(Reading time: 9 - 18 minutes)

12. ஷைரந்தரி - சகி

கண்டு விரிந்த அந்த மண்டபம்.....

அந்த இடம் முழுதும் தூசும்,மாசுமாய் இருந்ததன....

கோபுரம் வானளவு உயர்ந்து நின்றது அந்த ஆலயத்தில்....

shairanthari

திடீரென அந்த ஆலயத்தின் கதவு தானாய் திறந்தது.

உள்ளே...

அன்று,நாம் ஷைரந்தரியின் அறையில் பார்த்த அதே கரு உருவம் பிரவேசித்தது.

கோவிலுக்குள் ஆவியா?என்ன இது குழப்பம்?

கதையை படியுங்கள்...

விளங்கும்...

பிரவேசித்த அந்த உருவம்...

அன்று,சிவா உள்ளே வரை வந்து திரும்பி சென்ற ஆதிசக்தியின் சந்நிதானத்தின் முன் நின்றது.

அப்படியே சிறிது நேரம் நின்றிருந்த அந்த உருவம்..

திடீரென ஒரு பெண்ணாய் மாறியது.

யாரது??...அவளின் அந்த கண்கள் அதில் பழிவாங்கும்,உணர்வு மட்டுமே இருந்தது.முழு உக்கிரமாக இருந்தது.

"என்ன பார்க்கிற??என்னை சாகடிச்சிட்டு,அங்கே உன் பொண்ணு ஷைரந்தரி... நிம்மதியா இருக்கா! என்னோட இந்த நிலைக்கு காரணமானவள்... சந்தோஷமா இருக்கா! எவ்வளவு ஆசைகளோட வாழ்ந்தேன்??என்ன இந்த நிலைக்கு வர வச்சிட்டாளே! தூக்கி வளர்த்தவங்களை பாசமா நெருங்கக் கூட முடியலை!விட மாட்டேன்...

உனக்கு,என்னைவிட அவ தான் முக்கியம் அப்படி தானே?அதான்...அன்னிக்கு,நான் கதறி அழுதப்போ கூட அமைதியா இருந்தல்ல?நான்...எதாவது பண்ணிடுவேன்னு அவளைச் சுற்றி கட்டு வேற???விட மாட்டேன்....உன் பொண்ணை அழிச்சே தீருவேன்!அவளை விட மாட்டேன்!"-அவளது அந்த கர்ஜனை சிம்ம கர்ஜனை போல ஒலித்து வானில் இருந்து இடி முழங்கிற்று.

தே சமயத்தில் ....

"ஐ.. சிவா!சிவா! மழை வர போகுது!"-என்று குதூகலித்து      கொண்டிருந்தாள் ஷைரந்தரி.

"அடக்கடவுளே!"-கன்னத்தில் கைவைத்து அமர்ந்து கொண்டார் ரகுநாத்.

"என்னாச்சு மச்சான்?கன்னத்துல கை வைத்து உட்கார்ந்துட்ட?"-விஜயராகவன்

"மழை வர போதுல்ல அதான்!"

"ஓ...ஷைரந்தரிக்காகவா?நம்ம ஷைரந்தரி ரொம்ப நல்ல பொண்ணு அதெல்லாம் மழையில நனையமாட்டா!"

"நீ சொல்லிட்ட ...அவ,  ஓடிட்டா!"

"எது?"-விஜயராகவன் திரும்பி பார்ப்பதற்கு ஓடிவிட்டாள் ஷைரந்தரி.

"சுத்தம்..."

"டேய் சிவா!"

"அப்பா?"

"சிரிக்காம போய் கூட்டிட்டு வாடா! ஜுரம் வந்துட போகுது!"

"சரிப்பா!"-சிவா,வெளியே சென்று எட்டிப் பார்த்தான்.மழை வரவில்லை மின்னல் மட்டும் தான்.

"அம்மூ!"

"................"

"அம்மூ!"

"................."

"அம்மூ!"

"சிவா...நான் இங்கே இருக்கேன்."-குரல் வந்த திசை நோக்கி திரும்பினான்.ஷைரந்தரி அங்கிருந்த சிறுவர்களோடு கண்ணாமூச்சி விளையாட ஆயத்தமாகி       கொண்டிருந்தாள்.

"ஏ...குட்டிம்மா! இந்த நேரத்துல போய் கண்ணாமூச்சியா?காலையில         விளையாடிக்கலாம் வா!"

"ப்ளீஸ்...ப்ளீஸ்...கொஞ்ச நேரம்!"

"அண்ணா! அண்ணா! ப்ளீஸ்ணா!"-என்று அங்கிருந்த சிறுவர்களும் அவள் ராகத்திற்கு ஸ்ருதி சேர்த்தனர்.

"சரி...சீக்கிரமா வந்துடணும்!"

"ம்...தேங்க்ஸ் அண்ணா!"-சிரித்துக் கொண்டே அருகிலிருந்த ஊஞ்சலில் அமர்ந்தான்.

