Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 9 - 17 minutes)
1 1 1 1 1 Rating 4.67 (6 Votes)
Pin It

10. உன்னிடம் மயங்குகிறேன்..! சொல்ல தான் தயங்குகிறேன்..! - ஸ்வேதா

ர்ஜுன் வெகு நேரமாக அந்த சுழல் நாற்காலியில் அமர்ந்து கொண்டு எதிர்க்கே மேஜைக்கு அந்த பக்கம் இருக்கும் நாற்காலியை பார்த்துக்கொண்டே யோசனையில்  இருந்தான். இரண்டு மூன்று முறை அவன் நண்பனும் மற்றும் விளம்பர கம்பனியின் பார்ட்னருமான அசோக் கதவை தட்டியும் ஆழந்த  யோசனையிலிருந்து வெளியே வரவே இல்லை.

உள்ளே வந்த அசோக் அவனை உலுப்பினான் "மச்சி,!!!"

தெளிந்தவன் குற்ற உணர்வுடன் "வா அசோக்!!, ஐ ஆம் சாரி" என்றான்.

உன்னிடம் மயங்குகிறேன்..!சொல்ல தான் தயங்குகிறேன்..!

"இட்ஸ் ஓகே. வெளியே அந்த பெண் யாரு?? " என்று அவன் கேட்க தொடங்குகயிலே அர்ஜுன் முறைக்க ஆரம்பித்துவிட்டான். அவன் பார்வையில் என்ன தெரிந்ததோ,

"ஐ ஜஸ்ட் ஆஸ்க்ட், நீ ஏன் டென்ஷன் ஆகுற?"

"இல்லை எனக்கென்ற தலைவலி ஒன்று வந்திருக்கு என்றேனே அது இது தான்"

"ஒ….. இதா தலைவலி!!, கூல் கூல் முறைக்காதே!! கல்யாணம் செய்துக்கலாம் அர்ஜுன் தப்பில்லை" என்றான் கிண்டலாக

அர்ஜுன்  இலகுவாக "எப்படி ஆரம்பிப்பது" என்று கேட்டான்.

அசோக்கிற்கு தலை சுற்றி விட்டது.அவன் கிண்டலில் இவன் கடுமையாகி வெளியே துரத்த போகிறான் என்று எதிர்பார்த்தவனிர்க்கு இப்படி ஒரு அதிர்ச்சி.

"என்ன பார்ட்னெர்?? ஐடியா வேண்டுமா" என்று கேட்டான் கிண்டலாக.

அர்ஜுன் முகத்தில் பளிசென்ற புன்னகை பூக்க அசோக் ஆச்சர்யமாக கவிதா வேலை செய்யும் அறையை நோக்கினான். அவள் சலனமே இல்லாமல் வேலையை பார்த்துக்கொண்டிருந்தாள்.

அர்ஜுன்," மச்சி, நீ எப்படி காதலை சொன்ன??"

அசோக் சிரித்துக்கொண்டே "அது நடந்து பத்து வருஷம் ஆச்சு, ஏன் டா??" என்று கேட்டான்.

கல்லூரியில் காதல் ஆரம்பித்து கல்யாணம் செய்து இரண்டு வருடம் ஆகி போனாலும் அந்த தருணம் நினைக்க இன்றும் அசோக்கிற்கு படபடப்பாக இருந்தது.

அசோக், "உனக்கு தோன்றதை தைரியமாக சொல்லிடு" என்றான்.

பல கதைகள் பேசிவிட்டு அசோக் கிண்டாலாக "இனி அந்த பக்கம் வரர்து கஷ்டம் அதனாலே வார கணக்குகளையும், பைல்ஸ் நானே அனுப்பிடறேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

ர்ஜுனும் தன வேலைகளை தொடர்ந்தான்.

கவிதா தன் வேலைகளை எல்லாம் முடித்துக்கொண்டு "அர்ஜுன் சார் உங்க ப்ரெண்ட் குன்னுர் எஸ்டேட் பார்க்க நீங்க அடுத்த வாரம் போகணும் ஆகாஷ் ரீமெயின்டர் பார்த்தேன்" என்றாள் ஞாபகப்படுத்தும் விதமாக.

