(Reading time: 13 - 25 minutes)

05. சதி என்று சரணடைந்தேன் - சகி

மென்மையான கீதம் அறை முழுதும் பரவி இருந்தது.மிக மிக மென்மையான காதல் கீதத்தை இயற்றி கொண்டிருந்தான் சித்தார்த்.

அவன் மனதை அப்படியே கூறியது அந்த இசை!!

மிகவும் ரம்யமான பியானோ இசை!!!

Sathi endru saranadainthen

தன்னை மறந்து வாசித்து கொண்டிருந்தான் அவன்.

உயிர் வரை ஊரும் அக்கீதம் அவன் காதலியின் சமர்ப்பணம் என்றால் அது பொய்யல்ல!!!

இசை அவனது முதல் காதலி ஆவாள்!அவளே அவனது முதல் மனைவி!!!அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் தான்...அவன் சம்பாதித்த புகழ்!!!தந்தையின் பெயர் சொல்லும் பிள்ளை அல்லவா???

ஒருவழியாக,தன் மனைவியோடு கொஞ்சி முடித்துவிட்டான்.

மனதில் அழுத்தம் தந்த ஏதோ ஒன்று கரைந்து போனது.

எழுந்து வந்து வானின் மகாராணியை கண்டான்.அழகிற்கே அழகை குறித்து பாடம் எடுக்கும் வண்ணம் அவள் வானில் வீற்றிருந்தாள்.

மனம் எதற்காகவோ ஏங்கி தவித்தது.

"சித்தார்த்!"-தந்தையின் குரல் உலுக்க திரும்பினான்.

"டாடி!"

"என்னாச்சு?ஒரு மாதிரி இருக்க?"

"டாடி!என்னால உங்கக்கிட்ட எதையும் மறைக்க முடியாது!எனக்கு இப்போ உங்க கைடு வேணும்!"

"என்ன விஷயம்?"

"அது..வந்து...நான்...ஒரு பொண்ணை லவ் பண்றேன்!"-ரவிக்குமார் எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை.

"எத்தனை வருஷம்?"

"4 வருஷமா!"

"லவ் சொன்னியா?"

"இல்லை.."

"அவளை லவ் பண்ண காரணம்?"

"அவளை லவ் பண்றது மட்டும் தான் காரணம்!"

"உடனே போய் அந்தப் பொண்ணுக்கிட்ட லவ்வை சொல்லிடு!"

"டாடி?"

"உனக்கு பிடிச்சிருக்கு!வாழ போறது நீ தான்!போய் சொல்லிடு!"

"பயமா இருக்கே!"

"டேய் என்னடா நீ?மனசுல இருக்கறதை போய் சொல்ல என்னடா பயம்?"

"உங்களுக்கு இதுக்கு முன்னாடி எதாவது இப்படி நடந்திருக்கா?"

"என்னடா இப்படி கேட்டுட்ட!என்னை பார்த்தா அப்படியா தெரியுது?"

"இல்லை...நீங்களும்,அம்மாவும் லவ் மேரேஜா?"

"போடா டேய்!உனக்கு தான் தெரியுமே!நான் என் அப்பாவை பார்த்தாலே எப்படி நடுங்குவேன்னு!அவரை மீறி நான் லவ் பண்ணிட்டாலும்!"

"அப்பறம் எப்படி?"

"நான் உன் வயசு வரைக்கும் கிராமத்துல தான் வளர்ந்தேன்.வீட்டுக்குள்ள என்னை மாதிரி ஒரு பயந்தாங்குளியை யாரும் பார்க்க முடியாது!வெளியே வந்தா,என்னை மாதிரி ரவுடியையும் யாரும் பார்க்க முடியாது!

ஒருநாள் திடீர்னு உன் தாத்தா பொண்ணு பார்க்க கூட்டிட்டு போயிட்டாரு!என்ன பண்றதுன்னே புரியலை..அன்னிக்கு தான் உன் அம்மாவை பார்த்தேன்.அந்த இடத்துலயே நான் க்ளோஸ்!உடனே கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டேன்."

"அழகுல மயங்கிட்டங்களா?'

"குணத்துல மயங்கிட்டேன்!என் காயத்ரி கூட வாழ்ந்த நாள்ல இதுவரைக்கும் ஒருமுறை கூட அவ என்னை தலை நிமிர்ந்து பார்த்ததில்லை.சரியா சொல்லணும்னா...கல்யாணத்துக்கு அப்பறம் நான் அவளுக்கு கொஞ்சம் டைம் கொடுத்தேன்.ஏன்னா,தனக்கு சொந்தமில்லாத ஒரு ஆணோட வாழ எந்தப் பொண்ணுக்கும் ஒரு தயக்கம் இருக்கும்ல! கல்யாணமாகி 2 வருஷம் என் காதல் அவளுக்காக காத்திருந்தது.அந்த காதல் கனிந்த பிறகு தான் எங்களுக்கு நீ கிடைத்த!"

