(Reading time: 13 - 25 minutes)

"பொய் சொல்ல அவசியம் இல்லை!நான் உன் ஆதியா கேட்கிறேன்!"

"நாளை விடிய கூடாதுன்னு ஆசைப்படுறேன்!ஆனா அது நடக்க வாய்ப்பே இல்லை சரியா!"

"நாளை பொழுது உண்மையில் சூரிய அஸ்தமனத்தில இருந்து பிறக்க போகுது!"

"............."

"பிரகாசமில்லாத சூரியன் அஸ்தமித்த சூரியன் தானே!"

"உண்மையில சூரிய அஸ்தமனத்துக்காக பாதிக்கப்பட போறது!அவனை நம்பி இருந்தவங்க மட்டும் தான்!"

"செய்த தவறு எதுக்கும் மன்னிப்பு உண்டு ராகுல்!"

"உண்மை தான்!உன் நண்பன் பண்ண தவறுக்கும் மன்னிப்பு உண்டு!"-சரணின் முகம் பிரகாசித்தது.

"என்ன அது?"

"இரண்டு விதமான மன்னிப்பு...ஒண்ணு....அவரோட மரணம்!இரண்டு...என்னோட மரணம்!"

"ராகுல்!"

"நாளைக்கு நான் நம்ம கெஸ்ட் ஹவுஸ்க்கு போறேன்பா!எல்லாரும் போனதும் போன் பண்ணு!நான் உனக்கு போன் பண்ண மாட்டேன்!"

"பிடிவாதம் பிடிக்காதே ராகுல்!"

"வற்புறுத்தாதேப்பா!ப்ளீஸ்!என்னால இன்னும் என் வாழ்க்கையை புரிஞ்சிக்க முடியலை!"

-சரண் அவன் தோள் மீது ஆறுதலாக கைப்போட்டான்.

"உனக்கு எப்படி தோணுதோ!அதை செய்!என் பையன் தப்பு பண்ணக்கூட யோசிக்க மாட்டான்!நீ என் வளர்ப்பு!மனதை தளரவிட கூடாது!புரியுதா?"

"ஸாரிப்பா!"

"யாராவது அப்பாக்கிட்ட ஸாரி கேட்பாங்களா?"-ராகுலுக்கு அவன் மனக்கவலை குறைந்தது போல் ஆனது.அவன் சரணை அணைத்துக் கொண்டான்.

"யு ஆர் மை ஹீரோப்பா!"-தன்னையே அறியாமல் சரண் விழிகள் இரு துளி கண்ணீரை சிந்த தான் செய்தன.

அமைதியான சூழல்...

மனதை அமைதிப்படுத்தும் செய்தி வந்தால்...

வந்தது...

ராகுலுக்கு மட்டும்!!!

கேளுங்கள்...

மனம் சற்று பதற்றமில்லாமல் காணப்பட்டான் சரண்.

ராகுல் தன் உடமைகளை பயணத்திற்கு தயார் செய்து கொண்டிருந்தான்!!!

"எங்கேடா கிளம்பிட்ட?"

"அதான் நேற்றே சொன்னேனே!"

"நீ போக வேண்டிய அவசியம் இல்லை!"

"ஏன்?"

"ரகு வரலையாம்!"

"என்னவாம்?"

"முக்கியமான அஸைண்மண்ட் வந்துடுச்சாம்!"-கிளம்பி கொண்டிருந்தவன் அப்படியே போட்டுவிட்டு கட்டிலில் படுத்து போர்வையை போர்த்திக் கொண்டான்.

"என்னடா பண்ற?"

"அதான் வரலையே!நான் ஏன் என் தூக்கத்தை மிஸ் பண்ணனும்...அதான்!"-அவன் செய்கைக்கு  சிரிப்பதா?வருத்தப்படுவதா?என்றே சரணுக்கு புரியவில்லை.

"குட்நைட்பா!"

"குட்நைட்டா!இன்னிக்கு நீ காலிடா!"-இருவரும் தலையணையை வைத்து சண்டையிட ஆரம்பித்தனர்.

மனிதனின் மனதில் குழந்தைத்தனம் உயிரில் கலந்த உறவு என்று நினைக்கிறேன்!!

