட்டும் தேடும் பெண் துணை என்றால் வாழ்வின் அர்த்தமானது புலப்பட்டு விடுமல்லவா?

ம்...நிச்சயம் மேற்கூறிய குணநலம் கொண்ட ஸ்திரியை அகிலமே வணங்கும்.எடுத்துக்காட்டாய் கூற நான் எண்ணுவது.தேவி சீதை,மாதா சீதையானவர் அசோகவனத்தில் துன்புற்ற போதிலும் அவர் ஸ்ரீ ராம சந்திர மூர்த்தியின் நலனை மட்டுமே எண்ணி உடல் மெலிந்தார்.அன்றி,அவரின அரவணைப்பிற்காக ஏங்கியதில்லை.காரணம்,காற்று புக முடியா இடத்திலும் காதல் புகும் எண்ணும் விதியை அவர் அறிந்திருக்கலாம்!!!

தொடரும்

Episode # 03

Episode # 05

{kunena_discuss:877}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.