(Reading time: 11 - 21 minutes)

 

"நீங்க மிஸ்.வெண்ணிலா பிரபாகரன் தானே?"-கேட்டவள் திவ்யா.

"ஐ ஆம் வெண்ணிலா மகேந்திரன்."-கூறிவிட்டு, அவர்களை திரும்பிக் கூட பார்க்காமல் சென்றாள் வெண்ணிலா.

"யாரும்மா அவங்க?உனக்கு தெரிஞ்சவங்களா?"

"தெரிந்திருந்தவங்க துர்காம்மா!"-வாழ்வின் பல கேள்விகளுக்கு விடை சிறு புள்ளியில் தான் உள்ளது.

கேள்விகளானது,அகண்ட விரிந்த பாரின் பரப்பினில் அமைந்தாலும்,அதன் விடை சாதாரண பென்சில் நுனி போடும் சிறு புள்ளி கணக்கில் உள்ளது என்பதை நம்மில் எத்தனைப் பேர் அறிவோம்???

அச்சிறு புள்ளியில் எழுபதாயிரம் அமீபாக்களை கொண்டு நிரப்பும் போது,ஒரு பிரச்சனையின் தீர்வை நிரப்ப முடியாதா என்ன???

"ம்மா!"-எதையோ வெறித்தப்படி அமர்ந்திருந்த தன் தாயின் சிந்தனை ஓட்டத்தை கலைத்தான் யுகேந்திரன்.

"ஆ...வாப்பா!"-கண்களை துடைத்துக் கொண்டார்.

"என்னம்மா யோசிச்சிட்டு இருக்கீங்க?"

"ஒண்ணுமில்லை யுகேன்!"-ஏதுமில்லை என்று சமாளித்தாலும்,தாயின் மனநிலை தனயனுக்கு விளங்காதா என்ன??

"அம்மா!"

"................"

"புரியுதும்மா!!!இன்னுமா அந்த விஷயத்தை நினைச்சிட்டு இருக்கீங்க?25 வருஷமா கிடைக்காதவ இனிமேலா கிடைக்கப் போறா?நமக்கு காவ்யா மட்டுமே போதாதா?"

"அப்படி சொல்லாதடா! பத்து மாசம் சுமந்து பெற்றெடுத்தவள்...எனக்கு, இன்னும் நம்பிக்கை இருக்கு!

எந்த விதி என் மகளை என்கிட்ட இருந்து பிரிச்சிதோ! அதே விதி அவளை என்கிட்ட மறுபடியும் கொண்டு வந்து சேர்க்கும்! காவ்யா படும் கஷ்டத்தை என்னால பார்க்க முடியலை.நான் வளர்த்த பொண்ணு இல்லையா??"

"அதான் சொல்றேன்.காவ்யா மட்டும் போதுமே,அவ இதுவரைக்கும் உயிரோட இருப்பான்னு கூட நம்பிக்கை இல்லைம்மா!"

"யுகேன்...நிறுத்து! என்னை மாற்ற முயற்சி பண்ணாத! 25 வருஷமா ஒரு குழந்தையை பிரிந்த வலி அந்த குழந்தையை சுமந்தவளுக்கு தான் தெரியும்! உனக்கு புரியாது.நீ போ!"

"ம்மா!"

"போ யுகேன்!"-அமைதியாக அங்கிருந்து நகர்ந்துவிட்டான் யுகேந்திரன்.

நான் கூறினேன் அல்லவா?பாருங்கள்....25 வருட சிக்கலாம்,இன்னும் விடை காணாமல் தவிக்கிறார் ஒரு பேதை தாய்...! ஆனால்,உண்மையில்,இதற்கு விடையானது முடிய போவது ஒரு புள்ளாயில் தான்.ஆனால்,விதியானது, இந்த பித்தான தாய் மனதிற்கும் அந்த கல்லான பிள்ளை மனதிற்கும் இடையே போட போகும் முடிச்சுகள் எண்ணில் அடங்காதவை!!!!

"திவ்யா!"-தன் மனைவியை அழைத்தான் யுகேந்திரன்.

"என்னங்க?"

"காவ்யா சாப்பிட்டாளா?"

"அது..."