அவன் எவ்வளவு பெரியவனாய் வளர்ந்தாலும் மனம் தனது கவலைகளை தேடி ஓடும் இந்த வாழ்வில் கவலைகளை தொலைத்து குழந்தையாக மாற எத்தனை ஆண்டானாலும் தவமிருப்பது பொய்யல்ல!!!

"ன்னடா காரியம் பண்ணிட்டு வந்து நிற்கிற?"-மனம் உடைந்து வேதனையில் கத்தினாள் பவித்ரா.யாரென்று நினைவிருக்கிறதா???

"இப்போ எதுக்கும்மா கத்துற?ஆமா...நான் கிளப்புக்கு போய் குடித்தேன் தான்!அதுக்கு என்ன இப்போ?"

"உன் அப்பாவுக்கு தெரிந்தால் எவ்வளவு வேதனைப்படுவார்!"

"ம்மா...நான் இப்படி தான் இருப்பேன்.நீங்க எனக்கு பிடித்தா மாதிரி மாறி தான் ஆகணும்!"-அவன் அப்படி கூறவும் அவன் கன்னத்தில் ஒரு அறை விழவும் சரியாய் இருந்தது.அடித்தவன் நிரஞ்சன்.

"என்ன சொன்ன?நாங்க உன் விருப்பத்துக்கு மாறணுமா?உனக்கு என்ன தைரியம் இருந்தா இப்படி பேசுவ?கொன்னுடுவேன் ஜாக்கிரதை.."

"நீ என்னையே அடிச்சிட்டியாப்பா!"

"அடுத்த முறை இதே தப்பை பண்ணா சாகடிச்சிடுவேன்!"-கடுைமயான விவாதம் நிகழ்ந்தது.

"என்னங்க..நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க!அர்ஜுன் நீ உள்ளே போ!"-அவன் முறைத்து கொண்டே சென்றுவிட்டான்.

"இவனை என்ன பண்ணுவதுன்னே தெரியலையே பவி!"-நிரஞ்சன் கூறவும் அவன் கைப்பேசி ஒலிக்கவும் சரியாய் இருந்தது.

"ஹலோ!"

"பெரியப்பா!ராகுல் பேசுறேன்!"

"சொல்றா ராஜா!"

"என்னப்பா!குரல் ஒரு மாதிரி இருக்கு?"

"ஒண்ணுமில்லை..."

"அர்ஜூன் விஷயமா?"

"ம்.."

"என்ன பண்ணான்?"-விவரத்தை கூறினான் நிரஞ்சன்.

சிறிது யோசித்தவன்...

"ஒண்ணு பண்றீயா?அர்ஜூனை கொஞ்ச நாள் இங்கே அனுப்பேன்!"

"என்ன?"

"டெல்லியிலேயே வளர்ந்தவன்ல!அதான்,தடுமாறிட்டான்.நீ இங்கே அனுப்பு!கொஞ்சம் இடம் மாறினா ஆளும் மாறி விடுவான்!"

"வேணாம் ராகுல்!"

"அட அனுப்புப்பா!நீ கத்துறது கொஞ்ச நாள் நாங்க கத்துறோம்!"-நிரஞ்சன் பயங்கரமாக தயங்கினான்.

"அப்பா!"

"சரி கண்ணா!நான் அனுப்புறேன்!ஒருவேளை அவன் ஏதாவது தப்பு பண்ணா!நீ என்ன வேணாலும் அவனுக்கு தண்டனை கொடு!ஆனா, அர்ஜூனை மனுஷனா மாற்றி கொடு!"

"சரிப்பா!"-இணைப்பு துண்டிக்கப்பட்டது.

"ராகுல் என்னங்க சொன்னான்?"

"அர்ஜூனை அனுப்பி வைக்க சொன்னான்!எனக்கு நம்பிக்கை வந்திருக்கு!அர்ஜூன் மறுபடியும் இங்கே வரும்போது மனுஷனா மாறி இருப்பான்!"-நிரஞ்சன் மனதின் ஏக்கம் அப்போது தான் வெளிப்பட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.