(Reading time: 11 - 21 minutes)

03. வாராயோ வெண்ணிலவே - சகி

ண்களில் மின்னும் பொன்னான ஓவியம்...

கடல் அலைகள் மோதி அடங்கும் அழகிய காவியம்...

கண்களால் மட்டுமின்றி இதயத்தால் காண முடிகின்ற கவிதை...

Vaarayo vennilave

காதல்.......

காரில் பயணித்து கொண்டிருந்தான் ரஞ்சித்.

ஆழ்மன அலைகள் அலைகழித்து  கொண்டிருந்தன.

எண்ணங்களில்,ஏராளமான கனவுகள்...

கோயம்புத்தூரில் காத்துக்கிடக்கும் தன் காதலைப் பற்றி அறியாமல்...

முடிந்துப் போன காட்சியை எண்ணி வருந்திக் கொண்டிருந்தான்.

 "ரஞ்சு!!எழுந்திரி! எவ்வளவு நேரம் தூங்குவ?"

"ம்...என்னடி நீ?இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை!"

"எந்த நாள் ஞாபகம் இருக்கோ?இல்லையோ?இந்த ஆம்பளைங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும் கரட்டா ஞாபகமிருக்கும்!"

"உனக்கு ஏன் வேகுது?"

"எழுந்திரி ரஞ்சு!!!"-சிணுங்கிப்படியே எழுந்தான் ரஞ்சித்.

"என்னடி?"-கடிகாரத்தை பார்த்தான் மணி இரவு பன்னிரண்டு!!!

"அடியே! மணி பன்னிரண்டு தான் ஆகுது??இந்த ராத்திரியில ஏன் எழுப்புன?"-அவள்,அவனருகில் அமர்ந்து,

"ஹேப்பி பர்த்டே ரஞ்சு!"-அவள்,கூறுவதற்கும் அங்கே

"ஹேப்பி நியூ ஹியர்!"-என்று அந்த தெருவில் வசித்திருந்தனர் அனைவரும் கத்தினர்.

"உனக்கெப்படி தெரியும்?இன்னிக்கு ஜனவரி ஒண்ணா?"

"ம்...இதுக்கூட தெரியாம உன்னை கல்யாணம் பண்ணிட்டு இத்தனை நாள் எப்படி வாழ்ந்திருப்பேன்?"-ரஞ்சித்,அவளை இறுக அணைத்து கொண்டான்.

"லவ் யூ செல்லம்!"

"லவ் யூ ரஞ்சு!"-அவள்,அவனிடமிருந்து விலகினாள்.

"ம்...நீ போய் தூங்கு!"

"எது?தூக்கமா?"

"ம்...தூக்கம் வருதுன்னு சொன்னல்ல?"

"இப்போ வரலையே!"

"ம்...அதுக்கு என்ன பண்றது?"

"அதுக்கு..."-என்றப்படி, அவளருகே நெருங்கினான்.

அவள்,அவனை தடுத்து ,

"போய் தூங்கு!இந்த வேலையெல்லாம் இப்போ வேணாம்!"

"ஏன்?"

"வேணாம்...நான் உனக்கு மனைவியான விஷயத்தை! என்னைக்கு எல்லாராலும் ஏத்துக்கப்படுதோ..... அன்னிக்கு தான் மற்றதெல்லாம்!"

"அப்போ அதுவரைக்கும்!"

"தூங்கு!"

"ம்ஹீம்..."

"ரஞ்சு!"

"குட் நைட்!"-முகத்தை திருப்பிக் கொண்டான் ரஞ்சித்.

"என்னவாம் சாருக்கு?"

"ஒண்ணுமில்லை..."-அவள்,ரஞ்சித்தின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

"இவ்வளவு நாள் பொறுத்துக்கிட்ட,இன்னும் கொஞ்ச நாள்! என் ரஞ்சு சொன்னா கேட்பானே!"

"என்ன நீ?எப்போ பார்த்தாலும்,குழந்தை மாதிரியே என்னை நடத்துற?"