அர்ஜுன்,"சரி அப்போ மானஜேர் கிட்ட அதற்க்கு ஏற்பாடு செய்ய சொல்லு"  என்று மேலும் அவளிடம் மற்ற கணக்குகள் பார்க்க கொடுத்தான்.

கவிதா அலுப்பாகி "சார் சும்மா எனக்கு இந்த நம்பர்ஸ் பார்த்து பார்த்து போர்" என்றாள்.

அர்ஜுன் அவள் அலுப்பை பார்த்து கடுகடுத்தான்.அவன் முகம் பார்த்து விளக்கம் கொடுத்தாள்."நீங்க கண்டிப்பா இருக்கீங்க  அதனாலே  அதில்  ஏதும்  தவறு  இருக்கறதில்ல"

"உன்னை தவறு இருக்கா பார்க்க கொடுக்கவில்லை, எதை எப்படி பராமரிக்கணும் என்று கற்றுக்கொள்ள கொடுத்தேன்" என்றான்.

அவள் அசடாக சிரித்தாள்.

"முயல்குட்டி" என்று மனதில் சொல்லிக்கொண்டான்

“டி எஸ்டேட் கணக்கு பார்க்க என்னோடு வந்து எனக்கு உதவி பண்ணு நிறைய கற்றுக்கொள்வாய்" என்றான் ஆணையிடும் விதமாக.

கவிதா ஒப்புக்கொண்டதும் அர்ஜுனிர்க்கும் மனதில் எதோ ஒரு மூலையில் குதுகலம் கொப்பளித்தது அவன் மனம் விட்டு பேச சந்தர்ப்பம் கிடைத்தது எண்ணி.

கவிதாவிற்கும் பேச வேண்டி இருந்தது. இருவரும் பேசினால் தீரும் என்று நினைத்த கதை முற்றுபுள்ளி அல்ல அது தொடக்கபுள்ளியென விதி அவர்களை பார்த்து சிரித்தது.

குரோதத்துடன்  இருந்தவள் காவியா  சந்தர்ப்பம் கிடைத்ததும்  "அவருக்கும் என் மேல தான் காதல். ஆசை, எதோ வீட்டில் கட்டாயப்படுத்த உன்னை திருமணம் செய்தார்" என்று சௌமியா மனதை கலைத்தாள்.

சௌமியா அவளை நம்பவில்லை கணேஷின் வார்த்தைகள், செயல், அவன் அன்பின் மேல் இருந்த நம்பிக்கை அவளை சந்தேகிக்க விடவில்லை.

அந்த நிகழ்ச்சிக்கு பின் சௌமியா கே.ஆர் அசோசியேட்ஸ் வரவில்லை என்றாள்.

கணேஷ்,"சௌமி உனக்கு இங்கே போர் அடிக்குமே என்னோடு இருப்பதில் என்ன பிரச்சனை ??"

காவியாவின் பேச்சு கொடுத்த எரிச்சலில் இருந்தவள் "எனக்கு தான் அங்க வர பிடிக்கவில்லை என்று சொல்லிட்டேன். விடுங்களேன் " என்றாள்

"அது தான் ஏன்?"

"நீங்க உங்க வேலையே பார்க்கறீங்க, சில நேரம் அங்கே இருக்கறதில்ல அதனால் அங்க இருக்க பிடிக்கவில்லை "

“எந்நேரமும் மற்றவரை சார்ந்தே இருகிறாய். அப்படி இருக்க கூடாது சௌமி. என்னோடு வந்து வெளி உலகம் பார்.”

"வேண்டாம் எனக்கு என் வீடு, பாட்டி,நீங்க போதும் "

"என்ன ஆச்சு உனக்கு, சம்திங் இஸ் ராங் !!"

