(Reading time: 9 - 18 minutes)

"ளர்ப்பு அவரோடது தானே!"-அவன் முகம் மாறுவதை கண்டவள்,

"குளிக்கலைன்னா!டிபன் கிடையாது!"-என்ற கூற,

"நான் குளிக்க போறேன்மா!"-என்று நகர்ந்தான் ராகுல்.

குளித்துவிட்டு வந்தவன் தன் அறையில் மாட்டப்பட்டிருந்த கீதாவின் புகைப்படத்தை தொட்டு நமஸ்கரித்தான்.

மனம் கனத்தது.அவள் உயிரோடு இருந்திருந்தால்???அவனது இரகசியம் அவனுக்கு தெரிய வந்திருக்காது.அவனும் ரகுவை பிரிந்திருக்க மாட்டான்.

"அண்ணா!"-என்ற ஆர்யா அவன் மௌனமாய் நிற்பதை பார்த்து தானும் வந்து கீதாவை வணங்கினான்.

ஆர்யாவின் வருகையை உணர்ந்தவன்,கண்களை துடைத்துக் கொண்டான்.

உண்மையை கூற வேண்டுமாயின் ராகுல் சிறு குழந்தையாய் இருக்கும் போதே கீதா இறந்துவிட்டாள்...ஆனால்,தன்னை பெற்ற தாயை ஏற்காமல் அவளை தான் தாய் என ஏற்றுள்ளது அவன் மனம்!!!பெற்றவளை விட வளர்த்தவளுக்கே உரிமை!!!

உண்மையும் அதுவே!!

உயிருள்ள பிண்டத்தை மனிதனாக சுமக்கும் ஸ்திரிக்கு உள்ள அதே உரிமை!!!தன் ரத்தத்தை பாலாக்கி குழந்தையின் பசியினை போக்கும் பெண்ணிற்கு இருக்கும் அதே உரிமை!!!!வலியோடு போராடி உலகிற்கு உயிரை கொடுக்கும் கன்னிகைக்கு உள்ள அதே உரிமை!!தன் ஞானத்தை வாழ்வாக்கி,பாசத்தில் பசியாற்றி.கண்ணுள் வைத்து ஒரு குழந்தையை வளர்க்கும் பெண்ணிற்கும் உண்டு!ஈன்ற தாயை விட உறவில்லாத உறவை உணர்வாக்கி கொள்ளும் பெண் அதிக மகத்துவம் வாய்ந்தவளாக போற்றப்படுகிறாள்!!!அதனால் தான் அன்று ஸ்ரீராமரும் மாதா கோசலையிடம் மன்றாடி மாதா கைகேயின் வாக்கினை நிறைவேற்றினார்!!! அதனால் தான் ஸ்ரேயாவை விட அதீத அன்பை கீதாவிடமும்,மதுவிடமும் வைத்துள்ளான் ராகுல்!!!!

"அண்ணா!"-இயல்பான முகத்தை வைத்துக் கொண்டு திரும்பினான். 

"சாப்பிட வா!"

"போ வரேன்!"-ஆர்யா நகர்ந்தான்.ராகுல் மனதை ஆசுவாசப்படுத்தி கொண்டு கீழே இறங்கி வந்தான்.

அவன் கைப்பேசி அழைத்தது.

"ஒரு நிமிஷம் உன்னை அமைதியா விடமாட்டாங்களா?"-நொந்து கொண்டாள் மதுபாலா.

"சும்மா இரும்மா!என் தங்கச்சி பேசுறா!"-என்று ஸ்பீக்கரில் போட்டான்.

"ஹாய் டார்லிங்!"

"ஹாய் அண்ணா!"

"எப்படி இருக்க?எக்ஸாம் எல்லாம் எப்படி பண்ண?"

"சத்தியமா படித்த கேள்வி எதுவுமே வரலை!"-சுற்றும் முற்றும் பார்த்தவன் ஸ்பீக்கரை துண்டித்து அங்கிருந்து நகர்ந்தான்.

"அப்போ ஒழுங்கா எழுதலையா?"

"எழுதுனேன்!மார்க் வருமான்னு தெரியலை!"

"சரி அதை விடு!எப்போ இங்கே வர?"

"2 நாள்ல அண்ணா!"

"நிஜமா?"

"நிஜமா!நீ எங்கேயும் சுற்ற போயிடாதே!!!"

"சரி ஓ.கே."

"அண்ணா!அப்பறம் பேசுறேன்!பாய்!மிஸ் யூ அண்ணா!"

