(Reading time: 9 - 18 minutes)

03. சதி என்று சரணடைந்தேன் - சகி

றைவனானவன் மனிதர்களின் வாழ்வை சீர்படுத்த என்னற்ற வாய்ப்புகளை வாரி வழங்கியுள்ளான்.இருப்பினும் செய்த தவறுகளுக்கான தண்டனையை அடைய வேண்டும் என்பது இயற்கையின் நியதி ஆகிறது.

தவறானது அறியாமல் இழைத்ததாக இருந்தாலும் அதற்குறிய தண்டனை தன்னை அவன் அனுபவித்தால் தான் நாளைய உலகம் நம்மை தூற்றாமல் இருக்கும் என்ற காரணத்திற்காக செய்த தவறுக்கு உரிய தண்டனை நாம் பெறுகிறோம்.

இரவில் தோன்றும் சந்திரன்,இரவில் எவ்வளவு பிரகாசத்தை வழங்கினாலும் இறைவன் சூரிய நாராயணனுக்கு முன் அவன் பொலிவு இழக்கிறான்.அதுபோல,மனிதன் உத்தமனாக பிறந்தாலும் வாழ்வின் தன் வினைகள் அதாவது செயல்கள் மூலம் தன் பவித்ரத்தை இழந்து தண்டனை பெறுகிறான்.

Sathi endru saranadainthen

நன்றாக உறங்க கொண்டிருந்தான் ராகுல்.ஆழ்ந்த உறக்கம்!!!!

அவனை மறந்த நித்திரையில் அழகிய கனவு ஒன்று!!!!

அழகிய பூவனம்!!!சுற்றி மலர்கள்!!!பல வண்ணங்களில் பூத்து குலுங்குகின்றன.வீரனும் இந்த அழகிற்கு முன் தோல்வியை விரும்பி நாடுவான்.அவ்வளவு அழகு!!!

வானமானது திவ்ய நீர் திவலைகளை அவன் மேல் தெளிக்கிறது.தென்றலானது குளிர்ந்த சாரலாகி உடலை சிலிர்க்க வைக்கிறது.

தூரத்தில் அழகிய குளம் ஒன்று!!!அதில் வெள்ளை தாமரைகள் மலர்ந்துள்ளன.ராகுல் அதன் அருகே செல்கிறான்!!! 

அதன் கரையில் ஒரு கன்னிகை அமர்ந்திருக்கிறாள்.

அவள் ஒரு தாமரையை வருடியப்படி இருந்தாள்.இவன் அருகே செல்ல...அவன் வருகையை உணராமல் உணர்ந்தவள் எழுந்து தலைகுனிந்தப்படி நிற்கிறாள்.

ராகுல் அவளருகே வந்து நிற்க...குளிர்ந்த தென்றல் வீசுகிறது!அவள் முகத்தை தாடையை பிடித்து நிமிர்த்துகிறான்.

அவள் நிமிர்ந்து பார்க்கிறாள்.

"சதி!"என்று அழைக்கிறான்.

தூக்க கலக்கத்தில் உண்மையாக அவன் வாய்"சதி!"என்று அழைக்க,அவன் அருகே இருந்த ஆர்யா...!!!

"அண்ணா!டேய் அண்ணா!"என்று எழுப்ப பதறியப்படி எழுந்தான்.

பெருமூச்சு வாங்கியது.

"என்னண்ணா?கனவு கண்டியா?என்ன புலம்பிட்டு இருக்க?"

"ஆமாடா!ஒரு கெட்ட கனவு!"

"என்ன கனவு?"-எவ்வளவு யோசித்தும் அது நினைவு வரவில்லை.சதி என்ற வார்த்தையை தவிர!!!

"சரி...சதி!சதின்னு புலம்பிட்டு இருந்த?அது யாரு?"

"தெரியலைடா!"-ஆர்யா இதெல்லாம் நம்புவது போலவா இருக்குது?என்பது போல பார்த்தான்.

"சத்தியமாடா!"

"சரி...நம்புறேன்!"

"ஆர்யா!"

"ம்..."

"கனவு பலிக்குமா?"

