(Reading time: 9 - 18 minutes)

 

நிஷா கல்யாணம் என்று பேச்சு வந்ததும் அதை தைரியமாக எதிர்கொண்டு தனக்கு ஆகாஷ் மேல் தான் ப்ரியம் என்று சொல்லியிருக்கலாம். இல்லை வேணிம்மா அழைத்ததும் அங்கு சென்று அவரிடம் பேசியிருக்கலாம், ஈகோ பிடித்த அர்ஜுனிடம் படார் என்று உண்மையை சொல்லியிருக்கலாம். அப்போதே ஆகாஷை சந்தித்து உதவி கேட்டிருக்கலாம் ,எதுவும் செய்யாமல் அவள் தந்தை சொன்னவுடன் பிறந்த அதிர்வில்,அது பூதாகரமாக தோன்றிய நிமிடத்தில், இரயிலில் இன்னொரு பெண்ணிற்கு உதவி செய்யும் எண்ணத்தில் அவள் செய்தது விளக்க போகையில் சிறு பிள்ளை தனமாக தோன்றியது.

அமைதி காத்தாள்,

ஆகாஷ் அவன் பொன்னான தருணங்களை வீண் செய்ய பிடிக்காமல் இனி அதை பற்றி பேச வேண்டாம் என்று முடிவு செய்துக்கொண்டான்.

"ய் இம்சை, காலை ஐந்து மணிக்கு கிளம்ப வேண்டும் பி ரெடி " அர்ஜுன்

"சரி சார்"

படி இறங்கி வந்துக் கொண்டிருந்தவர் காதில் "சார் " வார்த்தை விழுந்ததும்,

வேணிம்மா "என்ன நிஷா குட்டி உன்னையும் சார் போட வைக்கிறான் என் பேரன் "

அர்ஜுன் முறைத்தான். கவிதா சமாளிக்கும் விதமாக “என்னை இம்சை என்று சொல்கிறார் உங்க பேரன், அந்த கோபத்தில் தான் சார் என்று அழைத்தேன் "

சார் என்று சொல்லவே இல்லை என்று அவள் முடிக்கலாம் தான். ஆனால், வார்த்தையால் குத்தி குதறும் அர்ஜுனை எப்படி பழி வாங்க இப்படி அவனை பாட்டியம்மாவிடம் மாட்டிவிட்டால் தான் முடியும். அவள் பேச்சை கேட்டு அவன் இன்னமும் முறைத்தான். வேணிம்மா அர்ஜுனை முறைத்தார். கவிதா சாதித்து காட்டியது போல் ஆயாசமாக அவனை பார்த்தாள். ஏனோ அர்ஜுன் அவன் பாட்டியிடம் சரணடைவதை பார்க்கையில் அவளுக்கு ஒரு ஆனந்தம்.

சாப்பிட்டு முடித்து சிறிது நேர பேச்சின் பின் தூங்க போகிறேன் என்று எழுந்தவளை கைப்பிடித்து "பேப், வெயிட் பார் மீ " என்றான். வேணிம்மா இதமாக சிரித்தார். எதிர்பாரத தொடுகையில் முழித்தவள் அவர் சிரித்ததில் சமாளித்துகொண்டாள்.

வேணிம்மா,"கண்ணா வா மூன்று பேரும் கொஞ்ச நேரம் நடப்போம்" என்றார்.

வெளி உலகின் நிலவரம் மற்றும் அவர்கள் தொழிலை பற்றி பேசிய பின் அவர் அடுத்து சொன்னதை கேட்டதும் சில்லென்ற காற்று வீசியும் வியர்த்தது அவளிற்கு. நிஷாவின் அப்பா சென்னை வரப்போகிறார்!! அதாவது அவர் தன் மகளை பார்க்க வரப்போகிறார்.

கவிதாவிர்க்குள் சின்னதாய் பிரளயம் உருவாகி பெரிதாய் ஆட்கொண்டது. அதிர்ச்சியில் தானாக அவள் அர்ஜுனை கண்களில் சஞ்சலத்துடன் நோக்கினாள்.

வேணிம்மா கிண்டலாக "நிஷாவிற்கு அவள் அப்பா என்றால் பயம் போல " என்றார்.

சிரித்த படியே அவனும் உறுதியாக,"பாட்டிம்மா!! ஒன்று இரண்டு மாதம் கழித்து வரசொல்லுங்கள்,இப்போதைக்கு வேண்டாம் " என்றான் கருத்து சொல்லும் விதமாய்.

அவர் வந்தால் இரண்டும் கெட்ட நிலையில் இருக்கும் எங்கள் உறவு முறியலாம் என்று விளக்கம் கொடுத்தான் பயமுறுத்தும் விதமாக.அது வேணிம்மாவை பாதிக்கவில்லயென்றாலும் நிஷாவின் தந்தையை பாதிக்கும்.

திருமணம் தள்ளிப்போடும் எண்ணத்தில் இல்லை என்பதை உறுதியாக சொல்வதற்க்கு வேணிம்மா இரண்டு மாதத்தில் கழித்து கல்யாணம் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்ல, கவிதா அதிர்ந்தாள்.

அர்ஜுன் அதிகாரமாக அவள் முன்னே நின்று," என்னை பிடிச்சிருக்கா உனக்கு, என்னை ஏத்துக்க முடியுமா உன்னால்" என்றான்

வேணிம்மா,"உலகிலே இப்படி மிக மட்டமாய் பிரபோஸ் செய்ய உன்னால் மட்டுமே முடியும் கண்ணா " என்றார் சிரித்தப்படி.

அர்ஜுன் விளக்கினான்.அவன் கரடு முரடான குணத்திற்கு பாண்டஸி உலகில் வாழும் நிஷா என்றைக்குமே சரி வர மாட்டாள் என்றான். அவர்களின் திருமண வாழ்வு சீராக இருக்கவேண்டுமெனில் அங்கே புரிதல் அவசியமென்றான். அவளால் அவனிற்கு இடையூறுகள்  தான்  நிறைய என்றான்.

அர்ஜுனின் விவாதத்தில் கவிதா நொந்துப்போனாள். ஏனோ இதயத்தில் வலி. "என்னனென்ன வார்த்தைகள் சொல்லி விட்டான்" இவளை பிடிக்கவில்லை என்று முடித்திருக்கலாமே. அவள் வேலை முடிந்திருக்குமே. அர்ஜுனிர்க்கு நிஷாவை பிடிக்கவில்லை என்று முடித்திருக்கலாமே.

அர்ஜுனை மேற்கொண்டு பேச விடாமல் வேணிம்மா அயர்வாக இருக்கிறதென்று அறைக்கு திரும்பி விட்டார்.

அவள் மனம், அவனை கர்வம் என்று கொண்டவன் முடிவுருத்தியது. ஆனாலும் இன்னொரு பக்கம் இதயம் சூல்நிலையை அழகாய் கையாண்டனே என்று அவனிற்கு பரிந்து பேசியது.

அர்ஜுன் திரும்பவும் அவனுக்குள்ளே சொல்லிக் கொண்டான் "அர்ஜுனிர்க்கு என்றைக்குமே நிஷா துணையாக முடியாது " என்று. 

தொடரும்!

Go to episode # 09

Go to episode # 11


{kunena_discuss:700}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.