"மிஸ் யூ டார்லிங்!"-இணைப்பை துண்டித்துவிட்டு வந்து அமர்ந்தான்.

"அது என்ன உன் தங்கச்சிக்கு நீ தான் ஞாபகம் வருவியா?எங்களுக்கு ஒரு மிஸ்டு கால் கூட தர மாட்றா!"

"அப்பா! எதாவது வேலையா இருந்திருப்பா!"

"இருப்பா!இருப்பா!அவளை வச்சிட்டு எங்களாலையே சமாளிக்க முடியலை!நாளைக்கு வர போறவன் என்ன பாடுப்பட போறானோ!!"

"இப்போ தானே வீட்டுக்கு வரா உடனே துரத்தி விட ஐடியா பண்ற?"-தங்கைக்காக தந்தையிடத்தில் சண்டை பிடித்தான் ராகுல்.

'காற்றினில் வீசும் குளிர்ச்சியாய்!கானகத்தின் தென்றலாய்!கவிதையின் இலக்கணமாய்!செந்தமிழின் இன்பமாய்!மழையின் தூரலாய்!மனதின் மயிலிறகாய்!கடல் கடந்து சென்றவள்!உயிரில் கலக்க என்னிடம் வருகிறாள்!'-கவிதையை படித்து முடித்தாள் தீக்ஷா.அவள் முடிப்பதற்கும்,கௌதம் வருவதற்கும் நேரம் சரியாய் இருந்தது.

"என்னடி பண்ற?"

"இது என்ன கவிதை கௌதம்?"

"அதுவா புது கான்சப்ட்!ஊர்ல இருந்து திரும்பி வர ஹீரோயினை நினைத்து ஹீரோ எழுதுறான்!"

"ஓ...ஆனா,அக்ஷயா ஊருக்கு போனா மாதிரி தெரியலையே!"

"அக்ஷயா?யா...யார்...அது?"

"அதையே தான் நானும் கேட்கிறேன்!யார் அக்ஷயா?"-மாட்டிக் கொண்டான் சரணடைவதை தவற வேறு வழியில்லை.

"அது...வந்து...அவ என் காலேஜ் மேட்!முதல்ல இருந்தே அவளை பிடிக்கும்!அது அப்படியே லவ்வா மாறிடுச்சு!"

"அடப்பாவி!அப்போ உண்மையில உனக்கு அக்ஷயான்னு பொண்ணை தெரியுமா?நான் கதையில வர பொண்ணுன்னு நினைத்தேன்!அதான் நோட்ல எழுதி இருக்கேன்னு நினைத்தேன்!"

"அப்போ எதுக்கு ஊருக்கு போனா மாதிரி தெரியலைன்னு சொன்ன?"

"சும்மா சொன்னேன்!"

"நானா தான் மாட்டிக்கிட்டேனா ?"

"சரி...யார் அவ?எங்கே இருக்கா?எப்படி இருப்பா!"

"அக்ஷயம் பிராப்பர்டீஸ் ஓனர் பொண்ணு!"தீக்ஷா மனம் சிறிது சலனப்பட்டது.அவர்களை பற்றி அவள் கேள்விப்பட்டிருக்கிறாள்.சரியான முறையில் அல்ல!!!

"பொண்ணு எப்படி?"

"அழகா இருப்பா!"

"கேரக்டர் எப்படி?"

"இதுவரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை!என்ன கொஞ்சம் கோபக்காரி!"

"சரி கௌதம்...வெளியே போகலாமா?"

"ம்...எங்கே போகலாம்?"

"அப்படியே ஒரு ரவுண்ட் அடிக்கலாம்!"

"உனக்கு எப்போ இருந்துடி அந்த பழக்கம் வந்தது?எல்லா பிராண்டும் அடிப்பியா?"

"அறிவு கெட்டவனே...ஊர் சுற்ற போகலாம்னு சொன்னேன்!"

"அப்படியா?ஸாரி செல்லம்!"-தீக்ஷாவின் மனம் சலனப்பட்டதன் காரணம் என்ன?உண்மையில் கௌதமின் சதி யார்?அனுவா?அக்ஷயாவா??

"ராகுல்!"

"ம்.."

"முக்கியமான வேலையா டெல்லிக்கு போக போறேன்.நீயும் வரீயா?"-தயக்கத்தோடு கேட்டான் சரண்.வீடியோ கேம் விளையாடி கொண்டிருந்தவன் மனதில் இருந்த கோபத்தை ரிமோட்டில் காட்டினான்.கார் தாறுமாறாக சென்று விபத்துக்குள்ளானது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.