(Reading time: 9 - 18 minutes)

 

"னக்கு எதுவும் ஆக விட மாட்டேன் !"

"ஏ...லூசு! என்னடா ஆச்சு?லூசு மாதிரி உளர்ற?"

"ஒண்ணுமில்லை...நீ போய் தூங்கு!"

"எங்கே போறது?இருட்டா இருக்கு!நான் போக மாட்டேன்!"-அப்போது, யுதீஷ்ட்ரன்         மெழுகுவர்த்தியோடு அங்கே வந்தான்.

அதனால்,சிவா தன்னுடைய முக  பாவனையை மாற்ற வேண்டிய நிலை உருவானது.

"இதோ! கேண்டில் கொண்டு வந்துட்டான் பார்!"-அவன்,அவர்களிடத்தில் வருவதற்குள் மின்சாரமே வந்துவிட்டது.

"ப்ச்...கரண்டே வந்துடுச்சி!"-யுதீஷ்.

"ச்சே! கரண்ட் கூட இங்கே நிறைய பேரை மதிக்க மாட்டிங்குதே??"-யுதீஷ்ட்ரனை பார்த்து சிரித்தப்படி கூறிவிட்டு, உள்ளே சென்றாள் ஷைரந்தரி.

"ஆனாலும்,உன் தங்கச்சி நிறைய பேசுறா!"

"என் தங்கச்சியாச்சே!"-அவனுக்கு ஒருவாறு பதில் அளித்துவிட்டு,தனிமையை நாடினான் சிவா.

"இதற்கு மேல் பொறுமை காக்க முடியாது. ஷைரந்தரியின் உயிருக்கு எதாவது ஆபத்து நேரும் முன் அனைத்தையும் ஒரு முடிவிற்கு கொண்டு வர வேண்டும்!"

றுநாள் காலை...

தன் அறையில் இருந்த கல்பனாவின் படத்திற்கு மலர்களை தூவிக் கொண்டிருந்தான் அசோக்.

கண்களில் தானாய் கண்ணீர் பெருக்கெடுத்தது.,கதவை தட்டும் சப்தமும் செவிகளில் ஒலித்தது.

"யாரு?"

"சிவா!"-திரையை மூடினான்,அசோக்.  கல்பனாவின் புகைப்படம் திரைக்கு பின்னே ஒளிந்தது.

"உள்ளே வாங்க!"-சிவா,கதை திறந்து உள்ளே வந்தான்.

"வா சிவா!"

"அசோக்...உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்!"

"என்னை மதித்து, என்கிட்டயும் பேசுறன்னு சொல்றீயே சந்தோஷம்!சொல்லு!"-அவன்,குரலில் விரக்தி தெரிந்தது.

"கல்பனாவை பற்றி பேசணும்!"-அதிர்ந்து பார்த்தான் அசோக்.

"கல்பனாவை பற்றி தெரிஞ்சிக்கணும்!"

"இங்கேப் பாரு!இப்போ கல்பனாவைப் பற்றி பேச ஒண்ணுமில்லை.முடிந்த விஷயத்தை எடுக்காதே!"

"எடுக்க வேண்டிய அவசியம் வந்திருக்கு!"

"என்ன அவசியம்?"-சிவா,கல்பனா குறித்த நீலக்கண்டச்சாரியரின் குறிப்பினை குறிப்பாக கூறினான்.

"என்ன விளையாடுறீயா?கதை கட்ட அளவு இருக்கு! அளவிற்கு மீறி கற்பனை அதிகமாக இருக்கு உனக்கு!"

"என்னால,நடக்குற விஷயத்தை நிரூபிக்க முடியாது.நிரூபிக்க கூடிய எந்த ஆதாரமும் என்கிட்ட இல்லை.எனக்கு தெரியும் ஷைரந்தரி பொய் சொல்ல மாட்டா,அவ வாக்கு என்றும் பொய்காது! ஞாபகப்படுத்தி பார்! அன்னிக்கு கோவில்ல,அவ சொன்ன வார்த்தையை...எந்த தப்பும் உன் மேல இல்லைன்னு சொல்லாம சொன்னா! அது,மற்றவங்களுக்கு புரிந்ததோ இல்லையோ உனக்கு நிச்சயம் புரிந்திருக்கும்!"-சட்டென அசோக்கின் கண் முன்னே அக்காட்சி விரிந்தது.

"எனக்கு அந்த வார்த்தையில இருந்தே புரிந்தது,உனக்கும், கல்பனாக்கும் நடுவுல எப்படிப்பட்ட உறவு இருந்ததுன்னு!!!ஒரு அண்ணனா கல்பனாக்காக நீ ஏத்துக்க கூடாத பழியை ஏத்துக்கிட்டன்னு தெரிந்தது.அதே உறவை காப்பாற்ற தான் உன்கிட்ட நடந்தது என்னன்னு கேட்கிறேன்.தயவுசெய்து பதில் சொல்!"-சிவாவின் பேச்சு அவன் மனதை புரட்டி போட்டது.

"இல்லை...நீ ஏதோ தப்பா புரிஞ்சிருக்க!"

"நிச்சயமா இல்லை...! நானும் ஒரு அண்ணன்... இதுக்கு முன்னாடி இங்கே வந்து,உன் கூட பழகாமல் இருந்தாலும்.நீ,கல்பனாகிட்ட எப்படி பழகினன்னு கேள்விப்பட்டிருக்கிறேன்."