"விடியற்காலையில கண்ட கனவு பலிக்கும்னு அம்மா சொல்லுவாங்க!"

சரியாக மணி 5 என்று கடிகாரம் ஐந்து முறை கூறியது.

"விடிஞ்சிடுச்சு!டேய்!எதும் பேய் கனவு காணலையே?"

"இல்லைடா!"

"பின்ன...என்ன நல்ல ரொமான்ட்டிக்கான கனவா?"-அவனை முறைத்தவன்.

"இதுக்கு தான் என் கூட தூங்காதே!தூங்காதேன்னு சொன்னேன்!அமைதியா இருக்க மாட்ட?"-என்று தலையணையை எடுத்து அவனை அடிக்க ஆரம்பித்தான்.

"டேய்!வலிக்குதுடா!"-ராகுல் ஒரு தலையணையையும் போர்வையும் எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

"எங்கே போற?"

"குளக்கரைக்கு!"

"அங்கே என்ன சதி இருப்பாங்களா?"

"டேய்!!!பேசாம தூங்கு!"-சற்றே கோபமாக சென்று தோட்டத்தின் பெஞ்ச் மீது தலையணையை போட்டு உறங்க தொடங்கினான்.நீண்ட நேரம் உறக்கம் வரவில்லை.போராடி சூரிய உதயத்துக்கு பின் உறங்கினான்.

மணி சரியாய் எட்டு இருக்கும்!

ராகுலை தேடிக்கொண்டு மது வந்தாள்.தோட்டத்தில் அவன் படுத்திருப்பதை பார்த்து அவனருகே வந்தாள்.

"கண்ணா!"

"..............."

"கண்ணா!"

"ம்..."

"என்னடா இங்கே வந்து படுத்துட்ட?"-அவன் கண்விழித்து பார்த்தான்.தனக்கு அன்பை வழங்கிய தெய்வத்தின் முகத்தை தரிசித்தான்.பின் எழுந்து அமர்ந்தான்.மது அவனருகே அமர்ந்து அவன் தலையை கோதினாள்.ராகுல் அவள் மேல் படுத்துக் கொண்டான்.

"என்னடா கண்ணா ஆச்சு?"

"தூக்கமே இல்லைம்மா!"

"ஏன்?"

"விடியற்காலையில ஒரு கெட்ட கனவு கண்டேன்!"

"என்ன?"-இப்போது அக்கனவு நினைவு வர கூறினான்.

"சதின்னா என்னம்மா அர்த்தம்?"-அவள் சிரித்தப்படி,

"சதின்னா...சரி பாதின்னு அர்த்தம்!"

"புரியலையே!"

"கல்யாணம் பண்ணி ஒருத்தனுக்கு வாழ்க்கை துணையா வர ஒரு பெண்ணை சதின்னு சொல்லுவாங்க!"

"ஓ..என்னம்மா சொல்ற?"-எழுந்து உட்கார்ந்தான்.

"என்ன?நிஜமா தான் சொல்றேன்!"

"ஐயயோ!அப்போ இந்த கனவு  எனக்கு வரக்கூடாதே!"

"ஏன்?"

"அது வந்து..!"ஏதோ கூற வாயெடுத்தவன் திடீரென,

"இல்லை...ஒண்ணுமில்லை!"

"சீக்கிரமே நல்ல பொண்ணா பார்க்கிறேன்!இரு!"

"உனக்கு ஏன் அந்த சிரமம்?விட்டுவிடு!"

"ஏன் நீயே பார்த்துட்டியா?"-அவன் நெற்றியில் கை வைத்துக் கொண்டான்.

"என்ன?"

"முன்னாடி போனா முட்டுது!பின்னாடி வந்தா இடிக்குது!சைடுல போனா உதைக்குது!அப்பறம் நான் எப்படி பேச முடியும்?"-அவள் சிரித்தே விட்டாள்.

"சரி...போய் குளிச்சிட்டு வா!"-அவன் கொட்டாவி விட்டான்.

"எனக்கு இப்போ தான் தூக்கமே வருது!"

"அது எப்படிடா!நீயும்,ஆர்யாவும் அப்படியே அவரை உரித்து வைத்திருக்கீங்க?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.