"நீங்க அம்மாவை எப்போதாவது திட்டி இருக்கீங்களா?"

"ஒரே ஒரு முறை..பயங்கர வொர்க் டென்ஷன்!ஒரு கிரிம்மினல்லை பிடிக்க சொல்லி பிரஷர்.அதை யார் மேல காட்டுறதுன்னு தெரியலை.காயத்ரி மேல சம்மந்தமே இல்லாம காட்டிட்டேன்!"

"அம்மா என்ன சொன்னாங்க?"

"வாயை திறக்கவே இல்லை.சாதாரணமா இருந்தா!மறுநாளே அந்த குற்றவாளி கிடைச்சிட்டான்.அப்போ தான் என் புத்தியில காயத்ரியை திட்டினது உரைத்தது.அவக்கிட்ட மன்னிப்பு கேட்டேன்!சாதாரணமா என்கிட்ட கோபத்தை காட்டாம வேற யார்கிட்ட காட்ட போறீங்க?வாழ்க்கையில உங்க சரிபாதியா வந்துட்டேன்.உங்க சந்தோஷத்தை மட்டும் இல்லை,உங்க கஷ்டத்தையும் நான் தானே தாங்க முடியும்னு சொன்னா!அவளை எதிர்த்து என்னால பேசவே முடியலை!"

"அம்மாவை இவ்வளவு சந்தோஷமா வச்சிருந்தீங்களா?"

"நானே ஒருமுறை அவளை கைநீட்டி அடிச்சிருக்கேன்!"

"எப்போ?"

"தீக்ஷா அவ வயிற்றில இருக்கும் போது!ஒருநாள் காரணமே இல்லாம!நான் இறந்துட்டா இன்னொரு கல்யாணம் பண்ணிப்பீங்களா?நம்ம குழந்தைக்காகன்னு கேட்டா!அடிச்சிட்டேன்.பயங்கர கோபம்! இரண்டு நாள் பேசிக்கவே இல்லை.ஆனா,அவ கேட்டா மாதிரியே என்னை விட்டு போயிட்டா!நான் கை நீட்டினதுக்காக பழி வாங்கிட்டான்னு நினைக்கிறேன்!"-ரவிக்குமாரின் குரல் அடைத்தது.

"ஸாரி டாடி!"சித்தார்த் ஆறுதல் அளித்தான்.

"உனக்கு மனைவியா வர போற பொண்ணை எந்த காரணத்துக்காகவும் கலங்க வைக்காதே!"

"நான் சம்யுக்தாவை தான் உங்களுக்கு மறுமகளா தேர்ந்தெடுத்திருக்கிறேன்."-ரவிக்குமார் முகம் பிரகாசித்தது.

"உனக்கு என்ன தைரியம் இருந்தா என் தங்கச்சி பொண்ணை லவ் பண்றேன்னு என்கிட்டையே சொல்லுவ?"

"பிகாஸ் டாடி!யு ஆர் மை ஹீரோ!"-ரவிக்குமார் தன் மகனை தழுவி கொண்டார்.

"ன்பா!என்னை எப்போ பார்த்தாலும் தனியா விட்டுட்டு போற?"

"பாரு செல்லம்!வாழ்க்கையில யாரும் யார் கூடவும் அதிக நாள் வாழ முடியாது!நாம பிரிவை தாங்கி தான் ஆகணும்!"-இந்த வசனம் உங்களுக்கு நினைவிருக்கிறதா?

மேற்கூறிய இதை பலமுறை நினைவு கூர்ந்தான் ராகுல்.

நாளைய பொழுது ரகு இங்கு வர போகிறான்.

யாரை பார்க்க வேண்டாம் என்ற வரம் வேண்டினானோ!அது அளிக்கப்படவில்லை.

யாரை தன் நம்பிக்கை நாயகனாக ஏற்றானோ!அவரை,இன்று சத்ரூவாய் மனம் ஏற்றது!!

பெருமூச்சு ஒன்றை வாங்கினான்.

"ராகுல்!"

"அப்பா!"

"ஏன் நீ சாப்பிடலை?"

"பசிக்கலைப்பா!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.