"நீ எனக்கு எப்பவுமே,சின்ன குழந்தை மாதிரி தான்!!!"

"அப்போ,நமக்கு குழந்தை பிறந்தாலும்,எனக்கு தான் முக்கியத்துவம் சரியா?"

"ரஞ்சு!"-அவள் முறைத்தாள்.

அவன்,அவளை பார்த்து கண்ணடித்தான்.

காரை ஓட்டிக் கொண்டே பழங்கால நினைவுகளை யோசித்துக் கொண்டே வந்திருந்தவன்...திடீரென பிரேக் போட்டான்.

"ஏ....பார்த்து வர மாட்டியா?ஆரன் அடிக்கிறது காதுல கேட்கலை?"-கத்தியவன் நமது விஷ்வா தான்.

"ஸாரி!!"-ரஞ்சித்.

"பார்த்து போயா! மணல் லாரி அதிகம் வர ரோடு,பைக்கா இருக்கவே தப்பிச்ச!ஆளைப் பாரு...இவங்க கட்டின ரோடு மாதிரி கிளம்பிடுறது!"-புலம்பியப்படி அங்கிருந்து கிளம்பினான் விஷ்வா.

தன்னை தானே நொந்தப்படி காரை கிளப்பினான் ரஞ்சித்.

இறைவனை வணங்கியப்படி,அந்த சிவன் கோவிலின் உள்ளே பிரவேசித்தாள் வெண்ணிலா.

"துர்காம்மா!நீங்க இங்கேயே இருங்க...நான் அர்ச்சனை தட்டை வாங்கிட்டு வரேன்!"

"சரி...நிலா..!"-நிலா, அர்ச்சனை தட்டை வாங்க சென்றாள்.

சிறிது நேரத்திற்கெல்லாம் திரும்பினாள்.

"ம்...போகலாம்!"-இறைவனின்      சந்நிதானத்தாற்கு சென்றனர்.

"அர்ச்சனை பண்ணனும் சாமி!"

"யார் பேருக்கு?"

"மீனாட்சி மகேந்திரன்.பூசம்,மிருகசீரிஷம் நட்சத்திரம், ரிஷபம்,கடக ராசி,சிவ கோத்திரம்!"

"சரிம்மா!"-அர்ச்சனை நடந்தது.வெண்ணிலாவின் கண்கள் மூடிய படி இருந்தன.திடீரென திறந்து பார்த்த போது,அவளின் கண்களில் அவர்கள் தென்பட்டனர்.அவளை கண்ட ப்ரியா,திவ்யா இருவரின் கண்களும் திகைத்து தான் போயிருந்தன.வெண்ணிலா ஒன்றுமே நடக்காததை போல முகத்தை திருப்பி கொண்டாள்.

"இந்தாம்மா!"-அர்ச்சனை தட்டை வாங்கிக் கொண்டாள்.

"போகலாம் துர்காம்மா!"-அங்கிருந்து கிளம்பினாள். அவளையே இரு ஜோடி கண்கள் வட்டமிட்டு கொண்டிருந்ததை அவள் கவனிக்க தவறவில்லை.

"ஐயா,அம்மா பேர்ல தான் அர்ச்சனை பண்ணுவியா?உன் பேர்ல பண்ணிக்க வேண்டியது தானே?"

"என்னை பார்த்துக்க அவங்க இருக்காங்க..அவங்களை நான் தானே பார்த்துக்கணும் அதான்!"-அவர்கள், பேசியப்படி ஓரமாய் அமர்ந்தனர்.

வெண்ணிலாவின் கைப்பேசி சிணுங்கியது.எடுத்து பார்க்க விஷ்வா என்றது அது!!

"இவனுக்கு,வேற வேலையே இல்லை."-இணைப்பைத் துண்டித்தாள்.

"கிளம்பலாம் துர்காம்மா! தடியன் போன் பண்றான் என்ன விஷயம்னு தெரியலை."

"சரிம்மா!"-அவள் கிளம்பும் போது,

"எக்ஸ்யூஸ்மி!"-என்ற குரல் அவளை தடுத்தது.

"எஸ்!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.