"ஏதும் ஆகலை நான் நல்லாத்தான் இருக்கேன் "

"உனக்கு அங்க பேசறதுக்கு துணை வேண்டுமா?, வரவேற்பில் இருக்கும் ரீட்டா இருக்கா, காவியா இருக்கா "

"எனக்கு யாரும் வேண்டாம் விடுங்களேன் "

சௌமியா பிடிவாதமாக இருக்க கணேஷ் விட்டுக்கொடுத்தான்.

ந்த விஸ்தாரமான அறையில் தன் கமெராவை பழுது பார்த்துக்கொண்டிருந்த நிஷாவை வேலைக்கார பெண் கலைத்தாள்.

"விசிட்டர்ஸ் பார் யூ மேம்"

"எஸ் வரசொல்லுங்க "

ஆகாஷ் உள்ளே நுழைந்ததும். நிஷாவிற்கு பூமி வேகமாய் சுற்றியது.அவன் சிரித்து கொண்டே "எப்படி இருக்க நிஷா " என்று கேட்டதும் ஆச்சரியம் தங்காமல் கண்களை விரித்தாள்.

"ஆ... காஷ் நீ.. நீங்க எப்..படி இங்க ?"

"ஏன் நான் வரகூடாதா??? இங்க போட்டோகிராபி கான்டெஸ்ட் பார்க்க வந்தேன், உங்க போடோஸ் நல்லா இருக்கு என்று பாராட்டிட்டு போகலாம் என்று வந்தேன் "

"நன்றி "என்றாள் தலை குனிந்தப்படி. யாரிடம் வேண்டுமானாலும் தப்பித்து கொள்ளலாம். மனசாட்சியிடம் முடியாது.செய்த குற்றம் தலை குனிய வைக்கும்.

ஆகாஷ் தனக்கு சிங்கபூர் சுற்றி காட்டும் படி அவளை கேட்டான். அவள் படம் பிடிக்க போகையில் அழைத்துப்போவதாக கூறினாள்.

அவன் சிங்கப்பூர் வந்த காரணம் அவனும் சொல்லவில்லை, அவளும் கேட்கவில்லை.

எண்ணி பத்து நிமிட சந்திப்பு இருவருக்குமே தித்திப்பாக அமைந்தது. அடுத்த இரண்டு மணிநேரத்தில் நிஷாவிற்கு போன் வரும் வரை.

"அம்மா நிஷா அப்பா சென்னை வரும் போது மாப்பிளையையும் உன்னையும் பார்க்கலாமென்று இருக்கேன்"

"அப்படியா ப்பா !! வாங்க பார்க்கலாம், எப்போது வருவீங்க ?"

"தேதி கன்பர்ம் பண்ணி பிறகு சொல்கிறேன் "

இது என்ன புது கதை.கவிதாவை எப்படி காப்பாற்றுவது. நிஷா தப்பிப்பது எப்படி.??

ன்று இரவு உணவிற்கு ஆகாஷை அழைத்தாள். சிக்கலில் இருப்பவள் தன் நிலைமையை ஆகாஷிடம் கூறலானாள். அவன் நெஞ்சம் மகிழ்ச்சியில் விம்மியது. தனக்கு பிரச்சனை உதவிக்கு அழைக்கிறாள் என்ற எண்ணம் எழ.

நிஷாவை புரிந்து வைத்திருந்தவன் அவள் உதவி தான் பார்த்துகொள்வதாக சுமையை தன் தோளிற்கு மாற்றிக்கொண்டான்.

நிஷாவின் அப்பா சென்னை வந்தால் சமாளிப்பதற்கு அவன் தன் ஐடியாவை சொன்னதும், நிஷா

"நிறைய சினிமா பார்பீங்க போல் இருக்கே??"

"நீயும் தான், இல்லையென்றால் தேவை இல்லாமல் இன்னொரு அப்பாவி பெண்ணை சிக்கலில் மாட்டிவிடுவாயா ??"

