இளமஞ்சளும் ஆரஞ்சும் கலந்த கலவையாய் வானில் கதிரவன் வண்ணமயமாய் காட்சியளித்தான் அந்த அந்திப்பொழுதில்…
அதனின் அழகில் சொக்கிப்போனவளாய் மீண்டும் மீண்டும் அதையேப் பார்த்திருந்தாள் சாகரி…
சரியாய் அந்த நேரத்தில் அவளின் கைபேசி சிணுங்க, திரையைப் பார்த்தவள் முகமோ அந்த அந்தி வானமாகவே சிவந்து போயிற்று….
கைபேசிக்கும் வலிக்குமோ என்றவாறு அதனை எடுத்தவள், மௌனமாக இருந்தாள் எதுவும் பேசாமல்…
எதிர்முனையும் மௌனமாகவே இருக்க, இங்கே அவள் உதடுகள் மெல்ல விரிந்தது பூப்போல்…
மீண்டும் எதிர்முனை மௌனமாக இருக்க, அவள் உதடுகள் மேலும் புன்னகை பூத்தது…
சீதை… சிரிச்சே என்னை ஒருவழி பண்ணனும்னு முடிவே பண்ணிட்டியாடா?....
ஹ்ம்ம்…. ஹூம்….
ஹேய்… பேசுடா…
அவனின் கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக அவளின் கைவளையல்கள் குலுங்கி சத்தம் எழுப்பியது…
ஓ… வளையலா…. ஹ்ம்ம்… என் செல்ல வளைவிகளே… என்னவளை கொஞ்சம் பேச சொல்லுங்க… ப்ளீஸ்….
ஹ்ம்ம்…ஹூம்…
ஏண்டா…. பேசமாட்டிக்குற?... என் மேல கோபமாடா???... நான் வேணா சாரி கேட்கவாம்மா???...
ஒன்னும் வேணாம்…
அப்பாடா… பேசிட்டா என் சரிபாதி… ஹ்ம்ம்.. ஏண்டா ஒன்னும் வேணாம்?...
எதுவும் வேணாம்னா வேணாம்… அவ்வளவுதான்..
ஹ்ம்ம்.. ரொம்ப கோபமாடா?...
இல்ல….
பின்ன என்னாச்சு என் சகிக்கு?... ஹ்ம்ம்…
ராம்…
என்னடா…. சொல்லும்மா…
நான்… நான்…
சொல்லுடா சகி….
நான் ஊருக்குப் போகலை தர்ஷ்… ப்ளீஸ்… நீங்க இப்போதான் இங்க இருக்கீங்க…. இப்போ போய் நான் ஊருக்கு போகணுமா?... நான் போகமாட்டேன்… என்று அவள் கலங்கியபடி கெஞ்ச…
அவனோ அவளின் குழந்தைத்தனத்தை ரசித்தான் மிக….
ப்ளீஸ்ங்க… நான் போகலை… நான் இங்கேயே இருக்கேனே…
மூணு நாள் தானடா… சீக்கிரமே ஓடிப்போயிடும்டா…. என்று அவன் சொல்ல அவளிடமிருந்து மௌனம் மட்டுமே பதிலாய்…
சகி…. என்னடா … என்னாச்சு… பேசு… சகி…. என்று அவன் வார்த்தைகள் ஒலித்த நேரம் அவள் விம்மல் கேட்டது அவனுக்கு…
ஏய்… நீ அழுதா நான் தாங்கமாட்டேண்டி…. அது உனக்கே தெரியும் தானே… என்று அவன் சட்டென்று சொல்ல…
அவள் படபடவென்று பொரிந்தாள்…
தெரிஞ்சதனால தான் என்னை ஊருக்கு அனுப்பி வைக்கிறீங்களா?... ரொம்ப சுலபமா மூணு நாள் என்று சொல்லுறீங்க… எனக்கு அது மூணு யுகம் மாதிரி இருக்கும் ராம்… புரிஞ்சிக்கோங்க… என்னால ஊருக்குப் போக முடியாது… என்னைப் போக சொல்லாதீங்க… நான் உங்க பேச்சை மீறி பேசுறேன்னு நினைக்காதீங்க… என்னால முடியலை ராம்… ப்ளீஸ்… என்றவள் மீண்டும் விசும்ப….
அவன் அவள் காதலில் கரைந்தான்… இத்தனை நாள் நான் தூரத்திலிருந்த போது என்னைப் பிரிந்திருந்தவள், இன்று நான் அவளுடன் இருக்கும்போது என்னை பிரிய மறுக்கிறாள்… அதுவும் எனக்காக…. என்னுடன் இருக்கும் நாட்களுக்காக… பெற்றவர்களைப் பார்க்க ஊருக்கு கூட போக மறுக்கிறாள் என்றால், என் மேல் எவ்வளவு பிரியம் வைத்திருக்கிறாள்… பிரியம் என்பதை விட, அவள் உயிரையே என் மேல் வைத்திருக்கிறாள்… இவள் காதலுக்கு முன்னால் நான் எம்மாத்திரம்?... இவள் வார்த்தைகளுக்கு முன்னால் என் காதல் தான் நின்றிடுமோ?...
மெல்ல அவளுக்கு நிலைமையை விளக்கினான்… அவள் அங்கே சென்ற பின்னாடியும் அவன் அவளுடனே இருப்பேன் என வாக்களித்தான்…
நிஜமா இருப்பீங்களா? தர்ஷ்… எப்படி…???
