(Reading time: 8 - 15 minutes)

07. நீ எனக்காக பிறந்தவள் - Parimala Kathir

"ஹோ ஆரு டார்லின்.... என்ன திருப்பள்ளி எழும்பிட்டியா?"

"ம்..ம்... உங்க ஆரு டார்லிங் இப்ப தான் திருப்பள்ளி எழும்பி கோவிலுக்கு போக ரெடியட்டிருக்கா!"

"ஓ..... அப்போ இப்ப தான் குளிச்சிட்டு வந்து போன் பண்றியா?"

Nee enakaga piranthaval

"ஆங்... ஏன்?"

"அது .... ஒண்ணுமில்ல சும்மா தான்....." என்று இழுத்தான்

 அவளுக்கு அவன் என்ன சொல்ல வந்தான் என்று நன்றாக தெரிந்தது அவளது கன்னங்கள் சூடேறின"

"என்னடி பேச்சையே கானம் என்ன கனவு கண்டிட்டிருக்கியா?" என்றான் வினயத்துடன்

"ம்.. இவர் பெரிய மன்மதன் நாங்க இவரைத் தான் கனவு கண்டிட்டிருக்கோம்" என்றாள் குளைந்த குரலில் 

அவளது இந்த குழைவில் அவன் கிறங்கிப் போனவனாய் "அப்போ உண்மையிலேயே  நீ என்னைத் தான் நினைச்சி கனவு கண்டியாடி" 

அவளை கண்டு கொண்டானே என்று அவள் வெட்கித் தவித்தாள் .அதொன்றுமில்லை.... ஆமா நீங்க ஊருக்குப் போக ரெடியாயிட்டீங்களா? என்றாள்  கதையை மாற்றும் எண்ணத்தோடு.

அவளை கண்டு கொண்டவன் அவளை மேலும் தவிக்க விடாது  ஒரு ரகசிய சிரிப்போடு "இல்லடா நான்  உன்னை பாத்திட்டு அப்பிடியே புறப்பட்டிட்டேன் இப்ப வீட்டில நின்னு தான் பேசுறேன்."

"ஏன் க்ரிஷ் இப்பிடி அண்டைமில  டிரைவ் பண்றீங்க இனிமே அப்பிடி பண்ணாதீங்க! என்றாள் கவலை தோய்ந்த குரலில்

அவளின் கவலையை உணர்ந்தவன் "சரிம்மா இனிமேல் அவசியமில்லாமல் அன்டைமில செல்ப்டிரைவ் பன்னல போதுமா?"

"ஆமா.... இப்பிடி தான் நடு ராத்திரியில லாங் டிரைவ்  பண்ணி அக்சிடன் ஆனப்போ இனிமேல்  அப்பிடி செய்யமாட்டேன் ன்று சொன்னீங்க இப்ப திரும்பவும் அத தானே செய்திருக்கீங்க?"

ந்த நாள் அவனுக்கு நன்றாக நினைவிருக்கிறது அவன் பிசினஸ் மீட்டிங் முடித்து விட்டு மறு நாள் அவளை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் தான்  கண்டியிலிருந்து  வவுனியாவரை  தானே கார் ஊட்டி வந்தான் கார் வவுனியாவை நெருங்கையில்  ஒரு நிமிடம் நித்திரை கலக்கத்தில் கண் அயன்று போஸ்ட் கம்பத்தில் காரை விட்டு விட்டான் . நல்ல காலம் பெரிதாய் அடி இல்லை தலையில் சிறிய காயம் அதுக்கு அவள் பட்ட பாடு  அவனுக்கு நன்றாய் தெரியுமே அன்று சத்தியம் வாங்காத குறையாய் அவனிடம் கேட்டுக் கொண்டாள் நேரம் கேட்ட நேரத்தில்  இப்பிடி டிரைவ் பண்ண வேண்டாம் என்று அவனும்  அவளது காதலிக்கு  சரி என்றான் . இப்போது அதை மறந்து தூக்கம் இன்றி  கார் ஓட்டியதற்கு தான் இந்த கவலை. 

 " ஏய்... பிறந்த நாள் அதுவும் இப்பிடியா கவலைப் பட்டிட்டிருப்பாய் நான் தான் சொல்றனில்ல இனிமேல் இப்பிடி அவசரமாய் போகனுமின்னால் யாரையாவது கூட கூட்டிட்டு போறன் இல்லாட்டி ரெயின் இல போய்க்கிறன்  போதுமா  பொண்டாடி..."

"ம்...ம்... "

அவனது பொண்டாடி என்ற ஒர்ரி வார்த்தையில் அவள் பாகி கரைந்து விட்டாள். அது தெரிந்து தான் அவன் அப்பப்போ அவளது நிலை அறிந்து பொண்டாடி என்று அழைப்பான்.

அவனது  அந்த அழைப்பிற்கு சக்தி இருக்கத்தான் செய்தது அவள் தனது கவளி மறந்து மறந்து அவன் மெது கோடா காதலுடன் "எப்ப திரும்பி வருவீங்க க்ரிஷ்..."

"சாரி...... நீங்க  எவ்வளவோ நாளைக்கு பிறகு இப்ப தான் உங்க வீட்டுக்கு போயிருக்கீங்க!... அதுக்குள்ள  நான் எப்ப வருவீங்க?  என்று கேட்கிறன்...என்ன செய்றது உங்களை பிரிந்து என்னால இருக்க முடியல க்ரிஷ்.." என்றாள் அவன் மீது கொண்ட காதலால் கசிந்துருகி.