 •  Start 
 •  Prev 
 •  1  2 
 •  Next 
 •  End 

About the Author

Swetha

Latest Books published in Chillzee KiMo

 • Cinema suvarasiyangalCinema suvarasiyangal
 • Kandathoru katchi kanava nanava endrariyenKandathoru katchi kanava nanava endrariyen
 • Manathil uruthi vendumManathil uruthi vendum
 • Mounam vizhungiya ragangalMounam vizhungiya ragangal
 • Nethu paricha rojaNethu paricha roja
 • ThaayumaanavanThaayumaanavan
 • Then mozhi enthan thenmozhiThen mozhi enthan thenmozhi
 • Vennilavu enakke enakkaVennilavu enakke enakka

Add comment

Comments  
# NICEKiruthika 2016-07-29 17:11
Nice Epi
Reply | Reply with quote | Quote
# RE: உன்னிடம் மயங்குகிறேன்..! சொல்ல தான் தயங்குகிறேன்..! - 10Hamsa Siva 2015-02-10 18:33
Hi Swetha!
Please update the epi's on any schedule..like weekly or by weekly or monthly.. doesnt matter but let us know whn is going to be the next epi exactly... coming each day for this story but no updates ...I know you are busy but plsssssssssss and tnxxxxxxxxxxxxx
Reply | Reply with quote | Quote
# RE: உன்னிடம் மயங்குகிறேன்..! சொல்ல தான் தயங்குகிறேன்..! - 10Admin 2015-01-17 14:12
sweet epi Swetha
Reply | Reply with quote | Quote
+1 # RE: உன்னிடம் மயங்குகிறேன்..! சொல்ல தான் தயங்குகிறேன்..! - 10Jansi 2015-01-14 23:43
Very nice update Sweta.

வேணிம்மா,"உலகிலே இப்படி மிக மட்டமாய் பிரபோஸ் செய்ய உன்னால் மட்டுமே முடியும் கண்ணா " என்றார் சிரித்தப்படி
Romba rasikumpadi irundadu. :)
Reply | Reply with quote | Quote
# RE: உன்னிடம் மயங்குகிறேன்..! சொல்ல தான் தயங்குகிறேன்..! - 10swetha chandra sekaran 2015-01-15 00:07
Quoting Jansi:
Very nice update Sweta.

வேணிம்மா,"உலகிலே இப்படி மிக மட்டமாய் பிரபோஸ் செய்ய உன்னால் மட்டுமே முடியும் கண்ணா " என்றார் சிரித்தப்படி
Romba rasikumpadi irundadu. :)

thank uuuuuu........ :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: உன்னிடம் மயங்குகிறேன்..! சொல்ல தான் தயங்குகிறேன்..! - 10Madhu_honey 2015-01-14 22:17
Swetha...adikkadi update k :clap: kudungalen...ivlo superrraaa kathai kondu poittu nxt update seekiram kudukkala ungala 3:) 3:) Muyalkuttiyaa arjun pakkathil andaa kundaa ellam kondu vanthu vaikkalaama :grin: :grin: Akash Nisha kottu sernthu enna kulappi vida poraanga :Q: Kavi oru problemnaa kannu thaana arjun pakkam thaan poguthu.. Boss sema proposal ponga :clap:
Reply | Reply with quote | Quote
# RE: உன்னிடம் மயங்குகிறேன்..! சொல்ல தான் தயங்குகிறேன்..! - 10swetha chandra sekaran 2015-01-15 00:06
Quoting Madhu_honey:
Swetha...adikkadi update k :clap: kudungalen...ivlo superrraaa kathai kondu poittu nxt update seekiram kudukkala ungala 3:) 3:) Muyalkuttiyaa arjun pakkathil andaa kundaa ellam kondu vanthu vaikkalaama :grin: :grin: Akash Nisha kottu sernthu enna kulappi vida poraanga :Q: Kavi oru problemnaa kannu thaana arjun pakkam thaan poguthu.. Boss sema proposal ponga :clap:

enakkum aasai than madhu.. but tamil la type panni anuppa kastama irk... tats y... koncha naal la free ayduvan.. aprm parunga.. :-) :lol: till then stay tuned :yes: 8)
Reply | Reply with quote | Quote
# RE: உன்னிடம் மயங்குகி றேன்..! சொல்ல தான் தயங்குகி றேன்..! -10Agitha Mohamed 2015-01-14 22:14
Super update mam (y)
Akash cho sweet :yes:
waiting for the nxt epi
Reply | Reply with quote | Quote
# RE: உன்னிடம் மயங்குகிறேன்..! சொல்ல தான் தயங்குகிறேன்..! - 10tabu janaki 2015-01-14 13:18
nice finishing.... ;-)
Reply | Reply with quote | Quote
# RE: உன்னிடம் மயங்குகிறேன்..! சொல்ல தான் தயங்குகிறேன்..! - 10gayathri 2015-01-14 12:34
Nice upd.. (y)
Reply | Reply with quote | Quote
# RE: உன்னிடம் மயங்குகிறேன்..! சொல்ல தான் தயங்குகிறேன்..! - 10vathsala r 2015-01-14 12:13
very nice update swetha (y)
Reply | Reply with quote | Quote
# RE: உன்னிடம் மயங்குகிறேன்..! சொல்ல தான் தயங்குகிறேன்..! - 10ManoRamesh 2015-01-14 11:48
(y) epi,
imaisaya muyal kuttiya oru mudivuku vaanga Arjun.
2 perum neraya cinema parkareenga sari,
inime enna pannaporeenga
Reply | Reply with quote | Quote
# RE: உன்னிடம் மயங்குகிறேன்..! சொல்ல தான் தயங்குகிறேன்..! - 10swetha chandra sekaran 2015-01-14 11:16
thank u.. :) :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: உன்னிடம் மயங்குகிறேன்..! சொல்ல தான் தயங்குகிறேன்..! - 10Nithya Nathan 2015-01-14 09:48
Super update swetha :clap:
Arjun kopatttakooda azhakuthan. kavi Arjun unakkuthan.
kaviya kapathuratha ninaichi Nisha, akash ethum sothapama irukanum
Reply | Reply with quote | Quote
# RE: உன்னிடம் மயங்குகிறேன்..! சொல்ல தான் தயங்குகிறேன்..! - 10swetha chandra sekaran 2015-01-14 19:16
Quoting Nithya Nathan:
Super update swetha :clap:
Arjun kopatttakooda azhakuthan. kavi Arjun unakkuthan.
kaviya kapathuratha ninaichi Nisha, akash ethum sothapama irukanum


:grin: :lol: ;-) hheee nice guess nithya...
Reply | Reply with quote | Quote
# RE: உன்னிடம் மயங்குகிறேன்..! சொல்ல தான் தயங்குகிறேன்..! - 10Keerthana Selvadurai 2015-01-14 09:47
Nice update swetha (y)
Reply | Reply with quote | Quote
# RE: உன்னிடம் மயங்குகிறேன்..! சொல்ல தான் தயங்குகிறேன்..! - 10Meena andrews 2015-01-14 09:45
Very nice update (y)
Arjun....konjam sirichu dan pesen kavi kita....
Pavam kavi.....
Akash-nisha dan kavi ya save panuvangala.....
Eagerly waiting for next episode
Reply | Reply with quote | Quote
# Unnidam..MAGI SITHRAI 2015-01-14 09:19
nice updates Swetha,,, :dance:

Arjun Arjun..musudu pa nee... Kavi than pavam...and Kavi ma..dont worry...Arjun only in love with u :D

Nisha anta chinna pillai tanamana tappu seiyalana ..nampa hero heroin meeting a nadanturukate..so Nisha sencatu 100% correct Aakash.. ;-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: உன்னிடம் மயங்குகிறேன்..! சொல்ல தான் தயங்குகிறேன்..! - 10Thenmozhi 2015-01-14 08:25
nice update Swetha.
Pavam Kavitha naduvil vanthu matikitu mulikuranga.
Hope Akash and Nisha finds a way to help her.
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NSS

NSS

VVU

KiMo

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KTKOP

KET

TTM

PMME

EMS

IOK

NIN

KDR

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top