(Reading time: 11 - 21 minutes)

 

"ரி சொல்லு!"

"பாவம் அவ,பயங்ரமா மாட்டிக்கிட்டா,அப்போ நான் தான் போய் காப்பாத்தினேன்."

"இதையே தான் நானும் சொன்னேன்!"

"போடி! நான் சொல்லவே மாட்டேன்."

"ஏ...சொல்லு !"

"அப்போ..."-(உங்களுக்காக அந்த கதை எப்படி நடந்தது என்று!)

"ஹே! இங்கே வா!"-பயந்தப்படி அவள் வந்தாள்.

"உன் பேர் என்ன?"

"................"-அவள்,முகத்தில் பயம் மட்டுமே நிறைந்திருந்தது.

"உன்னை தான் கேட்டேன்! பேர் என்ன?"

"................"-அப்போது,தான் தூரத்தில் இருந்த விஷ்வாவின் பார்வைக்கு அவள் பட்டாள்.அவளை முதல் முதலாய் பார்த்த அவனது மனதில் என்ன பாட்டு ஓடி இருக்கும்?

'உன் பார்வையில் விழுந்த நாட்களில் என் துன்பங்கள் தொலைந்து போனது.உன் கைவிரல் சேர துடிக்குது அன்பே!அன்பே!'-(இப்பவும் சொல்றேன்.எனக்கு பழைய பாடல் ஏதும் தெரியாது)எந்த அளவிற்கு அந்தப் பாடல் ஓடியது என்றால்,எதிரில் நிற்பவன் பேசிப் பார்த்து,பதில் வராமல் கடுப்பாகி செல்லும் அளவிற்கு!

அவளுக்கோ,யாரேனும் வந்து காப்பாற்ற மாட்டாரா.?என்ற நடுக்கம்.

நிலைமை புரிந்தவனாய்,க்ஷஅங்கே வந்தான் விஷ்வா.

"என்ன மச்சி பிரச்சனை?"

"ஒண்ணுமில்லைடா... பொண்ணு புதுசு! அதான்..."

"ரேகிங்கா?ஏன்டா...நீங்க திருந்தவே மாட்டீங்களா?ச்சே...!"-சத்தியமாக அங்கே கேட்பவன் எவனுக்கும் கோபம் முறுக்கி கொண்டு வந்திருக்கும்.ஏனெனில்... விஷ்வா கல்லூரியில் சேர்ந்த புதிதில் சீனியர்களையே ரேகிங் செய்தவன்.

"டேய்! நீயாடா சொல்ற?"

"ஆமா....அந்த பொண்ணை பாரு...இவங்களைப் பார்க்கும் போது,உங்க தங்கச்சி மாதிரி தெரியலையா மச்சி?"-அவன்,தங்கை என்று கூறியதிற்கும்,மச்சி என்று உரைத்ததற்கும் எங்கோ முடிச்சு போடுவதாய் அமைந்தது!!!

அவளை பார்த்து,

"நீங்க போங்க!"-என்றான்.

அவள்,தலையாட்டி விட்டு அங்கிருந்து நகர,அங்கிருந்த ஒருவன்,

"எக்ஸ்யூஸ்மி!"-என்றான்.அவள் திரும்பினாள்.

"சிஸ்டரோட ஸ்வீட் நேம் தெரிஞ்சிக்கலாமா?"-மீண்டும் விழித்தாள்.

"அண்ணன் தான்மா! கேட்கிறேன்!"-  தயங்கியப்படியே,

"வைஷ்ணவி!"-என்று கூறிவிட்டு சென்றாள்.

அவள் கூறிவிட்டு செல்லும் போது பார்த்துக் கொண்டிருந்தவன்,ஒரு நாளுக்கு ஆயிரம் முறையேனும் அதை கூறி அடுத்தவர் காதில் இரத்ததை வரவழைத்திருப்பான் என்றால் அது மிகையல்ல!!!!

"வைஷ்ணவி! பேர் நல்லா தான் இருக்கு!"

"தேங்க்ஸ்!"