அது அவனுக்கு தெரியாமலில்லை அவனுக்கும் அவள் மீது அதே காதல் இருக்கத் தான் செய்கிறது ஆனால் அவனும் தனது தொழிலை பார்க்க தானே வேண்டும்

"எனக்கும் இந்த இரண்டு நாள் உன்னை பார்க்காமல் இருக்க கஷ்டமாய் தான் இருக்கு என்ன செய்றது அப்பம்மாவையும் பார்கனுமில்லை இரண்டு மாசமாய் அவங்கள போய் பார்க்கலடி.." என்றவளுக்கு சமாதானம் சொன்னான்.

"இல்ல க்ரிஷ் நான் நீங்க அவங்கள போய் பார்க்க கூடாது என்ற அர்த்தத்தில சொல்லல..." என்று அவசரமாக எடுத்துரைத்தால் எங்கே அவன் தன்னை தவறாக புரிந்து கொண்டு விடுவானோ என்று  அஞ்சினால்.

"ஏய்.... ஏன் இப்ப இப்பிடி பதறுறாய்எனக்கு உன்னை தெரியும் ஆரு.  அப்புறம் நான் உரில இருந்து வந்தஹும் உனக்கு ஒரு குட் நியூஸ் சொல்றன் "

ஆரு அதற்கு பதில் சொல்லும் முன் ஆருவின் தாய்

"என்னம்மா நீ ரெடியாயிடியா நாங்க எவ்வளவு நேரம்  வெயிட் பண்ணிட்டிருக்கோம் இன்னுமா புடவை கட்டிட்டிருக்காய்?" என்றால் தாய் தேவிகா 

"இதோ ஒரு பத்து நிமிஷம்மா வந்திடுறன்"

"சரி சரி சீக்கிரமா வா?

"ஏய் ஆரு நீ புடவை கட்டிட்டா கோவிலுக்கு போறாய் ?"

ஆமா  ஏன்?

"நீ  புடவையில எப்பிடி இருப்பே? அத பாக்கணும் போல இருக்குடி எனக்கு போட்டு எடுத்து செல்லில அனுப்பிடுடி"

"ஆங் ..... ஆங்...... பாக்கலாம் இப நீங்க போனை வைங்க நான் ரெடியாகணும்" என்று சொல்லி அவனது பதிலுக்கு காத்திருக்காது போனை கட் செய்து விட்டாள்.

அது அவளுக்கு க்ரிஷ் முதன் முதலாய் வாங்கி கொடுத்த காதல் பரிசு  இளம் சிவப்பும் ஆகாய நீலமும் கலந்த அழகிய பட்டுப்புடவை.

அந்த புடவை அவளது நிறத்திற்கு எடுப்பாய் இருந்தது  தலையை தளரப் பின்னி அதிலே மல்லிகை சரம் சூடியிருந்தாள் அது அவளது தோள்களின் மீது கொஞ்சி விளையாடியது புடவையின் நிறத்தில் காப்பு அணிந்திருந்தாள் அதே நிறத்தில் காதணியும் கழுத்தில் மெல்லிய மாலையும் அணிந்து தேவலோக கன்னி போல மிழிர்ந்தாள்.

"திருடா.... இந்த அழகை எப்போடா உன் சொந்தம் ஆக்கிக் கொள்ளப் போகிறாய் " அவள் முன்பே எடுஹ்து வஹ்ருன செல்பியை அவனுக்கு அனுப்பி விட்டு அந்த போட்டோவை பார்த்து கேட்டாள். அவனது வாயால் அவள்  முதல் முதலில் அவன் கொடுத்த புடவையில்  எப்பிடி இருக்கிறேன் என்று கேட்க ஆசைப்  பட்டாள்.

"அவளது போட்டோவை இமைக்க மறந்து  பார்த்திருந்தான். 

"எப்போடி உன்னோட அழகையும் திமிரையும்  நான் சொந்தமாக்கிக் கொள்ள எனக்கு தரப்  போறாய்? அவளோ அழகாய் இருக்கேடி..... பொண்டாட்டி .... ஐ... லவ் யூடீ..."என்றான் கிளர்ச்சியுடன் .  அவன் மனமும் உடலும் தனது காதல் தேவதைக்காக ஏங்கி தவித்தது.

அவள் நாணச் சிவப்பு கொண்டாள். தன்னைப் போலவே அவனுள்ளும் காதல்.... மாய வேலை செய்வதை உணர்ந்தாள்.

"என்னடி பேச்சையே காணோம் இருக்கியா?

"எல்லாம் இங்க தான் இருக்கோம் " என்றாள் கிளர்ச்சியுடன் 

"உன்னை இப்பவே அள்ளி எடுத்து ஆயிரம் முத்தம் தரனும் போல இருக்கடி என்ன செய்றது 

நீ அங்கே...  நான் இங்கே ... என்று சோகமாய் பாட்டு பாட வேண்டியதாய் இருக்கே." என்றான் சோகமாக 

 "போதுமே உங்களுக்கு இத  விட்டல் வேற பேச்சே கிடையாது எப்ப பாத்தாலும் இதையே பேச வேண்டியது. " என்றால் அவள் போய் கோபத்தோடு ஆனாலும் அவன் சொன்ன வார்த்தைகளை அவளும் ரசித்தால் அவளது மனமும் அவனிப் பார்க்க அந்த நொடி தவித்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.