உன் தர்ஷ் பொய் சொல்வானாடா உங்கிட்ட???
ஹ்ம்ம் ஹ்ம்ம்… மாட்டீங்க… ஆனா எப்படி நீங்க என்கூடவே இருப்பீங்க… ??? அதான் தெரியலை தர்ஷ்….
என் சகி…. சகி… ஹ்ம்ம்… உங்கிட்ட ப்ளூடூத் இருக்குதானே…
ஹ்ம்ம் இருக்கு….
அப்போ பிரச்சினை முடிந்ததுடாம்மா…
என்ன சொல்லுறீங்க ராம்…. புரியலை எனக்கு…
அது வந்துடா, நீ நாளைக்கு அங்கே போனதும் எனக்கு எஸ்.எம்.எஸ் பண்ணு…. நான் போன் பண்ணுறேன்… நீ அங்கே போய் பொங்கல் கொண்டாடுறதை நான் இங்கே இருந்து உன் வார்த்தைகள் மூலமா கேட்டிட்டிருப்பேன்…. சிம்பிள்…. நாளைக்கு ஃபுல் டேயும் உங்கூடவே தான் இருப்பேன்… சரியாடா?...
ராம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்……….
என்னடாம்மா……
நீங்க நைட் மட்டும் பேசுங்க ராம்…. சரியா?..
ஏண்டா…. நான் தான் பேசுறேன்னு சொல்லுறேனே.... அப்புறம் என்னன்னு சொல்லியவன் உடனேயே, ஓ… சாரிடா… மாமா அத்தை, தினேஷ், காவ்யா அண்ணி, நந்து-சித்து, லக்ஷ்மி, ராசு மாமா, செல்வி அத்தைன்னு எல்லாரும் இருப்பாங்களோ… ஹ்ம்ம் ஆமால்ல… நான் தான் மறந்துட்டேன் என்றபடி அவன் சொல்ல….
ஹ்ம்… ஆ…….மா…. என்றாள் அவள் தயக்கத்துடன்…
அவள் தயக்கம் அவனுக்கு எதுவோ சரி இல்லை என்று தெரிவிக்க,
சகி…. என்றழைத்தான் மென்மையாக…
அவளிடமிருந்து பதில் இல்லை…
என் சகியை எனக்கும் தெரியும்டா… உன் தர்ஷை உனக்கு தெரிஞ்ச மாதிரி என்றான் அவன் அழுத்தம் திருத்தமாக….
என்னால உங்களுக்கு நிறைய கஷ்டம் ராம்…. உங்களோட தொழில் பற்றி எனக்கு தெரியும்… இருந்தும், நீங்க என்னுடன் நிறையவே நேரம் செலவழிக்கிறீங்க… அதான்…. என்றபடி அவள் இழுக்க….
உண்மையை சொல்லணும்னா எனக்குத்தாண்டா கஷ்டமாயிருக்கு… உங்கூட அதிக நேரம் இருக்க முடியலைன்னு… உன்னை சந்திச்ச நாளிலிருந்து எனக்கு தெரிஞ்சு உன் பிறந்தநாளிலிருந்து தான் உங்கூட நான் ஏதோ கொஞ்ச நேரமாச்சும் சிரிச்சு பேசுறேன்… அதுக்கு முன்னாடி வரைக்கும், நான் ஆடிக்கு ஒரு தடவை, அமாவாசைக்கு ஒரு தடவைன்னு தான் பேசினேன்… பார்த்தேன்….
எனக்கு என் தொழில் முக்கியம் தாண்டா.. நான் இல்லைன்னு சொல்லலை… ஆனா, அதைவிட என் உயிர் நீ எனக்கு முக்கியம் எல்லாத்தையும் விட… இப்போ கூட நான் உன்னுடன் இருக்கணும்னு நீ சொல்லவே இல்லை…. நீ எங்கூட இருக்கணும், என்னை விட்டு போகமாட்டேன்னு தான் சொல்லுற… உன்னை என் வாழ்க்கைத்துணையா அடைய நான் தான் கொடுத்து வைச்சிருக்கணும்டா… என்றவன்,
ஏண்டா, மூணு நாளுக்கே என்னைப்பிரிய இவ்வளவு வருத்தமா?... அப்போ முதல் தடவை உன்னை சந்திச்சிட்டு நான் கிட்டத்தட்ட ஆறு மாசம் கழித்து வந்து உன்னைப் பார்த்தேனே… அப்போ நீ ரொம்ப கஷ்டப்பட்டிருப்பல்ல… உனக்கு வலிச்சதா சகி?... சாரிடா… என்றவனின் குரல் உண்மையிலேயே வருத்தத்தை பிரதிபலிக்க,
அதை பொறுக்காதவள், நான் ஒன்னும் கஷ்டப்படலை ராம்…. உங்களை விட… என்றவள், பேச்சை மாற்றும் விதமாக, ஹ்ம்ம்ம்…. நான் ஊருக்கு போகணும் ராம்… சீக்கிரம் தூங்கணும்…. என்றாள் மெதுவாக…
சரிடா…. நீ தூங்கு… குட்நைட்…. என்றவன், போனை வைத்துவிட்டான்….
thank you so much for your comments friends
very nice pongal episode :)
Riha-darsh conversation
Mukil always funny
Wishing u d happy pongal mam
Waiting for the nxt epi
Darsh-sagari love epavum pola super.....
Happy pongal meera
Eagerly waiting for next episode
Wish you too a very happy Pongal :)