"அதெல்லாம்...உன் தங்கச்சிக்கு எந்த குறையும் இல்லை!"-கூறியப்படி வந்தார் அவன் அத்தை பரமேஷ்வரி.

அமைதியானான் யுகேந்திரன்.

"தேவையில்லாம யாரோ ஒரு குழந்தையை எடுத்து வளர்த்து,அவ வேற தலைவலியா வளர்ந்து நிற்கிறா!"-மௌனமாக அங்கிருந்து சென்றுவிட்டான் யுகேன்.

"ஆத்தி என் ரதி பார்த்தவுடனே,காற்றில் வச்ச இறகானேன்.காட்டு மரமா வளர்ந்த இவனோ ஏற்றி வச்ச மெழுகானேன்.கூர புல்லு ஓர் நொடியில் வானவில்லை திரிச்சாயே!" (மன்னிக்கவும்,எனக்கு பழைய பாடல்கள் எதுவும் தெரியாது.அதான்,இந்த பாடல்)-மொட்டை மாடியின் சுவற்றின் மேல் அமர்ந்தப்படி பாடி கொண்டிருந்தான் விஷ்வா.

"என்னடா?சார்...ரொம்ப ரொமான்ட்டிக்கா பாடுறீங்க?"

"அதெல்லாம்...ஒரு மேட்டர்!"

"என்ன மேட்டர்?"

"அதுவா...இங்கே வாயேன்!"

"அங்கிருந்தே சொல்லி தொலை!குரங்கு மாதிரி நான் வேற மேல ஏறணுமா?"

"வா நிலா!"

"தலையெழுத்து!"-நிலா,சுவரின் மேல் ஏறி அமர்ந்தாள்.

அந்நேரம்...

"என்ன?இது மேல உட்கார்ந்திருக்கீங்க.?ஏன்...அந்த டேங்க் மேல போய் உட்காறது!"-என்றப்படி வந்தார் துர்காம்மா.

"ஐ...நல்ல ஐடியா! வா நிலா போகலாம்!"

"ஏ...குரங்கே! விஷயத்தை சொரல்லுடா!"

"சொல்றேன்...ஆனா,ரெண்டு பேரும் யார்கிட்டயும் சொல்ல கூடாது!"

"ம்..."-இருவரும் சம்மதித்தனர்.

"சத்தியம் பண்ணுங்க...இது பொய் சொல்லாது, துர்காம்மா நீ சத்தியம் பண்ணு!"

"ம்...சத்தியம்!"

"ம்...தேங்க்ஸ்!!!அது...அவளை மறுபடியும் பார்த்துட்டேன் நிலா!"

"அவளை பார்த்துட்டியா?எவ அவ?"

"அவ என் தேவதை!"

"தேவதையா?"

"ம்..."

"தேவதைக்கு இரண்டு இறக்கை,கையில ஸ்ட்டிக் எல்லாம் இருக்குமா.?"

"ப்ச்!"

"சரி...சரி...சொல்லு!"

" நான் காலேஜ் படிக்கும் போது நடந்த கதை இது!!!

அன்னிக்கு தான் அவளை முதல் முறையாக பார்த்தேன்!

காலேஜ் ப்ரஷ்ஷர்ஸ் அன்னிக்கு தான் பர்ஸ்ட் டே!"

"ம்...அப்பறம்!"

"அப்போ தான் அவளை பார்த்தேன்.ப்பா...பார்த்த நாள்ல என்னை சாகடிச்சிட்டா!"

"உயிரோட தானே இருக்க?"

"குறுக்க பேசாதே!"

"ம்...சரி! சரி!சொல்லு!"

"ஃப்ர்ஸ்ட் ஹியர்! வழக்கமான ரேகிங் எல்லாம்

நடந்தது!"

"இரு..இரு...அதுக்கு மேல நான் சொல்றேன்.அந்தப் பொண்ணு சீனியர்ஸ்கிட்ட மாட்டிட்டு இருந்திருக்கும். நம்ம ஹீரோ காப்பாத்தி இருப்பாரே!"

"ஐ...கரெக்ட்பா!"

"எந்த படத்துல இருந்து சுட்டது இது??"

"ஐயோ சுட்டது இல்லை...நிஜமா நடந்தது!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.