"லவ் சொன்னியா?எத்தனை வருஷமா லவ்?பேசுனீங்களா?"

"8 வருஷ லவ்! இன்னும் சொல்லலை!"

"எது சொல்லலையா?"

"ம்...அவளை நினைத்து நான் இங்கே ஏங்கிட்டு இருக்கேன்.அவ,சந்தோஷமா இருக்கா!"

"லவ்வே சொல்லாம எப்படிடா?"

"இருந்தேன்...காலேஜ்ல இருந்த மிச்சம் 1 வருஷம்,அவளை பற்றி தெரிஞ்சிக்கவே போச்சு!"

"அப்படி,என்ன தெரிஞ்சிக்கிட்ட?"

"அவளுக்கு,அம்மா,அப்பா இல்லை.அவ  சித்தப்பா தான் கார்டியன்.பணம் தேவைக்கு மேல இருந்தும்,பாசத்துக்கு பஞ்சம்.சின்ன வயசில இருந்தே,அடங்கியே வளர்ந்தவ.இதுவரைக்கும் குரலை உயர்த்தி ஒரு வார்த்தைக் கூட பேசினதில்லை.யாராவது,கூட பழகினா ஏமாற்றி விடுவாங்களோன்னு யாரையும்  லவ் பண்ணதில்லை.ஃப்ரண்ட்டா கூட இருந்ததில்லை."-விஷ்வா,சொல்லிக் கொண்டே போனான். நிலாவிற்கு கண்களில் நீர் தேங்கியப்படி போனது.

"இவ்வளவு விஷயம் தெரிஞ்சு வச்சிருக்கியா?"

"ஆம்பளைங்களுக்கும் மனசு இருக்கு,கோபத்தை காட்டுவாங்கன்னு ஒரே காரணத்துக்காக அவங்க பாசம் யாருக்கும் அதிகம் தெரிவது இல்லை!"-நெஞ்சுக்குள் ஏதோ ஆழமாய் தைத்தது போல இருந்தது வெண்ணிலாவிற்கு!!!

"ஒரு டவுட் விஷ்வா!"

"என்ன?"

"ஒரு வேளை அவளுக்கு கல்யாணம் ஆகி இருந்தா?"

"உன் டவுட்ல தீயை வைக்க,ஏன்டி உனக்கு இப்படி ஒரு சந்தேகம்?"

"ஒரு சந்தேகம் தான்.அவளை நான் பார்க்கலாமா?"

"அவ,எங்கே இருக்காளோ?"

"நீ எப்போ பார்த்த?"

"காலையில,ஒருத்தன் கார் மேல மோதிட்டு அப்படியே பைக்கை எடுத்துட்டு போனேனா...அப்போ!"

"யார் கார்?"

"தெரியலை....ஊருக்கு புதுசு போல,எதையோ யோசிச்சுக்கிட்டே வந்தான்.ஹாரன் அடிச்சது காதுல விழலை போல,அதான்!"

"சண்டை போட்டியா என்ன?"

"இல்லை...இல்லை... போடலாம்னு நினைக்கும் போது எனக்கு ஒரு டவுட் வந்துடுச்சி அதான் அப்படியே வந்துட்டேன்!"

"என்ன டவுட்?"

"ஒரு வேளை என் மாமாவோன்னு.."

"விஷ்வா!"

"சரிம்மா...எனக்கு தூக்கம் வருது! குட் நைட்!"-என்று இருவருக்கும் இரவு வணக்கத்தை கூறிவிட்டு விடை பெற்றான்.சிறிது, நேரத்தில் துர்காம்மாவும் சென்றுவிட,தனியே நின்றிருந்தாள் வெண்ணிலா.

விஷ்வா கூறியது கேட்டப்படியே இருந்தது.

"கோபப்படுறாங்கன்னு ஒரே காரணத்துக்காக பசங்க பாசத்தை யாரும் அதிகமா புரிஞ்சிக்கறதில்லை!"

தொடரும்

Episode # 02

Episode # 04

{kunena_discuss:821}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.