"இதோப் பாரு சிவா! ப்ளீஸ்...பழைய விஷயத்தை எடுக்காதே!நீ தயவுசெய்து கிளம்பு!"

"அசோக்...நான் சொல்றதை!"

"ப்ளீஸ்...கிளம்பு சிவா!"-அதற்கு மேல் என்ன செய்ய முடியும் அந்த சகோதர மனதால்.???இருந்த ஒரு வழியும் அடைந்தது.இனி, அந்த இறைவன் தான் வழிக்காட்ட வேண்டும்!!!!

"க்கா! அக்கா!"-'சிவனே' என்று சென்று கொண்டிருந்த ஷைரந்தரியை அழைத்தனர் அங்கு யுதீஷ்ட்ரனோடு கேரம் விளையாடி கொண்டிருந்த குழந்தைகள்.

"என்ன?"

"இங்கே வாங்கக்கா!"-அவர்கள் அருகில் வந்தாள்.

"இப்படி உட்காருங்க!"-யுதீஷ்ட்ரனின் எதிரில் அமர்ந்தான்.

"விளையாடுங்க!"

"எது?"

"விளையாடுங்கக்கா! யுதீஷ் மாமாவே ஜெயிச்சிட்டு இருக்கார்! எங்களோட சப்போர்ட் நீங்க தான்!"

"ஆமாக்கா!"-யுதீஷ்,அவளை பார்த்தப்படி,குறும்பான சிரிப்போடு அமர்ந்திருந்தான்.

"எனக்கு கேரம் வராதுடா!"

"என்னது?இப்போ என்ன பண்றது?"

"அதெல்லாம் இல்லை.உங்க அக்காக்கு பயம் மாமா கூட போட்டி போடணுமே!"-அவனது சூட்சுமமான வார்த்தைகள் ஏதோ குழப்பின அவளை!!!

"எனக்கு நிஜமாகவே கேரம் வராது!"

"அப்போ! யாரையாவது உன் சார்பா விளையாட சொல்லு!"

"யாரு?"-சிவாவும் வீட்டில் இல்லை.என்ன செய்வது என அமர்ந்திருந்தவள் அந்த வழியாக செல்ல ஆயத்தமாகி கொண்டிருந்த அசோக்கை பார்த்தாள்.

"அசோக்!"-என்றழைத்தாள்.அவள் அவனை அழைக்க,யுதீஷ்ட்ரனின் முகம் இருண்டது.

அவன்,என்னையா?என்பது போல பார்த்தான்.

"உங்களை தான்! வாங்க!"- ஷைரந்தரி எந்த சலனமும் இன்றி அசோக்கிடம் பேசியது,அனைவருக்கும் சற்று வியப்பாகவே இருந்தது.ஏனெனில், அனைவராலும் ஒதுக்கப்பட்டவன் அல்லவா அவன்...

அவன் வந்தான்.

"இப்படி,உட்காருங்க...உங்க தம்பி கூட,என் சார்பா கேரம் விளையாடுங்க!"-அவன்,விசித்ரமாய் அவளை பார்த்தான்.

"விளையாடுங்க.இல்லன்னா,என் மானம்,மரியாதை எல்லாம் போயிடும்!"-தம்மை,மிருகமாக பாவிக்கும் உறவுகள் நம்மோடு இருக்க,நம்மை மனிதனாக நடத்தும் அவள் மீது மரியாதை பொங்கியது அசோகிற்கு!!!அன்று, கோவிலில் நடந்ததை நினைவு கூர்ந்தான்.

"ஹலோ!"-ஷைரந்தரியின் குரலில் கலைந்தான்.அசோக் அமர,யுதீஷ் அவ்விடம் விட்டு எழுந்து சென்றான்.

அதை பார்த்தவளுக்கு,ஒரு நொடி யுதீஷ்ட்ரனின் செய்கை கோபத்தையும், குழப்பத்தையும் தந்தது.

அசோக் முகம் கவலையில் வாடுவதை கண்டவள்,

"ஸாரி...!"என்றாள்.

"பரவாயில்லை விடும்மா! அவன்,கொஞ்சம் முன் கோபக்காரன்."-என சிரிப்பை வரவழைத்து கூறிவிட்டு எழுந்து சென்றான்.

ன்றிரவு....

மொட்டை மாடியில், எதையோ சிந்தித்தப்படி சிவா நின்றிருந்தான்.

எங்கும் இருளாய் தெரிந்தன அவனுக்கு!!! இருந்த ஒரு ஒளியை இழந்துவிட்டல்லவா நிற்கிறான்???

"சிவா!"-குரல்,கேட்டு திரும்பினான்.அசோக் தான் !!!

"வா அசோக்!!!"

"கல்பனா பற்றி உனக்கு,என் தெரியணும்?"-வியப்பாய் பார்த்தான் சிவா.

"என்னை பெற்றவங்களே என்னை ஒதுக்கி இருக்கிறப்போ! ஷைரந்தரி தான் என் கூட ஆரம்பத்துல இருந்து நல்ல பேசுனா, என்னையும் மனுஷனா மதித்தாள்.அன்னிக்கு கோவில்ல அவ எனக்காக பேசினது இன்னும் காதுல கேட்டுட்டே இருக்கு.உனக்கு என்ன வேணுமோ கேளு!"-அணைந்த ஒளியை இதோ இறைவன் ஏற்றிவிட்டான்.தன் ஆயிருர் மகளுக்காக!!!!!

தொடரும்

Go to Episode # 11

Go to Episode # 13

{kunena_discuss:751}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.