"இந்த ராத்திரில கண்ணாமூச்சியா?"-கேட்டப்படி அவனருகே வந்தமர்ந்தான் யுதீஷ்.

"உனக்கு வேணும்னா நீயும் போய் விளையாடு!"

"நீ பர்மிஷன் தந்தா செய்திட வேண்டியது தான்! உன் தங்கச்சி,என் அண்ணா சொன்னாதான் விளையாடுவேன்னு அடம்பிடிச்சான்னா?"

"டேய்! இது பேராசைடா!"-அப்போது,அங்கே மின் தடை  ஏற்பட்டது.

"கரண்ட் கூட போயிடுச்சி!"-சிவா.

"நான் அம்மாவை கேண்டில் எடுத்து வர சொல்றேன் இரு!"-என்றப்படி யுதீஷ் உள்ளே சென்றான்.

அப்போது தான் ஷைரந்தரிக்கு இருள் என்றாள் பயம் என்று சிவாவிற்கு நினைவு வந்தது!

தன் அருகே இருந்த சிறு டார்ச்சை ஆன் செய்து ஷைரந்தரியை பார்த்தான்.ஷைரந்தரி கண்களை கட்டி கொண்டிருந்தாள்.சிறுவர்கள் ஆங்காங்கே ஒளிந்து கொண்டிருந்தனர்.

திடீரென குளிர்ச்சியாக உணர்ந்தான் சிவா.பின்னால்,திரும்பி பார்த்தான் யாருமில்லை.அவன் மனம் சஞ்சலித்தது.

"அம்மூ...விளையாடுனது போதும்,உள்ளே வா!"-என்று குரல் கொடுத்தான்.

"ஆ...வரேன்!"

"கண்ணை மூடிட்டே போங்கக்கா! அப்போ தானே நீங்க எவ்வளவு திறமைசாலின்னு பார்க்க முடியும்!"-சிவாவிற்கு அந்த குரல் பரிச்சியமானதை போல இருந்தது.அது...அந்த சிறுமியின் குரல் அல்லவா???சுற்றும்,முற்றும் பார்த்தான்.ஆள் அரவமில்லை...

"சரி...போனா போச்சு!"-ஷைரந்தரியிடமிருந்து பதில் வந்தது.

கண்களை கட்டியவாரே வந்தாள் ஷைரந்தரி..

திடீரென இடி முழக்கம் முழங்க ஆரம்பித்தது.

"சிவா!"

"கண்ணை கட்டி இருக்கிற துணியை எடுத்துடுடா!"

"ம்ஹீம்...மாட்டேன்!"-ஷைரந்தரி தட்டு தடுமாறி வந்தாள்.சிவாவிற்கு சலனப்பட்டது மனம். அப்போது தான் கவனித்தான்...

அந்த கரும் உருவம்...

ஷைரந்தரியின் பின்னால்...

மாயமாகி இருந்த  அந்த சிறுமி அதன் அருகில் நின்றிருந்தாள்.....

"அம்மூ!"-அங்கிருந்து அவனால் நகர கூட முடியவில்லை.கால் கட்டப்பட்டிருந்தது போல உணர்வு...!!!

"இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு?"

"குட்டிம்மா..."-பயந்தே போனான் சிவா.

அந்த உருவம் நெருங்கியது...

வானில் நெருப்பு பீச்சியடிப்பது போல மின்னல் மின்னியது.

வாயடைத்து போனான் சிவா.

ஷைரந்தரியை சுற்றி நெருப்பு சூழ்ந்தது .அவள் நின்றாள்.

"சிவா...வழியை சொல்லு!"-அவனோ நடப்பதை பார்த்து கொண்டிருந்தான்.அந்த கருவுருவம் அவள் மேல் பாய,அந்த நெருப்பு வட்டம் அதனை தடுத்து நிறுத்தியது..

நெருப்பின் ஜீவாலைகள் ஒளியை தர...அதனால், எழுந்த உஷ்ணத்தை தாங்காமல் மறைந்தது அந்த உருவம்.எழுந்து நின்ற அக்னியில் பிரவேசித்தப்படி வெளி வந்தாள் ஷைரந்தரி.அவளுக்கு,அந்த உஷ்ணமோ..உணர்வோ... தெரிந்தப்படியாய் இல்லை.

மெல்ல நடந்தப்படியாய், சிவாவின் கரத்தைப் பற்றினாள் ஷைரந்தரி.

"ஹே...பிடிச்சிட்டேன்!"-என்றப்படி,கண்களின் கட்டை அவிழ்த்தாள்.

"நீ அவுட்...என்னாச்சு ஏன் பேய் அறைஞ்சா மாதிரி நிற்கிற?"-அவனுக்கு பேச்சே வரவில்லை.

ஷைரந்தரியை கட்டிப்பிடித்து கொண்டான்.

"என்னடா ஆச்சு?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.